०३ द्राविडम्

परिष्कार्यम्

ஸ்ரீ: முன்னுரை பகவான் ஸர்வேச்வரன் லக்ஷ்மீபதியான நாராயணன் மக்களைப் படைத்து அவர்களுக்கு விரும்பிய பொருட்களை அடைவதற்கும், அநிஷ்டங்களை நீக்குவதற்கும் வழியைத் தெரிவிக்கும் 1சாஸ்த்திரம் என்னும் ப்ரமாணத்தையும் கற்பித்துக்கொடுத்தார். மனு. கௌதமர், யாஜ்ஞயவல்க்யர் முதலிய மஹ ரிஷிகள் எல்லா வர்ணங்களிலும் தம்தம் வர்ணங்களில் செய்யவேண்டிய தர்மங்களைத் தம்தம் ஸ்ம்ருதிகளில் ஆங்காங்கு விரிவாகக் கூரியுள்ளார்கள். . 2ஏகாந்திகளாலும், 3பரமைகாந்திகளாலும் அனுஷ் டிக்கப்பட வேண்டிய தர்மங்கள் “ஏகாயனம்” என்னும் வேதத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. அதில் சொல்லப்பட்ட செய்திகளை செயல்முறையில் ஸௌகர்ய மாக அறிந்துகொண்டு செய்வதற்காக ஸ்ரீ பகவான் பாஞ்சராத்ரம் என்னும் சாஸ்திரத்தைத் தானே அருளிச் செய்தார். அப்பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் அபிகமனம், உபாதானம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்று குறிப்பு : 1. சாஸ்த்திரம் என்பதால் வேதம் அதின் உபப்ரும்மணம் இவை எல்லாம் கூறப்படுகின்றது. 2.மோக்ஷத்தையும் மற்றும் ஸ்வர்க்கம், பசு புத்ரன் முதலிய பலன்களை உத்தேசித்து பகவான் ஒருவனையே உபாயமாக எவர்கள் அடைகிறார்களோ அவர்கள் ஏகாந்திகள் எனப்படுகிறார்கள். 3. எவர்கள் பகவத் ப்ராப்தி ரூபமான மோக்ஷம் ஒன்றையே விரும்பி பகவான் ஒருவனையே சரணமாக அடைகின்றார்களோ அவர்கள் பரமைகாந்திகள் எனச் · சொல்லப்படுகிறார்கள். C

  • 2 - ஐந்துவிதமாக தினத்தைப் பிரித்து அந்தந்த காலங்களில் பகவத்பூஜை செய்யவேண்டியமுறை கூறப்பட்டுள்ளது. இம்மாதிரியான பகவத்பூஜைக்கு ‘பஞ்சகாலப்ரக்ரியா ” என்று பெயர் விளங்கிற்று, முதலிய இந்த ஸம்ஸாரத்தில் (5) ஆத்யாத்மிகம், தாபங்களான் தபிக்கின்ற பலமக்கள் ஸம்ஸாரத்தில் நின்று விரக்தர்களாய் சிறந்த உறுதிப்பொருளான மோட்சத்தை (வீட்டை) அடைய வேண்டுமென்று மிகவும் முயற்சி செய் கின்றார்கள் என்பது அனைவராலும் அறியப்பட்டதே. அம்மோக்ஷமானது எந்த வழியால் அடையப்படுகிறது என்கிற ஆசங்கை (கேள்வி) ஏற்படும்போது சிலர் அறிவால் மட்டும் என்றும், மற்றோர்கள் செயல்மாத்ரத்தினாலே என்றும், ஒரு சிலர் அறிவு செயல் ஆகிய இரண்டும் சேர்ந்து இவ்விரண்டினாலும் என்றும், பலவிதமாக சொற்போரிடு கின்றனர். அவற்றில் விசிஷ்டாத்வைதிகள் செயலை உதவி யாக உடைய வித்யையினால் மோக்ஷம் அடையப்படுகிறது என்று ஆங்காங்கு விரிவாகக்கூறியுள்ளார்கள். இங்கு வித்யை என்பதால் பக்தி, ப்ரபத்தி, இவ்விரண் டும் சொல்லப்படுகின்றன. அவற்றில் பக்தி என்கிற உபாயம் வ்யாஸாதிகளைப்போன்ற சிறந்த அறிவுடைய அதிகாரி களால் கையாளத்தக்கது, ப்ரபத்தி என்பது அற்ப அறிவுடையவர்கள் விஷயம் என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அவ்வறிவைக் குறித்து கர்மாவானது "" " “தர்மேணபாபமபநுததி’) " कषाये कर्मभिः पक्वे ततो ज्ञानं प्रवर्तते என் லூர்” “கஷாயேகர்மபி: பக்வே ததோஜ்ஞானம் ப்ரவர்த்ததே’) என்று ச்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடி வித்யைக்கு விரோதியான பாபத்தைப் போக்கடித்து அவ் வழியாக அங்கமாக (உதவியாக) ஆகிறது, பக்திக்குக் கர்மாவானது அங்கம் என்பது பகவத்கீதை முதலிய ப்ரமாண ஸித்தம். ப்ரபத்திக்குச் ப்ரபத்திக்குச் செயல் அங்கமாக இராமல் போனாலும் இறைவனின் கட்டளையான வேத

