०१ स-भर्तृक-स्त्रीधर्माः

अथ स्त्रीधर्माः

सुवासिनो स्त्री ब्राह्मे मुहूर्ते भर्तुः पूर्वम् उत्थाय, पादौ சர்வு ‘3, அசசு, ரிra’ safa:- रूपम् आचमनद्वयं कृत्वा ‘हरिरिति’ सप्तकृत्वः उच्चार्य, श्रीविष्णु चित्तादिकृतद्रमिडगाथानुसन्धानं कृत्वा सदनम् अन्तबेहिश्च गोमयाम्बुभिः सिक्त्वा, सम्माजिन्या मार्जयेत् ।

க்கு.

विशेष दिनेषु गोमयाम्बुभिः गृहं लेपयेत् ।

பிறகு ஸ்த்ரீகளின் தர்மங்கள்

ஸ்த்ரீகளுக்கு சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்கள் பல பல உள்ளன. அவையனைத்தும் அவச்யம் அறியவேண்டுவனேயாகும். தற்போது ஆஹ்நிகத்தில் மூலத்தில் காட்டப்பட்டுள்ளவை மட்டும் இங்கே தரப்படுகின்றன.

இங்கே கூறப்படும் தர்மங்கள் ஸுமங்கலிஸ்த்ரீகளுக்கு ஆகும். ஸுமங்கலிஸ்த்ரீ ப்ராஹ்மமுஹுர்த்தத்தில் (விடியற்காலையில்) தன் பர்த்தா எழுந்திருக்கும் முன்னமே எழுந்திருக்கவேண்டும். கைகள், கால்கள் இரண்டையும் அலம்பிக் கொண்டு அச்யுத- அநந்த-கோவிந்த, என்ற மந்த்ரங்களைச் சொல்லி மூன்று தடவை களும் தனித்தனியாகத் தீர்த்தத்தைப் பருக வேண்டும். இவர் களுக்கு ப்ரணவமும் ‘அச்யுதாய’ என்று சதுர்த்தீவிபக்தியும் வேண்டாம். கேசவாதித்வாதசநாமங்களைச் சொல்லிப் புருஷர்கள் செய்வதுபோல் பன்னிரண்டு அங்கங்களைத் தொடவும் வேண்டாம். இவ்வாறு இரண்டு ஆசமனங்களைச் செய்ய வேண்டும்.

பிறகு ‘ஹரி:’ என்று ஏழுதடவைகள் உச்சரித்து, ஸ்ரீபெரியாழ் வார் முதலான ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களை அநுஸந்தானம் செய்து, க்ருஹத்தின் உட்புறத்திலும், வெளிப் புறத்திலுமாக கோமயம் (பசுவின் சாணம்) கலந்த புதிய தீர்த்தத் தினால் நன்கு தெளிந்து நனைக்கவேண்டும், ஏகாதசி முதலான விசேஷதினங்களில் க்ருஹத்தை நன்கு மெழுகவேண்டும். பிறகு விளக்குமாறு (துடைப்பம்) கொண்டு நன்றாகப் பெருக்கி அரிசி மாவினால் ஆங்காங்கு அழகியமுறையில் கோலம்இட்டு அலங்கரிக்க வேண்டும்.

[[77]]

[[610]]

विण्मूत्रोत्सर्जनानन्तरं गृहस्थार्धशौचं यावन्मनस्तुष्टि वा शौचं कृत्वा, गण्डूष आचमन दन्तधावन - गण्डूष आचमनानि कृत्वा, उदद्यादनन्तरं ‘हरिहरिः’ इति प्रतिदिनं शिरसि हरिद्राजलप्रोक्षणसहितं कण्ठस्नानं कुर्यात् ।

विशेष दिनेषु निमित्तेषु च अष्टाक्षरेण शिरस्स्नानं कुर्यात् ।

பிறகு மலஜலங்களைக் கழித்து மண் இட்டுக்கொண்டு சௌசம் செய்து கொள்ளவேண்டும். க்ரூஹஸ்தனுக்குக் கூறிய அளவில் பாதி அளவுக்கு இவர்கள் மண் இட்டுக் கொண்டால் போதும். அதாவது அத்ருஷ்டார்த்தமாக மூன்று தடவைகள் மண் இட்டுக் கொண்டு, பிறகு த்ருஷ்டார்த்தமாக ஆறுதடவைகள் மண் இட்டுக் கொள்ளவேண்டும்.

