ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருவாய்மொழி ஒன்பது மற்றும் பத்தாம் பத்துக்கள்
அவைகட்குரிய
ப்ரதிபிம்பலஹரீ
(ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு – ய்லோக வடிவில்)
300% 10
“குடந்தை எங்கோவலன் குடியடியார்க்கே”
வெளியிடுபவர்:-
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு,
“ஸ்ரீநிதி”, 10, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம். சென்னை - 600 073. ப்லவ வர்ஷம், ஆடி, ம்ருகசீர்ஷம் (04-08-2021)
ஸ்ரீருக்மிணீ ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ கோவர்தநேசன்
- திருவடமதுரை
ஸ்ரீ வரகுணவல்லி ஸமேத ஸ்ரீ விஜயாசனர் - திருவரகுணமங்கை
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ காய்ச்சினிவேந்தன் - திருப்புளிங்குடி
ஸ்ரீ வைகுந்தவல்லி ஸமேத ஸ்ரீ கள்ளபிரான் - திருவைகுந்தம்
॥ Åt: ॥
…………….
॥HI 74: II
திருவாய்மொழி
ஒன்பது மற்றும் பத்தாம் பத்துக்கள்
அதற்குரிய
ப்ரதிபிம்பலஹரீ
(ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு – üலோகவடிவில்)
ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான். வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி. ஸாஹித்ய வ்யாகரண வாசஸ்பதி.
வேங்கடஸேஷார்யமஹாதேசிகஸ்வாமி
அருளிச்செய்தது.
கௌரவப் பதிப்பாசிரியர்:
வில்லூர் நடாதூர் ஸாஸ்த்ர ஸாஹிதீவல்லப ராஷ்ட்ரபதி ஸம்மானித Dr. V.S. கருணாகரன், B.E.,(Mech.), M.A.(Sanskrit), Ph.D., (ஆஸ்தான வித்வான், ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமம்)
வெளியிடுபவர்:
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு,
“ஸ்ரீநிதி”, 10, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம், சென்னை - 600 073.
ப்லவ வர்ஷம், ஆடி, ம்ருகசீர்ஷம், (04-08-2021)
முதல் பதிப்பு 500 ப்ரதிகள்
ஆண்டு 2021
வெளியிடுபவர்:
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு
புத்தகம் கிடைக்குமிடம் :
V.S. கருணாகரன்,
“ஸ்ரீநிதி கருணா”,
# 6, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம், சென்னை - 600073. தொலைபேசி : 044 - 2278 0854 அலைபேசி : 093839 46438
ஈமெயில்
:
அச்சிட்டோர் :
ஆர் என் ஆர் பிரிண்டர்ஸ்
நெ.19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி,
606060 - 600 005. 044 - 2844 7071
விலை : ரூ 200/- (வெளிநாட்டில்: $5 அமெரிக்கன் டாலர்)
11 eft: 11
W
114 4: II
॥ श्रीम वात्स्यश्रीवेङ्कटशेषार्यमहादेशिकाय नमः ॥
॥ 34 a (Aa)
: II
பதிப்பாசிரியனின் பணிவான விண்ணப்பம்
- இந்த நாள்!
இந்தப் புத்தகத்தை அடியேன் வெளியிடும் இந்த நன்னாளே அடியேனுடைய வாழ்வின் பொன்னாள். உண்மையிலேயே இன்று தான் அடியேன் பிறவிப் பயனைப் பெற்றுள்ளேன் என்றால் அது மிகையே ஆகாது.
இந்தப் புத்தகத்தில் திருவாய்மொழியின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பத்துக்களுக்கான ஸம்ஸ்க்ருத ஸ்லோக வடிவ மொழி பெயர்ப்பாக அடியேன் ப்ராசார்யரும் பிதாமஹரும் ஆன ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான். வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி. ஸாஹித்ய வ்யாகரண வாசஸ்பதி. ஸ்ரீவேங்கட ஸேஷார்ய மஹாதேயிகஸ்வாமி அருளிச்செய்துள்ள ப்ரதிபிம்பலஹரீ அச்சிலே வெளியிடப்படுகின்றது.
இதற்கு முன் 1986-ல் முதல் பத்தும், 1996-ல் இரண்டாம் பத்து முதல் ஐந்தாம் பத்து வரையும், 2007-ல் ஆறாம் பத்தும், 2014-ல் ஏழாம் பத்தும், 2017-ல் எட்டாம் பத்தும், இப்பொழுது 2021-ல் ஒன்பதாம் மற்றும் பத்தாம் பத்தும் என ஆறு ஸஞ்சிகைகளாக வெளிவந்து இந்த நூலின் வெளியீடு நிறைவு அடைந்துள்ளது.
அதாவது இவ்வெளியீட்டுப் பணி முப்பத்தைந்து ஆண்டுகளில் நிறைவேறியுள்ளது. த்ரீணி வாவ ரேதாகும்ஸி பிதா புத்ர: பௌத்ர: என்று வேதபுருஷன் அருளியபடி இது மூன்று தலைமுறைகளில் நடந்திருக்கிறது. நல்லவேளை! எம்பெருமான் இதனை நாலாம் தலைமுறைக்குக் கொண்டு செல்லத் திருவுள்ளம் பற்றிடவில்லை. - ப்ரதிபிம்பலஹரீ வெளியீடும், அதனில் ஏற்பட்ட தாமதத்தின் பின்னணியும்
இந்தப் ப்ரதிபிம்பலஹரீயைப் பிதாமஹர் தமது வாழ்நாளில் எந்த கட்டத்திலே நிறைவு செய்தருளினார் என்று அடியேனுக்குத் தெரியவில்லை. 1855-ல் அவதரித்தருளிய பிதாமஹர் 1934-ல் திருநாட்டுக்கு எழுந்தருளினார். ஆனால் அவருடைய வாழ்நாளில் கடைசிப் பத்து
( iii )
ஆண்டுகள் பொருளாதார நெருக்கடியில் அவர் மிகவும் ஈரமப்பட்டிருக்கிறார் என்று அடியேனுக்குத் தோன்றுகின்றது. தம்முடைய ஆசார்யனுடைய தத்வஸாரம் மற்றும் அதிகரணஸாராவலீ இவைகளுடைய வ்யாக்யானங்களை அச்சிட்டு வெளியிட்டதாலேயே அவர் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டாரோ என்று கூடச் சில பல புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட அனுபவத்தால் அடியேனுக்குச் ஐயம் எழுவது உண்டு. எனவே அவர் தம் வாழ்நாளிலே இதனை அச்சிட்டு வெளியிடத் துணியவில்லையோ என்று கூடத் தோன்றுகின்றது.
பிதாமஹர் தமது மணியான க்ரந்தலிபிக் கையெழுத்திலே விட்டுச் சென்ற ப்ரதியைத் திருத்தகப்பனார் தமது பல நெருக்கடிக்களிலும் பாதுகாத்து வந்தார் என்றாலும் அவருடைய இயற்கையான கவிதைத்திறன், படைப்புத் திறன் என்ற இவைகள் அவரைப் பல புதிய கவிதைகளைப் படைக்கத் தூண்டி வந்த நிலையில் இதன் வெளியீடு தாமதமாகிக் கொண்டே வந்தது.
