श्रीदेवराजैः कृता +++(इति कथिता)+++
समयाचार-पत्रिका / सङ्केतपत्रिका
मूलम् अत्र ।
(नैतद् उत्तरकलार्यैर् अङ्गीक्रियते, न च बहुभिर् दक्षिणकलार्यैः॥ संस्कृतभागः परिष्कृततरः, न द्राविडः। शोधनानि सूच्यन्ताम्।)
Misattribution
- The author of this text is claimed to one of the eight main sishyas of Manavala mamuni, Erumbiyappa.
Causes for doubt on attribution to Erumbiappa -
- Vilakshana Mokshadhikari Nirnaya by Erumbiappa clearly conflicts with the recommendation here against sAvitrI japa.
- “अस्याः पत्रिकाया अवलोकनेन प्रायः अस्माकम् आचार्यपादैः इयं पूर्णप्रमाणत्वेन नाङ्गीकृतेति मन्ये । नाम, देवराजाचार्यैः प्रणीतेत्येव न स्वीकृता भवति प्रायः । यद्यप्यङ्गीकृता तर्हि धर्मसूक्ष्मविषयाणां जागरूकतया ग्रहणम् आवश्यकम् । इतः पूर्वमस्या विषये न श्रुतवानहमपि । " इति यतिराजमठशिष्यः कश्चन।
- “When a Sri vsishnava asked Sri Puthur swamy (Puthur Sudharsanar Sri. U. Ve. Krishnaswami Iyengar) about this gutter piece in Sri Vaishnava Sudharsanam கேள்வி-பதில் during 90s, he exposed the hidden agenda of some fanatics & vehemently condemned this booklet & planting of this fictitious manuscript in oriental libraries. Just a comparison of writing style of swamy Sri Erumbiappa in Vilakshans mokshadhikari nirnayam & it’s contents with the above said fake narrative will tell a lot about the inner crookedness of the masterminds of some ill-conceived motives”
- Dhanurdasa Ramanuja Jeeyar Swamy in a lecture on June 12 2022 speculated that followers of Yadavaprakasa wrote this book and attributed it to Erumbiappa.
- Yadavaprakasa lived at ramanujas time. His followers were not alive even at desikas time. Erumbiyappa lived after MM. So, this theory is not credible.
- Yet, the jIyar’s effort at denying its legitimacy in public is notable. He is atypical of tenkalais - insists on karma and anuShThAnams.
- He said to be quite pro-varNAshrama dharma in one of his other works.
Other claimed misattributions:
There is supposedly a text called Sampradaya Chandrika attributed to Erumbiappa that criticises the practice of Varnashrama Dharma by Prapannas.
द्राविडी
எறும்பியப்பா’ என்ற ஸ்ரீ தேவராஜாசாரியர் அருளிச் செய்த ஸமயாசார் பத்ரிகை
முகவுரை யாசார பத்ரிகா என்றும் ஸங்கேத பத்ரிகா என்றும் பெயர் கொண்ட இச் சிறிய நூல், ப்ராசீனமான ஸ்ரீவைஷ்ணவர்கள் கைக்கொள்ளும் அனுஷ்டானங்களை விவரிக்கிறது. இந்தப்பதிப்புக்கள் ஆதாரமான மூன்று சுவடிகள் வருமாறு :
- மைசூர் ஓரியண்டல் லைப்ரரியில் உள்ள ஓலைச்சுவடி, நெ 55.
- மைசூர் பரகால மடத்தில் உள்ள ஓலைச்சுவடி.
- சோளங்கிபுரம் தொட்டயாசார்யர் வம்சத்தவர்களிடம் முள்ள ஓலைச்சுவடியைப் பார்த்து எழுதிய தெலுங்கு லிபி கை யெழுத்துப் பிரதி.
இவற்றுள் முதல் இரண்டும் முழுமை பெறாமலும், இயற்றியவர் பற்றிய விவரம் இல்லாமலும் உள்ளன. மூன்றாவது சுவடியில் எறும்பியப்பா என்கிற தேவராஜர் இயற்றியதாகக் குறிப்பு உள்ளது மேலும் எறும்பியப்பா இயற்றிய அம்ருத பலவல்லி சதகம் என்னும் ஸ்தோத்ரத்துடன் கூட எழுதப்பட்டுள்ளது. இதே சுவடியில் இடம் பெற்றுள்ள வேறு சில சுலோகங்களிலிருந்து, எறும்பியப்பா என்பவர் மாமுனிகளின் அஷ்ட திக்கஜங்களில் ஒருவரான சரண்யாசார்யரின் குமாரர் என்ற குறிப்பும் கிடைக்கிறது.
