०१ भगवद्-आराधनक्रमः

अथ भगवदाराधनक्रमः

‘ப்ராச்யை திசே நமஸ்குர்யாத் ப்ராத: காலே த்விஜோத்தம: 1 மத்யாஹ்நே சைவ ஸாயாஹ்நே ப்ரதீச்யை ச திசே நம: 11 இதி ப்ரதிதினம் குர்யாத் திங் நமஸ்காரமேவ ஹி II’ என்று ப்ராஹ்மணச்ரேஷ்டன் காலையில் ப்ராச்யை திசே நம: என்றும், மத் யாஹ்நத்திலும், ஸாயங்காலத்திலும் ப்ரதீச்யை திசே நம:, என்றும் நாள்தோறும் திங்நமஸ்காரத்தைச் செய்யவேண்டும் என்று. இந்த முறைதான் ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி ஸ்ம்ருதிரத்நாகரத்தில் இவ்விஷயம் நன்கு விவரிக்கப்பட்டுள்ளதைக் கொண்டே ஸ்ரீமத்இஞ்சிமேட்டு அழகியசிங்கர் தன் காலத்தில் அச்சான ஆஹ்நிகப்பதிப்பில் (இதம் விஹிதம்) த்ரஷ்டவ்யம் - இவ் வாறு விதிக்கப்பட்டுள்ளது காண்க) என்ற வாக்யத்தைச் சேர்த் தாயிற்று. பழைய பதிப்புக்களில் இந்த வாக்யம் இல்லை.

ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் இந்தப் பாகுபாடு கூறப்படவில்லை. ஆகவே ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர் கள் பின்பற்ற வேண்டிய முறை இது.

இவ்வாறே மேற்கு முதலாக மற்றைய திக்குகளையும் நமஸ் கரித்த பிறகு மற்றுள்ள க்ரியாம்சங்களை ப்ராதஸ்ஸந்த்யையில் கூறியுள்ளபடியே செய்யவேண்டும். பிறகு வஸ்த்ர நிஷ்பீடனம் செய்துவிட்டு க்ருஹத்திற்கு வரவேண்டும்.

பகவதாராதனம் செய்யும் முறை

நாள் முழுவதும் செய்ய வேண்டிய கார்யங்களில் மிக முக்ய மானது இஜ்யாராதனமாகும். ‘இது வைச்வதேவம் போல் நித்யம் செய்ய வேண்டுவதாகும்’ என்று ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷை கூறுகிறது

1भगवदाराधनस्य अवश्यकर्तव्यतां श्रुतयः स्मृतयश्च अवगमयन्ति । प्रपञ्चितं चैतत् श्रीपाञ्चरात्र रक्षायां द्वितीयाधिकारे-

‘नित्यं चैतद् वैश्वदेवादिवद्भगवत्समाराधनम्; ‘नित्यमाराधयेद्धरिम्’ इति वचनात् ।

‘शौनकोऽहं प्रवक्ष्यामि नित्यं विष्ण्वचनं परम् ।

faqன்னான: '

‘ரq:

[[4]]

इति सूत्रान्तरानुसारात्’ इत्यादिग्रन्यसन्दर्भेण ।

भगवदाराधन क्रमः

[[409]]

ச்ருதிகள் ஸ்ம்ருதிகள் பலவும் பகவதாராதனம் அவச்யம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஒரு குடும்பத்தில் பிதா அவ ருடைய ப்ராதாக்கள், புத்ரர்கள் இப்படிப்பலர் இருப்பினும் பாகப் பிரிவினை ஆகாதிருந்தபோதும் ஒவ்வொருவரும் தனித்தனியே பகவ தாராதனம் செய்யவேண்டும் என்று மனு முதலான மஹர்ஷிகள் கூறியுள்ளார்கள். தகப்பனார் ப்ரதானமாக விரிவாகத் திருவாரா தனம் செய்து விட்டாலும், மற்றையவர்கள் புஷ்பங்களைக் கொண் டாவது அர்ச்சிக்கவேண்டும். இவ்வாறே ருத்விக்-ஆராதனத்திற்காக வரிக்கப்பட்டவர் பூர்ணமாக ஆராதித்திருந்தாலும் க்ருஹஸ்வாமி முதலாக யாவருமே புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி ஆராதிக்க வேண்டும். பிறகே பெருமாளுடைய ஸ்ரீபாததீர்த்தம் துளஸீ முத லியவற்றை ஸ்வீகரிக்க வேண்டும் என்பதே ஸத்ஸம்ப்ரதாயஸித்தம் என்று முமுக்ஷ தர்ப்பணம் கூறுகிறது. விஷ்ணுவின் ஆராதனத்தைக் காட்டிலும் மிக உயர்ந்த வைதிகமான புண்யம் வேறு எதுவும் கிடை யாது. ஆகையால் ஆதியும் அந்தமும் அற்ற பகவானை எப்பொழு தும் ஆராதிக்க வேண்டும் என்கிறார் வ்யாஸர். ‘ஒருவன் அறியாமை

‘प्र वः पान्तम् अन्धसो धियायते महे शूराय विष्णवे चार्चत’ इति कृत्स्नो मन्त्रः ऋग्वेदे (1-155-1) श्रूयते; सच्चरित्ररक्षायां प्रथमाधिकारे उपात्तः; उत्तमूर स्वामिपादैः तत्र टिप्पण्यां व्याख्यातश्च ।

इमां च ऋचम् उपादाय स्मृतिरत्नाकरादयोऽपि भगवदाराधनस्य नित्यत्वं बोधयन्ति ।

एकस्मिन् कुटम्बे पिता-पुत्रादयश्च सर्वेऽप्यविभक्तदशायामपि पृथक् पृथक् भगवन्तमाराधयेयुः । तदुक्तं मुमुक्षुदर्पण व्याख्याने - अतो मन्वादिभिः भगवदाराधनस्य प्रतिपुरुषं नित्यत्वेन विधानात्, अकरणे प्रत्यवायस्मरणाच्च ऋत्विगादिना हविस्समर्पणपर्यन्ते हि भगवदाराधने कृतेऽपि गृहपति तद्भ्रातृ - तत्पुत्रैरपि पत्रपुष्पादिना प्रणामपूर्वकम् अर्चनं कृत्वा भगवद्दिव्यपादाम्बूनि तुलसीदलानि च स्वीकृत्य, अनन्तरमेव भोक्तव्यमिति सत्सम्प्रदायः ॥’ इति

‘न विष्ण्वाराधनात् पुण्यं विद्यते कर्म वैदिकम् । तस्मादनादिमध्यान्तं नित्यमाराधयेद्धरिम् ॥’

इति व्यासवचनेन नित्यत्वं सिद्धम् ।

[[52]]

[[410]]

யாலோ சோம்பலாலோ பகவதாராதனம் செய்யாமல் சாப்பிட்டு விட்டால் அவன் நாநாவித நரகங்களை அடைகிறான். பன்றியின் பிறவியில் தோன்றுகிறான் என்றெல்லாம் ஆராதனம் செய்யாவிடில் அநர்த்தம் வரும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்தப் பகவதாரா தனத்தை அவச்யம் செய்தேயாக வேண்டும்.