ஆனாலும் பித்ரு பக்தியே வடிவெடுத்தவரான அடியேனுடைய திருத்தகப்பனார் அடியேனையும் ஒரு பொருளாக்கி உரிய கல்வியையும் அளித்தருளினார். அது மட்டுமல்ல, இந்தப் பணியிலே ஈடுபாட்டையும் உண்டாக்கி அருளினார். அடியேனுக்குத் திருமாளிகைப் பெருமாளான ஸ்ரீஸுவர்ண லக்ஷ்மீதர நவநீதநடன் திருவடியிலே Uரணாகதி செய்து வைத்து விட்டு அடியேனிடம் அவர் கனிவுடன் ஸாதித்தார்:- “எம்பெருமானே! இவன் அடியேனும் அடியேன் திருத்தகப்பனாரும் பட்டது போலப் பொருளாதர நெருக்கடி ஏதும் படாது இவ்வுலகிலும் வளமான வாழ்க்கையையும் வாழ்ந்து பகவத் பாகவத கைங்கர்யம் செய்து வரும்படி அருளிட வேண்டும் என்று எம்பெருமானிடம் ப்ரார்த்தனை செய்திருக்கிறேன்” என்று.
இதன் பயனாக அடியேனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி இல்லாத வளமான வாழ்க்கையை எம்பெருமான் அமைத்து அருளியுள்ளான் என்பதில் ஐயமில்லை. 2007-ல் அடியேன் மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வூதியம் தொகை அளவில் பணிக்காலத் தொகையை விட அதிகம் என்பதால் பொருளாதார நெருக்கடி இல்லாத ஓய்வு வாழ்க்கை வளம் ஆகவே உள்ளது. இப்புத்தகத்தை அச்சிட வேண்டிய நிதி தர அன்பு நண்பர்களும் கிடைத்திருக்கின்றனர். அப்படி இருந்தும் ஏன் இந்த முப்பத்தைந்து ஆண்டுகள் ?
திருத்தகப்பனார் தாம் எழுந்தருளியிருந்த காலத்திலேயே முதல் ஐந்துப் பத்துக்களை அடியேனைக் கொண்டே வெளியிட்டார். இப்பணியில் பலவகைகளில் அடியேனை திருத்திப் பணிகொண்ட திருத்தகப்பனார் 2001-ல் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளி விட்டார்.
அதன் பிறகு பிதாமஹரின் க்ரந்தலிபிக் கையெழுத்தை தேவநாகரீ லிபியில் கொண்டு வருவதில் அடியேனுக்குத் தேவையான திறமை இல்லை. அச்சிடப்பட்ட க்ரந்தலிபியை
( iv )
வாசிப்பதில் ஸ்ரமம் அடியேனுக்கு இல்லை என்றாலும், பிதாமஹரின் கையெழுத்துப் ப்ரதி அடியேனை மலைக்க வைத்தது என்பது தான் உண்மை. - உதவிக்கு வந்த உத்தமர்கள்
இந்நிலையில் தான் தாம்பரத்திலே வஸித்து வந்த ஸ்ரீமதுபயவே. வித்வான் கொத்திமங்கலம் தேவனாதாசார்ய ஸ்வாமியின் உதவியை அடியேன் நாடினேன். “பரோபகாரார்த்தம் இதம் ஸ்ரீரம்” என்றே வாழ்ந்த அந்த மஹான் பூதக்கண்ணாடியின் துணையுடன் எழுத்துக்களைப் பார்த்துத் தன்னால் புரிந்துகொள்ள இயலாத எழுத்துக்களைப் புள்ளிகளாகவே காட்டி தேவநாகரீ லிபிப் படிவத்தைத் தயார்செய்து கொடுத்தருளினார். ஆறு மற்றும் ஏழாம் பத்துக்களை அவர் தயார் செய்து கொடுத்த படிகளின் உதவியுடன் ஒருவாறு அச்சிட்டு வெளியிட முடிந்தது.
இந்நிலையில் அடியேனுடைய பொறுப்பின்மையால் மீதி மூன்று பத்துக்களுக்கு அவர் தயார் செய்து கொடுத்திருந்த தேவநாகரீப் ப்ரதியைத் தொலைத்து விட்டேன்.
அதனால் தளர்ந்து அழுத கண்ணினாய் இருந்த அடியேனுக்கு உதவி செய்திடுவதற்காக நறையூர் நம்பிக்கை நாச்சியாரும், நறையூர் நம்பியும் அடியேனுக்கு ஷ்யனாக ஆயுஷ்மான் மாத்தூர் ப்ரவசனதிலகம் மருத்துவ டாக்டர். வேங்கடேஷ் அடியேனிடம் ஸ்ரீபாஷ்யம், பகவத்விஷயம், கீதாபாஷ்யம் ஆகிய க்ரந்தங்களை காலக்ஷேபம் செய்திட ஸங்கல்பம் செய்து அருளினார்கள்.
மஹாமேதாவீயான மருத்துவ டாக்டர் வேங்கடேஷ் க்ரந்த லிபியைக் கற்றுக்கொண்டு பிதாமஹனாரின் க்ரந்தக் கையெழுத்துப் ப்ரதியைத் துணிவுடன் அவர் புரிந்து கொண்டபடி தேவநாகரீயில் வடித்துத் தாத்பர்யரத்னாவலீ மற்றும் திருவாய்மொழி மூலத்தையும் இணைத்து மென்னகல் படிவத்திலே கொடுத்தார்.
அதை அடியேனுடைய அறிவுக்கு எட்டிய வரையில் பிதாமஹனாரின் கையெழுத்துப் ப்ரதியுடன் ஒப்பிட்டு ஸாக்ஷாத் ஸ்வாமியின் VVப்தார்த்தம், மற்றும் அவராலேயே “உரைகாரர்” என்று போற்றப்பட்ட அழகிய மணவாளச்சீயரின் பன்னீராயிரப்படி மற்றும் திருவாய்மொழி வ்யாக்யானங்களுடன் சீர்செய்து கொண்டேன். ஆனால் சில இடங்களில் சீர்செய்யும் வழி அடியேனுக்குப் பிடிபடவில்லை அப்படி அடியேன் ஸ்ரமப்பட்ட இடங்களில் அடியேனுடைய தங்கையின் கணவர் ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான் மற்றும் மஹாகவி நாவல்பாக்கம் திநசī. Dr.V. கண்ணன் என்று ப்ரஸித்தரான யஜ்ஞம் ஸ்வாமியின் உதவியைப் பெற்றுக்கொண்டு ஒருவாறு எப்படியோ எட்டாம் பத்தை வெளியிட்டு விட்டேன்.
ஒன்பதாவது மற்றும் பத்தாவது பத்துக்களுக்கும் மருத்துவ டாக்டர் வேங்கடேஷ் அவர் புரிந்துகொண்ட அளவில் க்ரந்தலிபி ஸ்லோகங்களை தேவநாகரீ லிபியில் வடித்துத் திருவாய்மொழிப் பாசுரங்களையும், தாத்பர்யரத்னாவலீ ஸ்லோகத்தையும் இணைத்து
(v)
மென்னகல் படிவத்திலே ஏறத்தாழ அச்சுக்கான நிலையில் மிக விரைவிலேயே தயார் செய்து கொடுத்துவிட்டார்.
