०२ शौचविधिः

अथ शौचविधिः

व्युत्क्षिप्तवसनः वामहस्तेन मेई गृहीत्वा पूर्व निक्षिप्तमृत्तोयैः शौचं कुर्यात् । उद्धृततोयाभावे तटाकादौ शौचं कुर्यात् । नदीषु भगवत्तीर्थेषु च न कदाचिदपि शौचं कुर्यात् । तटाकादौ बाह्यमृत्तिकां नाहरेत् । आकूर्षरात् मणिबन्धाद्वा जलमध्यात् मृदम् आहृत्य, शोधिते तीरे निक्षिप्य

(ஒரு ஸமயம் ஈரவேஷ்டியுடன் மலஜலங்களைக் கழிக்க நேர்ந்தால் மூன்று ப்ராணாயாமங்களைச் செய்து மீண்டும் ஸ்நாநம் செய்ய வேண்டும்.

ஸ்நாநம் க்ருத்வார்த்ரவஸந: விண்மூத்ரே விஸ்ருஜேத்

யதி

ப்ராணாயாமத்ரயம் க்ருத்வா புந: ஸ்நாநம் ஸமாசரேத் என்று ஸச்சரித்ரஸுதாநிதி கூறும் ப்ராயச்சித்தத்தை

அனுஷ்டிக்க வேண்டும்.)

சௌசம் செய்யும் முறை

மலமூத்ரங்களைக் கழித்த பிறகு அரைவேஷ்டி பின் புறம் படாதபடி அதைத் தூக்கிச் சொருகிக் கொள்ள வேண்டும். சிறுநீர்த்துளிகள் தொடைகளில் படாதிருக்கச் சிறுநீர்க்கருவியை இடக்கையினால் தாங்கிக் கொள்ள

வேண்டும். முன்னமே வைத்திருந்த மண் நீர் இவற்றால் சௌசம் செய்து கொள்ள வேண்டும். அதாவது மலமூத்ர த்வாரங்களைக் கழுவ வேண்டும். முன்னமே ஜலம் எடுத்து வைத்துக் கொள்ளப்படாவிடில் குளம் முதலியவற்றில் சௌசம் செய்து கொள்ளலாம். குளம் முதலியவற்றில் சௌசம் செய்து கொள்ளும் போது வெளியிலிருந்து மண் எடுக்கக் கூடாது. குளத்திற்குள்ளேயே முழங்கை அல்லது மணிக்கட்டு ஆழத்திலிருந்து ஜலத்தில் உள்ள மண்னையே எடுத்துக் கொள்ள வேண்டும். கரையைச் சுத்தம் செய்து அதில் அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

SA

[[30]]

श्रीवैष्णवसदाचार निर्णये

जलस्य अरत्निमाले स्थित्वा सव्यं करम् अन्तजार्नु, इतरं करं बहिर्जानुच कृत्वा मृदं दक्षिणकरेण गृहीत्वा वामकरे कृत्वा गुदं मेहनं च विशोधयेत् ॥

ஜலத்திற்கு ஓட்டை சாண் அளவு தூரம் இருக்கும் படிக் கரையில் உட்கார்ந்து கொண்டு சௌசம் செய்து கொள்ள வேண்டும் (நாம் சௌசம் செய்து கொள்ளும் ஜலம் அப்படியே குளம்.குட்டை முதலியவற்றில் விழக் கூடாது.பூமியில் மூன்று தடவைகளாவது புரண்டால் அந்த ஜலம் சுத்தமாகி விடும் என்ற கருத்தினால் தான் இடைவிட்டு உட்காரச் சொல்லுகிறது சாஸ்த்ரம். ஜலத் தின் நடுவில் உட்கார்ந்து கொண்டு ஒருபோதும் சௌசம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு கையினால் மட்டும் சௌசம் செய்து கொள்ளக்கூடாது.) இடக்கையை முழங் காலுக்குள்ளும், வலக்கையை முழங்காலுக்கு வெளியிலு மாக வைத்துக் கொள்ள வேண்டும். மண்ணை வலக்கையி னால் எடுத்து இடக்கையில் படாமல் இட வேண்டும்.

(இடக்கையுடன் வலக்கை ஸம்பந்தப்படக் கூடாது. இடக்கை அசுத்தமாக இருப்பதால் அதனுடன் வலக்கை சேர்ந்தால் அதுவும் அசுத்தமாகி விடும். அந்தக்கையினால் சௌசத்திற்காக வைத்துள்ள மண்ணைத் தொட்டால் அதுவும் அசுத்தமாகி விடும். அப்பொழுது சுத்தி உண்டா காது. ஆகையால் சௌசம் முடியும் வரை இடக்கையுடன் வலக்கை இடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந் நிலையில் நடுவில் யாரையாவது கூப்பிட நேர்ந்தால் சிலர் இரு கைகளையும் தட்டிக் கூப்பிடுவார்கள். அது தவறு. மௌனமாக இருக்க வேண்டியுள்ள தால் பேர் சொல்லி கூப்பிடவும் கூடாது. பின் அவ்யக்தமான ஒலியை எழுப்பி “ம்ம்” என்றவாறு குரல் கொடுத்து அழைக்க வேண்டும்.