‘விஷ்ணுவின் பூஜையில்லாத க்ராமத்திலோ க்ருஹத்திலோ உணவு அருந்துவதும், தீர்த்தம் பருகுவதும் செய்யக் கூடாது, ஒரு நாள் வஸிக்கவும் கூடாது’ என்று பராசரஸம்ஹிதை கூறுவதாக ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் முதலாகப் பல தர்மசாஸ்த்ரங்கள் கூறு

கின்றன.

விக்ரஹாராதனம் செய்வதே (அதாவது அழகிய திருவுருவம் கொண்ட எம்பெருமானை ஆராதிப்பதே) சிறந்தது என்கின்றன சாஸ்த்ரங்கள். ஆனால் அதில் பலவித ச்ரமங்கள் உண்டு. ஆகவே ஸாளக்ராமமூர்த்தியின் ஆராதனமே சிறந்தது. இதில் எவ்விதக் குற்றமும் நேராது. நேர்ந்தாலும் எளிய முறையில் அதற்குப் பரிஹாரத்தையும் செய்து விடலாம். ஸாளக்ராமமூர்த்தி பூஜிக்கப் படும் இடத்தைச் சுற்றிலும் இரண்டு மைல் தூரம் வரையிலுள்ள ப்ரதேசம் புண்யக்ஷேத்ரமாகும்.

நல்ல சக்ரம் அமைந்த ஸாளக்ராமசிலையாயிருப்பின் உடைந் தாலும், விரிசல் கண்டிருந்தாலும் அதைப் பூஜிக்கலாம். போகத்தையும் மோக்ஷத்தையும் தரவல்லது,

‘यो मोहादथवाऽऽलस्याद् अकृत्वा विष्णुपूजनम् । भुङ्क्ते स याति नरकान् सूकरेष्वभिजायते ॥ इति वचनेनैतदकरणे प्रत्यवायोऽपि प्रतिपाद्यते ।

‘विष्ण्वर्चारहिते ग्रामे विष्ण्वर्चारहिते गृहे । न कुर्यादन्नपानादि न तत्र दिवसं वसेत् ॥’

அது

इति विष्ण्वर्चारहिते ग्रामे गृहे भोजनं पानं वासश्च निन्द्यते पराशरसंहितायाम् इति प्रपन्नधर्म सारसमुच्चयः ।

विग्रहाराधनस्यैव मुख्यत्वं तदभावे सालग्राम शिलाराधनस्य कर्तव्यतां च स्मरन्ति महर्षयः ।

सालग्रामशिलाराधनं प्रमादप्रसङ्गभावेन सुकरम् । तदुक्तं

श्रीविष्णुतिलके-

भगवदाराधनक्रमः

[[411]]

05 தீண்டக் கூடாதவற்றால் இது தீண்டப்பட்டாலும் இதற்கு ஆவாஹநம் வேண்டாம், ப்ரதிஷ்டை, சாந்தி, ப்ராயச்சித்தம் ஏதும் செய்யவேண்டாம். பசும்பாலினால் திருமஞ்ஜனம் (அபிஷேகம்) செய்தால் போதும்.தோஷம் நீங்கிவிடும்.

ஸாளக்ராம சிலையுடன் த்வாரகாசிலையும் சேர்ந்து இருக்கும் இடத்தில் மோக்ஷம் உண்டு. இதில் ஸந்தேஹமேயில்லை.

‘ஸாளக்ராம சிலா யத்ர பூஜ்யதே கமலாஸந!। தஸ்மாத் க்ரோசத்வயம் புண்ய க்ஷேத்ரமித்யுபதாரய ॥

பிந்நா வா ஸ்புடிதா யத்வா சக்ரயுக்தா சிலா யதி! பூஜநீயா ப்ரயத்நேந புக்திமுக்திபலப்ரதா ।I

நாவாஹநம் ந ப்ரதிஷ்டா, ந சாந்திர் நைவ நிஷ்க்ருதி: 1 துக்தேந ஸ்நாபயேத் ப்ரஹ்மந்! ஸ்பர்சாத்யைர் தூஷிதா யதி ॥ ஸாளக்ராம சிலா யத்ர யத்ர த்வாரவதீ சிலா 1

உபயோஸ் ஸங்கமோ யத்ர தத்ர முக்திர் ந ஸம்சய:[]

என்று பாத்மவசனத்தைக் கொண்டு ஸ்ம்ருதிரத்நாகரம் கூறியுள்ள தையும் இங்கே கொள்ளவேண்டும்.

सालग्रामशिला यत्र पूज्यते कमलासन ! ।

तस्मात् कोशद्वयं पुण्यक्षेत्रमित्युपधारय ॥

भिन्ना वा स्फुटिता यद् वा चक्रयुक्ता शिला यदि ।

पूजनीया प्रयत्नेन भुक्तिमुक्तिफलप्रदा ॥

नावाहनं न प्रतिष्ठा न शान्तिनैव निष्कृतिः ।

दुग्धेन स्नापयेद् ब्रह्मन् ! स्पर्शार्थदूषिता यदि ॥

सालग्रामशिला यत्र यत्र द्वारवती शिला ।

उभयोरसङ्गमो यत्र तत्र मुक्तिर्न संशयः ॥

इति पाद्मवचनोदाहरणेन द्वारकाशिलया सार्धं सालग्रामशिलापूजनं

प्रशंसति स्मृतिरत्नाकरः ।

[[412]]

ப்ரஹ்மசாரீ, க்ருஹஸ்தன், வாநப்ரஸ்தன், ஸந்நியாஸி ஆகிய நான்கு ஆச்ரமிகளும் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று பகவதாராதனம் செய்யவேண்டும் என்று மஹர்ஷிகள் கூறியுள்ளனர்.

ஸ்த்ரீகளும் சூத்ரர்களும் கூடப் பஞ்ச ஸர் ஸ்காரம் பெற்று விஷ்ணு பூஜை பண்ண வேண்டும் என்று தர்மசாஸ்த்ரங்கள் கூறு கின்றன.

ஜபம், தபஸ், தீர்த்தஸேவை, ஸந்ந்யாஸம், மந்த்ரஸாதனம். தேவதாராதனம் என்று இந்த ஆறு விஷயங்களை ஸ்த்ரீகளும் சூத்ரர்களும் செய்யக் கூடாது. செய்தால் அவர்கள் பதிதர்களாகி விடுவார்கள் என்று ஒரு வசனம் கூறுகிறது அது வைதிகமந்த்ரங் களைக் கொண்டு செய்யும் கர்மாக்களைப் பற்றியதாம். அதன்படி வேதமந்த்ரங்களைக் கொண்டு ஸ்த்ரீசூத்ரர்கள் பகவானை ஆராதிக்க கூடாது என்று ஏற்படுகிறது.