அவைகளைப் பிழையல்லாத படிவங்களாக்கப் பிதாமஹரின் கையெழுத்துப் படிகளோடு ஒப்பிட்டு அடியேன் ஓரளவு சீர் செய்துவிட்டதாக எண்ணித் தயார் செய்திருந்த படிகளை மின்னஞ்சல் மூலம் ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமியின் பார்வைக்குப் பிதாமஹரின் க்ரந்தாக்ஷர மாத்ருகைகளின் நகல்களுடன் அனுப்பி வைத்தேன்.
மற்றுமொரு பார்வையும் இருக்கட்டும் என்று அடியேனுடைய திருத்தமக்கையின் குமாரனும் அடியேனிடம் வேதாத்யயனத்தையும் க்ரந்த சதுஷ்டய காலக்ஷேபத்தைச் செய்து வருபவனும் ஆன ஆயுஷ்மான் சிலுக்கூர் Dr. S. லக்ஷ்மீநரஸிம்ஹனுக்கும் சில பகுதிகளை அனுப்பி வைத்தேன். அவனும் தனது அலுவலகப் பணிகளுக்கு இடையிலே அவைகளை ஆய்ந்து தன் கருத்துக்களைத் தெரிவித்து வந்தான்.
ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமி (இந்த ஸ்வாமி அடியேனைவிடப் பத்து மாதங்கள் மூத்தவர் இப்பொழுது ப்லவ ஐப்பசிச் சித்திரை நக்ஷத்ரத்திலே எழுபத்தைந்து திருநக்ஷத்ரங்கள் நிறையப் போகின்றன என்றாலும்) இன்றும் ஆந்திரமாநிலத்தில் அமராவதீ நகரில் உள்ள S.R.M. பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியிலே இருக்கிறார். அவர் தமது பலபல பணிகளுக்கிடையே பதிகம் பதிகமாக அவைகளைக் கடாக்ஷித்து, அடியேன் கோட்டை விட்டிருந்த பல இடங்களையும் திருத்தங்களையும் அடியேனை விட அவருக்கிருக்கும் ஆழமான புலமையையும் க்ரந்த எழுத்துப் பயிற்சியையும் உரிய முறையிலே பயன்படுத்திப் பட்டியலிட்டு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்து உபகரித்தருளினார்.
இதற்கிடையிலே அடியேனுக்கு ப்ராஸ்ட்ரேட் க்ளாண்டில் புற்று நோய் வந்து கதிர் வீச்சு மருத்துவம் நடந்தது. எனவே இப்பணியை நிறைவேற்றாமலேயே போய்விடுவேனோ என்ற அச்சம் பிடித்துக் கொண்டது. அதனால் இதனை உடனேயே நிறைவு செய்துவிட வேண்டும் என்ற அழுத்தம் வந்து விட்டது. அதன் பயனாக அந்த ஸ்வாமியை அடியேன் தொலைபேசியில் இப்பணி பற்றித் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே வந்தேன்.
இப்பொழுது இப்பணி அவருடைய உதவியினால் நிறைவடைந்து இந்த ஸஞ்சிகை வாசகர்களின் திருக்கைகளை எட்டிவிட்டது.
ஸ்ரீமதுபயவே. மஹாகவி மற்றும் மஹாவித்வானாகிய யஜ்ஞம் ஸ்வாமி அடியேனுடைய தங்கையை மணந்து கொண்டதால் அவருக்கு அடியேன் மைத்துனன் ஆகி அவருக்கு அடியேனை மிஞ்சிய உறவு இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்று எண்ண வேண்டா. - பல தலைமுறைகளாக வந்து கொண்டிருக்கும் தொடர்பு
கி.பி. 1790-ல் அவதரித்தருளி ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ ஸாக்ஷாத்காரம் செய்த நாவல்பாக்கம் ஸ்ரீமதண்ணயார்ய மஹாதோபிகனை ஆஸ்ரயித்து அவருடைய அந்தரங்க பிஷ்யர்களில் முக்ய
(vi)
இடம் பெற்றிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்வாமி (இவர் வில்லூர் நடாதூர் திருவம்ஸத்திலே அவதரித்தருளியவர். தமது க்ருஹஸ்தாஸ்ரமத்திலேயே ஸ்ரீமதண்ணயார்ய மஹாதேஸிகனை ஆஸ்ரயித்தவர். பிறகு விதுரர் ஆன நிலையில் ஸந்யாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தருளியவர்) மற்றும் மஹாமஹோபாத்யாய விருது பெற்ற வில்லூர் நடாதூர் ஸ்ரீஸுந்தரார்ய மஹாதேஸிக ஸ்வாமி ஆகிய மஹான்களின் காலத்திலேயே வில்லூருக்கும் நாவல்பாக்கத்துக்கும் வித்யா ஸம்பந்தம் தொடங்கி விட்டது.
ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த அடியேனுடைய பிதாமஹர் 1855-ல் அவதரித்து அருளியவர் என்று கூறியிருந்தேன் அல்லவா? அவர் 1825-ல் அவதரித்தருளிய தமது தமையனார் முறையினரான ஸ்ரீஸுந்தரார்ய மஹாதேஸிகன் திருவடிகளிலே ஸ்ரீபாஷ்யம் முதலிய க்ரந்தசதுஷ்டயத்தையும் காலக்ஷேபம் செய்துவிட்டுப் பிறகு இராமநாதபுரம் ஸம்ஸ்தா “னத்திலே சில பல ஆண்டுகள் ஆஸ்தான வித்வானாக எழுந்தருளி இருந்தார். அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு ஏகாந்த வாஸத்துக்காக வில்லூருக்கே எழுந்தருளிவிட்டார்.
அப்பொழுது ஸ்ரீபாஷ்யத்தினை ஸ்ருதப்ரகாஸிகையுடன் சிந்தனை செய்ய வாய்ப்பாக ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமியின் பிதாமஹரின் திருத்தகப்பனார் ஆன அதாவது ப்ரபிதாமஹரான ஸ்ரீ(நீலமேக) தாதாசார்ய ஸ்வாமியைச் சிந்தனாசார்யராக வரித்தார். ஸ்ரீதாதாசார்ய ஸ்வாமியும் பிதாமஹனாரின் ப்ரார்த்தனையை ஏற்று நாவல்பாக்கத்திலிருந்து வில்லூருக்கு எழுந்தருளி அங்கேயே சிலகாலம் தங்கிச் சிந்தனை செய்வித்தருளினார் என்று அடியேன் திருத்தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மேற்படி ஸ்ரீதாதாசார்ய ஸ்வாமியின் திருக்குமாரராக 1890-ல் அவதரித்தருளியவர் ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமியின் பிதாமஹரான ஸ்ரீமதுபயவே. திநச நாராயணார்ய மஹாதேஸிக ஸ்வாமி. இந்த மஹான் ஸோமயாகம் அனுஷ்டித்து நித்யாக்னிஹோத்ரியாக எழுந்தருளி இருந்தார். யஜ்வா ஸ்வாமி என்றே இவரைக் குறித்திடுவது மரபாக இருந்தது.
