०२ उपस्थानात् पूर्वम्?

अत्र उपस्थानात् पूर्वम् अष्टाक्षरमन्त्रजपकरणे प्रमाणानि ॥

‘अष्टोत्तरशतं मूलमन्त्रम् आवर्त्य, उपस्थाय, परिक्रम्य, नमस्कृत्य’ इति भगवद्भाष्यकारोक्त नित्यग्रन्थस्थ वाक्यम् ।

பற்றி நான் நிருபாதிகமாக-இயற்கையாக ஸ்வாமி (உடையவன்) ஆகமாட்டேன். நிரபேக்ஷ ஸ்வதந்த்ரனுமல்லேன் என்ற அர்த்தம் கிடைக்கிறது. என்றிவ்வாறாக ஸ்ரீ அஷ்டக்ஷரத்தின் அர்த்தத்தை அநுஸந்தித்துக் கொண்டு இந்த மந்த்ரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகன் காட்டியருளிய பத்து வித அர்த்தங்களில் இது மூன்றாவதாகும். அஷ்டாக்ஷரத்தை இரண்டு வாக்யமாகக் கொண்டு கூறப்பட்டது இது. “…ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்தில் மூலமந்த்ராதிகாரத்தில்-”…வாக்யத்வயமாக அநுஸந்திக்கும்போது ‘அகார நாராயண சப்தவாச்ய - ஸர்வரக்ஷகத்வ -ஸர்வாதாரத்வாதி விசிஷ்டனானவனுக்கே நான் நிருபாதிக அநந்யார்ஹசேஷபூதன், எனக்கு உரியேன் அல்லேன்; ஒன்றைப்பற்ற நிருபாதிக ஸ்வாமியும் அல்லேன் என்றதாம்" என்று ஸ்வாமியருளிய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு இங்கு ஆஹ்நிகத்தில் அர்த்தம் அருளிச் செய்யப்பட்டது

காண்க.

ஸ்ரீஸந்நிதி ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று ஸந்த் யைகளிலும் காயத்ரி உபஸ்தாநத்திற்கு முன்பே ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை காயத்ரியின் ஸங்க்யைக்கு (எண்ணுக்கு) ஸமமாக ஜபிக்க வேண்டும். இதில் பல ப்ரமாணங்கள் காட்டப்படுகின்றன.

முதலில் ஸ்ரீபகவத்பாஷ்யகாரர் அருளிய நித்யம் என்ற க்ரந்தத் தில் நூற்றெட்டுத் தடவைகள் மூலமந்த்ரத்தை (ஸ்ரீமத் அஷ்டா க்ஷரத்தை) ஆவ்ருத்தி (ஜபம்) செய்துவிட்டுப் பிறகு உபஸ்தாநம் செய்து, ப்ரதக்ஷிணம் செய்து, (திக்குகளை) நமஸ்கரித்து என்று அருளியுள்ளார். இதில் அஷ்டாக்ஷர ஜபம் செய்துவிட்டுப் பிறகு உபஸ்தாநம் செய்து என்று அருளியிருப்பதிலிருந்து உபஸ்தாநத் திற்கு முன்பே அஷ்டாக்ஷரஜபம் செய்வது ஸ்ரீபகவத்பாஷ்யகார ருக்குத் திருவுள்ளம் என்று ஏற்படுகிறது.-ITUTE IS

मूलमन्त्रज पत्रकारः

[[297]]

‘गायत्रीम् आवाह्य अष्टोत्तरसहस्रम् अष्टोत्तरशतं वा यथाशक्ति दशावरां गायत्री जपेत्’ इत्युक्त्वा

‘तस्मादष्टाक्षरं मन्त्रं सद्भक्तैवतकल्मषैः । सन्ध्याकालेषु जप्तव्यं सततश्वात्मशुद्धये ॥

इति श्रीवैष्णवधर्मशास्त्रोक्त श्रीमदष्टाक्षरमन्त्रजपोऽपि यथाशक्ति सन्ध्यायाम् अवसरे कार्यः’ इत्युपस्थानप्रतिपादनात् पूर्व श्रीमनिगमान्तमहा देशिकोक्त श्रीपाश्चरात्त्ररक्षास्थ वाक्यम् ।