சென்னையிலிருக்கும் ப. ராஜகோபாலாசார்ய ஸ்வாமி திருமாளிகை யில் ஒரு கையெழுத்துப் பிரதி தெலுங்கு லிபியிலுள்ளது - உள்ள தில் கடைசியில் சில சுலோகங்கள் உள்ளன. அவை வருமாறு:
पञ्च-संस्कार-हीनत्वात्
लोकाचार्याद्य्-अनादरात् ।
साङ्केतिकत्वात् होमादि-
विधानात् दुर्लभत्वतः॥ (१)
वेदमन्त्र-प्रधानत्वात्
निकृष्टं विखनागमम् ।
मूल-मन्त्र-प्रधानत्वात्
पाञ्चरानम् अथोत्तमम् ॥ २ ॥
अतस् तत् सम्परित्यज्य
पाञ्चरात्रविधानतः ।
प्रतिष्ठादिकमास्थेयं
प्रपन्नैर् आलये गृहे॥ ३॥
இதனால் இந்த ஸ்வாமியின் திருவுள்ளப்படி ஸ்ரீவைகான ஸாகமம் களை விட ஸ்ரீபாஞ்சராத்ராகமங்களைக் கொண்டு ஆலயங்களிலும் திருமாளிகைகளிலும் திருவாராதனம், ப்ரதிஷ்டை முதலியன செய்வது உத்தமம் என்று ஏற்படுகிறது. இதற்கு 7 காரணங்களை இதில் தெரிவித்துள்ளார். (1) ஸ்ரீவைகானஸத்தில் பஞ்சஸம்ஸ்காரம் கிடையாது; இது ஒரு குறை. (2) பிள்ளைலோகாசார்யர் முதலானோர் இதை ஆதரிக்கவில்லை. (3) ஸங்கேதமாய் சில உண்டு அவர்களில் (4) ஹோமத்திற்கு ஸ்ரீவைகானஸத்தில் முதன்மை உண்டு , (5) ஸ்ரீவைகானஸாகமப்படி ஆராதிப்பவர்கள் கிடைப்பது அரிது (6) வேதமந்த்ரங்களை முக்கியமாய் கைக்கொண்டுள்ளார்கள் (7) மூல மந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தை அவர்கள் கையாள்வதில்லை. ஆகவே அதைவிட ஸ்ரீபாஞ்சராத்ரம் சிறந்தது என்று இந்த ஸ்வாமி திருவுள்ளம். இந்த மூன்று சுவடிகளிலும் கிடைத்த ச்லோகங்கள் எல்லாம் இப் பதிப்பில் வெளியாகின்றன. எந்தெந்த வரிகள் எந்தெந்த சுவடி களில் விடுபட்டுள்ளன என்ற விவரமும் கீழ்க் குறிப்பாகத் தரப்படு கிறது. மைசூர் ஓலையில் எகான अस्मिंश्च सम्प्रदाये என்கிற 57 வது ச்லோகம் இல்லை. ஆனால் த்ருடி (செல்லு அரித்த அடையாளம் ) உள்ளது. विषुवायनदर्शेषु (23) என்ற சுலோகம் ஏதோ பிழையா யிருகிக்றது. ஏனெனில் அமாவாஸ்யையில் தர்பணம் செய்வது சிஷ்டாசாரமே. விஷூ முதலானவற்றிலும் உண்டு. ஆகவே இந்த சுலோகத்தில் பிழை உள்ள தாய் தோன்றுகிறது. மேலும் ஓலை களைப் பார்க்க வேண்டும். மிகப் பழைய ஓலையை அச்சிட வாய்ப்பு ஏற்பட்டது. இக்காலத்தில் வடமொழியறிந்தவர்கள் – அருகி வருவதால் எல்லோரும் இதன் கருத்தை அறிய தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளேன். பிழை ஏதேனுமிருப்பின் க்ஷமித் தருளவும். இதை அனுஸரித்து ஸத்ஸம்ப்ரதாயத்தில் நெறியுடன் இருந்து உஜ்ஜீவிக்க வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன். அடியேன் ராமானுஜதாஸன் போந்தவாக்கம் ராஜ கோபாலாசாரியன்
Intro (En)
INTRODUCTION
We are glad now to bring out in print, a short work entitled “Sanketa Patrika”" that enlists a collection of anti-sastraic self-impositions of our sub-sect of Sri Vaishnavas. The present edition is based on the following three -pamphlets :
- A palm - leaf manuscript available at Low, Mysore Oriental Library. No. 3.
- A palm - leaf manuscript at Sri Parakala Mutt, Mysore. ;
- A manuscript written in Telugu characters originating from the En family of Sri Doddayacharya at chola simhapuram (Cholan’gipuram).