ஸ்ரீமதுபயவே யஜ்ஞம் ஸ்வாமிக்கும் அடியேனுடைய தங்கைக்கும் 1971-ல் திருமணம் நடந்தது. அதற்கு முன்பேயே 1962 முதல் பலமுறை யஜ்வா ஸ்வாமியை அடியேன் தண்டம் ஸமர்ப்பிக்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது. அப்பொழுதெல்லாம் அவர் தாம் இளமையில் கீழ்த் திருப்பதியிலே வ்யாகரணம் பயின்றதையும், இரவில் ஒளிக்காகக் கோயிலுக்குச் சென்று அங்கு புஸ்தக-அவலோகனம் செய்ததையும், அப்பொழுது யாத்திரையில் அங்கு ஒருநாள் எழுந்தருளி இருந்த அடியேன் பிதாமஹர் அவரை இன்னார் என விசாரித்து அறிந்து கொண்டு மகிழ்ந்து, அவரை அவர் வைத்துக் கொண்டிருந்த வ்யாகரண ஸ்ரீகோணத்தில் உள்ள விஷயங்களிலே சில கேள்விகளைக் கேட்டதையும், அவர் இறுத்த விடைகளைக் கேட்டுத் திருவுள்ளம் உகந்தருளிப் பாராட்டி ஆமீர்வதித்தருளியதையும் நினைவுகூர்ந்து அருளாமல் இருந்ததில்லை.
(vii)
1968-71 கால கட்டத்திலேயே நம் ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமி தமது ஆசார்யரான பிதாமஹரின் திருவடிவாரத்தில் அவரைப் பற்றி தண்டகம், சக்ரபந்தம் எனப் பலவகைக் கவிதைகளை இயற்றி அசத்திக் கொண்டுதான் இருந்தார்.
ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமியின் மாதாமஹர் ஸ்ரீமதுபயவே. மதுராந்தகம் வீரராகவார்ய மஹாதேஸிக ஸ்வாமியின் Uஸுபமான ஸங்கல்பத்தாலும், திருவருளாலும் மற்றும் நாவல்பாக்கம் ஸ்ரீஅய்யாவாத்து ஸ்வாமி ஸ்ரீதேவநாத தாதார்ய மஹாதேசிக ஸ்வாமியின் அருளாஸிகளாலும் அடியேன் தங்கைக்கும் ஸ்ரீமதுபயவே யஜ்ஞம் ஸ்வாமிக்கும் 1971-ல் திருமணம் நடந்தேறியது.
ஆஸுகவி ஸார்வபௌமரான அடியேனுடைய திருத்கப்பனாரின் ப்ரோத்ஸாஹத்தினால் யஜ்ஞம் ஸ்வாமியின் கவிதை மேலும் மெருகேறியது. அதனை ஸ்ரீமதுபயவே யஜ்ஞம் ஸ்வாமியே அடியேன் திருத்கப்பனாரின் ஸப்ததியின்போது அவர் ஸமர்ப்பித்த ஸப்ததி ஸப்தகத்தின் முதல் ஸ்லோகத்தில் கூறுவதைப் பாருங்கள்;
யஸ்மின் வாஜ்யாஸ்யவீக்ஷாSதிகதரஸுபகா பண்டிதைய்ய்லாக்யமானா யஸ்யாஸுத்வம் கவித்வே ப்ரதிதமஜனயத் ஸார்வபௌமேத்யுபாதிம் । யஸ்ய ப்ரோத்ஸாஹனேன ப்ரகுணித-கவிதா-பாடவா மத்ஸத்ருக்ஷா: ஸ்ரீநித்யாக்யோ விபஸ்சித் ஸ ஜயதி ஸுதராம் ஸப்ததௌ ஸத்ததீட்ய: II
ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமியின் கவிதைகளின் சீர்மையையும் ஏற்றத்தையும் காணும் போதெல்லாம் அடியேனுக்குப் பொறாமையும் வரும். பெருமிதமும் வரும். திருத்தகப்பனார் அந்த ஸ்வாமிக்குத் தமது குமாரத்தியுடன் கூடத் தனது கவிதைத் திறனையும் தானம் செய்து கொடுத்துவிட்டாரோ என்று கூட ஒரு ஸமயம் தோன்றும்.
“ப்ரதிபிம்பலஹரீயை அச்சுப்போடும் ஸமயத்தில் எமது பேரன் தவிக்க நேரிடலாம் அப்பொழுது உமது பேரன் உதவிட வேண்டும்” என்று அடியேன் பிதாமஹர் ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமியின் பிதாமஹருடன் வானுலகில் கலந்துகொண்டு ஆஸீர்வதித்தருளியிருக்க வேண்டும். அதனால் தான் இந்தப் பதிப்புக்கு ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமி இப்படி ஒப்பற்ற ஒரு முக்யமான உபகாரத்தைச் செய்திருக்கிறார் என்றே அடியேன் நம்பிடுகிறேன்.
ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமியின் பிதாமஹரான யஜ்வா ஸ்வாமிக்கு அருளிச்செயலில் இருந்த ஈடுபாடும் அடியேனுடைய சொற்களால் வருணிக்க முடியாத ஒன்று. நாவல்பாக்கம் உத்ஸவப் புறப்பாடுகளில் பொதுவாக அருளிச்செயல் கோஷ்டீயைத் தொடங்கி வைத்துவிட்டுப் பின்னரே வேதபாராயண கோஷ்டீக்கு எழுந்தருளியாகும். திருமடல் போன்றவைகளின் பாராயணம் என்றால் அவைகளை அனுஸந்தித்து அனுபவித்திட முன் கோஷ்டீயிலேயே எழுந்தருளியாகும். எனவே ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமியின் இந்தக் கைங்கர்யம் யஜ்வா ஸ்வாமியின் திருவுள்ளத்துக்கு மிகவும் உகந்ததாயிருக்கும்.
(viii)இதை எல்லாம் அனுஸந்தித்து அடியேனுடைய பிதாமஹரைத் தான் வணங்கி, வருவதாக ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமி யாத்து அளித்துள்ள ஸ்லோகத்தைப் பாருங்கள்:-
ப்ராசார்யஸ்ய மம ப்ரபாவவிதயம் ப்ராபய்ய தம் ஸ்வம் புரம் ப்ராராத்யாதரத: ப்ரக்ருஷ்டவசஸாம் ப்ராபார்த்தஸஞ்சிந்தனம் I ப்ராஜ்ஞோஸாவிதி ஸத்ப்ரஸம்ஸநவச: ப்ராஹாஸக்ருன்மே குரு: ப்ராஞ்சம் ஸேஷகுரும் ப்ரணாமாதகம் ப்ராப்னோது தாஸஸ்ய மே II
இதனை அடியேன் 1983-ல் வெளியிட்ட திருத்தகப்பனாரின் ஸப்ததி மலரில் மஞ்ஜு ராமாயணத்திற் ஸ்ரீ யஜ்ஞம் ஸ்வாமி ஸமர்ப்பித்த பூமிகையில் காணலாம்.
ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமிக்குத் தலையல்லால் கைம்மாறு இல்லாத அடியேன் அவருக்குப் பல்லாண்டு இசைத்து அந்த ஸ்வாமி மேலும் மங்களங்களைப் பெற்றுப் பொலிய வேண்டும் என்று அடியோங்கள் குடிலின் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீஸ்வர்ண லக்ஷ்மீதர நவநீதநட ஸ்வாமியின் திருவடிகளில் ப்ரார்த்திக்கிறேன். - நன்றி நவிலல்
அதுபோலவே இக்கைங்கர்யத்தில் அடித்தளம் அமைத்து மஹோபகாரம் செய்து உதவிய மருத்துவ டாக்டர் ஆயுஷ்மான் வேங்கடேஷிற்கு மேன்மேலும் மங்களங்கள் நிறைய அடியேனின் ஆகள். அப்படியே இக்கைங்கர்யத்தில் ஆர்வத்துடன் பணிசெய்ய முன்வந்த அடியேனுடைய பாகினேயன் ஆயுஷ்மான் டாக்டர் சிலுக்கூர் எஸ். லக்ஷ்மீநரஸிம்ஹனுக்கும் மேன்மேலும் மங்களாபிவ்ருத்தி ஏற்பட அடியேனுடைய ஆஸிகள்.
