मूलम्

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः
2 तत्त्वपदवी
(விளக்கம் - ரஹ. விவ. - 45-48)
2 தத்த்வ பதவீ

1 प्रसादात् देशिकेन्द्राणां परावरविभागवित् । प्रपन्नः परमात्मानं प्राप्नोति परमं पदम् ॥
सदाचार्य-प्रसाद a த்தாலே पर-अवर-तत्त्वज्ञान b ம் பிறந்தவன் ஸர்வேச்வரன் திருவடிகளையே உபாய-உபேயங்களாகப் c பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும். परतत्त्वமாவது - स्वव्यतिरिक्त d வஸ்துக்களெல்லாவற்றுக்கும் धारक e னுமாய் नियन्ता f வுமாய் சேஷியுமான g

श्रियः पति. இவன் स्वतः ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாய்ப் பரம காருணிகனாய் ஸர்வசரண்யனாய்ப் परमोदार i னாய் மோக்ஷप्रदனாய் मुक्त-प्राप्यனாய், परव्यूहादि ’-पञ्चप्रकार - शुभाश्रय- दिव्य-मङ्गळविग्रह-विशिष्टனாயிருக்கும். இவனை யொழிந்தவை அவர தத்த்வம். இது சேதநமென்றும் அசேதநமென்றும் இரண்டு வகையாயிருக்கும். சேதநமான அவரதத்த்வம் परिच्छिन्न மான अहमर्थம். இதற்கு ज्ञातृत्व-कर्तृत्व-भोक्तृत्वங்கள் परायत्तங்களாயிருக்கும். இது बद्ध-मुक्त-नित्यरूपத்தாலே त्रिविधம். बद्धராவார் - ஸம்ஸரிக்குமவர்கள். முக்தராவார் - ஸம்ஸாரம் கழித்தவர்கள். நித்யராவார் - ஒருகாலத்திலும் ஸம்ஸாரமில்லாத நித்யஸூரிகள். அசேதநமாவது – அறிவில்லாத வஸ்து. अचेतनद्रव्यम् b त्रिगुणமென்றும் காலமென்றும் शुद्धஸத்த்வமென்றும் धर्मभूत ஜ்ஞாநமென்றும் चतुर्विधமாயிருக்கும். त्रिगुणமாவது – सत्त्वादि-गुणत्रय-आश्रयமான द्रव्यம். இது प्रकृति-विकृति-विभागத்தாலே இருபத்தினாலு வகையாய் भगवल्लीलार्थமாக क्षेत्रज्ञ ருக்குக் काय-करणादि-रूपेण பரிணமித்து भगवत्-स्वरूप-तिरोधानादि z களைப் பண்ணும். காலமாவது – क्षणादि-विभागத்தையுடையதாய் सर्वकर्ताவான ஈச்வரனாலே ஸஹகாரியாக ஸ்வீக்ருதமாயிருக்கும் द्रவ்யம். शुद्ध ஸத்த்வமாவது - ரஜஸ் தமஸ்ஸுக்களின்றிக்கே ஸத்த்வगुणाश्रयமான द्रவ்யம். இது ஈச்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும்

विग्रहादिरूपेण a विचित्रभोग्य b மாயிருக்கும். धर्मभूतஜ்ஞாநமாவது - पर-अवर-आत्माக்களுக்கு ஸ்வாத்மாவையும் स्वव्यतिरिक्त c வஸ்துக்களையும் ப்ரகாசிப்பிக்கவற்றான ஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்தாலே ஆத்மாக்களுக்கு ज्ञातृत्व-कर्तृत्व-भोक्तृत्वங்கள் உண்டாகின்றன. बद्धருக்கு निषिद्ध-काम्य-कर्तृत्व d ம் संसारहेतु. तत्वज्ञानमूल-निवृत्तिधर्मकर्तृत्व e ம் மோக்ஷஹேது. बद्धன் முன்பு பண்ணின बन्धक f ங்களுக்கெல்லாம் தன் अधिकार-अनुगुणமாக प्रपत्त्यादि-प्रायश्चित्तம் பண்ணி, மேல் अपराधம் பண்ணாதே प्रारब्ध-कर्मத்தையும் ஒருவழியாலே கழித்து முக்தனாம்.

1 முத்திக்கருள் சூட மூன்றைத் தெளி முன்னம்
இத்திக்காலேற்கு மிதம். (3)

इति कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य
वेदान्ताचार्यस्य कृतिषु तत्त्वपदवी संपूर्णा
தத்வ பதவீ முற்றும்.

कवितार्किकसिंहाय कल्याणगुणशालिने । श्रीमते वेङ्कटेशाय वेदान्तगुरवे नमः ॥
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः