०७

வீரவல்லி கனபாடி பாஷ்யமணி ஸ்ரீனிவாஸ தேசிகாசார்ய ஸ்வாமிகளால் ஸ்ரீ ஆபஸ்தம்ப பூர்வாபர ப்ரயோகமானது தயாரித்து க்ரந்த ரூபமாக வெளியிடப்படுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது. ஸ்ரீ ஸ்ரீனிவாச தேசிகாசார்ய ஸ்வாமிகள் ஸலக்ஷண கனபாடிகள். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளால் பாஷ்யமணி என்று பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர்கள். எல்லா சாஸ்த்ரங்களிலும் நன்கு பாடுபட்டவர்கள். சதாசார ஸம்பன்னர்கள், பரமைகாந்திகளாகவும் விளங்குகிறார்கள். நூலில் ஸ்வரத்துடன் கூடிய ஆங்காங்கு தமிழ்க் குறிப்புகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது தங்கத்திற்கு வாசனை உள்ளது போலாகும். பதவிபாகமும், ஆங்காங்கு ஏற்படும் ஸந்தேஹங்களை கபர்த்தி விளக்குவதற்காக ஆபஸ்தம்ப ஸூத்ரங்களும் காரிகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலின் உதவியால் வேறு ஸூத்ரத்தை சார்ந்தவனும் ச்ரமம் இல்லாமல் கர்மாவைச் செய்வதற்கும், செய்விப்பதற்கும் திறமை உள்ளவனாக ஆகிறான். இதற்கு முன்பு பலரால் ஆபஸ்தம்ப பூர்வாபர ப்ரயோகம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படிப்பட்ட க்ரந்தமானது யாராலும் இதற்கு முன்பு எழுதப்படவில்லை என்பதில் சந்தேகமேயில்லை. இவ்விதமான அபூர்வமான நூலை எழுதியதால் ஸ்ரீ ஸ்ரீனிவாச தேசிகாசார்ய ஸ்வாமிகளுக்கு வைதீக ஸமூஹம் கடன்பட்டுள்ளது என்பதிலும் ஸந்தேஹமில்லை. இந்த நூலின் துணையுடன் கர்மாவை நன்கு அனுஷ்டித்த எல்லா ஆஸ்திக ச்ரேஷ்டர்களும் இம்மை, மறுமை இவைகளை அடைவார்களாக என்று பகவானைப் பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ ஸ்ரீனிவாச தேசிகாசார்ய ஸ்வாமிகளும் நூற்றுக்கணக்கான வருடங்கள் இவ்விதம் ஆஸ்திக உலகிற்கு உபகாரம் செய்து கொண்டு நீண்ட ஆயுளை அடையட்டும் என்றும் பகவான் ஸ்ரீ ராஜகோபாலனைப் பிரார்த்திக்கிறோம். [[TODO::परिष्कार्यम्??]]