ப்ரதிபிம்பலஹரீயின் எட்டாம் பத்து வரை ஆகிய முதல் ஐந்து ஸஞ்சிகைகள் ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலமாகவே வெளியிடப்பட்டு வந்தள்ளன. ஆனால் தற்பொழுது அந்த தர்மஸ்தாபனம் அதன் முக்யச் செயலான ஸ்ரீநடாதூரம்மாள் திருநக்ஷத்ர வார்ஷிக ஸ்ரீபாஷ்ய வித்வத் ஸதஸ்ஸை நடத்திடவே ஸ்ரமப்படும் பொருளாதார நெருக்கடியில் உள்ளபடியால் அடியேனுடைய ஸப்ததியின் பொழுது அமைக்கப்பட்ட குழு ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டுக்கு இந்த ஸஞ்சிகையை வெளியிடத் தேவையான நிதியுதவி செய்திட முன்வந்தது. அதற்காகத் தங்கள் இஷ்ட உபயோகத்துக்காக நானூறு ப்ரதிகள் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டின் ஒப்புதலைத் தெரிவித்து இந்த நூலை ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டின் வெளியீடாக ஆக்கி ஆட்கொண்ட ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டின் மானேஜிங் டிரஸ்டியான ஸ்ரீமதுபயவே. வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம் சேஷாத்ரி என ப்ரஸித்தரான ஸ்ரீமதுபயவே. வேங்கடக்ஷேஷார்ய மஹாதேசிக ஸ்வாமியின் திருவடித் தாமரைகளில் நன்றிகலந்த நல்வணக்கங்களை ஸமர்ப்பித்து தன்யனாகிறேன்.
ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமி ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி ஸாஹித்ய வ்யாகரண வாசஸ்பதி.
(ix )
ஸ்ரீவேங்கட ஷோர்ய மஹாதேஸிக ஸ்வாமியின் மூத்த திருப்பேரர். அடியேனுக்கு மூத்த திருத்தமையனாரான இந்த ஸ்வாமி அடியேனைத் திருத்திப் பணிகொண்டு மகிழ்பவர்.
ப்ரதிபிம்பலஹரீயுடன் பிதாமஹர் ஸங்கதி மணி மாலா என்ற தலைப்பில் ஒவ்வொரு திருவாய்மொழியின் தொடக்கத்திலும் ஒரு ஸ்லோகம் திருவாய்மொழிகளின் தொடர்ச்சியினைக் காட்டிடும் வகையில் அருளத் தொடங்கி இருந்தார். ஆனால் அந்த நூல் முதல் பதினோரு திருவாய்மொழி வரை தான் கிடைத்தது. “மீதித் திருவாய் மொழிகளுக்கு நீயே ஸங்கதி மணி மாலாவை எழுதிடு" என்று திருத்தகப்பனார் நியமித்தருளியபடி அடியேன் 89 திருவாய்மொழிகளுக்கான 89 ய்லோகங்களை எழுதி நிறைவு செய்துள்ளேன். அப்பொழுதைக்கப்பொழுது அந்த ய்லோகங்களைக் கடாக்ஷித்து விமர்சித்துப் பாராட்டி உத்ஸாஹப்படுத்தி அருளியவர் இந்த ஸ்வாமி. இவருக்கும் அடியேன் தலையல்லால் கைம்மாறு கண்டிலேன்.
இந்த ஏற்பாடு மூலம் நிதி உதவி செய்த VKSCC எனச் சுருக்கமான ஆங்கிலப் பெயரினை உடைய ஸப்ததிக் குழுவிற்கும் அடியேனின் நன்றிகள். - ஸ்ரீபத்மநாப கடாக்ஷ நக்ஷத்ரமாலா மற்றும் பொழிப்புரை
திருவனந்தபுரத்திலே ஸ்ரீமதுபயவே. கோபாலஸமுத்ரம் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம் ஸ்ரீநிவாஸஷோர்ய மஹாதேசிக ஸ்வாமியின் திருநக்ஷத்ரமான ஆனி க்ருத்திகையை ஒட்டி ஒரு வித்வத் ஸதஸ் 1998 முதல் அடியேன் மூலமாக அதற்கென்று அவருடைய தர்மபத்னீ மாதுஸ்ரீ ஜயலக்ஷ்மீ அம்மங்கார் ஏற்படுத்திய அறக்கட்டளையின் நிதியைக் கொண்டு நடந்து வருகிறது. (கொரானா கெடுபிடியால் சென்ற ஆண்டு மட்டும் ஸ்ரீரங்கத்திலே நடந்தது. இந்த ஆண்டும் அதே நிலை தான் என்பது வேறு விஷயம்).
2017-ஆம் ஆண்டு மஹாமஹோபாத்யாய வேதபாஷ்ய ரத்னம் தர்ஸனகலாநிதி ராஷ்ட்ரபதி ஸம்மானித முல்லைவாசல் ப்ரஹ்மஸ்ரீ க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள் அடியேன் அழைப்பினை ஏற்று அதிலே பங்கேற்கச் சென்னையிலிருந்து தமது ஸ்ரமத்தைக் கணிசியாது திருவனந்தபுரம் வந்தார்.
ப்ரதிபிம்பலஹரீயின் கர்த்தாவான அடியேன் பிதாமஹர் திருவனந்தபுரம் பத்மனாபன் விஷயமாக ஸ்ரீபத்மனாப கடாக்ஷ நக்ஷத்ரமாலா என்ற துதியையும் அருளியுள்ளார். இதன் மூலத்தினை மட்டும் அடியேன் தேவநாகரீ லிபியில் திருத்தகப்பனாரின் ஸப்ததியை ஒட்டி 1983-ல் வெளியிட்ட மலரிலே அச்சிட்டிருந்தேன்.
திருவனந்தபுரம் ஸதஸ்ஸிற்கு வந்த பரம ரஸிகரான ஸ்ரீக்ருஷ்ணமூர்த்தி Uஸாஸ்த்ரிகளிடம் அதைக் காண்பித்தேன். அதைக் கண்டு பரவரான அவர் அதற்குத் தாமே தமிழில் ஒரு சுருக்கமான பொழிப்புரை எழுதித் தருவதாக ஆர்வத்துடன் முன் வந்தார்.
(x) - ஆராவமுதாழ்வானும் அனந்தபுரத்தாதியும்
திருவாய்மொழி பத்தாம் பத்தின் இரண்டாம் பதிகமான கெடுமிடராய எல்லாம் என்பதிலே ஆழ்வார் திருவனந்தபுரத்தினை மங்களாஸனம் செய்கிறார். அப்பதிகத்தில் எட்டாம் பாசுரத்திலே வரும்;
படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக்கறியச்சொன்னோம்
என்ற அடிகள் நம் ஸம்ப்ரதாயத்தின் நிலையையே மாற்றி அமைத்தவை. எப்படி?