க்ருஹஸ்தனுக்குப் பன்னிரண்டு மண்கள் முன்பு கூறப்பட்டுள்ளன. அதில் பாதி அளவு இவர்களுக்கு.

முன் காலத்தில் ஸுமங்கலிகளுக்கு மண் இட்டுக் கொள்ளும் முறையை அனேகமாக வயதான பாட்டிகள் (விதவைகள்) சொல் லிக் கொடுப்பார்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட எண்ணிக்கை யின்படிச் சொல்லித்தந்து விடுவார்கள். ஆகவே ஸுமங்கலிகளில் சிலர் நிறைய மண் இட்டுக்கொள்வார்கள். அல்வளவு வேண்டிய தில்லை என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த அளவு மண் இட்டுக் கொள்வதில் த்ருப்தி ஏற்படாவிடில் மனத்துக்கு த்ருப்தி ஏற்படும் வரை அதிகமாகவும் இட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு செளசம் செய்து கொண்ட பிறகு வாய்கொப்பளித்து, ஆசமனம் செய்து, பல்தேய்த்து, மீண்டும் வாய்கொப்பளித்து ஆசமனங்களைச் செய்யவேண்டும்.

ஸூர்யன் உதித்த பிறகு ‘ஹரிர்ஹரி:’ என்று சொல்லி நாள்தோறும் சிரஸ்ஸில் மஞ்சள் தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொண்டு கழுத்தளவு ஸ்நாநம் செய்யவேண்டும். தினந்தோறும் ஸுமங்கலிகள் சிரஸ்ஸ்நாநம் செய்யவேண்டியதில்லை. ஆனால் ஏகாதசி முதலான வ்ரததினங்களில் அஷ்டாக்ஷரத்தைச் சொல்லி அவச்யம் சிரஸ்ஸ்நாநம் செய்யவேண்டும். பழைய பின்னல் பழைய பூக்கள் இவற்றுடன் ஸ்நாநம் செய்யக்கூடாது. பின்னலை அவிழ்த்து முடிந்து கொண்டு ஸ்நாநம் செய்ய வேண்டும்.

स्त्रीधर्माः

[[611]]

ततो रक्तवस्त्रद्वयं धृत्वा पादौ प्रक्षाल्य, आचम्य हरिपादाकृति मध्ये दीपरेखाकारश्रीचूर्णसहितम् सच्छिद्रम् ऊर्ध्वपुण्ड्रं मध्ये कूश्माण्ड बीजाकारश्रीचूर्णसहितम् अर्धचन्द्राकृति वा धृत्वा, सूर्याय अध्यं दत्त्वा, गुरुपरम्पराम् अनुसन्धाय, यथाशक्ति अष्टाक्षराद्युपदिष्टमन्त्रान् जपेत् ।

ततः अग्न्यगारं होमोपकरणानि च संशोध्य, भस्म उद्धृत्य, अग्नि प्रज्वाल्य, अक्षतेः अभ्यर्च्य भर्ता होमे कृते तुषं करीषपिण्डांश्च अग्नौ निक्षिप्य, पिधानेन अग्निम् आच्छाद्य, तस्य रक्षणं कृत्वा, भगवत्सन्निधिम् आगत्य, ளI- नोपलेपने कृत्वा, रङ्गवल्याद्यैः मनोहरम् अलङ्कृत्य, पूजोपकरणानि पात्राणि निर्मलीकृत्य, भगवन्तं प्रणम्य,

சரிஞ்:

ஸ்நாநம் செய்த பிறகு (சிவப்பு) நிறம் உள்ள இரண்டு வஸ்த் ரங்களைத் தரிக்க வேண்டும். ஸ்த்ரீக்களும் இரண்டு வஸ்த்ரங்க ளாகவே உடுக்கவேண்டும் என்றபடி. பிறகு இரண்டு கால்களை யும் அலம்பி, ஆசமனம் செய்து பகவான் திருவடி வடிவில் திருமண் இட்டுக் கொண்டு நடுவில் தீபரேகை போன்ற வடிவில் ஸ்ரீசூர்ணக் தைத் தரிக்க வேண்டும். அல்லது பூசணிவிதை வடிவத்கிலோ அர்த்தசந்த்ரவடிவத்திலோ இதைத் தரிக்கலாம். பிறகு ஸூர்யனை நோக்கி ஒரு தடவை அர்க்யம் மந்த்ரமின்றி விடவேண்டும். பிறகு குருபரம்பரையை அனுஸந்தானம் செய்து முடிந்தவரை உபதேசமாகியுள்ள அஷ்டாக்ஷாம் முதலான மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். ஸ்க்ரீகளுக்குஜபத்தில் ப்ராணாயாமம் ஸங்கல்பம் இவை வேண்டுவதில்லை.