இதில் அவர்கள் தாந்த்ரிகமான முறையில் வேதமந்த்ரங் களின்றி ஆராதனம் முதலியவற்றைச் செய்யலாம் என்று கூறப்படு கிறது. ஆகவே தோஷமில்லை. ஸுமங்கலி ஸ்த்ரீகள் பர்த்தா அசக் தனாயிருக்கும் போது அவனுடைய நியமநத்தைப் பெற்று இதைச் செய்ய வேண்டும். அவன் நியமனமின்றிச் செய்யக் கூடாது என்று ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், ஸ்ம்ருதிரத்நாசுரம் ஆகியவை நன்கு விசாரித்து நிர்ணயம் செய்துள்ளன.

அந்த ஸமயத்தில் ஸாளக்ராம மூர்த்திகளைத் தொடாமல் நிவேதனம் மட்டுமே ஸ்த்ரீகள் செய்யலாம் என்பதே பெரியோர்கள் திருவுள்ளம்.

ब्रह्मचारिप्रभृतिः सर्वेः आश्रमिभिः, सर्वेश्व वर्णः लब्धपश्चसंस्कारैः इदं भगवदाराधनम् अवश्यकर्तव्यम् इति स्मर्तारः । विस्तरः धर्मशास्त्रेषु ।

स्त्री-शूद्रैरपि इदं भगवदाराधनं कर्तव्यम् । परन्तु अवैदिकं - तान्त्रिकं भवदेतत् ॥

‘जपस्तपस्तीर्थसेवा प्रव्रज्या मन्त्रसाधनम् । देवताराधनं चैव स्त्रीशूद्रपतनानि षट् ॥

इति वचनस्य वैदिकाभिप्रायत्वव्यवस्थापनम् स्मृतिरत्नाकरादिषु दृश्यते । भर्तृमतीनां भर्तुराज्ञयात्र प्रवृत्तिरनुज्ञायते । तदपि केवलं निवेदन एव । एवमादयः प्रपन्नधर्म सारसमुच्चयादी ॥

भगवदाराधनक्रमः

[[413]]

ततस्सुप्रक्षालितपाणिपादः स्वाचान्तः भगवत्सन्निधिं गत्वा,

இனி இப்படி மிக முக்யமான இஜ்யாராதனம் செய்யும் முறை யைக் கவனிப்போம்.

இரண்டு கால்களையும் நன்றாக அலம்பிக் கொண்டு இரண்டு தடவைகள் ஆசமனம் செய்து க்ருஹத்துக்குள் இருக்கும் அர்ச்சா மூர்த்தியின் ஸந்நிதிக்குச் செல்ல வேண்டும்.

ஆராதனம் செய்யும் காலத்தில் கோபத்துடன் இருக்கலாகாது’ வேகத்துடன் செய்யக்கூடாது. பகவத் ஸந்நிதியில் பூமியை நனைத்து ஈரமாகச் செய்யக்கூடாது. பாத்ரங்களைச் சப்திக்கும்படி வைக்கலாகாது. குழந்தைகளைக் கொஞ்சலாகாது; ஹும் என்று மிரட்டுதல், அழுதல், சிரித்தல், தூங்குதல், சோம்பலுடனிருத்தல், பேசுதல் இவற்றைச் செய்யக்கூடாது. இ வ்வாறேதும்முதல், கொட்டாவிவிடுதல், அபானம்விடுதல் ஆகியவற்றையும் செய்ய லாகாது என்று திருவாராதனம் செய்யும் காலத்தில் விலக்கப்பட வேண்டிய அபசாரங்களை ஸச்சரித்ரஸுதாநிதி திரட்டிக் கூறுகிறது. முப்பத்திரண்டு அபசாரங்களை ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷை விவரித்துக் காட்டியுள்ளது.

எப்பொழுதும் பகவானுடைய வலப்பக்கத்திலிருந்து கொண்டு தான். ஸேவை, ஜபம், ப்ராணாயாமம், ஸ்தோத்ரம் ஆகிய கர்மாக் களைச் செய்ய வேண்டும்.

‘भगवदाराधनकाले वर्जनीयानाह सच्चरितसुधानिधिः’- ‘अक्रुध्यन्, अत्वरन् आर्द्रम् अकुर्वंश्च महीतलम् । अशब्दयन् पात्रसङ्घ बालाननुपलालयन् ॥ हुङ्कारं रोदनं हासं निद्रामालस्यभाषणे ।

भगवद्वदनाम्भोजं हित्वान्यत्रावलोकनम् ॥

एतानन्यांश्चापचारान् पूजाकाले विवर्जयेत् ॥’ इति । द्वात्रिंशदपचाराः श्रीपाञ्चरातरक्षायां प्रपञ्चिताः इति नेह प्रपञ्च्यन्ते ।

भगवतः दक्षिणपार्श्वे एव तिष्ठन् आराधनादिकं कुर्यात्

इत्यपि स एवाह-

‘सेवां जपं प्रणामांच स्तुति पूजां च सर्वदा ।

देवस्य दक्षिणे पार्श्वे कर्माण्यन्यानि चाचरेत् ॥’ इति ।

[[414]]

वस्त्रनिष्पीडने स्नान उपस्थानेऽभिवादने ॥

धायं कटयाम् उत्तरीयं पितृकार्ये सुरालये ।” इत्युक्तप्रकरेण कटयाम् उत्तरीयं संवेष्ट्य, ‘चण्डादिद्वारपाले-

பகவத்ஸந்நிதிக்குச் சென்றதும் மேல் உத்தரீயத்தை இடுப்பில் சுற்றி அணிந்து கொள்ளவேண்டும். அறைவேஷ்டியின் மேல் சுற்றிக் கொள்ளக்கூடாது.

தேவதை -ஆசார்யன் இவர்களுடைய ஸந்நிதியிலும், ப்ரதக்ஷி ணம் ப்ரணாமம். வஸ்த்ர நிஷ்பீடனம், ஸ்நாநம், உபஸ்தானம், அபிவாதனம், பித்ருகார்யம் இவை செய்யும் போதும் உத்தரீ யத்தை இடுப்பில் அணிய வேண்டும்.

ப்ரதக்ஷிணே ப்ரணாமே ச தேவதா-குருஸந்நிதௌ 1

வஸ்த்ர நிஷ்பீடநே ஸ்நாந உபஸ்தாநோபிவாதநே 11

தார்யம் கட்யாம் உத்தரீயம் பித்ருகார்யே ஸுராலயே! என்ற ஸச்சரித்ரஸுதாநிதி வசனத்தில் கூறியுள்ளபடி இந்த ஸமயங்களில் மேல் வஸ்த்ரத்தை யஜ்ஞோபவீதமாகப் போட்டுக் கொள்ளலாகாது. இடுப்பில் அறைவஸ்த்ரத்திற்கு மேல் அணிய வேண்டும்.