शौचविधिः

[[31]]

गुर्दे ‘पश्चदश द्वादश वा मृत्तिकाः, मेढ़े पश्च देयाः ।

மலமூத்ரங்களைக்

கைவிரல்களில்

கழிக்கும்போது பவித்ரமோ - மோதிரங்களோ இருக்கக்கூடாது. மலஜலம் கழிக்கும் முன்னமே அவற்றைக் கடிஸூத்ரத்தில் (மேல் அரை ஞாண் கயிற்றில்) கோர்த்து விட வேண்டும். இவ் வாறான பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

ஆகச் சுத்தமான வலக்கையினால் மண்ணை எடுத்து டக்கையில் சேர்த்து ஜலத்தினால் மலத்வாரத்தையும் மூத்திரக் கருவியையும் சோதிக்க (கழுவ) வேண்டும். மல த்வாரத்தில் பதினைந்து அல்லது பன்னிரண்டு மண்களும் சிறுநீர்க்கருவியில் ஐந்து மண்களும் இட வேண்டும்.

(சௌசம் செய்யும் போது இடவேண்டிய மண்ணின் எண்ணிக்கையை நாமே தர்மசாஸ்த்ரம் கொண்டு அறிவது நம் போல்வார்க்கு அரிதேயாகும். முன்னோர்களின் உப தேசத்தினாலும், அனுஷ்டானத்தினாலும்தான் அதை நாம் அறிய வேண்டும். ஆகவே அவர்களுடைய உபதேசத்தி னால் பெற்றதைச் சற்று இங்கு விவரிப்போம்.

शौचे मृत्संख्यायाः स्वयं इयत्ता निर्णयः अस्मादृशां सुदुष्करः, प्राचामुपदेशेन अनुष्ठानेन च अधिगन्तव्यो भवति ।

धर्मशास्त्रेषु बहुषु स्थलेषु द्वादशभिरेव मृद्भिः प्रक्षाळनं प्रतिपाद्यते । श्रीपान्वरावरक्षायां तृतीयाधिकारे श्रीमन्त्रियमान्त महागुरुभिः-

‘प्रागुदीच्यामुदीच्यां वा गत्वा शौचं समाचरेत् ।

मृत्तिकाभिर्द्वादशभिः गुदं षड्भिव मेहनम् ॥ (पा-च. ३)

इति पाद्मवचनोदाहरणेन द्वादशमृत्तिकाभिरेव गुदप्रक्षाळनं प्रत्यपादि । आह्निकार्यप्रकाशिकायामपि एवमेव निरणायि ।

स्मृतिरत्नाकरे - वैदिकसार्वभौमेरपि-

‘पूर्व जलेन प्रक्षाल्यं मृदा पश्चात् ततोऽम्बुभिः ।

एवं द्वादशकृत्वस्तु गुदशौचं समाचरेत् ॥ इति

.

यमवचनमुदाहृत्य द्वादशमृद्धिरेव गुदप्रक्षालनं कार्यमिति शौचविधिप्रकरणेऽभ्यधाषि ।

[[32]]

श्रीवैष्णव सदाचार निर्णये

தர்மசாஸ்திரங்களில் பல இடங்களிலும் பன்னிரண்டு மண்களைக் கொண்டு தான் செளசம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் மூன்றாவது அதிகாரத்தில் ஸ்வாமி ஸ்ரீதேசிகன்

ப்ராகுதீச்யாம் உதீச்யாம் வா கத்வா சௌசம் ஸமாசரேத்

Un-F 3 )

एवं बहुपरामर्श द्वादशमृद्धिः प्रक्षाळनमेव कार्यमिति सिद्धयति । पश्चदशमृद्धिः प्रक्षाळनं तु श्रीपाश्चरात्ररक्षायां न कुत्रापि प्रादश ।

श्रीवैष्णव सदाचारनायकेऽस्निनाह्निके पश्चदश वा द्वादश वा मृदो देयाः ’ इति निर्दिश्यते । आह्निकान्तरे च एवमेव पञ्चदशभिः द्वादशभिर्वा गुदशौचं कुर्यात’ इत्यभिहितम् । एवं स्थिते पञ्चदशमृत्प्रदानं केन प्रमाणेन प्रतिपाद्यते ? कथं वा गुरुपक्षस्यास्य लघुपक्षेण विकल्पञ्च घटते ? इति शङ्का अङ्कुरति ।

अन धर्मविदःनाव गुरुलघुपक्षयोः एकस्मिन्नधिकारिणि विकल्पः । अपि तु ‘पञ्चदशेति मृत्संख्यायाः अधिकः पक्षःपरा काष्ठा निर्दिश्यते । सामान्यतः गृहस्थेन देयाः मुवस्तु द्वादशैव । अब अनुप्तस्य तु अधिकपक्षत्वेन पञ्चदशभिः प्रक्षाळनं प्रोच्यते । स्मृतिरत्नाकरे तथैव निर्णयात्’ इति वदन्ति ।

सथाच स्मृतिरत्नाकरे-शौचे विनियमप्रकरणे- ‘पराकाष्ठामाह शाण्डिल्यः -

पश्चधा लिङ्गशौचं स्याद् गुवशौचं त्रिवेष्टितम् ।

पादयोलिङ्गवत् शौचं हस्तयोस्तु चतुर्गुणम् ॥ इति’ । अतश्चाधिकारिभेदात् न गुरुलघुविकल्पः । पापकं वचनमपि अब प्रदर्शितं भवतीति न पूर्वोक्तशावकाशः । विदितं विगोतम्, पंवसंख्याकं शौचं हि त्रिवेष्टितं पंच.

दशसंख्याकं भवति ।

अस्मदध्यात्मविद्यागुरवस्तु ‘वृष्टार्थाः मृदः तिस्रः; अदृष्टार्थास्तु द्वादश । उभयसमुच्चयेन पश्चदशभृदो देयाः इत्युच्यते आह्निकेषु । द्वादशसंख्यानिर्देशस्तु अदृष्टार्थाभिप्रायेणेति गृहस्थानां सर्वेषां पञ्चदशभिः मृद्धिरेव प्रक्षाळतं कार्यम् । मूले ‘वा’ शब्दस्तु ईदृशविभागप्रदर्शनपरः, न तु विकल्यावबोधकः । शाण्डिल्यवचनमपि दृष्टार्थ संख्यामेळनेन प्राप्तां परां काष्ठाम् अभिदधाति इति सर्वमवबातम्’ इत्युपदिशन्ति ।

शोचविधिः

[[33]]

வடகிழக்கிலேயோ - வடக்கிலேயோ சென்று பன்னிரண்டு மண்களை இட்டு மலத்வாரத்தையும், ஆறு மண்களை இட்டு மூத்திரக் கருவியையும் சோதிக்க (கழுவ) வேண்டும் என்ற பாத்மவசகத்தைக் கொண்டு நிர்த்தாரணம் செய்துள்ளார். ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகையிலும் இவ்வாறே காணப்படு கிறது. ஸ்ம்ருதிரத்நாகரத்தில் வைதிகஸார்வபௌமரும் பூர்வம் ஜலோ ப்ரக்ஷள்யம் ம்ருதா பச்சாத் ததோம்புபி: ஏவம் த்வாதச க்ருத்வஸ்து குதசௌசம் ஸமாசரேத்

முதலில் ஜலத்தினாலும் பிறகு மண்ணினாலும் மீண்டும் ஜலத்தினாலும்

பன்னிரண்டு முறை மலத்வாரத்தை அலம்ப வேண்டும் என்று யமவசநத்தைக் கொண்டு சௌச விதிப்ரகரணத்தில் நிர்ணயித்துள்ளார்.

இப்படி இந்த பஹு க்ரந்தங்களைப் பராமர்சிக்கும் போது - க்ருஹஸ்தனாயிருப்பவனுக்குப் பன்னிரண்டு மண் களைக் கொண்டு தான் சௌசம் செய்து கொள்ள வேண்டும் என்பது தேறுகிறது. ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் ஓரிடத்தி லாவது பதினைந்து மண்கள் இட்டுக் கொள்ளவேண்டும் என்று காட்டப்படவில்லை. இப்படியிருக்க - ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்திலும் ஸ்ரீமத் கோபாலதேசிகன் அருளிய ஆஹ்நி கத்திலும் பதினைந்து அல்லது பன்னிரண்டு மண்களைக் கொண்டு மலத்வாரத்தைச் சுத்தி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பதினைந்து மண்கள் இடுவதற்கு ப்ரமாணம் என்ன? அப்படி ப்ரமாணம் கிடைத்தாலும் எளிதாயிருக்கும் பன்னிரண்டு மண்கள் இடுவதைத்தான் யாவரும் அனுஷ்டிப்பார்கள். இதை விட அதிகமான

பதினைந்து மண்ணிடும் பக்ஷத்தை எவரும் அனுஷ்டிக்க மாட்டார்களே. இப்படியிருக்க-ஆஹ் நிகத்தில் பதினைந்து அல்லது பன்னிரண்டு என்று இரண்டு பக்ஷங்களையும் ஸம விகல்பமாகக் கூறியுள்ளது எப்படி? என்ற கேள்வி யாவ ருக்கும் வருகிறது.

இதற்கு ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டும் பரிஹாரம் பின் வருமாறு. சௌசத்தில் திக்குகளின் நியமம் பற்றிக் கூறும்

[[5]]

[[34]]

போது ஸ்ம்ருதிரத்நாகரம் சாண்டில்யருடைய வசநத்தை அவதாரிகையிட்டு எடுத்துக் காட்டுகிறது.