பிறகு அடுப்பையும், ஔபாஸனக்கால் (அக்னி குண்டம்) ஆகிய வற்றையும் நன்கு சோதனம் செய்து அவற்றிலிருக்கும் சாம்பலை அப்புறப்படுத்தி, கோலமிட்டு அக்னியை மூட்டி நன்கு ஜ்வலிக்கும் படிச் செய்து அக்ஷதைகளால் அர்ச்சிக்க வேண்டும். பர்த்தா ஹோமம் செய்த பிறகு உமி, சாணத்தின் உலர்ந்த உருண்டைகள் இவற்றை அக்னியில் இட்டு அக்னி வைத்திருக்கும் பாண்டத்தின் (அக்னி குண்டத்தின்) வாயை மூடி அக்னியை மறைத்து வைத்துக் காக்க வேண்டும்.

பிறகு பகவத்ஸந்நிதிக்கு வந்து அதைப் பெருக்கி, மெழுகி, மனத்தைக் கவரும் வகையில் கோலங்களால் அலங்கரிக்க வேண்டும். திருவாராதனத்திற்குப் பயன்படும் பாத்ரங்களை அழுக்

[[612]]

संस्कृतैर्वा स्तोत्रैः तोषयित्वा, बालानां देहशुद्धं कृत्वा, अलङ्-

कृत्य भगवद्वन्दनादीनि कारयित्वा

इयं पुत्री इति देवदेवाय निवेद्य,

पृथक पृथक ‘अयं पुत्रः, प्रदक्षिणप्रणामान् कृत्वा, पादप्रक्षालनार्थम् अम्बु,

गुरु-पितृ श्वशुर - भर्नादीन् प्रणम्य वस्त्रेण शोधितं भगवदाराधनार्थम् अम्बु, पाकार्थम् अम्बुचाहृत्य, पृथक् पृथक् स्थापयेत् ।

तिल मुद्ग-तण्डुल-अग्निपक्वव्रीहीन् उपलिप्ते देशे संस्थाप्य, शुद्धाभिः कुलस्त्रीभिः अवहननं कारयित्वा पूर्वदिनो-

கின்றித் தேய்த்து வைத்து பகவானை ஸேவித்து திவ்யப்ரபந்தங்கள் ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ரங்கள் இவற்றால் எம்பெருமானை மகிழ்விக்க வேண்டும். பிறகு பாலர்களை (குழந்தைகளை) ஸ்நாநம் செய்வித்து அலங்கரித்து அவர்களையும் பகவானை வணங்கும்படிச் செய்ய வேண்டும். அவர்களை பகவானுக்குத் திருமுன்பே நிறுத்தி வைத்து, ‘இவன் புத்ரன்; இவள் புத்ரீ’ என்கிற முறையில் குடும் பத்தில் உள்ள சிறுவர்களை பகவானுக்கு விஜ்ஞாபிக்க வேண்டும். ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்து, குரு, தந்தை, மாமனார். மாமியார், பர்த்தா முதலானோரை நமஸ்கரிக்க வேண்டும், பர்த்தாவை பத்னீ நமஸ்கரிப்பது வழக்கத்தில் உள்ளதே.

கால் அலம்புவதற்கென்று வெளியிலும், திருவாராதனம் தளிகை இவற்றுக்கென்று உள்ளேயும் தனித்தனியே தீர்த்தங்களை நிரப்பி வைக்கவேண்டும். ஸ்நாநம் செய்வதற்கு முன் எடுத்து வைத்த ஜலத்தினால் கால்களை அலம்பக் கூடாது. அது விழுப்பு (தீட்டு) ஜலமாதலால் அதைத் தொட்டால் மீண்டும் ஸ்நாநம் செய்ய வேண்டிவரும்.