பிறகு ‘சண்டாதி த்வாரபாலேப்யோ நம:’ என்று த்வாரபாலகர் களை இரண்டு தடவைகளுக்குக் குறையாமல் நமஸ்கரிக்க வேண்டும்.

ப்ரதக்ஷிண நமஸ்காராந் யுக்மாநேவ ஸமாசரேத்’ என்றும் ப்ரபஞ்சஸாரத்தில் தீக்ஷாப்ரகரணத்தில்

1 इदं च वचनं सच्चरित्रसुधानिधो दृश्यते ।

2 प्रदक्षिणान् प्रणामांश्च युग्मानेव समाचरेत् न विषमान्-

प्रपञ्चसा रे - दीक्षाप्रकरणे च-

‘मन्त्रैश्च वैष्णवैस्स्तोत्रैः स्तुत्वा देवं जनार्दनम् ।

प्रणमेद् द्विश्चतुर्वाऽपि अन्यथा किल्बिषी भवेत् ॥’ इति । एवमन्यत्रापि बहुत प्रोक्तम् ।

भगवदाराधनक्रमः

[[415]]

‘दक्षिणपादविन्यासपूर्वकं यागभूमि प्रविश्य, अद्भिः सव्याहृतिभिः प्रोक्ष्य,

‘अपसर्पन्तु ते भूताः ये भूताः भुवि संस्थिताः । ये HIT: विघ्नकर्तारः ते गच्छन्त्वाज्ञया हरेः ॥’

इत्युक्त्वा,

மந்த்ரைச்ச வைஷ்ணவை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா தேவம்

ஜநார்தனம் ।

ப்ரணமேத் த்வி: சதுர்வாபி அந்யதா கில்பிஷீ பவேத் ॥ (வைஷ்ண மந்த்ரங்களால் பகவானை ஸ்துதித்துவிட்டு இரண்டு அல்லது நான்கு தடவைகள் என்ற முறையில் ஸமமான எண்ணிக் கையில் நமஸ்கரிக்கவேண்டும். இம்முறை தவறி நமஸ்கரிப்பவன் மிகுந்த பாபம் உள்ளவனாகிறான்) என்றும் சொல்லியுள்ளபடியே இரட்டை எண்ணிக்கையில் நமஸ்கரிக்க வேண்டும்.

இவ்வாறு த்வாரபாலகர்களை வணங்கி அவர்களுடைய ஸம்மதியைப் பெற்று பகவத் ஸந்நிதிக்குள் ப்ரவேசிக்க வேண்டும். அப்பொழுது வலக்காலை முதலில் வைக்க வேண்டும்.

‘ப்ரதமம் தக்ஷிணம் பாதம் விந்யஸ்யாSந்த: ப்ரவிச்ய ச ।’ என்று இவ்விஷயம் வங்கீசகாரிகையில் கூறப்பட்டுள்ளது.

பிறகு தீர்த்தத்தைக் கையில் கொண்டு ‘ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:’ என்ற வ்யாஹ்ருதிகளைச் சொல்லி ப்ரோக்ஷித்துவிட்டு.

‘அபஸர்ப்பந்து தே பூதா : யே பூதா: புவிஸம்ஸ்திதா: 1

யே பூதா: விக்நகர்த்தார: தே கச்சந்த்வாஜ்ஞயா ஹரே:’!! (பூமியில் உள்ள பூதங்களும், விக்னத்தைச் செய்பவர்களும் அப்பால் செல்லட்டும்) என்று சொல்லி கண்டையை ஸேவித்து (திருமணி யைச் சப்திக்கும்படிச் செய்து) மூன்று முறைகள் கைகளைத் தட்டி எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்த வேண்டும்.

கண்டாநாதம் இல்லாமல் திருவாராதனம் செய்யக் கூடாது. நாநயாது விநா கார்யம் பூஜநே ஸித்தி மிச்சதா’ என்று ஐயாக்ய ஸம்ஹிதை கூறுகிறது.

1 “ரவுர் ரின்

प्रणिनिसुः परात्मानं भक्तिनिघ्नेन चेतसा ॥”

इति वङ्गीशकारिकाऽत्र प्रमाणम् ।

[[416]]

घण्टानादेन

श्रीवैष्णव सदाचार निर्णये

பகவதாராதனகாலத்தில் திருக்கோயிலாழ்வார் கதவைத் திறக்கும்போதும், ஆவாஹநம் செய்யும் போதும் அர்க்யம் திரு மஞ்சனம் தூபம் தீபம் இவை ஸமர்பிக்கும் ஸமயங்களிலும் பலி கர்மாவிலும் ஹோமம் செய்யும் போதும் கண்டையின் ஒருபக்கத் தில் ஒலியை எழுப்பி கண்டாநாதம் செய்ய வேண்டும். கற்பூர ஹாரத்தி செய்யும் போதும், திரையை நீக்கும் போதும், தளிகை நிவேதனம் செய்யும் போதும் கண்டையின் நாக்கு இருபுறங் களிலும் பட்டு ஒலி எழும்பும்படி மணியை அடிக்கவேண்டும் என்று வாஸுதேவஸம்ஹிதை கூறுவதாக முமுக்ஷ தர்ப்பணவ்யாக்யானம் காட்டுகிறது.

திருக்கோயில்களில் சில ஸமயம் ஒருபக்கமாக நாதம் உண்டா கும்படியும் மற்றும் சில ஸமயங்களில் இரண்டு புறங்களிலும் நாதம் உண்டாகும்படியும் கண்டையை ஸேவித்து வருகின்றனர். இதில் மேற்கூறிய வசனம் ப்ரமாணமாகிறது என்பது இப்பொழுது விளங்கலாயிற்று.

திருவாராதனகாலம் நாதத்தை எழுப்பக் கூடாது.

தவிர மற்றையகலங்களில்

1 ’ घण्टायास्ताडनं कुर्याद् हरेः पूजादि कर्मसु । उद्घाटने कवाटस्य प्रस्तुते पूजने तथा ॥ आवहने ऽर्ये स्नपने विवाहे धूपदीपके । बलिकर्मणि होमे च एकपार्श्वेन ताडयेत् ॥

नीराजने यवनिकासमुद्धारे निवेदने ।

पाश्वभ्यां ताडनं कुर्याद् उपचारान्तरेषु तु ॥

इति वासुदेवसंहितायां प्रोक्तम् ।

கண்டா

अनेन च वचनेन भगवदालयेषु क्रियमाणम् एकपार्श्वेन घण्टा-

ताडनं प्रामाणिकमिति ज्ञायते ।

‘सर्व वाद्यमयी घण्टा सर्वदेवमयो हरिः ।

घण्टा शब्दगतं सर्वं तस्मात्तां चालयेत् पुरा ॥ पूजाकालं विनाऽन्यत्र हितं नास्याः प्रचालनम् । नानया तु विना कार्यं पूजने सिद्धिमिच्छता ।‘भगवदाराधन क्रमः

[[417]]

ப்ரதிஷ்டை செய்யப்படாத கண்டைய உபயோகப்படுத்தக் கூடாது. அதன் ஒலியினால் க்ராமத்திற்கே தீங்கு உண்டு. பகவத் பூஜையும் பலனின்றிக்கே போகும்.