‘பராம் காஷ்டாம் ஆஹ சாண்டில்ய:

பஞ்சதா லிங்க சௌசம் ஸ்யாத் குத செளசம் த்ரி

வேஷ்டிதம் பாதயோர் லிங்கவத் சௌசம் ஹஸ்தயோஸ்து சதுர்

குணம்

சாண்டில்யர் என்பவர் மண்ணின் எண்ணிக்கையில் உயர்ந்த பக்ஷத்தை அதிகபக்ஷத்தைக் கூறுகிறார். மூத்திரக் கருவிக்கு ஐந்து மண்களால் சுத்தி, மலத்வாரத் திற்கு இதைப் போல் மூன்று மடங்கான அளவினால் அதாவது பதினைந்து மண்களினால் சுத்தி, கால்களுக்கு மூத்திரக் கருவிக்குப் போல் ஐந்து மண்களாலும், கை யிரண்டுக்கும் நான்கு மடங்கான அளவினால் அதாவது இருபது மண்களாலும் சுத்தி உண்டு என்று. இதை உற்று நோக்கும் போது கீழே பிறந்த கேள்விக்குப் பரிஹாரம் கிடைக்கிறது. க்ருஹஸ்தன் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய செளசத்தில் மண்ணின் எண்ணிக்கை பன்னி ரண்டு தான். இதில் த்ருப்தி அடையாதவனுக்கு மேலும் அதிகப் படியாக மூன்று மண்களைச் சேர்த்து பதினைந்து மண்கள் விதிக்கப்படுகின்றன. ஆக ஒருவனுக்கே குரு-லகு பக்ஷங்கள் விதிக்கப்படவில்லை. த்ருப்தி பெறாதவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது பதினைந்து மண்கள் என்ற பக்ஷம். ஆஹ்நிகங்களில் பதினைந்து என்று கூறியதற்கு மேற் காட்டிய சாண்டில்ய வசநமே ப்ரமாணமாகும். இவ் விஷயங்களைப் பெரியோர்கள் விளக்கியுள்ளனர். இதை அறிந்து நாமும் ஓரளவு தெளிவு பெறலாம்.

(கண்கூடான முறையில் மலம் போய் சுத்தி உண்டா வதற்காக மூன்று மண்களும், கண்ணுக்குப் புலப்படாத ஒருவித சுத்தி உண்டாவதற்காகப் பன்னிரண்டு மண்களு மாகச் சேர்த்து மொத்தம் பதினைந்து மண்கள் என்னப்

शौचविधिः

[[35]]

प्रतिशौचं सव्यहस्ते अन्तरान्तरा मृदो देयाः । यावत् मृल्लेपो नाऽपैति तावद् दक्षिणेन पाणिना आपो देयाः । आद्या मृत्तिका गुदशौचेऽर्धप्रसृतिमात्रा" । इतराः त्रिपर्वमानाः ।

ULL /.

ஆஹ்நிகத்தில். க்ருஹஸ்தர்கள் அனைவரும் பதினைந்து மண்கள் தான் இட்டுக் கொள்ள வேண்டும். பன்னிரண்டு என்று ஆஹ்நிகத்தில் கூறியது அத்ருஷ்டார்த் தமான சௌத்திற்கு மண்கள் பன்னிரண்டு என்ற பாகு பாட்டைக் காண்பிக்கவேயாகும். என்று ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகிய சிங்கர் ஸாதித்ததாகும்.)

ஒவ்வொரு சௌசத்திற்கும் இடையிடையே இடக் கையை மண்ணிட்டு அலம்பிக் கொள்ள வேண்டும். மண் பூச்சு போகும் வரையில் வலக்கையினால் ஜலத்தை இறைத்துக் கொள்ள வேண்டும். மலத்வாரத்தில் இடும்

कस्मिंश्चित कोशे - “आद्याः मृत्तिकाः गुदशौचेऽर्धप्रसृतिमानाः” इति बहुवचनान्तः पाठो दृश्यते । स च स्मृतिरत्नाकरादिमूल प्रन्थः विरुद्धधते

“अर्धप्रसृतिमात्रा तु प्रथमा मृतिका स्मृता । द्वितीया च तृतीया च तदर्धन प्रकीर्तिता ॥

इति स्मृतिरत्नाकरे दक्षवचनम् उपासम् ।

श्रीपाश्वरावरक्षायाम्-

‘अर्धप्रसृतिमात्रं तु प्रथमा मृत्तिका स्मृता । द्वितीया च तृतीया च तदर्धन प्रकीर्तिता ॥’

इति पारमेश्वर संहितावचनं समग्राहि ।

एवमुपात्तवचनानुसारेण भूले ‘आद्या अर्धप्रवृतिमात्रा’ इत्येकवचनान्तः

पाठ एवं साधुः ।

सच्चरित्रसुधानिधावपि–

….

“अर्धप्रसृतिमात्राबा, तदर्धाः इतरा मृदः ॥ "

इति आद्यायाः एकस्या एव मृदः अर्धप्रसृतिप्रमाणत्वमुच्यते ॥

‘अर्धप्रसृतिमानाद्यास्तदर्धा इतरा मृदः ।

इति दृश्यमानः पाठस्तु असंभवत्पदच्छेदकत्वादशुद्धः इत्यभिज्ञाः ॥

[[36]]

பிஸ்

लिखे पर्वमाताः । पादयोः हस्तयोश्च धात्रीफलसमाः । पादयोः त्येकं पश्च । सव्यहस्ते विंशतिः । हस्तयोः मिलितयोः ff:1

முதல் மண் அரைச்சிறாங்கை அளவுள்ளதாக இருக்க வேண்டும். மற்றைய மண்கள் விரல்களின் மூன்று கணுக் கள் அளவுள்ளனவாகும், சிறுநீர்க் கருவியில் இடும் மண் கள் ஒரு கணுவின் அளவுள்ளவையாயிருத்தல் வேண்டும். கால்களிலும், கைகளிலும் இடப்படும் மண்கள் நெல்லிக் கனியளவுள்ளனவாகும். ஒவ்வொரு காலிலும் ஐந்து ஐந்து மண்கள் இடப்பட வேண்டும். இடக்கையில் இருபது மண்களும், இரண்டு கைகளிலும் சேர்த்து இருபது மண் களுமாக இட்டுக் கொள்ளப்பட வேண்டும்.