Of these three, the first two are incomplete and do not contain any reference to the author. The third one reveals that its author is one Sri Devaraja (alias Erumbi Appa), son of one Sri Saranyacharya, one of the eight Dig-gajas of Sri Manavala Mamuni. In fact, this manuscript includes another work of the same anthor, entitled Amrta-Phalavalli-Satakam:
The present text includes all the verses in these three originals, together with the foot-notes explaining which lines are omitted in which of these originals
-Pondavakkam Rajagopalacharyar
प्रपन्नानाम् अकामानां
वैलक्षण्यस्य सिद्धये ।
आलोच्य सर्वशास्त्राणि
संग्रहेण वदाम्य् अहम् ॥१॥
सदस्यानि तु शास्त्राणि
न तथाऽयं मनीषिभिः ।
उपदेशगतो गोप्यः
सदाचारस्य निणयः ॥ २ ॥
सङ्केतैकाश्रयो भेदः
न तु स्मार्तो न वैदिकः ।
आगमाचार्य-तन्त्रेषु
वेद्यस् तत्त्वैक-दृष्टिभिः ॥ ३ ॥
विधान-प्रतिषेधेऽपि
केषाञ्चित् समयात् सताम् ।
आचाराणां संग्रहस्य
संग्रहस् त्यागवैभवात् ॥ ४ ॥
धर्मज्ञसमयो मानम्
अनुष्ठेयार्थनिश्चये।
सामयाचारिका धर्माः
समयाचार-पत्रतः ॥ ५॥
द्राविडी
ஸமயாசார பத்திரிகை (எறும்பி அப்பா என்கிற தேவராஜர் இயற்றிய ஸங்கேத பத்திரிக்கையின் தமிழாக்கம்) காம்ய கர்மங்களைச் செய்யாத ஸ்ரீவைஷ்ணவர்களை உள்ளபடி அறிந்து கொள்வதற்காக எல்லா சாஸ்திரங்களையும் ஆராய்ந்து சுருக்கமாய் நான் உரைக்கிறேன். இதை எல்லோருக்கும் வெளியிட லாகாது. பூர்வாசார்யர்களின் உபதேசத்தால் அறிந்த சிஷ்டாசாரங்கள் இவை. ஆகவே மந்த்ரங்களைப் போல் வெளி யிடாமல் காக்க வேண்டும். வேதமறிந்த வல்லார்களால் ஏற்பட்டபடியால் இதற்கு மாறான வைதீக ஆசாரங்களையோ, ஸ்மார்த்த ஆசாரங்களையோ கைக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஆன்றோர் ஒன்றுகூடி முடிவுக்குக் கொண்டு வந்த அனுஷ்டானங்கள் இவை. ஆகவே இவற்றில் பல மாறுபாடுகள் இருப்பினும் தர்ம மறிந்த சான்றோர்களின் துணிவானபடியால் இவையே கைக் கொள்ளத்தக்கவை.
ज्ञेयाः स्युः सम्प्रदायज्ञैः
वैलक्षण्यस्य सिद्धये ॥
प्रपन्नानां मुमुक्षूणां
न कार्यं हरिकीर्तनम् ।
जप्या प्रपन्न-सावित्री+++(=रामानुजनूत्तन्दादि)+++
चतुर्-अक्षर-गर्भिता +++(→“रामानुज”)+++ ॥६॥
द्राविडी
ப்ரபன்னர்களால் அதிகாலையில் ஹரிநாம ஸ்மரணம் செய்யக் கூடாது. மாறாக இராமானுஜ நூற்றைந்தாதி (அல்லது ராமானுஜ என்ற நான்கு எழுத்து) சொல்ல வேண்டும்.
न वेदमाता गायत्री
जप्या लोकानुसारतः ।
स्त्रीणां यथा भर्तृ-गोत्रं
तद्वन् नः श्रीपराङ्कुशः ॥ ७॥
गोत्रर्षिः स्यात् , पूर्वगोत्रं
लोक-संग्रह-हेतुकम् ।
द्राविडी
காயத்ரியை ஜபம் பண்ணக் கூடாது. ஏதோ ஜபம் பண்ணுவது போல் பாவனை செய்ய வேண்டும். அவரவர் தம் தமது காத்ரத்தைச் சொல்லக் கூடாது. உன் கோத்ரம் என்ன ? என்று கட்டால் நம்மாழ்வார் கோத்ரம் என்று கூறவேண்டும். மணமான பெண்கள் தந்தையின் கோத்ரத்தை விட்டுக் கணவனின் கோத்ரத்தைக் கூறுவதைப் போன்றது இது.
तन्त्रतः पञ्च-संस्कारः
कर्तव्यो, न तु मन्त्रतः ॥८॥
द्राविडी
மந்த்ரங்களைக் கொண்டு அல்லாமல் வெறுமனே ஸமாச்ரயணம் செய்ய வேண்டும்.
घण्टानादं विना विष्णोः
कर्तव्यम् इह पूजनम् ।
अमन्त्रकं च कर्तव्यं
न तु दीक्षित-मन्त्रतः ॥९॥
मन्त्राणां न जपो युक्तः
नियमो मन्त्र-चोदितः।
वासुदेवादि-मन्त्राश् च
प्रपन्नानां न चोदिताः ॥१०॥
द्राविडी
மணி அடிக்காமலும் மந்த்ரங்கள் ஏதுமின்றியும் பெருமாள் ஆராதனம் செய்ய வேண்டும். அங்கந்யாஸம் கரந்யாஸம் முதலான நியமங்களோடு திருவஷ்டாக்ஷரம் த்வாதசாக்ஷரம் முதலான மந்த்ரங் களை ஜபம் செய்ய வேண்டிய நியமம் ப்ரபன்னனுக்குக் கிடையாது.
