०३ कृष्ण-जयन्ती

अथ श्रीकृष्णजयन्ती निर्णयः

सिंहमासे कृष्णपक्षे
सूर्योदयानन्तरं कलामान-सप्तमी-वेध-रहित अष्टमी-युक्तायां
सूर्योदयानन्तरं कला-मात्र-कृत्तिका-वेध-रहितायां रोहिण्यां

शुद्धाष्टमी-सहित-शुद्ध-रोहिण्य्-अ-लाभे
शुद्ध-रोहिणी-सहित-नवम्यां वा,

तयोर् अप्य् अलाभे, मृग-शीर्ष-सहित-नवम्यां दशम्यां वा

वृषभ-लग्ने श्री-कृष्ण-जयन्ती विशेषाराधनं कृत्वा,
उत्सवान्ते पारणं कुर्यात् ।

மற்றைய

[[647]]

பெயர்ணமாஸீவிஷயமென்று கொள்ளவேண்டும். ஆகையால் அன்றும் பாரணைக்கு எந்த விரோதமும் இல்லை. (இப்படி ஸ்ரீராம, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்திகள் ஸம்ப்ரதாய பேதமின்றி சாந்த்ர மான ரீதியில் நிர்ணயிக்கப்பட்டு அப்படியே க்ருஹங்களில் அநுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் முதலிய சில பாஞ்சராத்ராலயங்களில் மட்டும் ஸௌரமானப்படி இவைகளை அநுஷ்டிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.)

ஸ்ரீக்ருஷ்ணஜயந்தீ நிர்ணயம்

ஸ்ரீக்ருஷ்ணஜயந்தீ-ஸிம்ஹ (ஆவணி) மாஸத்தில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியுடன் கூடின ரோஹிணீயாகும். அன்றைய தினம் காலை யில் ஒரு விநாடி கூட ஸப்தமீ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அது வேதையாகும். அம்மாதிரியே அன்று காலையில் கிருத்திகா நக்ஷத்ரமும் ஒரு விநாடி கூட இருக்கக்கூடாது. ஆக ஸப்தமீ க்ருத் திகை இவைகள் ஒரு விநாடிகூட இராத அஷ்டமி ரோஹிa முக்யகாலமாகும். இப்படி சுத்த (வேதை இல்லாத) அஷ்டமீ யுடன்கூடின ரோஹிணீகிடைக்காவிடில், சுத்த ரோஹிணீயுள்ள நவமிதினத்தன்று ஸ்ரீக்ருஷ்ணஜயந்தீயை அநுஷ்டிக்கவேண்டும். இவைகளும் கிடைக்கவில்லையானால். ம்ருகசீர்ஷத்துடன்கூடின நவமீயோ அல்லது தசமியோ ஐயந்திக்குக் காலமாகும். அன்றைய தினம் பகலில் உபவாஸமிருந்து ராத்ரி வ்ருஷபலக்னத்தில் ஸ்ரீக்ருஷ்ணஜயந்தீ விசேஷாராதநத்தைச்செய்து ஆராதநத்தின் முடிவில் (உத்ஸவத்தின் முடிவில்) பாரணையைச் செய்யவேண்டும்.

[[648]]

श्रीवष्णव सदाचारनिर्णये

न च निशि भोजनस्य निषिद्धत्वात् कथं निशि पारणम् ?

इति वाच्यम् ।

‘जयन्त्यां तु व्रती भूत्वा पूजां कुर्याद्विधूदये ।

तदैव पारणं कुर्याद् ऐहिकादिष्वसङ्गवान् ॥ पश्चकालरताश्चैव दीक्षितैकान्तिनस्तथा ।

भक्तैर्भागवतस्सार्धं रानावेवतु ( रात्रौ कुर्युस्तु) पारणम् ॥ तिथ्यन्ते पारणं कार्यं जयन्तीफलमिच्छता । फलाभिसन्धिरहितैः रात्रावेव तु पारणम् ॥’

इत्यादिवचनैः निशि भोजननिषेधवचनस्य बाधितत्वादिति सर्वम् अनवद्यम् ।

இங்கு சங்கை-நடுநிசியில் போஜனம் செய்யக்கூடாதென்று நிஷேதம் இருக்கிறபடியால் நிசியில் பாரணை எப்படி கூடும்? என்று. ஸமாதாநம் -

*ஜயந்த்யாம் து வ்ரதீ பூத்வா பூஜாம் குர்யாத் விதூதயே 1 ததைவ பாரணம் குர்யாத் ஐஹிகாதிஷ்வஸங்கவாந் ॥ பஞ்சகாலரதாச்சைவ தீக்ஷிதைகாந்தி நஸ்ததா।

பக்தைர்பாகவதை: ஸார்த்தம் ராத்ராவேவ து பாரணம் ॥ தித்யந்தே பாரணம் கார்யம் ஜயந்தீபலம் இச்சதா 1 பலாபிஸந்திரஹிதை: ராத்ராவேவ து பாரணம் ॥

(ஜயந்தீயில் உபவாஸம் இருந்து சந்திரோதயகாலத்தில் ஆராதனம் செய்து ஐஹிகாமுஷ்மிகங்களான பலன்களில் விருப்பம் இல்லாத முமுக்ஷுக்கள் அப்போதே பாரணையைப் பண்ண வேண்டுமென்றும், பஞ்சவிதகாலங்களில்செய்யவேண்டிய அபிகமநம் முதலியவைகளில் ஈடுபட்டிருப்பவர்களும், தீக்ஷைபெற்றுப் பரமைகாந்திகளாயிருப்ப வர்களும், பக்தர்களுடனும் பாகவதர்களுடனும் (பகவான

னிடத்தில் பக்தியை ப்ரதாநமாகக் கொண்டவர்களுடனும், கைங்கர்யத்தை ப்ரதாநமாகக் கொண்டவர்களுடனும்) ராத்ரியிலேயே பாரணை யைப் பண்ணவேண்டும் என்றும், ஜயந்தியினால் பலனை விரும்புபவர் கள் திதியின் முடிவில் பாரணையைச் செய்யவேண்டும் என்றும், பலனில் விருப்பமில்லாத பரமைகாந்திகள் ராத்ரியிலேயே பாரணை யைச் செய்ய வேண்டும் என்றும் விசேஷவசநங்கள் கூறுவதால், இவற்றால் நிசி போஜநநிஷேதவசநம் பாதிக்கப்படுகிறது. ஆகை யால் ராத்ரியில் பாரணை ந்யாய்யம் தான்.