W

நூல்களில் கூறியவற்றையும் அனுஜ்ஞை யென்னும் விளக்கு ஏற்றல் முதலிய செயல்களையும் காத்தல் ப்ரபன்னர்களால் அவச்யம் செய்யவேண்டியதானபடியால் கர்மாக்களை அனுஷ்டித்தாகவேண்டும். கர்மாவானது ச்ரௌதம், ஸ்மார்த்தம் என்று இரு வகைப்படும். அவற்றில் அக்னிஹோத்ரம், தர்சபூர்ண மாஸம், ஸோமயாகம், முதலியவைகள் ச்ரௌதகர்மாக்கள் எனச் சொல்லப்படுகின்றன, ஒளபாஸனம், வைச்வதேவம் முதலியவைகளை ஸ்மார்த்தகர்மாக்கள் என்று கூறுகிறார்கள். அக் கர்மாக்கள் ஒவ்வொன்றும் மறுபடியும் நித்யம், நைமித்திகம், காம்யம் என மூன்று வகைப்படும், அவற்றில் ஸந்தியாவந்தனம் முதலியவற்றை நித்யம்’ என்றும், சூரிய சந்திர க்ரஹணகால விசேஷங்களில் செய்யப்படும் ஸ்னானம் தர்ப்பணம், தானம் முதலியவைகளை நைமித்திகம் என்றும் புத்ரகாமேஷ்டி முதலியவைகளை காம்யம் என்றும் கூறு கிறார்கள். இவை அனைத்தும் வேறு பலன்களை விரும்பாமல் பகவத் ப்ரீதிமாத்ரத்தை உத்தேசித்து பகவதாராதன வேஷமாகச் செய்யவேண்டும். இவ்விஷயத்தில் " CE · एतान्यपि तु कर्माणि सङ्ग ं त्यक्त्वा फलानि च " त्यक्त्वा कर्मफलासङ्ग 33 " यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् । यतपस्यसि कौन्तेयतत्कुरूण्व मदर्पणम् " ॥ “ஏதாந்யபிது கர்மாணி ஸங்கங்கம் த்யக்த்வா பலா நி ச " த்யக்த்வா கர்மபலாஸங்கம், யத்கரோஷி யதச்னாஸி யஜ்ஜுஹோஷி ததாஸியத் | யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம் " | இவை முதலிய கீதாவசனங்கள் ப்ரமாணம்.