प्रपन्नानां न कर्तव्याः
सङ्कल्पाः कर्मपूर्विकाः।
इतिहास-पुराणोक्त-
धर्मा अपि न चोदिताः ॥ ११ ॥
द्राविडी
கர்மாக்களைத் தொடங்கும் முன் ஸங்கல்பம் செய்யத் தேவை இல்லை. இதிகாஸ புராணங்களில் கூறிய தர்மங்கள் ப்ரபன்னன் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
वैश्वदेवो न कर्तव्यो
न भूतानां बलिर् मतः ।
पञ्चयज्ञा न कर्तव्या
ग्रहण-स्नानवर्जनम् ॥ १२ ॥
द्राविडी
வைச்வ தேவம் செய்யவேண்டாம். காக்கை முதலான பூதங் களுக்கு அன்னம் இடவேண்டாம். ப்ரஹ்மயஜ்ஞம் முதலான பஞ்ச மஹாயஜ்ஞங்கள் செய்யவேண்டாம். சந்திர சூர்ய கிரஹணகாலத் தில் புண்யகால ஸ்நானம் வேண்டியதில்லை.
एक एव नमस्कार
एकम् एव प्रदक्षिणम् ।
तीर्थ-स्नानं न कर्तव्यम्
अभिवादो न चोदितः ॥ १३ ॥
द्राविडी
ஒரே நமஸ்காரமும், ஒரே ப்ரதக்ஷிணமும் போதும். கங்காதி புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஸேவித்தால் அபிவாதனம் பண்ணத் தேவை இல்லை.
दासो रामानुजस्येति
वदन् श्रीवैष्णवान् नमेत् ॥
द्राविडी
‘‘அடியேன் ராமானுஜதாஸ்ன்’’ என்று கூறிக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்க வேண்டும்.
संकल्पेन विधानेन
ब्रह्मविच्-छ्राद्धम् इष्यते।
तत्रापि मन्त्र-राहित्ये
वसुशब्दाद्यकीर्तने॥ १४॥
पितृ-सूक्तादि-राहित्ये
श्राद्धं शुद्धतमं भवेत्।
मन्त्रपाला(वाक्या)नुकारः स्यात्
लोक-प्रक्रोश-हेतुकः॥ १५ ॥
अतः पिण्डा न दातव्या
न होमो न च तर्पणम् ।
द्राविडी
ப்ரஹ்ம வித்துக்கள் ஸங்கல்ப ச்ராத்தம் (பார்வண ஹோமம் இன்றி) செய்தால் போதும், அதிலும் மந்த்ரம் இல்லாமலும் வஸுருத்ராதி சப்தங்களைச் சொல்லாமலும் பித்ரு ஸூக்தம் முத லானவை கூறாவிடினும் அந்த சராத்தம் மிகவும் சுத்தம் என்று அறியவும். மந்த்ரத்தைக்கூறுவதைப்போல உலகத்தார் கொள்வதற் காக மொணமொண என்று கூறவேண்டும். பிண்டப்ரதானம் தேவை இல்லை. ஹோமம் வேண்டாம், தர்ப்பணம் வேண்டாம்
न धार्यं सम्प्रदायज्ञैः
पवित्रं दर्भनिर्मितम् ॥१६॥
द्राविडी
ஸம்ப்ரதாயம் அறிந்தவர்கள் தர்பத்தாலான பவித்ரச் அணிய வேண்டியதில்லை.
स्वरूपज्ञैः तथा कर्णे
न धार्यं तुलसी-दलम् ।
गङ्गास्नानं न कर्तव्यं
प्रपन्नैर् वीतकल्मषैः ॥ १७॥
द्राविडी
காதில் திருத்துழாயை தரிக்கக்கூடாது. சிவனின் சாறான கங்கையில் முழுகக் கூடாது.
सेतौ समुद्रे च तथा
न स्नायाद् वैष्णवोत्तमः ।
प्राशनं पञ्चगव्यस्य
वैष्णवानां निषिध्यते ॥ १८ ॥
द्राविडी
ஸேதுவிலும் ஸமுத்திரத்திலும் ஸ்நானம் பண்ணலாகாது. பஞ்ச கவ்யத்தை ஸ்ரீவைஷ்ணவன் அருந்தக் கூடாது.
न पादतीर्थ-सदृशं
वैष्णवानां महीतले ।
इति मत्वाऽनुतिष्ठन्ति
लोकाचार्यानुयायिनः ॥ १९ ॥
द्राविडी
ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாத தீர்த்தத்திற்கு ஸமானம் உலகில் கிடையாது என்பதாகப்பிள்ளை உலகார்யரைபின்பற்றுபவர் கொள்கை.
विष्णोर् आराधनं कार्यं
प्रपत्नैः सात्विकैर् जनैः ।
अगस्त्य-भाषया कार्या (कार्य)
न नित्योदित-वर्त्मना ॥ २० ॥
जीयर्-पड्य्-उक्त-रीत्यैव
कार्यं भगवद्-अर्चनम् ।
द्राविडी
ஸாத்விகர்கள் தமிழ்மொழியால் ஜீயர்படியில் கூறியுள்ளபடி எம்பெருமான் ஆராதனத்தைச் செய்யவேண்டும். ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்த நித்ய க்ரந்தத்தின்படி செய்யக் கூடாது.