ஆளவந்தார் மணக்கால் நம்பிகளிடம் பயில்கையில் பக்தியோகம் பற்றியும், அதிலே கிடைக்கும் அனுபவம் பற்றியும், மணக்கால் நம்பி விவரித்தருளினார். ஆளவந்தாருக்குப் பக்தியோகம் செய்து அந்த அனுபவத்தையும் பெறவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. பக்தியோகம் செய்யும் முறையை உபதேசம் செய்தருள வேண்டும் என மணக்கால் நம்பிகளிடம் வேண்டினார்.
“எனது ஆசார்யரான உய்யக்கொண்டார், நாதமுனிகள் பக்தியோகம் செய்யும் முறையை உபதேஸிக்க முன்வந்தபோதும் தனக்கு அனைவருக்கும் உரிய ப்ரபத்தி நெறியே போதும் பக்தியோகம் செய்யும் முறை தெரியவேண்டா என்று மறுத்து விட்டார். அதனால் அவருக்கு பக்தியோகம் செய்யும் முறை உபதேயம் ஆகிடவில்லை. எனக்கும் அதனால் அம்முறை உபதேம் ஆகிடவில்லை. நாதமுனிகளிடம் பக்தியோகம் செய்யும் முறையைக் கற்று அதனை அனுஷ்டித்து வரும் திருக்குருகைக் காவலப்பன் பக்கல் சென்று உபதோம் பெற்றிடலாம்” என்றார் நம்பிகள்.
திருக்குருகைக் காவலப்பனை நாடிச் சென்றார் ஆளவந்தார். தை மாதப் புஷ்யத்தில் அபிஜித் முஹூர்த்தத்தில் தான் வைகுந்தம் போகப் போவதாகவும் அன்று காலை வந்தால் பக்தியோகம் செய்யும் முறையை உபதேஸம் செய்வதாகவும் திருக்குருகைக் காவலப்பன் அருளினார். அந்த நாளை ஒரு சிறுமுறியில் குறித்துக் கொண்டார் ஆளவந்தார். திருவரங்கம் மீண்டார்.
அங்கு அத்யயனோத்ஸவம் நடந்து கொண்டு இருந்தது. ஆளவந்தார் அதனை ஈடுபாட்டுடன் ஸேவித்துக் கொண்டிருந்தார்.
இராப் பத்துப் பத்தாம் திருநாள் :
அரையர் :
கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை இடவகை கொண்டதென்பர், எழிலணி யனந்தபுரம் படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக்கறியச்சொன்னோம்.
(xi )
என்ற பாசுரத்துக்கு அபிநயம் காட்டுகையில் திருவனந்தபுரம் திசை நோக்கி நாலைந்து அடிகள் நடப்பதாக அபிநயம் செய்தார்.
(காலப்போக்கில் அரையர்கள் அபிநயத்துக்கு என்று தேர்ந்தெடுத்துக் கொண்ட பாடல்கள் மாறி விட்டன போலும்! தற்போது இப்பாட்டுக்கான அபிநயம் அரையர் ஸேவையில் இடம் பெறுவதில்லை.)
இதனைக் கண்ட ஆளவந்தார் மனதில் ஆழ்வார் “நமர்களாகில், நீங்கள் திருவனந்தபுரத்து எம்பெருமான் பாதம் பணிந்தவராக இருக்க வேண்டும்” என்று அறிவித்தருளுகிறார் என்ற எண்ணம் ஓர் மின்னல் எனத் தோன்றியது. உடனேயே திருவனந்தபுரம் நோக்கிக் கிளம்பிச் சென்றார். அங்கு பத்மனாபனை ஸேவித்து மகிழ்கையில் திருக்குருகைக் காவலப்பன் குறித்த நாள் பற்றி நினைவு வரத் தான் வைத்திருந்த அம்முறியை எடுத்துப் பார்த்தார். அன்று தான் அந்த நாள்!
திருவனந்தபுரத்திலிருந்து திருக்குருகைக் காவலப்பன் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு அன்றைய நாளிலேயே செல்ல வேண்டும் என்றால் ஒரு புஷ்பக விமானம் இன்றி இயலாது. திருக்குருகைக் காவலப்பன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிட, பக்தியோகம் செய்யும் முறை அவருடன் முடிந்து விட்டது.
உய்யக்கொண்டார் நாதமுனிகளிடம் உபதேயமாகப் பெற்று மணக்கால் நம்பிக்கருளி அவர் ஆளவந்தார்க்கு அருளி அவருடைய சீடர்களிடமிருந்து எம்பெருமானார் பெற்ற அனைவருக்கும் பொதுவான அடைக்கல நெறியே இப்பொழுது நடைமுறையிலே உள்ளது.
இதனால் ப்ரபன்ன ஜனஸந்தான கூடஸ்தரான நம்மாழ்வார் அனுஷ்டித்த “அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைவருக்கும்” பொதுவான எளிய ப்ரபத்திநெறியே போட்டி இன்றித் தனி அரசாக இன்று திகழ்கின்றது.
ஆளவந்தார் திருக்குருகைக் காவலப்பன் பக்கலில் பக்தி யோகரஹஸ்யத்தைப் பெற்று அதை ப்ரசாரத்துக்குக் கொண்டு வந்திருந்தால், நம்மில் சிலர் அசட்டுத் துணிச்சலுடன் அரிய அவ்வழியில் இழிந்து தவிக்கும் நிலை கூட வந்திருக்கும்.
அதனால் ஆழ்வாரின் அருளிச் செயலைக் காத்தருளிய ஆராவமுதாழ்வைனைப் போல, ஆழ்வாரின் ப்ரபத்தி நெறியைத் தனி அரசாகச் செங்கோல் ஓச்சச் செய்து காத்தவன் அனந்தபுர ஆதி என்றால் மிகை ஆகாது. அவனை மங்களாசாஸனம் செய்ய ஆளவந்தார் யாத்திரை சென்றதால் தானே அவருக்கு பக்தியோக ரஹஸ்யம் கிடைக்காது போயிற்று.
எனவே அவனைப் பற்றிய ஸ்ரீபத்மனாப கடாக்ஷ நக்ஷத்ரமாலாத் துதியையும் மஹாமஹோபாத்யாய ஸ்ரீக்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகளின் பொழிப்புரையுடன் இதே ஸஞ்சிகையிலே வெளியிட்டுள்ளேன். இந்த அழகிய பொழிப்புரையைத் தாமே முன்வந்து
(xii)
எழுதிக் கொடுத்த ஸ்ரீக்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகளுக்கு அடியனுடைய க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக்கொள்கிறேன். - அச்சகத்துக்கு நன்றி
இந்த ஸஞ்சிகையைப் பலமுறைகள் ப்ரூப் தந்து பிழைகளே இல்லை என்று சொல்லும்படி மிக அழகான முறையிலே அச்சடித்துக் கொடுத்த RNR அச்சகத்தின் உரிமையாளர் ஸ்ரீமான் ராஜன் தொடங்கிப் பணியிலே ஈடுபாட்டுடன் அங்குப் பணிபுரியும் ஒவ்வோர் ஊழியருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்களை நல்கி நிறைவு பெறுகிறேன். அடியேனுடைய P.A. ஆன ஸ்ரீமான் கனஷ்யாம் அவர்களும், ஸாரதியான ஸ்ரீமான் P. ஸுதாகர் அவர்களும் ப்ரூபைக் கொண்டுவரல், பிறகு அச்சகத்தில் சேர்த்தல் என்ற பல துறைகளில் மிகவும் உதவி செய்துள்ளார்கள் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக. - முகப்பு அட்டைப் படமும் மற்றைய படங்களும்
திருக்குடந்தையில் அக்ஷய த்ருதீயைப் பொன்னாளில் காலையில் உலகப் ப்ரஸித்தமான பன்னிரண்டு கருடஸேவை நடைபெறுகின்றது அல்லவா ? அது நிறைந்த பிறகு ஸ்ரீஆராவமுதாழ்வான் தமது திருக்கோயிலுக்கு மீண்டு உச்சிக்காலத் திருவாராதனம் கண்டருளிடுகின்றான்.