श्रीमद्रामानुजमुनिभिः नित्यग्रन्थे उपस्थानात् पूर्वम् मूलमन्त्र जपाभिधानात् उपस्थानात् पूर्वमेव

पूर्वमेव मूलमन्त्रजपः

இவ்வாறே ஸ்வாமி ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஸ்ரீ பாஞ்சராத்ராக்ஷையிலும் காயத்ரியை ஆவாஹநம் செய்து பிறகு ஆயிரத்தெட்டுத் தடவைகளோ அல்லது நூற்றெட்டுத் தடவை களோ சக்திற்கேற்ப காயத்ரியை ஜபம் செய்யவும். பிறகு

‘தஸ்மாதஷ்டாக்ஷரம் மந்த்ரம் மத்பக்தைர்வீதகல்மஷை: 1 ஸந்த்யாகாலேஷு ஜப்தவ்யம் ஸததஞ்சாத்மசுத்தயே 11

(பக்தர்களைப் பரிசுத்தர்களாக்க நான் இரண்டு ஸந்த்யைகளி லும் எப்பொழுதும் இருக்கிறேன். ஆகையால் என்னுடைய பக்தர் கள் ஆத்மசுத்திக்காக எப்பொழுதும் ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஸந்த்யாகாலங்களில் ஜபிக்க வேண்டும் என்று பகவான் யுதிஷ்டி ரரை நோக்கிக் கூறுவதாகப் பாரதம் ஆச்வமேதிக பர்வாவில்

உள்ளது.)

என்று ஸ்ரீவைஷ்ணவ தர்மசாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட ஸ்ரீமத் அஷ்டாக்ஷரமஹாமந்த்ரஜபமும் ஸந்த்யையின் அவஸரத்தில் (காலத்தில்) செய்யப்பட வேண்டும், என்று உள்ள ஸ்ரீஸூக்தியும் உபஸ்தாநத்திற்கு முன்பே காயத்ரீ ஜபம் ஆனதும் ஸ்ரீமத் அஷ்டா க்ஷர ஜபத்தைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆக உபஸ்தாநத்திற்கு முன்பே ஸ்ரீமத் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஜபம் செய்வது ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கும் திருவுள்ளம் உகந்ததே என்பது தேறுகிறது.

63 ஸ்ரீமந்நாராயண யதீந்த்ர மஹாதேசிகனும் தாம் அருளிய ஆசார்ய குணாதர்சம் என்ற க்ரந்தத்தில் ஸ்ரீபகவத்ராமாநுஜர்

[[38]]

[[298]]

कर्तव्यः इति श्रीमन्नारयणयतोन्द्रमहादेशिकोक्त आचार्यगुणा-

दर्शग्रन्थस्थ वाक्यम् ।

‘तस्मादष्टाक्षरं मन्त्रं मद्भक्तैर्वीतकल्मषैः । सन्ध्याकालेषु जप्तव्यं सततं चात्मशुद्धये ॥ अन्येषामपि विप्राणां किल्बिषं हि प्रणश्यति ।

उभे सन्ध्ये उपासीत तस्माद्विप्रो विशुद्धये ॥’ इति उपस्थानात् पूर्वम् ‘वङ्गिवंशजात श्रीवैकुण्ठाचार्योक्त प्रपन्नधर्मसारसमुच्चयस्थ वाक्यम् ।

‘उपस्थानात् पूर्वमेव निगमान्तगुरोर्मतम् । रामानुजयतीन्द्रोक्त नित्यग्रन्थे तथैव च’ ।

इति सच्चरित्रसुधानिधिवचनम् च ।1

அருளிய நித்யக்ரந்தத்தில் உள்ள, முன்பு இங்குக் காட்டப்பட்ட ஸ்ரீஸூக்திகப்ப்ரமாணமாகக் காட்டி ‘ஸ்ரீபாஷ்யகாரரும் உபஸ்தா நத்திற்கு முன்னதாகவே அஷ்டாக்ஷரஜபத்தைச் செய்ய வேண்டும்’ என்று ஸாதித்திருப்பதால் உபஸ்தாநத்திற்கு முன்பே ஸ்ரீமத் அஷ் டாக்ஷரஜபம் செய்வது யுக்தம் என்று அருளியுள்ளார்.