தளிகைக்கும் திருவாராதனத்திற்கும் வைக்கும் தீர்த்தத்தை நன்கு துணியால் வடிக்கட்டிவைக்க வேண்டும். தீர்த்தம் வடிக் கட்டுவதற்கு என்றே தனியாகத் துணி வைத்துக் கொள்ளவேண்டும் இவ்வாறே சூடான பாத்ரங்களைப் பிடித்து இறக்கி வைக்கவும். ஏற்றிவைக்கவும், வற்றல் வடாம் முதலியன உலர்த்துவதற்கும் புதிய துணிகளையே உபயோகப்படுத்தக் வேண்டும்.

எள், பயிறு, அரிசி, புழுங்கல் நெல் ஆகியவற்றை கோமயத் தினால் நன்கு துடைக்கப்பட்ட இடத்தில் வைத்து உரலில் இட்டுस्त्रीधर्माः

[[613]]

पयुक्तभाण्डादीनि निर्लेपानि कृत्वा, आतप अग्निभ्याम् अभिताप्य, तेषु पाकं कुर्यात् । काकादिस्पृष्टानि भिन्नानि मासातीतानि च भाण्डानि त्यजेत् । तानकांस्यादिपात्रेषु सत्सु

परगृहात् पचनाग्निं नाऽऽहरेत्। स्वगृहे एव अग्निं संरक्ष्य, तेनैव वाग्यता सती प्राङ्मुखी उदङमुखी वा पाकं कुर्यात् । शास्त्रीयाणि शाकादीनि संभूतानि तोयेन संशोध्य, शस्त्रेण निकृत्य, कृमिकीटदूषितानि परित्यज्य, कण्टकानि निर्हृत्य, शाकमुद्ग-तण्डुलान् चतुः प्रक्षाल्य पचेत् ।

உயர்குலத்தில் பிறந்த பரிசுத்தர்களான ஸ்த்ரீகளைக் கொண்டு உமி நீங்கும்படிக் குத்தித் தளிகைக்கு உபயோகிக்கவேண்டும்.

முதல் நாளில் தளிகைக்கு உபயோகித்த பாத்ரங்களை மீண்டும் அன்னத்தின் பருக்கைகள் முதலியன இல்லாதபடி நன்கு தேய்த்து வெய்யில் நெருப்பு இவற்றில் காட்டிய பிறகே அவற்றில் தளிகை (பாகம்) செய்யவேண்டும். காக்கை, நாய் முதலியன தீண்டியவை களும் உடைந்தவைகளும், ஒரு மாதத்திற்கு மேல் ஆனவைகளு மான மண்பாத்ரங்களை உபயோகிக்கக் கூடாது. அவற்றை அப்புறப்படுத்தி விடவேண்டும். செப்பு, பித்தளை, வெண்கலம் முதலியவற்றால் ஆன பாத்ரங்கள் இருக்கும் போது அவற்றிலேயே தளிகை செய்ய வேண்டும். மண்பாண்டங்களில் செய்யக்கூடாது.

அயலார் க்ருஹங்களிலிருந்து அக்னியைக் கொண்டுவருவது கூடாது. தன் க்ருஹத்திலேயே அக்னியை ரக்ஷித்து வைத்து அதைக் கொண்டே தளிகை செய்யவேண்டும். அப்பொழுது மௌனத்துடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும் சாஸ்த்ரஸம்மதமான காய்கறிகளை வாங்கி வந்து சுத்த தீர்த்தத் தினால் நன்கு அலம்பிய பிறகே அரிவாள்மணை கொண்டு நறுக்க வேண்டும். புழு, பூச்சி முதலியவை உள்ள இடங்களை விட்டுவிட வேண்டும். முள் இருந்தால் அதையும் போக்கவேண்டும். காய்கள் பயிறு, அரிசி (அமுதுபடி) இவற்றை நான்கு தடவைகள் அலம்ப வேண்டும். அரிசி களையும் போது நான்கு தடவை களைய வேண்டும் என்றபடி.