அதற்கப்புறம் பெரிய கடைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராஜகோபாலஸ்வாமி கோயிலுக்கு எழுந்தருளிடுகிறான். அங்கு ஸ்ரீராஜகோபால ஸ்வாமியும் மற்றும் அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஸந்தான வரததேஸிகன் திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீநடாதூர் அம்மாளும் உடன் திகழ, மண்டபாராதனம் கண்டருளி இரவு பத்து மணி அளவில் தனது திருக்கோயிலுக்கு மீள்கிறான்.
இந்த நிகழ்ச்சி தற்பொழுது அடியேன் மற்றும் அடியேனுடைய தமையனார் முறையினரான ஸ்ரீ உ.வே. வில்லூர் நடாதூர் க்ருஷ்ணமாச்சார்ய ஸ்வாமியின் குமாரனான சிரஞ்ஜீவி வில்லூர் நடாதூர் வரதராஜன் ஆகிய இருவரும் இணைந்து செய்யும் மண்டகப்படியாக நடந்து வந்து கொண்டிருக்கும்படி ஸ்ரீஆராவமுதாழ்வான் ஸங்கல்பம் செய்தருளியிருக்கிறான்.
ஸந்தான வரததேஸிகன் திருக்கோலத்தில் திகழும் ஸ்ரீநடாதூர் அம்மாள் என்ற தொடர் நம் ஸம்ப்ரதாயத்தில் நடந்த ஓர் அத்புதமான நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்தது.
ஸ்ரீராமானுஜரின் இளைய தங்கை கமலா அம்மங்கார். அவருடைய திருக்குமாரர் ஸ்ரீநடாதூர் ஆழ்வான். ஸ்ரீராமானுஜர் தமது மருமகனான இவருக்குத் தமது ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனத்தை அருளி ஸ்ரீபாஷ்யத்தைப் ப்ரவசனம் செய்யும் கடமையையும்
(xiii)
அளித்தருளிய வரலாற்றைத் தொன்மையான திருவாறாயிரப்படி முதலான அனைத்து குரு பரம்பரைகளும் பதிவு செய்துள்ளன.
மேற்படி நடாதூர் ஆழ்வானின் திருப்பேரர் ஆக அவதரித்தருளியவர் ஸ்ரீநடாதூர் அம்மாள். அவர் சில காலம் திருக்குடந்தையில் தங்கி இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வாழ்ந்த கந்தளன் என்ற அந்தணனைப் பிடித்த பேயை விரட்டிடத் திருக்குடந்தையில் காட்சி தரும் ஸ்ரீசக்ரபாணிப் பெருமாளாகிற சக்ரத்தாழ்வானைப் பற்றி ஹேதிபுங்கவஸ்தவம் என்ற துதியினை அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீசக்ரபாணிப் பெருமாளாகிற சக்ரத்தாழ்வானுடைய கருணையால் அப்பேயை விரட்டி அந்த அந்தணனைக் காத்தருளியிருக்கிறார். இவ்வரலாற்றை ஸ்ரீநடாதூர் அம்மாள் சரித்ரத்தைக் கூறும் வரததேஸிகாப்யுதயம் போன்ற நூல்களில் நாம் காண்கிறோம்.
பின்னர் ஸ்ரீநடாதூர் அம்மாள் காஞ்சீயில் தேவப்பெருமாளுடைய ஸந்நிதியின் கிழக்குப் ப்ராகாரத்தில் ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பகவத்விஷயம் ஆகிய க்ரந்தங்களை பலருக்குக் காலக்ஷேபமாக ஸாதித்து வந்தார். அந்த காலக்ஷேப கோஷ்டியில் கிடாம்பி அப்புள்ளாரும் ஒருவராக இருந்து ஸ்ரீநடாதூர் அம்மாள் திருவடிவாரத்தில் பயின்று வந்தார்.
ஒருநாள் அவர் தமது ஸஹோதரீ தோதாரம்மங்காருடைய குமாரனாக அவதரித்திருந்த ஸ்வாமி தேஸிகனையும் அழைத்துக் கொண்டு கோஷ்டியை ஸேவிக்க வந்திருந்தார். ஐந்து வயது பாலகனான தேசிகனைக் கண்டு “அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல்?” என்று கோஷ்டியே வியந்தது.
அதன் பிறகு காலக்ஷேபம் தொடர்கையிலே விட்ட இடம் கோஷ்டியிலே யாருக்குமே உடனேயே நினைவுக்கு வரவில்லை. அப்பொழுது மழலைப் பருவத்து தேஸிகன் அதனை நினைவு கூர்ந்து சொல்லவே, மிகவும் மகிழ்ந்த ஸ்ரீநடாதூர் அம்மாள் மழலைப் பருவ தேசிகனை எடுத்து வாரி அணைத்து மடி மீதமர்த்தி ஆசிகளை அருளி இருக்கிறார். இப்படி அம்மாள் தமக்கு அருளிய ஆபிகள் தாம் தம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்ததாக ஸ்வாமி தேஸிகனே தமது நூல்களில் பல இடங்களிலே நன்றியுடன் பதிவு செய்துள்ளார்.
இப்படி பால தேலிகனைத் தமது மடி மீது அமர்த்தி ஆபி வழங்கி ஸ்ரீவைஷ்ணவ ஸந்தானத்துக்கு நல்லருள் செய்த திருக்கோலத்திலே திகழும் ஸ்ரீநடாதூர் அம்மாளையே ஸந்தான வரத தேஸிகன் என்று குறிப்பிடுகிறோம். இந்தத் திருக்கோலத்தில் ஸ்ரீராஜகோபாலன் ஸந்நிதியிலே ஸ்ரீநடாதூர் அம்மாள் ஸேவை ஸாதிக்கிறார்.
அக்ஷய த்ருதீயை தினத்திலே மாலையில் ஆராவமுதாழ்வான் பெரிய கடைத் தெருவிலே ஸ்ரீராஜகோபாலன் திருக்கோயிலிலே ஸ்ரீராஜகோபாலனுடனும் ஸ்ரீஸந்தான வரத தேரிகனுடனும் மண்டபாராதனம் கண்டருளும் காட்சியின் புகைப்படமே இந்நூலின் முகப்பட்டையிலே இடம் பெற்றுள்ளது.