(சிறுநீர்க் கருவி, கால்கள், கைகள் இவற்றில் இடப் படும் மண்ணின் எண் இங்குக் கூறப்பட்டிருப்பதை உற்று நோக்கும் போது அஹ்நிககர்த்தாவான ஸ்ரீமத் அழகிய சிங்கர் முன் கூறிய சாண்டில்யருடைய வசநத்தையே ப்ரமாணமாகக் கொண்டுள்ளார் என்பது நன்கு புலனா கிறது.

பஞ்சதா லிங்கசௌசம் ஸ்யாத் குதசௌசம்

த்ரிவேஷ்டிதம் ।

பாதயோர் லிங்கவத் சௌசம் ஹஸ்தயோஸ்து

சதுர்குணம் । என்ற இந்த சாண்டில்ய வசநத்தில்தான். சிறுநீர்க்கருவி யில் ஐந்து மண்களும், கால்களில் சிறுநீர்க் கருவியில்

अत्र पादयोः हस्तयोश्च प्रोक्तायाः मृत्संख्यायाः पूर्वं ३२ तमे पुढे प्रदर्शित शाण्डिल्यवचनप्रतिपन्नत्वात् प्रकृताकिप्रणेतारः इमे गुरुवराः तदेव वचनं शौचविषये प्रधानप्रमाणत्वेन आद्रियन्ते इति स्फुटं प्रतीयते । अतः गुदशीवेऽपि ‘गुदशीचं विवेष्टितम्’ इत्येतद्वचनप्रोक्ताः पञ्चदशैव मृदो गृहस्थः ग्राह्या भवन्तीति धर्मस्थेयाः ॥शौचविधिः

[[37]]

विष्णूवयोः यत् प्रथमं तच्छौचं पूर्वमाचरेत् । युगपच्येत् गुदशौचं प्रथमम् । गुद-मेहनयोः अन्यतरशौचं कृत्वा, मध्ये वामहस्ते पश्व मृवो वत्वा, अन्यतरशौचं कुर्यात् । विण्मूत्रो सर्जनार्थं गतस्य विण्मूत्रे न भवेतां चेद् उक्तार्धशौचम् । मूत्रोस्वर्जनमा लिङ्ग तिलो मृवः । बामकरे पञ्च । मिळितयोः கள்: fr: :

போலவே ஐந்து மண்களும், கைகளில் இதுபோல் நான்கு மடங்கான மண்களும் இட்டுக்கொள்ள வேண்டும் என்பது ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே மலத்வார சௌசமும் இந்த ப்ரமாணம் கூறும் வகையிலே பதினைந்து மண்களால் தான் என்பதும் தெரிகிறது.)

மலம் மூத்ரம் இவ்விரண்டிற்குள் எது முதலில் வரு கிறதோ அந்த இடத்தை முதலில் சுத்தி-சௌசம் செய்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே ஸமயத்தில் கழிந் தால் முதலில் மலத்வாரத்தையும் பிறகு நீர் த்வாரத்தையு மாகச் சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மலத்வாரம் நீர்த்வாரம் இவ்விரண்டினுள் ஒன்றைச் சுத்தி செய்துவிட்டு. அப்படியே மற்றொன்றைச் சுத்தி செய்யக்கூடாது. ஒன்றின் சௌசம் முடிந்தவுடன் மற் றொன்றின் சௌசம் ஆரம்பிக்கும் முன் நடுவில் இடக்கையை ஐந்து மண்களை இட்டுச் சுத்தம் செய்து கொண்டு மற்றொன்றின் சௌசத்தைச் செய்ய வேண்டும். மல மூத்ரங்களைக் கழிக்க வேண்டும் என்று எண்ணிச் சென்ற போது, அவை வெளிவராவிடில் மலமூத்ரங்களைக் கழிக்கவில்லையேயென்று சௌசம் செய்யாமல் வந்து விடக்கூடாது.

அவை வராவிட்டாலும் முன் சொன்ன மண்ணின் எண்ணிக்கையில் பாதி அளவில் சௌசம் செய்து கொள்ள வேண்டும்.