*Southcid & girur: prror:

அந்யதா நிஷ்பலா பூஜா பரஸ்ய பரமாத்மந: II’ என்றும் ஸம்ஹிதாவசனம் கூறுகிறது.

இப்படி பகவதாராதநத்திற்கு கண்டாநாதம் மிகவும் ஆவச்யக ப்ரமாணங்களினால் ஏற்பட்டிருக்க இதில் விவாதத்திற்கு இடமே இல்லையாகையால் தான் ஸ்ரீபாஷ்யகாரர் தாம் அருளிய நித்யக்ரந்தத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

‘ஆராதனம் செய்பவர். தாமே திருவாராதனத்தையும் செய்து கொண்டு கண்டையை ஸேவிப்பதானால் இடக்கையினால் தானே கண்டையைப் பிடித்து ஸேவிக்க வேண்டும்? ப்ரதிஷ்டிதமான கண்டையை இடக்கையினால் ஸேவிப்பது அநுசிதமன்றோ! ஆகவே கண்டாநாதம் இல்லாமலேயே திருவாராதனம் செய்வது நன்று’ என்றுசிலர் கருதுகின்றனர். இது தவறு. ஸ்ரீகரஸம்ஹிதையில்– इति जयाख्यसंहितावचनं पूजाकालव्यतिरिक्तकाले घण्ठाचालनस्य अकर्तव्यतां घण्टानादेन विना पूजायाः अकर्तव्यतां च अवगमयति ।

अन्यत्र च घण्टानादस्य फलं प्रोक्तम् ।

‘घण्टां निनाद्य देवानाम् आगमार्थं च रक्षसाम् । उत्सारणार्थं भक्तानां सांन्निध्याय विशेषतः ॥ इत्येवमादयः अवश्यज्ञातव्याः मुमुक्षु दर्पणव्याख्यायाम् ।

अप्रतिष्ठितघण्टायाश्चालने महान् प्रत्यवायः स्मर्यते-

‘असंस्कृतायाश्चलने ग्रामादेश्चलनं भवेत् ।

अन्यथा निष्फला पूजा परस्य परमात्मनः ॥’ इति । ‘नित्यग्रन्थे श्रीभाष्यकारैः घण्टाचालन कर्तव्यत्वानुक्तिस्तुअस्मिन् विवादाभावात्; अविगीत सर्व शिष्टाचारसिद्धत्वाच्च’ इत्यादयोऽपूर्वाः विषयाः प्रस्तुतोपयुक्ताः श्रीमदाह्निकार्थं प्रकाशिकायां द्रष्टव्याः । प्रतिष्ठितघण्टायाः शोषणादिकं मास्तु इति महान्तः ।

आराधकः स्वयमेव यदि घण्टां चालयेत्, तदा वामहस्तेनैव तत् कर्तव्यं भवेत्; तच्चानुचितम् इति मत्वा घण्टानादेन विनैव भगवतः पूजा कर्तव्येति केचिदाशेरते । अनुपपन्नश्चायमाशयः

[[53]]

[[418]]

‘தூபம் தத்யாத் ஸ்வயம் கிஞ்சித் கண்டாம் வாமேந நாதயந்’ என்று ஸ்பஷ்டமாகவே திருவாராதனகாலத்தில் இடக்கையினா லேயே கண்டையை ஸ்ேவித்துக் கொண்டு தூபம் முதலியன ஸமர்ப் பிக்கவும்’ என்று சொல்லியிருப்பதால் இதில் எவ்வித தோஷமும் நினைக்கலாகாது. ஆக கண்டாநாதமின்றித் திருவாராதனம் செய்ய லாகாது என்பதே ஸித்தாந்தம் என்று ஸ்ரீமத் ஆஹ்நிகார்த்த- ப்ரகாசிகை விவரித்துக் கூறியுள்ளது.

ஆனால் இடக்கையினால் கண்டையை எடுப்பதும் வைப்பதும் செய்யக்கூடாது. வலக்கையினால் எடுத்து இடக்கையில் கொடுக்க வேண்டும். அவ்வாறே இடக்கையிலிருக்கும் கண்டையை வலக் கையால் வாங்கிக் கீழே வைக்கவேண்டும் என்று பெரியோர்கள் வ்யவஸ்தை செய்துள்ளார்கள்.

ப்ரதிஷ்டை செய்யப்பட்ட கண்டைக்கு சோஷண தாஹன ப்லாவனங்கள் வேண்டா 1 இவ்விடத்தில்-

‘வித்ராஸிநீ விதவைரி ரூதி நீநாம் பத்மாஸநேத பரிசாரவிதௌ ப்ரயுக்தா । கண்டா ஹரே: ……1 என்ற ஸ்ரீ ஸங்கல்பஸூர்யோதய ஸ்ரீ ஸூக்தி இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

அஸுரர்களை விரட்டவும், தேவதைகளை அழைக்கவும் பக்தர் களின் விசேஷஸாந்நித்யத்திற்காகவும் இந்த கண்டையின் நாதம் பயன்படுகிறது.

இவ்வாறு கண்டாநாதம் செய்த பிறகு மூன்று முறைகள் கைத் தலங்களைத் தட்ட வேண்டும். இதிலும் ஒரு விசேஷம் உண்டு

‘धूपं दद्यात् स्वयं किञ्चिद् घण्टां वामेन नादयन्’

इति श्रीकरसंहितायाम् आराधकस्य वामहस्तेन घण्टाचालनस्य स्पष्टमभिहितत्वात् । नहि वचनविरोधे न्यायः प्रवर्तते - अनौचित्यं वा इत्यपि निरूपितम् आह्निकार्य प्रकाशिकायाम् ।

सुप्रतिष्ठितां घण्टां दक्षिणहस्तेनादाय वामहस्ते दद्यात्, चालनानन्तरं पुनर्दक्षिणेन हस्तेनादाय स्थाने निक्षिपेत् । आदानं निधानं च वामहस्तेन न कुर्यादित्येव महान्तः मन्यन्ते ।

“वित्तासिनी विबुधवैश्विरूथिनीनां पद्मासनेन परिचारविध प्रयुक्ता । घण्टा हरेः" इति श्रीसङ्कल्पसूर्योदयश्रीसूक्तिरिहानुसन्धेया ।

[[419]]

‘हस्ततालत्रयेण च भगवन्तम् उद्बोध्य, ‘यं वायवे नमः’ इति मन्त्रेण अस्त्रमन्त्रेण च कवाटोद्घाटनं कृत्वा, प्रणम्य, तमेव

என்று ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் அடிக்கடி ஸாதிப்பதும், இதில் ப்ரமாணமாக