  • 4 - பாஞ்சராத்ரம் என்னும் பகவச்சாஸ்திரதில் பகவதா ராதனக்ரமம் ரொம்பவும் விஸ்தாரமாகச் சொல்லப்பட் டுள்ளது. அதில் சொல்லப்படும் முக்கியசெய்திகளையும் மற்றும் பாத்மஸம்ஹிதை முதலான க்ரந்தங்களில் கூறிய செய்திகளையும் அடிப்படையாகக்கொண்டு திருவஷ்டாக்ஷரம் முதலிய மந்த்ரங்களினால் பகவானை ஆரா திக்கும் (விஷயத்தை) முறையை ஸ்ரீ பாஷ்யகாரர்) இராமானுஜர் ‘நித்யம்’ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார். ம் இந்நித்யம் என்னும் நூல் ஸ்ரீ வைஷ்ணவ ஆஹ்நிகக்ரந் தங்களில் முதன்முதலாக எற்ப்பட்டது. இதுவே பிற் காலத்தில் ஏற்பட்ட பல ஆந்ஹிக க்ரந்தங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்நூலில் இஜ்யா ப்ரயோகம் மட்டுமே விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற விஷயங்கள் கூறப்படவில்லை. இதன்பிறகு வங்கி புரத்து நம்பிகள் ச்லோக ரூபமாக ஐந்து காலங்களில் செய்யவேண்டிய செயல்களைப்பற்றி ஒரு நூல் இயற்றி யுள்ளார். மற்றும் ஆந்ஹிகம் என்கிற பெயராலும், பாஞ்சராத்ரரக்ஷை, (ரக்ஷை) முதலிய பெயர்களாலும், கி.பி. 15-வது நூற்றாண்டிற்கு முன்பு பல பெரியோர்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைப் பற்றிப் பல க்ரந்தங்களைப் பண்ணி உள்ளார்கள். ஆனால் அவைகளில் பரமைகாந்திகள் ச்ரௌ தகர்மாக்களை அனுஷ்டிக்கும் முறை சொல்லப்பட வில்லை. அபிகமனம் முதலிய ஐந்து கர்மாக்களின் செயல் முறையே சொல்லப்பட்டுள்ளது. ஆதலால்தான் பரமை காந்திகளான ஸ்ரீவைணவர்கள் இம்மாதிரியான க்ரந்தம் கிடைக்காததால் ச்ரௌ தகர்மாக்களை பகவதாராதன ரூபமாக அனுஷ்டிக்கும் முறை விட்டுப்போன தால் ஸரியானபடி அறியாமையால் அனேகமாக ச்ரெள தகர்மாக் களை அனுஷ்டிக்க ஸௌகரியக்குறைவு உள்ளவர்களாக ஆகிறார்கள் என்பது உண்மைநிலை. பொதுவாக எல் லோருக்கும் தர்சபூர்ணமாஸ. ஸோமயாகம் முதலிய ச்ரௌதகர்மாக்களைச் செய்வதற்கு பல ருத்விக்குகளின் உதவி, வேதம், சாஸ்திரம் முதலிய பல பிரிவுகளில் ஆழ்ந்த
  • 5 - அறிவு முதலியவைகள் அவச்யமானபடியால் எல்லோராலும் செய்வதற்குக் கடினமாக இருந்தபடியால் அவைகளில் மக்களுக்கு இருந்த ஈடுபாடு குறையலாயிற்று. இம்மாதிரி யான நிலையில் இம்மஹாநுபவர் லோகோபகாரத்திருஷ்டி யினால் ச்ரௌதகர்மாக்களைப் பகவதாராதன ரூபமாகச் செய்யும் முறையில் ஜ்ஞனமும் ரொம்ப ஆவச்யகமானதால் விரிவான ஆந்ஹிகத்தின் தேவையை உணர்ந்து ஸ்ரீ இராமா னுஜர் முதலிய முன்னோர்களால் இயற்றப்பட்ட ‘நித்யம்’ வங்கிவம்சகாரிகை’ ‘ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷை’ போன்ற நூல்களை ஆதாரமாகக்கொண்டு கி. பி. 17-ம் நூற்றாண்டில் பரமைகாந்தியான ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் தினமும் காலை எழுவது முதல் இரவு துயில் கொள்ளும்வரை ஐந்து காலங்களில் பகவதாராதனலேஷமாகச் செய்யவேண்டிய ‘அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஸோமயாகம் முதலிய ச்ரெள தகர்மானுஷ்டானத்திற்கு தடையிராமல் அபிகமனம், உபதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம்,யோகம் இவைகளின் அனுஷ்டான ப்ரக்ரியையை ‘பஞ்சகாலக்ரியா தீபம்’ என்கிற இந்நூலில் ஐந்து பரிச்சே தங்களாகப் பிரித்து விரிவாக எழுதினார். நூல் குறிப்பு
  1. அபிகமனம் ப்ராம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் விடியற் காலையில் துயில் எழுந்து செய்யவேண்டிய இறைவனை நினைக்கும் முறையை முதலில் கூறுகிறார், பிறகு அபிகமன ஸங்கற்பம், சௌசக்ரமம், (சுத்தி) பல் துலக்குவது, ஸ்னானம் செய்வது, ஆடையுடுப்பது, திருமண்காப்பு அணிந்து கொள்வது. காலை ஸந்த்யாவந்தனம், ஆதார சக்தி தர்ப்பணம், ப்ரம்மயஜ்ஞம், முதலியவைசெய்யும் முறைகளை இம்முதல் பரிச்சேதத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
  • 6 - பசு பிறகு இந்நூலில் அக்னிஹோத்ரம் முதலிய ச்ரௌத கர்மாக்களை பண்ணும் முறையைக் கூறும்பொழுது ஹிம்ஸை முதலியவைகளுடன் கூடியதான ச்ரௌதகர்மாக் களில் பரமைகாந்திகளான வைஷ்ணவர்கள் ஈடுபாடு கொள்வது முறையானதா ? பகவானிடத்தில் மட்டுமே ஈடுபாடு இருக்கவேண்டிய பரமைகாந்தியான ப்ரபன்னர் களுக்கு ச்ரௌத கர்மாக்களினால் ஏற்படுகிற பலன் தேவை யானதா ? இவ்வாறான வினாக்களுக்கு எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் பகவானை ஆராதிப்பதே முக்யமான குறிக்கோள் என்னும் முறையில் ச்ரௌத கர்மாக்களை செய்வதில் தவறு ஏதும் இல்லை என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மகா பாரதத்தில் உள்ள ‘உபரிசரோபாக்யானத்தின் உட்கருத்தையும் இவ்விடத்தில் கூறியுள்ளார். பாசு அடுத்து அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், பந்தம், ஸோமயாகம் போன்ற கர்மாக்களை பரமை காந்திகள் அனுஷ்டிக்கும் முறையைக் கூறியுள்ளார். இவ்விடத்தில் அக்னிஹோத்ர ஸோம யாகாதிகளின் மந்திரங்களைச் சொல்லும்பொழுது திருவஷ்டாக்ஷரம் போன்ற வைஷ்ணவ மந்திரங்களுடன் சேர்த்து த்யானம் செய்யும் முறையை நன்கு சொல்லியுள்ளார். கீழ்க்கண்ட விஷயங்கள் அபிகமனம் என்னும் இம்முதல் பரிச்சேதத்தில் சொல்லப்பட்டுளன.