வங்கிவம்சத்தில் அவதரித்த ஸ்ரீவைகுண்டாசார்யர் என்பவரும் தாம் அருளிய ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் என்னும் தர்மசாஸ்த்ரத்தி லும் முன்காட்டிய பாரத ச்லோகங்களைக் கொண்டு காயத்ரியின் உப ஸ்தாநத்திற்கு முன்னதாகவே ஸ்ரீமத் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை

ஜபிக்க வேண்டும் என்று விவரித்துள்ளார்.

ஸச்சரித்ரஸுதாநிதியும்

‘உபஸ்தாநாத் பூர்வமேவ நிகமாந்தகுரோர்மதம் 1

ராமாநுஜயதீந்ரோக்த நிக்யக்ரந்தே ததைவ ச 1]’ என்று

ஸ்வாமி ஸ்ரீதேசிகனும், ஸ்ரீபாஷ்யகாரரும் தம்தம் க்ரந்தங்களில் இவ்வாறே அருளியிருப்பதால் உபஸ்தாநத்திற்கு முன்னதாகவே ஸ்ரீமத் அஷ்டாக்ஷரஜபம் செய்வது அவர்கள் இருவர் திருவுள்ளத் துக்கும் உகந்ததே என்று கூறுகிறது.

1 श्री मदहोबिलमठीय दिव्यास्थाने सप्तविंशतितमे पट्टे लब्धमूर्धाभिषेकैः पूर्वाश्रमे ‘वात्स्यराघवाचार्य’ नाम्ना प्रथितैः, तदा-

मूलमन्त्रज पप्रकारः

[[299]]

இவற்றைத் தவிர மேலும் பல ப்ரமாணங்களை மூலமந்த்ர ஜப சிந்தாமணி என்னும் க்ரந்தத்தில் ஸ்ரீவீரராகவ வேதாந்த யதீந்த்ர மஹாதேசிகன் விரிவாக விளக்கியுள்ளார். இந்த ஸ்ரீ அழகியசிங்கர் ஆஹ்நிகம் அருளிய ஸ்ரீமத் அழகியசிங்கரின் பூர்வாச்ரமத் திருக் குமாரர். அடுத்து 27வது ஆஸ்தாநத்தை அலங்கரித்தவர். பூர்வா ச்ரமத்திலேயே ‘ராகவாசார்யர்’ என்ற திருநாமத்தால் பல க்ரந்தங் களை இயற்றிப் பெருமை பெற்றவர். இந்த ஸ்ரீ அழகியசிங்கர் பூர்வா ச்ரமத்தில் அருளிய பல க்ரந்தங்களில் முன்கூறிய மூலமந்த்ரஜப சிந் தாமணியும் ஒன்று. இதில் ஆஹ்நிகத்தில் காட்டப்பட்டுள்ள வசனங் களும் மற்றும் பல ப்ரமாண வசநங்களும் காட்டப்பட்டுள்ளன.

காயத்ரியின் உபஸ்தாநத்திற்கு முன் ஸ்ரீமத் அஷ்டாக்ஷரஜபம் செய்வதில் பல அநுபபத்திகள் தோன்றும். அவற்றுக்கெல்லாம் தகுந்த ப்ரமாணங்களையும் மீமாம்ஸாந்யாயங்களையும் கொண்டு தக்கவாறு பரிஹாரம் காட்டியுள்ளார் இந்த க்ரந்தத்தில் ஸ்ரீமத் அழகியசிங்கர்,

அவற்றுள் முமுக்ஷதர்ப்பணமும் ஒன்றாகும். இந்த க்ரந்தம் இந்தப் பதிப்பில் டிப்பணியில் பல இடங்களில் ப்ரமாணமாகக் காட் டப்பட்டுள்ளது. இப்பொழுது மூலமந்த்ரஜபசிந்தாமணியெனும் க்ரந்தத்தை ஸேவித்ததில் இந்த க்ரந்தம் ஸ்ரீமத் அழகியசிங்கராலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ப்ரமாணமாகக் கொள்ளும் படியான மஹிமை உள்ளது என்பது தெரியவந்தது.