வாமம் தக்ஷிணஹஸ்தேந, வாமஹஸ்தேந தக்ஷிணம் । புநர்வாமதலே ஹந்யாத் அங்குளீபிஸ்து தாடநம் II’

என்ற வசனத்தை அருளுவதும் உண்டு. அதாவது முதலில் இடக் கையை நிமிர்த்தியவாறு கீழிருத்தி, அதன் உள்ளங்கையில் வலக் கையைக் கவிழ்த்து அதன் உள்ளங்கையினால் தட்ட வேண்டும். இரண்டாவதாக வலக்கையை நிமிர்த்துக் கீழிருத்தி அதன் உள்ளங் கையில் இடக்கையைக் கவிழ்த்து அதன் உள்ளங்கையினால் தட்ட வேண்டும். மூன்றாவது முறையாக முதல்தடவையில் போல் இடக் கையை நிமிர்த்தியவாறு கீழிருத்தி அதன் உள்ளங்கையில் வலக் கையைக் கவிழ்த்து அதன் விரல்களால் தட்டவேண்டும் என்றபடி. மேற்கூறிய வசனத்தில் மூன்றாவது முறையில் ‘அங்குளீபிஸ்து தாடநம்’ (விரல்களால் தட்டல்) என்று குறிப்பாகக் கூறியிருப் பதை உற்று நோக்கினால் இந்த முறை புலப்படும்.

ஆக கண்டாநாதத்தாலும், ஹஸ்ததாளங்கள் மூன்றாலும் எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்திய பிறகு ‘யம் வாயவே நம:’ என்ற மந்த்ரத்தினாலும், ‘வீர்யாய அஸ்த்ராய பட், என்ற அஸ்த்ரமந்த்ரத்தாலும் திருக்கதவை நீக்கி (திறந்து) எம்பெருமானை ஸேவிக்கவேண்டும்.

‘वामं दक्षिणहस्तेन वामहस्तेन दक्षिणम् ।

पुनर्वामतले हन्याद् अङ्गुलीभिस्तु ताडनम् ॥’ इति

अधः कृते वामहस्ततले अवाक् कृतेन दक्षिणहस्ततलेन प्रथमतः एकं ताडनम् । अनन्तरं च अधः कृते दक्षिणहस्ततले अवाक्कृतेन वामहस्ततलेन ताडनं द्वितीयम् । अनन्तरपर्याये पूर्ववद् अधः कृते वामहस्ततले अवाक्कृतदक्षिणहस्ताङ्गुलीभिस्ताडनं तृतीयं इत्येवं क्रमेण हस्ततालत्रयं कर्तव्यम् इत्ययं विशेषः अत्रोपात्ते वचने तृतीयपर्याये ‘अङ्गुलीभिस्तु ताडनम्’ इति विशिष्य निर्देशात् सिद्धयति इत्यस्मदाचार्यपादाः ।

[[420]]

प्राप्यत्वेन, प्रापकत्वेन, अनिष्ट निवर्तकत्वेन च यथावस्थित-

स्वरूप-रूप-गुणविभूतिलीलोपकरणम्

अनुसन्धाय, तमेव अखिलेत्यादिना, न्यासदशकेन वा शरणम् उपगच्छेत् ।

அந்த எம்பெருமானையே ப்ராப்யனாகவும், ப்ராபகனாகவும் அநிஷ்டங்களைப் போக்க வல்லவனாகவும் கொண்டு சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளபடியே அவனுடைய ஸ்வரூப-ரூப-குண-விபூதி லீலோபகரணங்களையும் அநுஸந்தித்து ‘அகில ஹேய ப்ரத்ய நீக’ என்று தொடங்கும் சரணாகதிகத்யத்தினாலோ அல்லது ந்யாஸதசகத் தினாலோ அவனையே சரணமாக (உபாயமாக)ப் பற்றவேண்டும்.

இஜ்யாராதன காலத்தில் சரணாகதிகத்யத்தை அநுஸந்திக்க வேண்டும் என்று ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷை ஸ்தாபித்துள்ளது என்பது முன்பே கூறப்பட்டுள்ளது இங்கு.

இந்த கத்யம் ‘பகவந்நாராயணாபிமத’ என்றே ஆரம்பிக்கப் படுகிறது. அதுதான் இதன் முதல் வாக்யம். ஆகவே ‘பகவந் - நாராயணாபிமதேத்யாதிநா சரணம் உபகச்சேத்’ என்று சொல்ல வேண்டியிருக்க, நடுவில் உள்ள ‘அகிலஹேய’ என்ற வாக்யத்தை எடுத்து ‘அகிலேத்யாதிநா’ என்று மூலத்தில் சொல்லியுள்ளது பொருந்துமா? என்ற கேள்வி இங்கு எழும். அதற்கு ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகியசிங்கர் அருளிச்செய்யும் ஸமாதானமிது.

‘பகவந்நாராயணாபிமத’ என்று ஆரம்பிக்கும் முதல்வாக்யத்தில் (சூர்ணிகையில்) ஸ்ரீப்ரபத்தி சொல்லப்படுகிறது. அதை விட்டு

1 एवमेव नित्ये, श्रीपाश्वरावरक्षायाम्, आह्निकान्तरे च निर्देशो दृश्यते । न्यासदशकेन चेति प्राक्तनेषु कोशेषु ।

इज्याराधनकाले शरणागतिगद्यस्यानुसन्धेयता श्रीपाश्वरात्ररक्षायां प्रतिपादिता ।

अत्र च गद्ये आद्यं वाक्यं ‘भगवन्नारायणाभिमत’ इत्यादिक- = ‘ரிசா 544 எனவு निर्देशो युज्यते; नतु ‘अखिलेत्यादिना’ इति भाति यद्यपि अथापि विवक्षितार्थविशेषज्ञापनाय तथा निर्देशस्य युक्तत्वान्न दोषः इत्यस्म- காணா:

ரி-

भगवदाराधनक्रमः

[[421]]

பகவானிடம் ப்ரபத்தி செய்யும் பாகமான ‘அகிலஹேய’ என்று தொடங்கும் பாகத்தை மட்டும் இஜ்யாகாலத்தில் அநுஸந்திக்கும் படி நம் ஆஹ்நிகத்திலும் மற்றைய ஆஹ்நிகத்திலும், ஸ்ரீபாஷ்ய காரர் அருளிய நித்யத்திலும் ‘அகிலேத்யாதிநா பகவந்தம் சரணம் உபகச்சேத்’ என்று கூறப்பட்டுள்ளது.

மோக்ஷத்திற்காக அனுஷ்டிக்கும் சரணாகதியில் தான் முதலில் ஸ்ரீப்ரபத்தியை அவச்யம் அநுஷ்டிக்கவேண்டும்.

aur ur ri irujuijw: wएं ।

என்று ஒரு வசனம் கூறுகிறது. இதில் நியத: என்றிருப்பதால் மற்றைய பலன்களுக்காகச் செய்யும் ப்ரபத்தியில் ஸ்ரீப்ரபத்தி செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் (கட்டாயம்) கிடையாது என்பது கிடைக்கிறது.