[[38]]

श्रीवैष्णवसदाचारनिर्णये

ततो नखशोधनं कृत्वा शौचदेशं क्षाळयेत्

शुक्लोत्सर्गे तु मूत्रशौचाद् द्विगुणम् । विण्मूत्रोत्सर्गे कटेरधो मलस्पर्शो भवेद्यदि, ऊर्वोः सप्त मृदः, जङ्कयोः पञ्च, पादयोः तिलश्च वत्वा मृत्तोयैः कटिं प्रक्षाळच अन्य व् वस्त्रं धारयेत् । रातो जेत् तदर्धम् । पथि पादः । एतत् शौचं गृहस्थानाम् । ब्रह्मचारिणां द्विगुणम् । वानप्रस्थानां त्रिगुणम् । यतीनां चतुर्गुणम् । स्त्यनुपनीतयोः अर्धम् । अशक्त-आतुरभीतानां यथाशक्ति । मृदलाभे सिकताशौचं चेद् द्विगुणम् ॥

சிறுநீரை மட்டும் கழித்தால் சிறுநீர்க் கருவியில் மூன்று மண்களும், இடக்கையில் ஐந்து மண்களும் இரு கைகளிலும் சேர்ந்து மூன்று மண்களுமாக இடவேண்டும். பிறகு நகத்தின் இடுக்குகளில் மலம் மண்கள் புகுந்திருக்க கூடும். அவற்றை உற்று நோக்கிப் போக்கி நகங்களைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சௌசம் பண்ணிக்கொண்ட இடத்தைத் தண்ணீரினால் அலம்பிவிட Galoor OLD.

शौचस्थलस्य अशोधने प्रत्यवायं स्मरन्ति महर्षयः - तथा हि– स्मृतिरत्नाकरे —

स्मृतिचन्द्रिकायाम् यदा कथंचिद् अभ्युद्धरणं न संभवति तदा विशेषम् आह विवस्वान् –

‘अरत्निमात्रं जलं त्यक्त्वा कुर्यात् शौचमनुद्धृते ।

पश्चात्तु शोधयेत् तीर्थम् अन्यथा न शुचिर्भवेत् ॥ इति तीर्थम् - शौचस्थलम् ।

यदाह ऋश्यशृङ्गः

’ यस्मिन् देशे कृतं शौचं वारिणा तं तु शोधयेत् । अशुद्धस्तु भवेत् तावत् मृत्तिकां यो न शोधयेत् ॥’ इति

शौचविधिः

[[39]]

(அவ்வாறு அலம்பாவிடில் சௌசம் செய்து கொண் டும் இவன் சுத்தனாவதில்லை என்று மஹர்ஷிகள் தோஷம் கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது-

‘ஸ்ம்ருதிசந்த்ரிகையில் - முன்னமே ஜலத்தை எடுத்து வைத்துக் கொள்ளாத போது நீர்நிலைகளில் செளசம் செய்து கொள்ள நேர்ந்தால் ஜலத்திலிருந்து ஓட்டை சாண்தூரம் விலகி உட்கார்ந்துகொண்டு சௌசம் செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்தைச் சுத்தி செய்யவும்; இல்லையேல் இவன் சுத்தனாவதில்லை, என்று விவஸ் வானும், ருஷ்யச்ருங்கரும் கூறுகிறார்கள்’ என்று). சுக்லம் (வீர்யம்) வெளிப்பட்டால் மூத்ர சௌசத்தில் சொல்லப் பட்ட மண்களின் எண்ணைவிட இருமடங்கு எண்ணுள்ள மண்களால் நீர்த்வாரத்தைச் சுத்தி செய்ய வேண்டும். மல மூத்ரங்களைக் கழிக்கும் போது இடுப்பின் கீழே மலம் பட்டால் தொடைகளில் ஏழுமண்களும், முழங்கால்களில் ஏழுமண்களும்,முழங்கால்களில் ஐந்து மண்களும், கால்களில் மூன்று மண்களுமாக இட்டு, மண் கலந்த ஜலத்தினால் இடுப்பைச் சுத்தி செய்து வேறு வஸ்த்ரம் உடுக்க வேண்டும்.

இரவில் மலமூத்ரங்களைக் கழித்தால் முன் சொன்ன சௌசத்தில் பாதி அளவு செளசம் செய்து கொள்ளலாம். ப்ரயாணத்தில் வழியில் மலமூத்ரங்களைக் கழிக்க நேர்ந்தால் முன் சொன்ன அளவில் கால்பங்கு சௌசம் செய்து கொள்ளலாம்.

இதுவரை சொல்லி வந்த சௌசத்தில் மண்ணின் எண்கள் க்ருஹஸ்தனுக்கேயாம். ப்ரஹ்மசாரிகளாயிருப் பவர்க்கு இதுபோல் இருமடங்கு சௌசம் ஆகும். வான ப்ரஸ்தர்களுக்கு மும்மடங்கு சௌசமும், ஸந்யாஸிகளுக்கு நான்குமடங்கும் ஆகும். ஸ்த்ரீகள் - உபநயனம் ஆகாத சிறுவர்கள் இவர்களுக்கு க்ருஹஸ்த சௌசத்தில் பாதி யளவேயாகும். முதுமை காரணமாகச் சக்தியற்றவர்கள் நோயாளிகள், பயம் கொண்டவர்கள் இவர்கள் முடிந்த

[[40]]

श्रीवैष्णव सदाचारनिर्णय

अन्यतो गत्वा करौ पादौ च प्रक्षाळय, आसीनः “बाम-

வரை மண்களை இட்டுக் கொள்ளலாம். அவர்களுக்கு முன் கூறிய அளவில்

சௌசம் கட்டாயம் என்பது வேண்டுவதில்லை. கீழே கூறிய வகையில் சௌசத்திற்கு நல்ல மண் கிடைக்காமல் மணலைக் கொண்டே சௌசம் செய்ய வேண்டி நேர்ந்தால் அப்பொழுது இருமடங்கு அளவில் சௌசம் செய்யவேண்டும்.