वैश्योपसर्पणं कार्यं
सम्प्रदाय-प्रवृद्धये ॥ २१ ॥
द्राविडी
ஸத்ஸம்ப்ர தாயம் வளர வணிகர்களைப் பின் தொடர வேண்டியது.
कैङ्कर्य-बुद्धया कर्तव्यं
स्वदार-गमनं नरैः ।
अधो-लक्ष्म-युतं धार्यम्
ऊर्ध्वपुण्ड्रं तु वैष्णवैः ॥ २२ ॥
जपा-कुसुम-संकाशं
श्रीचूर्ण-लक्ष्मि(क्ष्मी)तोषकम् ।
ऊर्ध्व-पुण्डस्य मध्ये तु
नित्यं धार्यं तु वैष्णवैः ॥ २३ ॥
समन्त्रकं न कर्तव्यं
ऊर्ध्वपुण्डस्य धारणम् ॥ २४ ॥
द्राविडी
பகவத்கைங்கர்யம் என்ற புத்தியுடன் ஸ்வதாரகமனம் செய்ய லாம். கீழே மூக்கு வரையில் நீட்டி திருமண் இடவேண்டும். செம் பருத்திப் பூவைப் போல் சிவந்த ஸ்ரீசூர்ணமே பிராட்டிக்கு மகிழ்வளிக்கும். பன்னிரண்டு திருமண்கள் நித்யம் அணிய வேண்டிய தேவை இல்லை. திருமண் இட்டுக் கொள்ள மந்த்ரம் தேவை இல்லை .
तथा सर्वजयन्तीनाम्
उत्सवान्तेषु पारणा ।
तस्मिन्न् एवाहनि कुर्यात्
जयन्तीनां तु पारणाम ॥ २५ ॥
द्राविडी
எல்லா ஜெயந்திகளிலும் உத்ஸவம் முடிந்ததும் அதே தினத்தில் பாரணை செய்ய வேண்டும்.
सव्य-हस्तेन पात्रं (पत्रं) न
स्पृष्ट्वा प्राणाहुतिं चरेत् ।
पूर्वाचार्यैर् एवम् एव
कृतं, नात्र विचारयेत् ॥ २६ ॥
द्राविडी
இடது கையில் இலையை பிடித்துக் கொண்டு ப்ராணாஹுதி செய்யக் கூடாது. இதுவே முன்னோர்களின் அனுஷ்டானம். இங்கு விசாரம் வேண்டியதில்லை.
नोपोष्या सम्प्रदायज्ञः
श्रवणद्वादशी तथा ।
साध्य-द्वादश्य्-अनुष्ठानं
प्रपन्नानां न चोदितम् ॥ २७ ॥
द्राविडी
ச்ரவணத்வாதசி உபவாஸம் கிடையாது . ஸாத்யத்வாதசி அனுஷ்டானம் வேண்டாம்.
विषुवायन-दर्शेषु
न श्राद्धं न च तर्पणम्।
तथाऽपि तस्यानूकारः
लोकोपक्रोश-हेतुकः॥ २८ ॥
स्वरूप-ज्ञानम् अस्तीति
तर्पणाद्यांश् च कुर्वताम् ।
ज्ञायन्ते ते परे विप्रा
ह्य् एवं स्युर् न च वैष्णवाः ॥ २९ ॥
द्राविडी
விஷு புண்யகாலம் முதலானவற்றில் பித்ருக்களுக்கு சரார்த் தமோ தர்ப்பணமோ தேவை இல்லை. ஆனாலும் ஏதோ அனுஷ்டித் ததைப்போல் உலகத்தார் நம்பும்படி நடந்து கொள்ள வேண்டும். ஸ்வரூபஜ்ஞானம் அறிந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இவை எல்லாம் செய்யா விட்டாலும் குற்றமில்லை. சாதாரண அந்தணர்கள் இதைச் செய்து ஒழியட்டும்.
“मन्निमित्तं कृतं पापम्
अपि धर्माय कल्पते ।"
इत्य्-उक्तरीत्या पापस्य
यदि कैङ्कर्य-रूपता ॥
न विद्यते तत्र दोषः
प्रपन्नानां कदाचन ॥ ३०॥
द्राविडी
சில ஸமயங்களில் எம் பெருமான் கைங்கர்யத்துக்காக சில பாடம் கள் செய்தாலும் அது புண்யத்தைப் போன்றதே என்று வசனம் இருப்பதால் குற்றமில்லை.
माठपत्यं यतिः कुर्यात्
भगवद्-धर्म-वृद्धये ।
संन्यासि-नियमो नास्ति
कैङ्कयैक-रतात्मनाम् । ३१ ॥
द्राविडी
ஸந்யாஸிகள் மடாதிபதியாக வந்து அதனால் பகவத்தர்மங்கள் வளருமானால் ஸந்யாஸிகளுக்குக் கூறிய நியமங்கள் குறைந்தாலும் தப்பில்லை.