  1. உபாதானம் அடுத்து உபாதானம் எனப்படும் இவ்விரண்டாவது பரிச்சேதத்தில் பகவானுடைய பூஜைக்குத் தேவையான துளஸீ புஷ்பம் முதலியவைகளைக் கொண்டுவரும் முறை யைக்கூறியுள்ளார். இங்கு பகவத்பூஜைக்கு எந்தெந்த மலர்கள் கொள்ளத்தக்கவை. எந்தெந்த மலர்கள் விலக் கத்தக்கவை என்பதையும் கூறியுள்ளார். தர்பம், ஸமித் இவைகளைக் கொண்டுவரும் முறையும் கூறப்பட்டுள்ளது.
  • 7 -
  1. இஜ்யா இப்பரிச்சே தத்தில் பகவானை ஆராதிக்கும் முறையை என்பது இல்லாமல் ஒரு சாராருக்கு மட்டும்தான் அனைவரும் அனுஷ்டித்து போற்றக்கூடிய வகையில் விரிவாக வும் விளக்கமாகவும் கூறியுள்ளார். முதலில் மாத்யாஹ்நிக ஸ்னானம், மாத்யாஹ்நிக ஸந்த்யா, முதலியவைகளைச்செய்யும் முறையைக்கூறி பின்பு இறைவன் பக்கலில் சரணாகதி செய்யும் முறையையும் இஜ்யைக்கான விசேஷ ஸங்கற்பம், ப்ராணாயாமமுறை முதலியவற்றைக் கூறுகிறார். இங்கு ‘பூதசுத்திக்ரமம்’ என்று சொல்லப்படும் தன் பூத உடலை பகவானுக்குத் திருவாராதனம் செய்வதற்கு ஏற்றதாகச் சுத்தி செய்துகொள்ளும் முறை விரிவாகவும் மற்ற நூல் களில் கூறி இருப்பதைக் காட்டிலும் சிறந்ததாகவும் கூறப் பட்டுள்ளது, பின்பு ‘திருவஷ்டாக்ஷரம்’ எனப்படும் மூல மந்திரத்தை அங்கந்யாஸம் கரந்யாஸம் முதலியவைகளுடன் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது, மேலும் த்வயம். சரம ச்லோகம், த்வாதசாக்ஷரம், ஷடக்ஷரம், விஷ்ணுகாயத்ரீ, ஸ்ரீமந்த்ரம், புருஷஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், ஸாளக்ராம மந்த்ரம் முதலியவற்றை அங்கந்யாஸ கரந்யாஸங்களுடன் செய்யும் முறையை அழகாக விவரித்துள்ளார். இச்செய்தி களை மற்ற நூல்களில் காண்பதரிது. பின்பு ஆறு ஆஸனங்களுடன் பகவதாராதனம் செய்யும் முறையை விரிவாக எழுதியுள்ளார். வைஷ்ணவ ஹோமவிதியும் விஷ்வக்ஸேனாராதனமும் போஜனவிதியும் கூறப்பட்டுள்ளன.
  2. ஸ்வாத்யாயம் ஸ்வாத்யாயம் என்னும் இந்நான்காவது பரிச்சேதத்தில் ஸ்வாத்யாய ஸங்கல்பம், பகவத்ப்ரீதிகரமான தன் மனத்தை மகிழ்விக்கும் இதிஹாஸ, புராண, ஸ்தோத்ரங்களின் சிறப்பும் இரண்டு வேதாந்தங்கள். திருவஷ்டாக்ஷரம் முதலிய பகவந்மந்த்ரங்களின் ச்ரவண, மநன, ப்ரவசன,
  • 8 - ஜபங்களின் விதியும். சூரியன் அஸ்தமனமாகும்போது செய்யத்தக்க ஸாயம் ஸந்த்யோபாஸன முறையும் கூறப் பட்டுள்ளன.
  1. யோகம் ஐந்தாவது பரிச்சேதத்தில் துயில் கொள்வதற்குமுன் பரமாத்மாவை த்யானம் செய்யும் ப்ரகாரமும் தூங்குவது முதலிய முறையும் சொல்லப்பட்டுள்ளது. நூலின் பெயர்ப் பொருத்தம் பாஞ்சராத்ரத்தில் சொன்னபடி ஐந்து காலங்களில் செய்யவேண்டிய அபிகமனம், உபாதானம். இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம், என்னும் ஐந்து கர்மாக்களின் அனுஷ்டான முறையை விரிவாகக் கூறுவதால் இக்ரந்தத் திற்கு ‘பஞ்சகாலக்ரியா தீபம்’ என்று பெயர் இட்டார். இக்ரந்தத்திற்கே சின்னய்யன் ஆஹ்னிகம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. நூலின் அமைப்பு இந்நூலானது அனேகப்ரமாணங்களை ஆதாரமாகக் கொண்டு எளிய வெகு அழகான சொற்றொடர்களினால் தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கு வேண்டிய இடங் களில் தேவையான ச்ருதிஸ்ம்ருதி வாக்கியங்களை எடுத்துக் காட்டல் முதலிய செய்திகளை விரிவாகக் கூறியுள்ள முறை யானது மிகச்சிறந்தது. நூலாசிரியரும், அவருடைய வைபவமும் இந்நூலாசிரியர் சதுர்வேத சதக்கரது ஸ்ரீநிவாஸ தாதாசாரியர் என்பவர். இவர் அய்யா குமார தாதா தேசிகன் என்று உலகப்ரஸித்தமான பண்டிதரின் ஐந்தாவது
  • 9 - அய்யாகுமார தாத குமாரர், நூலாசிரியரின் தந்தை தேசிகன் என்பவர் எல்லா வேதங்களையும் ஆறுதர்சனங் களையும் நன்குகற்றவரும் கற்பித்தவரும் ஆவார். வேதங்கள், ஸ்ம்ருதிகள் முதலியவற்றில் கூறியபடி நூற்றுக்கும் மேற் பட்ட வேள்விகளை முறைப்படி அனுஷ்டித்துள்ளார். ஆதலால்தான் சதுர்வேத சதக்கரது என்னும் பிருதத்தி னால் அலங்கரிக்கப்பட்டார். மேலும் தஞ்சை நாயக வம்சத்து அரசர்களான அச்யுத நாயகர், ரகுநாத நாயகர், விஜயராகவ நாயகர்களின் அமைச்சராகவும், ராஜகுரு வாகவும் விளங்கியவர். இவருடைய சரிதம் தஞ்சை ஸரஸ்வதிமஹால் நூல்நிலயத்தில் ஏற்கனவே வெளியிடப் பட்ட ‘பாரிஜாத நாடகம்’ என்னும் நூலில் முகவுரையில் விவரமாக எழுதப்பட்டுள்ளது, அய்யா குமாரதாததேசிகன் 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வாழ்ந்தார். அண்ணாமலை யூனிவர்ஸிடி ரிஸர்ச் ஜர்னலில் Vol. No. 9 Article by வ்ருத்தகிரீசரால் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது அய்யா குமாரதாத தேசிகனைப் பற்றி. அய்யா குமாரதாத தேசிகனின் முக்யமான வாழ்க்கைப் பகுதி 1575 A. D. to 1630 A. D. வரை என்று நூன்முக ஆதரங்களினால் ஏற்படுகிறது. இவர் அரச குடும்பத்திற்கு ராஜகுருவாக விளங்கினார். இவர் இரண்டாம் வேங்கடன் 1630 A.D. என்பவருக்கு முடிசூட்டுவித்தார். மற்றும் திருமலை வேங்கடேச்வரப் பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்த நிலய விமானம், காஞ்சிபுரத்தில் உள்ள கல்யாண கோடி. புண்ய கோடி விமானங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். (Refer Tirupathi Devasthanam’s Epigraphical Report by S. Subramanya Sastri PP 312-313). d