சௌசம் செய்து கொண்ட இடத்தைவிட்டு வேறிடம் சென்று கைகளையும், கால்களையும் நன்கு அலம்பவேண்டும்.

‘विप्रस्य दक्षिणे भागे देवास्तिष्ठन्ति नित्यशः । आसीन एवं गण्डूषान् वामभागे विसर्जयेत् ॥

इति स्मृतिसारे वामभागे गण्डूषावरणस्य कारणम् उक्तं अत्र वेदितव्यम् ।

मूत्रे पुरीषे भुक्त्यन्ते तथैवान्यस्य भक्षणे ।

चतुरष्टद्विषड् द्वघष्ट गण्डूषैस्तु विशुद्धयति ॥

(अत्र द्वितीयपादे ‘अभक्ष्यभक्षणे’ इति आह्निकार्थप्रकाशिकायां दृश्यमानः पाठः) इति स्मृतिसारे मूत्रपुरीषयोरुत्सर्गे क्रमेण चतुर्णाम् अष्टानां च गण्डूषाणामाचरणमेव प्रतिपादितम् । शिष्टास्तु मूत्रोत्सर्गे षट्, मलोत्सर्गे द्वादश च गण्डूषान् आचरन्ति ।

एतदनुगुणमेवास्मिन् अह्निकेऽन्वग्राहि श्रीमदाचार्य चरणः- ‘मूत्रोत्सर्गे षड् गण्डूषान् कृत्वा, उभयोत्सर्गे च द्वादश गण्डूषान् कृत्वा, इत्यादि ।

अत्र तु - ‘प्रक्षाळय जानु चरणो हस्तावाकूर्परं तथा ।

गण्डूषान् षट् द्विषट् कुर्यात् क्रमान्मूत्रपुरीषयोः ॥

इति सच्चरितसुधानिधिवचनम् प्रमाणं भवति ।

गण्डूषकाले अङ्गुल्या आस्य शोधनं न कर्तव्यम् । तदाह गौतम :- ‘गण्डूषस्याथ समये तर्जन्या वक्त्रचालनम् ।

करोति यदि मूढात्मा रौरवे नरके पतेत् ॥’ इति । अन ‘तर्जन्या’ इत्येतद् अङ्गुल्यन्तराणामप्युपलक्षणम् । में कयाप्यङ्गुल्या वक्त्रचालनं - आस्यशोधनं कुर्यादित्यर्थः ॥

शौचविधिः

[[41]]

भागे मूत्रोत्सर्गे षड् गण्डूषान् कृत्वा, उभयोत्सर्गे द्वादश

பிறகு உட்கார்ந்து கொண்டு வாய் கொப்பளித்து அந்த ஜலத்தைத் தன்னுடைய இடப்புறத்தில் உமிழ வேண்டும்.

(ப்ராஹ்மணனுடைய வலப்புறத்தில் எப்பொழுதும் தேவதைகள் இருக்கின்றனர். ஆகையால் உட்கார்ந்து கொண்டு வாய் கொப்பளித்து நீரை இடப்புறத்தில் உமிழ வேண்டும். வலப்புறத்தில் உமிழக் கூடாது.

‘விப்ரஸ்ய தக்ஷிணே பாகே தேவாஸ்திஷ்டந்தி நித்யச: 1 ஆஸீ5: ஏவ கண்டூஷாந் வாமபாகே விஸர்ஜயேத் In என்று ஸ்ம்ருதிஸாரம் கூறுகிறது.

சிறுநீரை மட்டும் கழித்தால் ஆறு தடவைகளும், சிறுநீர் மலம் இரண்டையும் கழித்தால் பன்னிரண்டு தடவைகளுமாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

(இவ்விஷயத்தில்

‘ப்ரக்ஷாள்ய ஜாநுசரணௌ ஹஸ்தாவாகூர்ப்பரம் ததா கண்டூஷாந் ஷட், த்விஷட் குர்யாத் க்ரமாந் மூத்ர-

புரீஷயோ: ப

முழங்கால்களையும், கால்களையும், முழங்கை வரைக் கைகளையும் அலம்பிக் கொண்டு, சிறுநீர் கழித்தபோது ஆறு தடவைகளும், மலம் கழித்த போது பன்னிரண்டு தடவைகளுமாக வாய் கொப்பளிக்க வேண்டும் என்று கூறும் ஸச்சரித்ர ஸுதாநிதி வசநம் ப்ரமாணம் ஆகும்.