प्रभृत्येव प्रणीत प्रभूत प्रबन्ध प्रपन्च प्रसूत प्रसृमर प्रभावशालिभिः, पितृपुत्रादिपरम्परया प्राप्तश्रीलक्ष्मीनृसिंहास्थान निर्वहणधूभिः, श्रीवीर राघववेदान्तयतीन्द्र महादेशिकैः अनुगृहीते

मूलमन्त्रजपचिन्तामणिनामके ग्रन्थे श्रीमदष्टाक्षरमन्त्रजपस्य गायल्युपस्थानात् पूर्वं कर्तव्यत्वे प्रकृताह्निकोक्तानि प्रमाणानि ततोऽन्यानि च कानिचित् प्रदर्शितानि ।

अत्र मुमुक्षुदर्पणाख्यो ग्रन्थोऽपि एभिः प्रमाणत्वेन प्रादर्शि; यश्चात टिप्पण्यामपि बहुत प्रमाणत्वेन प्रदर्श्यते ।

तदुक्तं मूलमन्त्रजप चिन्तामणौ-

[[300]]

श्रीवैष्णव सदाचार निर्णये

இதில் ஸ்ரீவைஷ்ணவப் பிறவி உண்டானது முதல்-அதாவது ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசிக்கப் பெற்ற தினம் முதல் உதயத்திற்கு முன்னதாகவே அதை ஜபிக்க வேண்டும் என்பதை ‘அநுதிதம் அத ஸத்யாநக நியாஸயுக்தம் ஸர்ஷிச்சந்தோகதிதைவ ஸ்மரணம்’ என்ற சலோகப் பகுதியினால் அருளியுள்ளார். இதன் விரிவு ஸம்ஸ்க்ருதக் குறிப்புரையில்.

மற்றும் பஞ்சகாலப்ரதீபம் என்னும் க்ரந்தமும் ப்ரமாணமாகக் காட்டப்பட்டுள்ளது.

இவைதவிர பஞ்சகாலக்ரியா தீபம் என்னும் க்ரந்தமும் இவ் விஷயத்தில் ப்ரமாணமாகிறது. இது ஸச்சரித்ர ஸுதாநிதிக்கும் முற்பட்டது. இதை இயற்றியவர் ஸச்சரித்ர ஸுதாநிதிகாரராலும்

[[11]]

‘जप्यखाष्टाक्षराख्यो मनुरभिगमनान्ते स सन्ध्यात्रयेज्या-

योगस्वाध्यायकालेष्वनुदितमथ सध्यानक न्यासयुक्तम् ।

सषिच्छन्दोऽधिदैव स्मरणमुपनयाद्वेदसू तिर्यथै वं

यस्माद्यर्हयस्य सा वैष्णवजनिरभवत् स्यात्तदारभ्य तस्य ॥" इत्युक्तमिति" इति ।

अत्र ‘अनुदितम् - प्रविरलतारकं, किरणमात्रेण ईषदुदितसूर्यम्उदयात् पूर्वम् अरुणकिरणवान् प्रविरलतारकः अनूदितकालः इत्यर्थः । स च जप्यः अनुदितम्’ इति व्याख्यानेन उदयात् पूर्वं श्रीमदष्टाक्षरमन्त्रजप कर्तव्यता स्पष्टम् अभ्यधायि ।

नचायम् अवकाशसम्भवाभिप्रायः, अविशेषणात् । यहि-यदा वैष्णवजनिरभवत् तदारभ्य इति वचनात् ।

श्रीमदष्टाक्षर मन्त्र जपस्य उपस्थानात् पूर्वं कर्तव्यत्वे उद्भाव्यमानानाम् अनुपपत्तीनां समुचितं परिहारं शास्त्रज्ञसम्मतसमीचीनसुबहु सन्न्यायप्रवर्तनेन प्रदर्शयत्ययं मूलमन्त्रजपचिन्तामणिः ।

अनन्तरं पञ्चकालप्रदीपाख्यो ग्रन्थोऽपि एभिः प्रमाणत्वेन प्रदर्शितः ।

सच्चरितसुधानिधि कृत्सम्मानितैः नावल्पावकं चतुर्वेद शतक्रतु श्रीश्रीनिवासताताचार्य स्वामिवर्यैः प्रणीते पञ्चकालक्रियादीपाख्ये ग्रन्थेऽपि मूलमन्त्रजपस्य उपस्थानात् पूर्व कर्तव्यता सुस्पष्टं प्रति पादिता दृश्यते ।

मूलमन्त्रजपप्रकारः

[[301]]