10 - விஜயராகவ நாயகர் (1633A to 1673) என்னும் தஞ்சை மன்னர் வைணவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவ ராக விளங்கினார். குமாரதாததேசிகன் அவரால் மிகவும் போற்றி கெளரவிக்கப்பட்டார். அம்மன்னனின் அமைச்ச ராகவும், ஆசானாகவும் விளங்கினார். மன்னர் குமாரதாத தேசிகனின் பாதுகைகளை பல்லக்கில் வைத்து நகரத்தைச் சுற்றிப் பரிவாரங்களுடன் நடந்து வருவார். இக் குமாரதாத அவர்களில் முதல்வர் தேசிகனுக்கு ஏழு பிள்ளைகள், நீலமேகதாதாசாரியர் என்பவர், அவருடைய புத்ரவம்ச பரம்பரையில் ஜநித்தவர்கள் இப்போது நாவல்பாக்கம் என்னும் க்ராமத்தில் வஸித்து வருகிறார்கள். அவருடைய கடைசி குமாரரான வேங்கடா சாரியருடைய வம்சத்தில் உதித்தவர்கள் கும்பகோணத்தில் பாட்ராசாரியர் தெருவில் வசித்து வருகிறார்கள். ரகுநாதாசாரியர் என்சிற மூன்றாவது குமாரரின் வம்சத்தில் உண்டானவர்கள் திருச்சேறை என்னும் க்ஷேத்ரத்தில் வசித்துவருகிறார்கள். ஐந்தாவது குமாரரான ஸ்ரீனிவாஸ தாதாசாரியரின் வம்சத்தில் தோன்றியவர்கள் த்வார் (தக்ஷிணத்வாரகை) என்னுமிடத்தில் வஸித்து வருகிறார்கள். ப்ரக்ருத நூலாசிரியரான ஸ்ரீனிவாஸ தாதாசாரியரும் அவரே (ஐந்தாவது குமாரரே) எனக் கருதப்படுகிறது. வேங்கடாசாரியர் என்பவரால் இயற்றப்பட்ட ‘அய்யா குமாரதாததேசிக வைபவ ப்ரகாசிகா’ என்னும் நூலில் குமாரதாத தேசிகன் பகவத்குணத்தைப் பற்றிய அனேக நூல்களை தான் பண்ணினார். எல்லா நூல்களையும் அறிந்த தன் புத்ரர்களைக் கொண்டும் பல நூல்களைச் செய்து வைத்தார், என்று சொல்லிவிட்டுப் பிறகு,