வாய் கொப்பளிக்கும் ஸமயத்தில் அதாவது வாயில் நீரை நிரப்பிக் கொண்டுள்ள ஸமயத்தில் வாயினுள் விரலை நுழைத்து உட்புறத்தைக் குழப்ப (சோதனம் செய்ய)க் கூடாது. பல் தேய்க்கும் முறை கூறும் ப்ரகரணத்தில் ஏகாதசீ-ச்ராத்ததினம் முதலான நிஷித்ததினங்களில் ஆள் காட்டி விரலைத் தவிர்த்து மற்றைய விரல்களால் பல்லைக் குழப்பலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது பல்

[[6]]

[[42]]

भीष्णवसदाचार निर्णय

उपवीतो, मूत्रोत्सर्गे द्विराचमनम् उभयोत्सर्गे त्रिराचमनं

च कुर्यात् ॥

தேய்க்கும் ப்ரகரணம், இது வாய் கொப்பளிக்கும் ப்ர கரணம். இந்த ப்ரகரணத்தில் எந்த விரலாலும் குழப்பக் கூடாது என்பதே பெரியோர் திருவுள்ளம்.

‘கண்டூஷஸ்யாத ஸமயே தர்ஜந்யா வக்த்ரசாலநம் । கரோதி யதி மூடாத்மா ரௌரவே நரகே பதேத்

வாய் கொப்பளிக்கும் ஸமயத்தில் ஆள்காட்டி விரலால் முகத்தை - வாயின் உட்புறத்தை முட்டாள் தனமாக ஒருவன் கழுவினால் அவன் ரௌரவம் என்ற நரகத்தில் விழுவான் என்று கௌதமர் கூறுகிறார். இங்கு ஆள்காட்டி விரலால் குழப்பக் கூடாது என்று கூறியிருந்த போதும் எந்த விரலாலும் குழப்பக் கூடாது என்பதே சாஸ்த் प्रा.)

• आचमनेऽपि समयभेदात् सङ्ख्याभेदः समयाचारनिष्ठैः सन्दर्शितः-

भोजने प्रयतो वापि भक्ष्ये चाद्यन्तयोरपि ।

मूते च द्विद्विराचामेत् त्रिः पुरीषे विसर्जिते ॥

दाने प्रतिग्रहे होमे जपे सन्ध्यासु चार्चने ।

[[1]]

बलिकर्मणि चाचामेद् आदौ द्विः सकृदन्ततः ॥

स्नान - खादनपानेषु सकृदादौ द्विरन्ततः । मधुपर्कस्य सोमस्य विष्णुपादोदकस्य च ॥

फलमूलतिलेक्षूणां भक्षणे पत्रपुष्पयोः ।

गन्धद्रव्यस्य चान्यस्य नाद्यन्ताचमनं स्मृतम् ॥

इत्येवमादयः आचमनानुबन्धिनो विषयाः अवश्यज्ञातव्याः सच्चरित्र -

सुधानिधिप्रभृतिषु प्रतिपादिताः ।

शौचविधिः

வாய் கொப்பளித்த பிறகு ஆசமனம் செய்யவேண்டும். சிறுநீரை மட்டும் கழித்திருந்தால் இரண்டு ஆசமனங்களும் மலம் மூத்ரம் இரண்டையும் கழித்திருந்தால் மூன்று ஆச மனங்களுமாகச் செய்ய வேண்டும்.

(இங்கு மாந்த்ர மாநஸ ஸ்நாநங்களைச் செய்யவேண்டும் என்று கூறாவிடிலும் பல பெரியோர்கள் அவற்றைச் செய்து வருகின்றனர். ஆகையால் ஆசமனம் செய்த பிறகு மாந்த்ர மாநஸ ஸ்நாநங்களையும் செய்யவேண்டும்.)

ஆஹாரம் சாப்பிடும் போதும். மற்றும் எதையேனும் சாப்பிடும் போதும் முதலிலும் முடிவிலும் இரண்டு தடவைகள் ஆசமனம் செய்ய வேண்டும். மூத்ரம் கழித் தால் இரண்டு ஆசமனங்கள். மலம் கழித்தால் மூன்று ஆசமனங்கள். தானம் செய்யும் போதும், அதை வாங்கும் போதும், ஹோமம், ஜபம், ஸந்த்யைகள், அர்ச்சனை, பலி கர்ம இவற்றைச் செய்யும் போதும் ஆரம்பத்தில் இரண்டு ஆசமனங்களும் முடிவில் ஒரு ஆசமனமும் செய்ய வேண்டும்.

ஸ்நாநம் காதநம் (பற்களால், கடித்துச் சாப்பிடுதல்) பானம் இவற்றைச் செய்யும் போது ஆரம்பத்தில் ஒரு ஆசனமும் முடிவில் இரண்டு ஆசமனங்களும் செய்ய வேண்டும்.

மதுபர்க்கம், ஸோமரஸம், ஸ்ரீவிஷ்ணு பாதோதகம் (பெருமாள் தீர்த்தம்) பழம், கிழங்கு, எள், கரும்பு, பத்ரம், ஏலக்காய், லவங்கம் முதலிய வாஸனை த்ரவ்யங்கள் ஆகிய வற்றைச் சாப்பிடும் போது முதலிலும் ஆசமனம் செய்ய வேண்டாம், முடிவிலும் செய்ய வேண்டாம். மற்றும் ஆச மனம் செய்ய வேண்டிய இடங்கள் பல உள. அவற்றின் விரிவுகளைத் தர்ம சாஸ்த்ரங்களில் கா ண்க.)

[[44]]

बीयपसदाचार निर्णम