[[614]]

श्री वैष्णव सदाचार निर्णये

शाकानि चित्राणि विभवे सति अधिकानि वा विशेषदिनेषु

स्वेदाश्रूणि स्वाङ्गानि च स्पृष्ट्वा, करौ प्रक्षालयेत् । पाकभाण्डस्थितं सर्वम् आदेनादिकं चक्राद्यङ्कितेषु पात्रान्तरेषु निधाय, पाकभाण्डादीनि विशोध्य, पाकशालां च अभ्युक्ष्य, मार्जयित्वा वस्त्रान्तरं धृत्वा पादौ हस्तौ च प्रक्षाल्य, आचम्य, भगवद्गृहे गो-महिष्याज्यः तैलैर्वा दीपम् आरोपयेत् । तत्तत्काले दद्यात् । ततोऽन्नव्यञ्जनादीनि भगवत्सन्निधौ अनुपलिप्तप्रदेशे आराधयित्रे निवेद्य समर्पयेत् ।

பல விதங்களான காய் கறிகளைச் செய்ய வேண்டும். விசேஷ தினங்களில் பொங்கல், சர்க்கரைப்பொங்கல் சித்ரான்னங்கள் திருக் கண்ணமுது, வடை முதலியன செய்ய வேண்டும்.

வியர்வைத் துளிகள், தன் அங்கங்கள் இவற்தைத் தொட்டு அப்படியே பாத்ரங்களைத் தொடுவதும் காய்கறிகள், அன்னம் இவற் றைத் தொடுவதும் செய்யக் கூடாது. உடனே கைகளை அலம்ப வேண்டும்.

அன்னங்கள்

தளிகை ஆனதும் பாகபாத்ரங்களிலிருக்கும் அனைத்தையும் எம்பெருமானுடைய சக்கரம் முதலியவை பொறிக் கப் பெற்ற வேறு பாத்ரங்களில் மாற்றி எடுத்து வைத்து விட்டு, பாகம் செய்த கரிப்பாத்ரங்களைத் தேய்த்து சுத்தம் செய்து பாக சாலையை (திருமடைப்பள்ளியை) ப் ப்ரோக்ஷித்துப் பெருக்கி சுத்த மாகச் செய்து, தான் வேறு புடவையை உடுத்திக் கொண்டு கால் களை அலம்பி ஆசமனம் செய்யவேண்டும்.

பிறகு பகவத்ஸந்நிதியில் பசு-எருமை இவற்றின் நெய்யினா லேயோ எண்ணெயினாலேயோ திருவிளக்கு ஏற்ற வேண்டும். பர்த்தா திருவாராதனம் செய்யும் போது உடனிருந்து அந்தந்த ஸமயங்களில் சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், மதுபர்க்கம், தாம்பூலம் முதலியவற்றை எடுத்துத் தரவேண்டும். போஜ்யாஸன ஸமயத்தில் பகவத் ஸந்நிதியில் அன்னம், குழம்பு முதலிய வ்யஞ் ஜனங்கள், காய் ஆகியவற்றை ஆராதனம் செய்பவருக்கு இன்னது இன்னது’ என்று சொல்லி ஸமர்ப்பிக்க வேண்டும்.

स्त्रीधर्माः

[[615]]

प्रदक्षिणनमस्कारात् कृत्वा, वैश्वदेवसमये वह्निशुश्रूषणं कुर्यात् । अनन्तरं वणिभ्यो यतिभ्यश्च हस्तोदकपूर्वकं भिक्षां दद्यात् ।

भर्वादीनां भुक्तिदेशं गोमयाम्बुना संशोध्य, हस्तद्वयेन सोपचारं तैलपक्वव्यतिरिक्तं सर्वं दर्व्यादिना परिवेषयेत् । भर्नादिषु भुक्तवत्सु स्वयं भुञ्जीत । भोजनसमये पादप्रसारणहासरोदन - बहुभाषणानि सन्त्यजेत् । भोजनाद्यन्तयोः पाद-

அப்பொழுதுதான் கண்டருளப்பண்ணும் போது இவற்றை அறிந்து ஸமர்ப்பிக்க ஸௌகர்யமாயிருக்கும்.

திருவாராதனம் முடிந்த பிறகு ப்ரதக்ஷிணம் நமஸ்காரங்களைச் செய்து, வைச்வதேவம் செய்யும் போது அக்னியை ஜ்வலிக்க செய்வது முதலான முறையில் அக்னிசுச்ரூஷணம் செய்ய வேண் டும். பிறகு ப்ரஹ்மசாரிகள், ஸந்ந்யாஸிகள் ஆகியவர்களுக்குக் கையில் தீர்த்தம் சேர்த்து பிக்ஷைதர வேண்டும்.