போற்றப்பட்ட நாவல்பாக்கம் சதுர்வேத சதக்ரது ஸ்ரீநிவாஸதாதா சார்ய ஸ்வாமி ஆவார். இவர் தாம் இயற்றிய பஞ்சகாலக்ரியா தீபத்தில் ப்ராதஸ்ஸந்த்யாவந்தநக்ரமம் கூறும் ப்ரகரணத்தில் முதலில் காயத்ரீ ஜபம் செய்து உபஸ்தாநம் முடித்து பிறகு ஸ்ரீமத் அஷ்டாக்ஷர ஜபம் செய்யவும் என்று அருளியுள்ளார். இதற்கு அடுத்தாற்போல் ‘யத்வா - (அன்றிக்கே) என்று ஆரம்பித்து- ‘‘காயத்ரீ ஜபாநந்தரம்-‘உத்தமே சிகரே’ இதி தாம் அநுஜ்ஞாப்ய மூலமந்த்ரஜபம் குர்யாத்… உபதிஷ்டேத் அர்க்யதா ந - ஜப-உபஸ் தான ரூபகர்மத்ரயஸ்ய ப்ருதக்த்வாத்-பரஸ்பராங்காங்கிபாவா பாவாத் மத்யே மூலமந்த்ரஜப: ஸுகர ஏவ இதி ஸாம்ப்ரதாயிகா: ஆஹு: (காயத்ரீ ஜபத்திற்குப் பிறகு ‘உத்தமே சிகரே’ என்ற மந்த்ரத்தைக் கொண்டு காயத்ரியை உத்வாஸநம் செய்துவிட்டு, மூலமந்த்ரஜபம் செய்து பிறகே உபஸ்தாநம் செய்ய வேண்டும். காயத்ரீ ஜபத்திற்கும் உபஸ்தாநத்திற்கும் அங்காங்கிபாவ ஸம்பந் தம் (அங்கம் அங்கி என்ற உறவு நிலை) இல்லாமையால் நடுவிலே ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபிப்பது எளிதேயாம். எவ்வித சாஸ்த்ர விரோதமும் கிடையாது. இவ்விதமே ஸம்ப்ரதாயம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்’ என்று இந்த யத்வா பக்ஷத்தைப் புகழ்ந்து கூறி உபஸ்தாநத்திற்கு முன்னதாகவே ஸ்ரீமத் அஷ்டா க்ஷரஜபம் செய்வதை விளக்கியுள்ளார். ஜபத்திற்கும் உபஸ்தாநத் திற்கும் அங்கம் அங்கி என்ற நிலை கிடையாது என்று கூறியுள்ள யுக்தி அவசியம் குறிக்கொள்ளத் தக்கதாகும்.

ம்என்றிக்கே என்று ஆரம்பித்து-

तथाहि तत्र प्रातस्सन्ध्यावन्दनक्रम प्रकरणे प्रथमतः गायत्रीजपोपस्थानानन्तरं मूलमन्त्र जप कर्तव्यतामुक्त्वा ततः ‘यद्वा गायत्रीजपानन्तरम् ‘उत्तमे शिखरे’ इति तामनुज्ञाप्य मूलमन्त्रजपं कुर्यात् । ततो मैत्रतृचा नारायणोपनिषद्भ्यामृते उपतिठेत् । अर्घ्यदान-जपउपस्थानरूप कर्मत्रयस्य पृथक्त्वात् परस्पराङ्गाङ्गिभावाभावात् मध्ये मूलमन्त्रजपस्सुकर एवेति साम्प्रदायिकाः आहुः’ इत्यादि प्रत्यपादि ।

IFP

अत्र यद्वा पक्षस्य साम्प्रदायिकत्वं मुक्तकण्ठमुक्तं भवति । मूलमन्त्र इति श्रीमदष्टाक्षरमन्त्रस्यैव नामान्तरम् । परन्तु अस्मिन् ग्रन्थे गायल्युद्वासनादनन्तरम् उपस्थानात् प्राक् श्रीमदष्टाक्षरजपकर्तव्यता प्रोच्यते । जप-उपस्थानयोः अङ्गाङ्गिभावाभावोऽत्र हेतुत्वेनोच्यत इति विशेषो विज्ञेयः ।

[[109]]