  • 11 - ‘विशिष्टाद्वैतसर णि पञ्चकालप्रदीपिकाम्’ விசிஷ்டாத்வைதஸரணிம் பஞ்சகாலப்ரதீபிகாம், 144 to 50 சலோகங்களில்) என்று கூறுகிறார். இதனால் அய்யா குமாரதாததேசிகனால் இந்நூலானது ஸ்ரீனிவாஸ் தாதா சாரியர் என்னும் தன் குமாரனின் வாயிலாகப்பண்ணி வைக்கப்பட்டது என அறியப்படுகிறது. கவிமித்ரி விஜயராகவ நாயகரின் காலத்தில் ஸ்ரீரங்காஜம்மா என்னும் பெண்புலவர் ‘உஷாபரிணயம்’ என்னும் தன்னுடைய தெலுங்கு காவ்யத்தில், ‘चेलुवु मीरु शतक्रतुश्रीनिवास तातगुरुवयु’ नुकु वन्दनमोनतु ’ (‘செலுவு மீரு சதக்ரது ஸ்ரீனிவாஸதாத குருவர்யுனுகு வந்தனமோ நர்து’) என்று சபையில் விற்றிருந்த சதக்ரது ஸ்ரீனிவாஸ தாதா சாரியருக்கு வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறாள். மேலும் இந்நூலாசிரியரான ஸ்ரீனிவாஸ தாதாசாரி யரின் சீடரும் ‘ஸச்சரித்ர ஸுதா நிதி:’ என்னும் நூலை இயற்றியவரும் ஸ்கல தர்மசாஸ்திரங்களைக் கசடறக் கற்றவருமான வீரராகவாசாரியரால் தன்னுடைய நூல் ஆரம்பத்தில் " शतक्रतुविधिस्तव्यं चतुर्वेदविहारिणम् । श्रीनिवासगुरुं सीतानायकं च नमाम्यहम् ॥ श्रीमच्छ्रीनिधिदेशिकस्य चतुरान्नायस्य दिव्याज्ञया कतु सच्चरितान्धिमध्वरशतानुष्ठाजुषः ।