போஜனகாலத்தில் பர்த்தா முதலியவர்கள் போஜனம் செய்யும் இடங்களை கோமயம் (பசும் சாணம்) தீர்த்தம் இவற்றைக் கொண்டு சுத்தி செய்ய வேண்டும். அன்னம் வ்யஞ்ஜனம் முதலாக யாவற் றையும் இரண்டு கைகளாலும் உபசாரத்துடன் பரிமாற வேண்டும். எண்ணெயில் தளிகை செய்யப்பட்டவற்றைக் கைகளாலேயே பரிமாற வேண்டும். கரண்டி முதலியவற்றால் பரிமாறக் கூடாது, மற்றையவற்றைக் கரண்டி முதலியவற்றினாலேயே

வேண்டும்.

பரிமாற

பர்த்தா முதலானவர்கள் போஜனம் செய்த பிறகு தான் போஜனம் செய்ய வேண்டும். அந்த ஸமயத்தில் கால்களை நீட்டிக் கொள்ளுதல், சிரித்தல், அழுதல், வம்பு அளத்தல் முதலியன செய்யக் கூடாது. ஸ்த்ரீகள் பலர் பக்கலில் இவற்றைக் காணலாம். ஆகவே தான் இந்த நிஷேதம். போஜனத்திற்கு முன்பும் பின்பும் கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்வது அவச்யமாகும்.

[[616]]

श्रीवेष्णव सदाचारनिर्णये

सायंकाले स्वगृहे देवसन्निधौ च दीपम् आरोप्य, देवं, श्वशुरादींश्च प्रणम्य, अग्निशुश्रूषणं कृत्वा, धात्रीफलतिलान् बिना व्यञ्जनादीनि कृत्वा, देव-अग्नि शुश्रूषणम्, अग्निरक्षणं च कृत्वा, दधि-आर्द्रकं बिना, भर्त्रादीन् भोजयित्वा स्वयमपि भुक्त्वा, भर्ते ताम्बूलानि दत्त्वा स्वयमपि वस्त्र-भूषणगन्धपुष्पाणि धृत्वा, ताम्बूलचर्वणञ्च कृत्वा, भर्तुर्यथाप्रियं पादसंवाहनश्च कृत्वा भर्तरि शयिते स्वयमपि शयीत । पतिशुश्रूषणादीनि पाकादीनि कर्माणि श्रीशकैङ्कर्यबुद्धचैव कुर्यात् ।

ஸாயங்காலத்தில் தன்க்ருஹத்திலும் பகவத்ஸந்நிதியிலும் விளக்கு ஏற்றி வைத்து; பகவான் மாமனார் முதலானோரை ஸேவிக்க வேண்டும். ஸாயங்காலஹோமத்திற்காக அக்னிக்கு சுச்ரூஷை செய்து, ராத்ரி போஜனத்திற்காக நெல்லிக்காய், எள் இவற்றைத் தவிர்த்து அன்னம் வ்யஞ்ஜனம் முதலியவற்றைச் செய்யவும். தேவசுச்ரூஷையும் அவற்றை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க ஸாயம் வைச்வதேவத்திற்காக அக்னி சுச்ரூஷையும் ஸம்ரக்ஷண மும் செய்யவேண்டும். போஜனஸமயத்தில் இரவில் தயிர் இஞ்சி இவைகளைத் தவிர்த்து மற்றையவ்யஞ்ஜனங்களைப் பரிமாறி பர்த்தா முதலானவர்களை போஜனம் செய்வித்துப் பிறகு தானும் போஜனம் செய்யவேண்டும்.

பிறகு அவர்களுக்குத் தாம்பூலம் தந்து தானும் படுப்பதற்கு ஏற்ப வேறு வஸ்த்ரங்கள் ஆபரணங்கள், சந்தனம், புஷ்பம் இவற்றைத் தரித்து தாம்பூலத்தையும் சாப்பிட்டு, பர்த்தா மனம் மகிழும் வரை அவர் திருவடிகளைப் பிடித்துவிட வேண்டும். பர்த்தா சயனித்த பிறகுதான் படுக்க வேண்டும். பதிசுச்ரூஷை, பாகம் செய்தல் ஆகியவற்றை எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்ய மாகவே நினைத்துச் செய்யவேண்டும்.