अ-वैष्णवत्व-हेतुः स्यात्
प्रबन्धानधिकारिता।
न वेदाध्याय-शक्तित्वं
वैष्णवत्वस्य साधनम् ॥ ३२ ॥
द्राविडी
திவ்யப்ரபந்தங்களை யார் ஸேவிக்க வில்லையோ அவர்களே அவைஷ்ணவர்கள். வேதாத்யயனம் பண்ணினால் போதாது.
श्रीवैष्णवत्वम् अन्यत् स्वाद्
ब्राह्मण्याद् वेद-सम्मतात ।
अन्यः स्यात् वैष्णवाचारः
समाचारश् च वैदिकात् ॥ ३३ ॥
द्राविडी
வேதங்களில் கூறிய அந்தணர்களின் நிலையைவிட வைணவர் களின் நிலை வேறானது. ஆகவே வைதீக ஆசாரத்தைவிட வைணவ ஆசாரங்கள் உயர்வானவை.
प्रपन्नानां भागवत-
कैङ्कर्यं स्याद् अनामयम् ।
कैमुत्य-सिद्धम् आचार्य-
कैङ्कर्यं सर्वतो-मुखम् ॥ ३४ ॥
द्राविडी
ப்ரபன்னர்கள் அடியார்களுக்குத் தொண்டு செய்வதையே குற்ற மற்றதாகக் கொள்வர். ஆகவே பலவழிகளிலும் ஆசார்ய கைங்கா யமே மேலானது என்பது விளங்கும்.
वैष्णवो विधवा-स्त्रीणां
वपनं नैव कारयेत् ।
द्राविडी
வைணவர்கள் விதவைகளுக்கு மொட்டை அடிக்கக் கூடாது.
लौकिकी वैदिकी पार-
मार्थिकीति त्रिधा मता। ३५
निष्ठा, तत्र प्रसिद्धा स्यात्
लौककी, वैदिकी पुनः ।
श्रुत्या स्मृत्या च विहिता
पुराणैर् आगमैस् तथा ॥ ३६॥
श्रीमद्-गीता-भाष्य–गद्य-
भाष्य-नित्योदिता च या।
सा निष्ठा वैदिकी प्रोक्ता
वेदान्तार्योक्ति-विस्तृता ॥ ३७ ॥
सा पारमार्थिकी निष्ठा
या श्री-वचन-भूषणे ।
प्रोक्ता रहस्य-त्रितये
आचार्य-हदये तथा ॥ ३८ ॥
पारमार्थिक-निष्ठानां
वैष्णवैर् अपि वैदिकैः।
व्यामिश्र-कर्म-निरतैः
सहवासो न चोदितः॥
द्राविडी
உலகத்தோடு ஒட்டி வாழ்வது, வேதங்களில் கூறியவாறு வாழ்வது. எம்பெருமான் திருவுள்ளப்படி வாழ்வது என்று மூன்று வகையான நிலைகள் உண்டு. இதில் முதலில் கூறியது ப்ரஸித்தம். இரண்டாவது வேதம், ஸ்ம்ருதிகள், புராணங்கள், ஆகமங்கள். ஸ்ரீபாஷ்ய கீதாபாஷ்ய கத்யங்கள், நித்யக்ரந்தம் முதலியவற்றில் சொல்லப்பட்டு வேதாந்தாசார்யரால் விளக்கப்பட்டது. ஸ்ரீவசன பூஷணம், ரஹஸ்யத்ரயம், ஆசார்ய ஹ்ருதயம் முதலியவற்றில் கூறியது மூன்றாவது வகையைச் சேரும். மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் கலவங்கீரையைப் போல் எல்லா கர்மங்களையும் செய்துக் கொண்டு வரும் வைணவர்களோடு சேரக்கூடாது.
नित्य-योगस् तुल्य-शीलैर्
युक्तो विश्वास-शालिभिः ।
“श्रीमान् वेङ्कटनाथार्य”
इति चेद् अनुसंहितम् ।
प्रबन्धादौ, सद्य एव
सा गोष्ठी त्यागम् अर्हति ॥ ४० ॥
द्राविडी
எங்காவது ஸ்ரீமான் வேங்கடநாதார்ய : என்கிற சுலோகம் தொடக்கத்தில் கூறப்படுமாகில அந்த கோஷ்டியை உடனே விட்டு விடவேண்டும்.
“रामानुज-दया-पात्रम्” +++(इति वेङ्कटनाथस्तुतिः)+++
आलये यत्र चोच्यते।
स दिव्य-देशस् त्यक्तव्यो
लोकार्य-पद-संश्रयैः ॥ ४१ ॥
द्राविडी
எந்த கோவிலில் ராமானுஜதயாபாத்ரம் தனியன் சொல்லப் படுகிறதோ அந்த திவ்யதேசம் பிள்ளை லோகாசார்யருடைய திருவடியைச் சேர்ந்தவர்களால் விடத்தக்கது.