मीमांसाद्वयवल्लभश्च बुधरा

  • 12 - श्रीश्रीनिवास स्सुधीः सम्यकू साहसकारिणो ममतरिः स्यात्कृष्णविद्वन्मणिः " चतुरान्नायपट्सूत्री रहस्यार्थो पदेशिनः । श्रीवासदेशिकस्यान्ते मेधा कस्य न जृम्भते ( சதக்ர துவிதிஸ்தவ்யம் சதுர்வேத விஹாரிணம் | ஸ்ரீனிவாஸகுரும் ஸீதாநாயகம் ச நமாம்யஹம் II ஸ்ரீமத்ஸ்ரீநிதி தேசிகஸ்ய சதுராம்நாயஸ்ய திவ்யாஜ்ஞயா கர்தும் ஸச்சரிதாப்தி மத்வரச தாநுஷ்டான நிஷ்டாஜுஷு:1 மீமாம்ஸாத்வயவல்லபச்சபுதராட் ஸ்ரீஸ்ரீநிவாஸஸ்ஸுதீ: ஸம்யக்ஸா ஹஸகாரிணோ மமதரி: ஸ்யா த்க்ருஷ்ணவித்வந் மணி:[] சதுராம்நாய ஷட்ஸூத்ரீ ரஹஸ்யார்த்தோபதேசிந: 1 ஸ்ரீவாஸதேசிகஸ்யாந்தே மேதாகஸ்ய நஜ்ரும்பதே !)” என்று பஞ்சகாலக்ரியா தீப நூலாசிரியரான ஸ்ரீனிவாஸ் தாதாசாரியரைத் துதிசெய்து அவருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களின் வைபவத்தையும் ப்ரகாசப்படுத்தி யுள்ளார். ஆகையால் பஞ்சகாலக்ரியா தீப க்ரந்த கர்த்தா வின் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் முதற்பகுதி என நிர்ணயிக்கப்படுகிறது. இதற்குமேல் விரிவாக ஆவலுள்ளவர்கள் ‘பாரிஜாத நாடக’ முகவுரையிலிருந்து அறிந்துகொள்ளவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். அறிய பஞ்சகாலக்ரியா தீபத்தின் மூலமான சுவடிகள் தஞ்சை ஸரஸ்வதி மஹால் லைப்ரரியில் உள்ள சுவடிகள் 5. ஷை சுவடிகளின் நெம்பர்களும், மற்ற விவரங்களும்.

  • 13 - 1 No, (B. 9329a, D. 18599) இஞ்ச் 17 x 1 பூர்ணம்

(B. 9330, D. 18600) 3. (B. 9321a. D. 18601) அபூர்ணம் 4. (B. 9321p. D. 18602) 39 5. (B. 9321 c D. 18603) 99 என்னும் ஸங்கேதத்தில் க்ரந்த எழுத்தில் பஞ்சகாலக்ரியா தீபத்தின் மூலமான ஒலைச்சுவடிகள் உள்ளன. அவற்றில் முதல் நெம்பரில் உள்ள ஓலைச்சுவடியானது இந்நூல் அச்சிடுவதற்கு முக்கியமாக எடுத்துக்கொள்ளப் பட்டது. எல்லாச் சுவடிகளும் ரொம்ப ஜீர்ணமாகவும் நடுவில் துண்டித்தும் நொடிந்தும் உள்ளன. தவிர பல குற்றங்கள் காணப்படுகின்றன. நடுளில் பதங்களும் சில இடங்களில் வாக்கியங்களும் விட்டுப்போய்விட்டன. அவ்விடங்களில் எங்களுடைய `ஆசார்யரான திருமலை சதுர்வேத சதக்ரது, மஹாவித்வான் அய்யா தேவநாததா தாசாரியர் ஸ்வாமி யிடம் இருந்த சுத்தமான ஓலைச்சுவடியைப் பார்த்து அவ்விடங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அந்த இடங்களில் [ ] என்னும் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை ஓரியண்டல் மேனஸ்க்ரிப்ட்ஸ் லைப்ரரியில் உள்ள R. 1705 No. சுவடியைப் பார்த்து காபி செய்யப்பட்ட நூலும் இந்நூலின் சோதனத்திற்காக உபயோகிக்கப்பட்டது. இவ்வாறு ரொம்ப ச்ரமப்பட்டு சோதித்தபோதிலும் இந்நூலில் பொதுவாக மனிதர் களுக்கு உண்டாகும் அநவதானத்தினால் பல குற்றங்கள் அவர்ஜனீயமாக ஏற்பட்டுள்ளன. அவைகளை வித்வான்கள்