தற்போது இஜ்யாராதனகாலத்தில் விசதமான அநுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ப்ரபத்தி அநுஷ்டிக்கப்படுவதால் இதற்கு முதலில் ஸ்ரீப்ரபத்தி செய்யவேண்டுவது அவச்யமில்லை என்பதைத் தெரிவிக்கவே ‘பகவந்நாராயணாபி மதேத்யாதிநா என்று கூறாமல் ‘அகிலேத்யாதிநா’ என்று கூறப்பட்டது. ஸ்ரீப்ரபத்தி

‘वाचः परं प्रार्थयिता प्रपद्येन्नियतः श्रियम्’ इति मोक्षार्थप्रपत्तावेव श्रीप्रपत्तेः अवश्यानुष्ठेयत्वम्; नान्यार्थ प्रपत्ती’ इति विभागविशेषज्ञापनायैव ‘भगवन्नारायणाभिमते’ त्यादिपरित्यागेन ‘अखिलेत्यादिना’ शरणागतिगद्यनिर्देशो युज्यते । अस्मिन् प्रमाणे ‘नियतः’ इति पदेन लभ्यतेऽयं विभागः इति ॥

दैनन्दिनकैङ्कर्यस्य निर्विघ्नेन निर्वृत्त्यर्था प्रपत्तिः अभिगमनकाल एव कृता । अत्र पुनः विशदानुभवसिद्धयर्था सा । तदुक्तं श्रीपाञ्चरात्ररक्षायाम्-

" तमेव शरणम् उपगच्छेत् अखिलेत्यादिना । एवं शरणम् तत्प्रसादोपबृंहितमनोवृत्तिः" इत्यादिनित्यग्रन्थ श्रीसूक्तघा अस्यार्थस्य सिद्धेरिति प्राश्वः ।

उपगम्य

‘सङ्कीर्त्य गुरुपङ्क्ति च पृथगद्यं ततः पठेत् ।’

इति सच्चरितसुधानिधिरप्याह ।

[[422]]

श्रीवैष्णव सदाचार निर्णये

‘भूम् भूम्यै नमः’ इति भूमि सङ्गृह्य तां शोषणादिभिः विशोध्य, अस्त्रमन्त्रेण रक्षां कृत्वा, ‘सुरभिमुद्रां प्रदर्श्य, अस्त्रमन्त्रेण आसनं निधाय, आसनमन्त्रेण आसने उपविश्य,

இங்கு வேண்டுவதில்லை. அநுஷ்டித்தாலும் தோஷமில்லை. என்ற சாஸ்த்ரார்த்தத்தை உணர்த்தவே இந்த மாதிரி நிர்தேசம் என்று.

அன்றன்றைய பகவத் கைங்கர்யம் நிர்விக்னமாக நடை பெறு வதற்காக அபிகமனத்தில் சரணாகதி செய்யப்படுகிறது. இஜ்யா காலத்தில் விசதமான பகவதனுபவம் கிடைப்பதற்காகச் சரணாகதி செய்யப்படுகின்றது என்று பூர்வர்கள் ஸ்தாபித்துள்ளார்கள்.

இதிலும் சரணாகதி கத்யம் முழுவதையும் ஆராதனம் செய்பவர் அநுஸந்திக்க வேண்டாம். அகில ஹேய ப்ரத்ய நீக’ என்று தொடங்கி ‘அநந்யசரண: த்வத்பாதாரவிந்தயுகளம் சரணமஹம் ப்ரபத்யே’ என்பது முடிவாக அநுஸந்தித்தால் போதும் என்று பஞ்சகாலக்ரியாதீபம் கூறுகிறது. ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரும் இவ்வாறேதான் அநுஸந்திப்பது வழக்கம்.

இவ்வாறு இந்த சரணாகதிகத்யத்தை அநுஸந்திக்க முடியா விடில் ந்யாஸதசகத்தையாவது சொல்லிச் சரணாகதி செய்யவும்.

பிறகு, ஆராதனம் செய்பவர் தான் உட்காருவதற்கான இடத்தை ‘பூம் பூம்யை நம:’ என்று சொல்லி க்ரஹித்துக் கொண்டு சோஷணம் தாஹநம் பலாவனம் ஆகியவற்றால் சுத்திசெய்து ‘வீர்யாய அஸ்த்ராயபட்’ என்ற அஸ்த்ரமந்த்ரத்தினால் பத்து திக்கு களிலும் ரக்ஷை செய்து ஸுரபிமுத்ரையைக் காட்டவேண்டும்.

இரண்டு கைகளிலும் உள்ள இரண்டு கட்டை விரல்கள், இரண்டு ஆள்காட்டிவிரல்கள் இரண்டு சுண்டு விரல்கள் இவற்றை

“अखिल हेयप्रत्यनीकेत्यादि - अनन्यशरणः त्वत्पादारविन्दयुगळं शरणम् अहं प्रपद्ये” इत्यन्तेन वाक्येन शरणम् उपगम्य इति प्रतिपादयन् पञ्चकालक्रिया दीपः गद्यानुसन्धानस्य पूर्वोत्तरावधी दर्शयति; आह्निकान्तरमपि ।

अस्मदाचार्य चरणानाम् अनुसन्धानप्रकारोप्येवमेव ।

धेनुमुद्रातोऽन्येयं सुरभिमुद्रा तल्लक्षणज्ञसकाशाद् विशदम्

अधिगन्तव्या ।

भगवदाराधन क्रमः

[[423]]

गुरुपरम्पराम् अनुसन्धाय, ‘अष्टाविंशतिसङ्खयाकेन मूलमन्त्रेण प्राणायामत्रयं कृत्वा,

யும் இடக்கைபவித்ரவிரல் வலக்கை நடுவிரல் ஆகிய இரண்டு விரல் களையும் ஒன்றோடொன்று சேர்ப்பதால் ஆகக் கூடியது இந்த ஸுரபிமுத்ரை. வலக்கைப்பவித்ரவிரலை இடப்புறங்கையிலும், இடக்கை நடுவிரலை வலப்புறங்கையிலும் மடித்து விடவேண்டும். தேனு முத்ரை என்பது இதை விடவோனது. இவற்றின் லக்ஷணங் களை முத்ரையின் லக்ஷணம் அறிந்த பெரியோர்களிடம் கேட்டு அறியவேண்டும்.