सेव्या शठारिसूक्तिश् च
“भाष्यं तु पर-रञ्जनम्” ।
इति लोकार्य-सिद्धान्तः
पूर्वाचार्यानुसारतः ॥ ४२ ॥
श्रीभाष्यादि-नव-ग्रन्थान्
परित्यज्य विशेषतः ।
‘ईडु’-ग्रन्थ-प्रवचने
यत्नं कुर्यात् तु वैष्णवः ॥ ४३ ॥
द्राविडी
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்தியை எப்பொழுதும் ஸேவிக்க வேண்டும். ஸ்ரீபாஷ்யம் அத்வைதிகளை கண்டிக்க ஏற்பட்டபடியால் அதை விட்டு விட வேண்டும். முன்னோர்களை அடி ஒற்றிய இதுவே பிள்ளைலோகா சார்யரின் கொள்கை குறிப்பாக ஸ்ரீபாஷ்ய காரர் அருளிச்செய்க ஸ்ரீபாஷ்யம் முதலான ஒன்பது நூல்களையுப் விட்டுவிட்டு ஈடு க்ரந்தத்தை ப்ரவசனம் பண்ணுவதிலேயே வைஷ்ணவர்கள் முயல வேண்டும்.
वर्णाश्रम-निषेधश् च
दोष-भोग्यत्व-हेतुकः ।
न विधिर् न निषेधश् च
श्रौतस्मार्तेषु कर्मसु ॥ ४४ ॥
द्राविडी
வர்ணாச்ரம தர்மங்களை தடுக்க வேண்டும். அது குற்றமல்லவா? என்று எண்ணக்கூடாது. ஏனெனில் கேசவம் தோஷபோக்யம்’ ட என்பதை அறியவும். ஆகவே ச்ரௌதஸ்மார்த்த கர்மாக்களைச் செய்யவோ விடுவதோ விருப்பப்படி செய்யலாம்.
विप्राणां भुक्ति-समये
प्रपन्नानां विशेषतः ।
अन्न-शाकादिकं सर्वं
हस्तेनैव विनिक्षिपेत् ॥
द्राविडी
ஸ்ரீவைஷ்ணவர்கள் சாப்பிடும்போது சாதம் , கறியமுது முதலியவற்றை கையாலேயே பரிமாற வேண்டும். சிப்பல் , கரண்டி முதலானவற்றால் கூடாது.
न मेक्षणादिना दद्यात्
द्विजानां; पैतृके विधौ।
उपवासादिकं कुर्याद्
एकादश्यां तु वैष्णवः ॥ ४६॥
वैष्णवो यद्य् अशक्तश् चेत्
कुर्यान् मुद्गान्न-भोजनम् ।
अन्नश्राद्धं न कुर्यात् स
एकादश्यां तु वैष्णवः ॥४७॥
सद्यश् चण्डालतां याति
यदि कुर्यात् तु मोहतः ।
द्राविडी
-ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்யாமல் உபவாஸம் இருக்க வேண்டும். மறுநாள் செய்ய வேண்டும். அசக் தனாக இருந்தால் ஏகாதசி அன்று வெண்பொங்கல் ஸாப்பிட வேண் டும். எப்படியும் அன்னத்தால் ச்ராத்தம் அன்று கூடாது. அப்படி அன்னத்தால் ஏகாதசி அன்று ச்ராத்தம் பண்ணினால் அவன் உடனே சண்டாளன் ஆகிறான். ஏகாதசி அன்று கோவிலில் எம்பெருமானுக்கு நிவே தனம் பண்ணின ப்ரஸாதங்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் அருந் தலாம். இதில் பாவம் கிடையாது.
विष्ण्व्-आलय-प्रसादश् चेत्
भुञ्ज्यात् श्रीवैष्णवोत्तमः ॥ ४८ ॥
भगवद्-भुक्त-शेषत्वात्
तस्य पापं न विद्यते॥
मुमुक्षुर् वैष्णवो विप्रो
योषित्पाकं न भक्षयेत्॥ ४९
पटेनाच्छादनं कुर्यात
भोजने वैष्णवोत्तमः ।
द्राविडी
மோக்ஷத்தை விரும்பும் வைணவர்கள் பெண்கள் சமைத்ததை சாப்பிடக்கூடடாது. எப்போதும் உணவருந்தும்போது திரைக்கட்டிக் கொள்ள வேணும்.
समुद्रतनयायास् तु
अणुत्वं वेदसम्मितम्।
जगद्-व्यापार-कर्तृत्वं
रमायां तु न विद्यते ॥ ५०॥
द्राविडी
பெரிய பிராட்டிக்கு உலகைப் படைக்கும் திறன் கிடையாது அவள் ஜீவனைப் போல் அணுவானவளே. இதுவே வேதம் வல்லார் களின் கொள்கை.
प्रपन्नोऽपि यतिः कुर्यात्
वैष्णवे प्रति-वन्दनम् ।
आपाद-लम्बि-काषायं
बिभृयात् वैष्णवो यतिः ॥ ५१ ॥
द्राविडी
வைஷ்ணவ ஸ்ந்யாஸி தன்னை ஸேவிப்பவரை திரும்ப வணங்க வேண்டும். பாதம் வரை தொங்கும் காஷாயத்தை அணியவேண் டும்.