· 14 - சோதனம் பண்ணிக்கொண்டு புதியநூல் பெற்றதினால் மகிழ்ச்சியை அடைவார்கள் என நம்புகிறேன். இந்நூலை அச்சிடுவதற்கு உ.தவியாக தன்னிடத்திலிருந்த ஓலைச்சுவடியைக்கொடுத்தும், இந்நூலில் கடினமான இடங் களில் சோதித்துக்கொடுத்தும் உபகரித்த எங்களுடைய ந்யாய, மீமாம்ஸா, வேதாந்த சாஸ்த்ர ஆசாரியரும், ஸகல சாஸ்த்ரங்களையும் கசடறக்கற்றவரும், கற்பித்தவரும், ஆஜானசுத்தரும். அனுஷ்டானபரருமான திருமலை, சதுர் வேதசதக்ரது, மகாவித்வான், நாவல்பாக்கம், அய்யா ஸ்ரீ தேவநாத தாதாசாரியஸ்வாமியின் திருவடிகளில் அநேக வந்தனங்களை ஸமர்ப்பிக்கிறேன். மேலும் இத்நூலை வெளியிட எனக்கு அனுமதியளித்து ஆதரவு காட்டிய ஸரஸ்வதி மகால் நிர்வாக அதிகாரி பெ. பார்சுவநாதன் அவர்களுக்கும், நூலகக் காப்பாளர் திரு.சிவராஜ தீக்ஷதர் அவர்களுக்கும், மற்றும் ஷெ மகால் கமிட்டி மெம்பர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன். மேலும் இந்நூலின் அச்சுப்பிரதியை பரிசோதித்து (ப்ரூப்)க்கொடுத்த பண்டிதருக்கும் என் நன்றி உரித்தாகுக. மற்ற ஆஹ்நிகநூல்களைக்காட்டிலும் இந்நூலில் காணப்பட்ட விசேஷ விஷயங்களின் குறிப்பு கீழ்க்கண்ட வாறு:

  1. ஆசமனப்ரகாரத்தில் மாறுதல்கள்.

யஜ்ஞவராஹத்யானம்.

15 - 3. மஹாபுருஷத்யானம். 4. ப்ரபன்னர்களும் ச்ரௌதகர்மாக்களை பண்ணவேண்டும் என்பது. 5. ஸந்யாஸிகள் (ஆஹிதாக்னி) அவச்யம் ஸம்ஸ்கார விஷயம் (வைஷணவ வைசேஷிக பித்ருமேதப்ரயோகதீப:). 6. இஜ்யா (ஆராதன) காலத்தில் மூலமந்த்ர ஜபம் செய்யும் ப்ரகரணத்தில் மூலமந்திரத்துடன் த்வயம், வாஸுதேவத்வாதசாக்ஷரம்: 7. சரமச்லோகம். ஸ்ரீவிஷ்ணு ஷடக்ஷரம் முதலிய எல்லா மந்த்ரங்களின் ஜப முறையை அங்கந்யாஸ கரந்யாஸ த்யான ச்லோக பூர்வகம் விசதமாகக் கூறியுள்ளார். திருவாராதன மந்த்ர புஷ்ப காலத்தில் 14 வித்யைகளை யும் அனுஸந்திக்கும் முறை. 3. ஆஸனங்கள் மாறுபாடு. ஸமர்ப்பிப்பதில் வரிசைக்கிரமத்தில் இந்நூலில் இம்மாதிரியான பல விசேஷங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு பூஜையில் அவரவர்க்குச் சிறிது வித்யாஸமிருக்கலாம். ஆனால் பூஜை என்பது எல்லாருக்கும் உண்டு. வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து சிறிது விரிவாகக் கூறப்பட்டுள்ளதேயன்றி வேறில்லை. வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில்கூட எந்த உட்பிரிவினரும், ஸ்மார்த்தர் களும், மாத்வர்களும்கூட யாரும் இதை அனுஸரிக்கலாம். அவ்வளவு பொதுவான விஷயங்களே எழுதப்பட்டுளன.

16 - இந்நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அத்தனையும் வேதங்களிலும் அதனை அனுசரித்து மஹரிஷிகளால் ஸ்ம்ருதி களிலும், தர்ம சாஸ்த்ரங்களிலும் உபதேசிக்கப்பட்டதே யன்றி ஒரு சிறிதும் கல்பனையன்று. இவ்வாறு விசேஷ விஷயங்களைக் கூறுகிற அபூர்வமான இந்நூலானது ஆஸ்திகாக்ரேஸரர்களான வித்வான்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். முதன் முதலாக இதை அச்சிட்டு வெளியிடுவதால் பரமைகாந்திகளான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் இதரர்களுக்கும் மிகவும் உபகாரம் ஏற்படும் என்றும் நம்புகிறோம். ந்யாய மீமாம்ஸா சிரோமணி, வேத வேதாந்த வித்வான் ஸம்பாதகன்.