பிறகு அஸ்த்ரமந்த்ரத்தால் ஆஸநமிட்டு ஆஸ்நமந்த்ரத்தால் அதில் அமர்ந்து குருபரம்பரையை அநுஸந்தானம் செய்து

वाम-दक्षिणहस्ताङ्गुष्ठयोः, तर्जन्योः, कनिष्ठिकयोः, वामानामिकायाः दक्षिणमध्यमायाश्च परस्परमेलनेन सम्पद्यते इयं सुरभिमुद्रा ।

प्रायस्सर्वत्र शोषण दाहन - प्लावनेस्सहेयमपि भवति । आसनस्थलस्यापि शोषणदाह्नप्लावनानि सन्ति । तदुक्तं तन्त्रसारे-

‘आदावेव जपे कुर्यात् शोषणं दाहनं प्लुतिम् । वाय्वग्निवरुणैर्बीजैः ध्यात्वा तन्मण्डले हरिम् ॥’ इत्याह्निकार्थप्रकाशिका ।

क्रियादीपे च -

‘यत् किञ्चिद्दीयते द्रव्यं तत् सर्वं शोषणादिभिः । विशोध्याय जलेनैव प्रोक्ष्य दद्याद्धि विष्णवे ॥’ इति भगवद वस्तुनः प्रोक्षणम् अर्ध्यतीर्थेन । आराधकस्य स्वासन - स्थलादिप्रोक्षणम् अन्येन तीर्थेन इति विभागः ज्ञेयः ।

1’ अष्टाविंशतिकृत्वः मनसा आवर्तितेन मूलमन्त्रेण त्रिःप्राणानायम्य’ इति श्रीमद्गोपाल देशि काह्निकेप्युक्तम् ।

क्रियादीपेऽपि-

‘अष्टाविंशतिकृत्वस्तु मन्त्रमावर्त्य चेतसा ।

प्राणायामत्रयं कुर्यात् सन्निधावासने स्थितः ॥’ इति ।

[[424]]

श्रीवेष्णव सदाचारनिर्णये

‘ओम् तत् कृतश्च करिष्यामि भगवन्नित्येन भगवत्प्रीत्यर्थेन महाविभूतिचातुरात्म्य भगवद् इज्यया भगवतः

वासुदेवपादारविन्दार्चनेन

कर्मणा भगवन्तम् अर्चयिष्यामि ॥

इति सङ्कल्प्य,

‘भगवतो बलेन भगवतो वीर्येण भगवतस्तेजसा भगवतः कर्मणा भगवतः कर्म करिष्यामि भगवतो वासुदेवस्य’

इति बलमन्त्रमनुसन्धाय

‘भगवानेव स्वनियाम्य स्वरूपस्थिति प्रवृत्तिस्वशेष तैकरसेन अनेनात्मना स्वकीयैश्व देहेन्द्रियान्तःकरणैः,

स्वकीय कल्याणतमद्रव्यमयान्

மூலமந்த்ரத்தால் மூன்று ப்ராணாயாமங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு ப்ராணாயாமத்திலும் மூச்சை நிலை நிறுத்தும் கும்பக ஸமயத்தில் மூலமந்த்ரத்தை இருபத்து எட்டுத்தடவைகள் மனஸ் ஸினால் எண்ணவேண்டும். அதன் பிறகு

“ஓம் தத் க்ருதஞ்ச கரிஷ்யாமி. பகவந்நித்யேந பகவத்- ப்ரீத்யர்த்தேந மஹாவிபூதி சாதுராத்ம்ய பகவத்வாஸு தேவபாதாரவிந்தார்ச்சநேந இஜ்யயா பகவத: கர்மணா பகவந்தம் அர்ச்சயிஷ்யாமி.”

என்று ஸங்கல்பம் செய்து

‘‘பகவதோ பலேந பகவதோ வீர்யேண பகவதஸ்தேஜஸா பகவத: கர்மணா பகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ

என்ற பலமந்த்ரத்தையும் அநுஸந்தித்து

“பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி- ஸ்வசேஷதைகரஸேந அநேந ஆத்மநா ஸ்வகீயை; தேஹேந்த்ரியாந்த: கரணை: ஸ்வகீய கல்யாணதம த்ரவ்ய-

एवं वैकुण्ठदीक्षितीये - पराशरः-

‘अष्टाविंशतिवारं तु प्राणायामे जपेन्मनुम् ।’ इत्याह्निकार्थप्रकाशिकायाम् ।

भगवदाराधनक्रमः

[[425]]

हारिकादिसमस्तभोगान्, अतिप्रभूतान् अतिप्रियतमान्, अतिसमग्रान्, अत्यन्तभक्तिकृतान् अखिलपरिजनपरिच्छदान्विताय स्वस्मै स्वप्रीतये स्वयमेव प्रतिपादयितुम् उपक्रमते’ ।

(‘स्वशेषभूतेन मया स्वीयैस्सर्वपरिच्छदैः । विधातुं प्रीतमात्मानं देवः प्रक्रमते स्वयम्’ ॥ ) इत्यनुसन्धाय ( भूतशुद्धिं कुर्यात् । )

மயாந் ஒளபாசாரிக-ஸாம்ஸ்பர்சிக-ஸாந்த்ருஷ்டிக-ஆப்ய வஹாரிகாதி ஸமஸ்தபோகாந் அதிப்ரபூதாந், அதிப்ரிய தமாந்,அதிஸமக்ராந், அத்யந்தபக்திக்ருதாந் அகிலபரிஜந பரிச்சதாந்விதாய ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதயிதும் உபக்ரமதே.”

(ஸ்வசேஷபூதேந மயா ஸ்வீயைஸ் ஸர்வபரிச்சதை: 1 விதாதும் ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம் II) என்று ஸாத்விகத்யாகத்தைச் செய்யவேண்டும்.

இங்குச் சொல்லப்பட்ட இந்த ஸாத்விகத்யாகம் இப்படியே நித்யம், ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், மற்றைய ஆஹ்நிகம் முதலாக யாவற் றிலும் கூறப்பட்டதே. ஆனால் அங்கெல்லாம் போகங்களைக் கூறு மிடத்தில் ‘ஸாந்த்ருஷ்டிக’ என்ற பதம் இல்லை. ஒளபசாரிக, ஸாம் ஸ்பர்சிக, ஆப்யவஹாரிக என்ற மூன்று போகங்களே கூறப்பட் டுள்ளன.

நித்யக்ரந்தத்தில் இவ்விடத்தில் ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி ‘ஔபசாரி கம்-உபசாரத்திற்கான குடை முதலானவை. ஸாம்ஸ்பர்சிகம்-திரு

1 अयं च सात्त्विकत्यागप्रकारः अक्षरशः नित्ये प्रदर्शित एव । परन्तु - तत्र - अन्यत्र च भोगेषु सान्दृष्टिकं विहाय औपचारिक சரிக்க -

அரிகச:கிரீனா: 1

तत्र टिप्पण्याम् उत्तमूर् स्वामिपादे : -

“எரிகா - ரி ।சர்ரிகள் - அன்னரி । ா$44- हारिकम् - नैवेद्यादि । नीराजनादि सान्दृष्टिकम् आदिपदलभ्यम्” इति विवृतम् ।

[[54]]

[[1]]

[[426]]