भरन्यासस्य करणं
वैष्णवानां न विद्यते।
प्रपत्तेर् अननुष्ठानं
लोकाचार्यस्य सम्मतम् ॥ ५२ ॥
तस्मान् न वैष्णवः कुर्यात्
कुर्याच् चेत् पतितो भवेत् ।
द्राविडी
வைணவர்கள் சரணாகதி பண்ணிக் கொள்ளக்கூடாது. பண்ணிக் கொண்டால் மஹாபாதகத்தை செய்தவனைப் போல் ஆகிறான் இதுவே பிள்ளை லோகாசார்யரின் கொள்கை.
श्रुति-स्मृत्य्-उदितं कर्म
सर्वं त्यक्त्वा तु वैष्णवः।
अर्चावतार-कैङ्कर्य-
परः स्याद् यावद्-आयुषम् ॥ ५३॥
द्राविडी
வேதம். ஸ்ம்ருதிகள் முதலானவற்றில் சொல்லிய நிக். நைமித்திக கர்மங்களை முழுவதும் விட்டு விட்டு ஆயுள் உள்ள வரை கோவில்களில் கைங்கர்யம் செய்வதையே - வைணவர்கள் கை கொள்ள வேண்டும்.
वस्त्र-यज्ञोपवीतं तु
न धार्यं वैष्णवैर् द्विजैः ।
मुमुक्षुभिः सदा धार्या
तुलसी-पद्म-मालिका ॥ ५४ ॥
द्राविडी
வைணவர்கள் துணியை யக்ஞோபவீதம் போல் போட்டு கொள்ளக் கூடாது. துளசி பத்மாக்ஷங்களை தரித்துக் கொள்ள வேணும்.
प्रपन-वैष्णवः कुर्याद्
अन्तरीयस्य चोपरि ।
दुकूलाद्य्-उत्तरीयेण
वेष्टनं विष्णुसन्निधौ ॥ ५५ ॥
द्राविडी
வைணவர்கள் அந்தரீயத்துக்கு மேல் வெண்பட்டாலான உத்த ரீயத்தால் பெருமாள் ஸந்நிதியில் சுத்திக் கட்டிக் கொள்ள வேண்டும்.
इत्थं-विधान्य् अनेकानि
कर्तव्यानि मुमुक्षुभिः ।
वैलक्षण्य-प्रदायीनि
ज्ञात्वा सत्-संप्रदायिभिः ॥
इत्थं संकेतम् आश्रित्य
श्रीलोकाचार्य-सम्मतम् ॥ ५६ ॥
द्राविडी
இப்படி பிள்ளைலோகாசார்யரின் திருவுள்ளத்துக்கு உகப்பான அநேக காரியங்கள் தொடர்ந்து ஸங்கேதமாக செய்துக்கொண்டு வர வேண்டும். -
अ-साङ्कर्येण संरक्ष्यम्
अस्माभिः समयस्थितैः ।
अस्मिंश् च सत्-सम्प्रदाये
विरुद्धैर् अपि वैदिकैः ।
वेदान्तार्य-प्रतिष्ठा चेत्
क्रियते यत्र-कुत्र-चित् ॥ ५७ ॥
तेषु द्रोहो यथाशक्ति
कार्यः सङ्केतम् आश्रितैः ।
नो चेद् ग्रामं परित्यज्य
गन्तव्यं समयस्थितैः ॥ ५८ ॥
द्राविडी
நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களால் கட்டுப்பாடோடு இருந்து எங்காவது வேதாந்தாசார்யருடைய விக்ரஹப்ரதிஷ்டை நடந்தால் அங்கு சென்று அவரவர் சக்திக்குத் தகுந்தபடி துரோஹம்
செய்யவேண்டும். அல்லது அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
इति सङ्केतपत्रस्था
आचारा वैष्णवोत्तमैः।
सादरं संपरिग्राह्या
न श्रुति-स्मृति चोदिताः ॥ ५९ ॥
द्राविडी
இப்படியரக ஸங்கேதபத்ரம் என்ற இச்சிறு நூலில் தெரிவித்த ஆசாரங்களை வைணவர்கள் கைக் கொள்ள வேண்டும். வேதம் முத லானவற்றில் கூறியதை விட்டுவிடவேண்டும்.
देवराजेन संपृक्तां
समयाचार-पत्रिकाम् ।
यः पठेत् स पुमान् लोके
सर्वान् कामान अवाप्नुयात् ॥ ६ ॥
द्राविडी
எறும்பி அப்பா என்று பிரஸித்தரான தேவராஜன் என்பவரால் தொகுத்துக் கூறப்பட்ட இந்த ஸமயாசார பத்திரிகையை எவர் படிக்கிறார்களோ அவர்கள் எல்லா பலன்களையும் அடைவார்கள்.
इत्थं देवराजापरनामधेयेन एरुम्बि-अप्पाख्येन कृता समयाचारपत्रिका सम्पूर्णा