(xiv)
இந்த ராஜகோபாலன் ஸந்நிதியின் முழு உரிமை அர்ச்சகராகத் திகழ்பவர் பாஞ்சராத்ர பாஸ்கரரான ஸ்ரீசக்ரபாணி பட்டாசார்ய ஸ்வாமி. இவர் தற்பொழுது ஸ்ரீஆராவமுதாழ்வான் ஸந்நிதியின் ப்ரதான பட்டாசார்யருமாவார். இவர் தான் அடியோங்களுடைய அக்ஷய த்ருதீயை மண்டகப்படியைச் சீரும் சிறப்புமாக நடத்தித் தந்து கொண்டிருக்கிறார். இந்த முகப்பு அட்டைப் புகைப்படமும் இவராலே தான் கிடைத்தது. இந்த உதவிக்கெல்லாம் இவருக்குத் தலையல்லால் கைம்மாறு இல்லாத நிலையிலே அடியேன் இருக்கிறேன்.
அது சரி. மேற்படிப் படத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
திருக்குடந்தையில் ஆண்டு தோறும் தை மாதப் பிறப்பு அன்று ரதோத்ஸவம் வரும்படியாக மார்கழி மாதம் இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்றாம் தேதியளவில் கொடியேறி ஸங்க்ரமணப் ப்ரஹ்மோத்ஸவம் நடைபெறுகின்றது. அதற்குத் தடங்கல் ஏதுமே இல்லாதபடி மார்கழி முதல் தேதி ஆன மார்கழித் திங்கள் தொடங்கிப் பகல் பத்து மார்கழிப் பத்தாம் தேதியான நோற்றுச் சுவர்க்கத்திலே நிறைவேறும். மார்கழிப் பதினொன்றாம் தேதியான கற்றுக்கறவையிலே தொடங்கி இராப்பத்து நடைபெறும்.
இராப்பத்தின் ஐந்தாம் திருநாள் அதாவது மார்கழியின் பதினைந்தாம் நாளான எல்லேயில் ஸ்தலப் பாசுரமான திருவாய்மொழி ஐந்தாம் பத்தின் எட்டாம் பதிகமான ஆராவமுதே விண்ணப்பம் ஆகும். அன்று அதற்காக நம்மாழ்வார் திருவடித் தொழல் ஒன்று நடைபெறும். இதற்காக அன்றைய தினம் கோமளவல்லீ நாச்சியாரும் ஸ்ரீதேவீ பூதேவீயும் உடன் எழுந்தருள ஸ்ரீஆராவமுதாழ்வான் பரமபதநாதன் திருக்கோலத்திலே ஸேவை ஸாதிப்பான். அந்த அத்புதமான ஸேவையின் புகைப்படமும் இந்நூலின் நிறைவிலே வெளியிடப்பட்டுள்ளது. தமது முக நூலிலிருந்து அப்புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து வெளியிட அனுமதி அளித்தவர் ஸ்ரீஆராவமுதாழ்வான் ஸந்நிதியின் முக்ய பட்டர்களுள் ஒருவரான ஸ்ரீஸௌந்தரம் பட்டர் ஆவார். அவருக்கும் அடியேனுடைய நல் வணக்கம் நிறைந்த நன்றிகள்.
ஆராவமுதே பதிகத்தில் ஆழ்வார் ஸ்ரீஆராவமுதாழ்வானிடம் :-
களைவாய்துன்பம் களையாதொழிவாய், களைகண் மற்றிலேன் * வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!* தளரா வுடலம் எனதாவி, சரிந்து போம் போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத, இசை நீயே.
என்று வேண்டியபடி, அர்ச்சிராதிகதியினை வருணிக்கும் ஆழ்வார் தனது தாளைப் பிடித்துப் போத வாய்ப்பாக ஸ்ரீஆராவமுதாழ்வான் ராஜகோபாலனாக அவருக்குக் காட்சி
( XV )
அளித்திருக்கிறான் போலும்! எனவே தான் ஆழ்வார் அர்ச்சிராதி கதியை வருணிக்கும் பத்தாம் பத்தின் ஒன்பதாம் திருவாய்மொழியான சூழ்விசும்பிலே ஏழாம் பாசுரத்திலே;
மடந்தையர் வாழ்த்தலும், மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும், தோத்திரம் சொல்லினர்*
தொடு கடல் கிடந்த எங்கேசவன், கிளரொளி மணிமுடி
குடந்தை எங்கோவலன், குடியடியார்க்கே.
என்று அருளிச் செய்கிறார் போலும்.
சாந்தோக்ய உபநிஷத் முதலிய உபநிஷத்துக்களும் ஆழ்வாரும் வருணித்தருளிய அர்ச்சிராதி கதியை யரணாகதர்கள் நித்யம் சிந்தனை செய்திட வேண்டும். இதற்குப் பாங்காகப் பரமார்த்த ஸ்லோக த்வயம் என்ற தலைப்பில் இனிய இரண்டு பல்லோகங்களால் இதனைக் காட்டிய வள்ளல் ஸ்ரீநடாதூர் அம்மாள்.
அதனையே விவரித்து மணிப்ரவாள நடையிலே ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரயஸாரம், பரமபதஸோபானம் முதலிய ப்ரபந்தங்களில் அருளியவர் அம்மாளின் இன்னருளை இளமையிலேயே பெற்ற ஸ்வாமி தேசிகன்.
ஸ்வாமி தேஸிகனாகிய ப்ரஸிஷ்யனுக்குத் திருவருள் செய்யும் அவருடைய பரமாசார்யரான ஸ்ரீநடாதூர் அம்மாள் உடன் திகழ ராஜகோபாலனுடன் காட்சி அருளும் ஸ்ரீஆராவமுதாழ்வானை மங்களாஸனம் செய்வது போல உள்ளது பத்தாம் பத்தில் வரும்
குடந்தை எங்கோவலன், குடியடியார்க்கே
என்ற துணுக்கு. அதற்கு ஏற்ப இந்த ஒன்பது மற்றும் பத்தாம் பத்துக்குரிய ப்ரதிபிம்பலஹரீயின் முகப்பு அட்டைப் புகைப்படம் அமைவது பொருத்தமானது தானே!
ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த அடியேனுடைய பிதாமஹருக்கு உரிய ஒரு சிறு நிலப்பரப்பு வில்லூர் ஸ்ரீக்ராமத்திலே ஸ்ரீராஜகோபாலக்ருஷ்ண ஸ்வாமியின் திருக்கோயிலுக்குப் பின்புறத்திலே அமைந்துள்ள திருக்குளத்துக்கும் திருகோயிலுக்கும் இடையே உள்ளது. அங்கு ஒரு தோட்டம் போட்டிருந்தார் பிதாமஹர். ப்ரதி வர்ஷமும் பங்குனி மாதம் ப்ரஹ்மோத்ஸவம் ஒன்பதாம் திருநாளில் திருத்தேர் நிலைக்கு வந்தவாறே பெருமாள் திருக்குளத்துக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வார். பிறகு திரும்புகாலில் பிதாமஹரின் தோட்டத்துக்கு எழுந்தருளி அங்கு போடப் பட்டிருக்கும் பந்தலில் மண்டபாராதனம் கண்டு பிறகு திருக்கோயிலுக்கு எழுந்தருளிடுவார் என்று ஓர் ஏற்பாட்டைப் பிதாமஹர் செய்திருந்தார். அப்படிச் சில ஆண்டுகள் நடந்து வந்தது. பிறகு அது நின்று போய் விட்டது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
(xvi)
திருத்தகப்பனார் நியமனப்படி பிதாமஹர் மூலம் வந்த பரம்பரைச் செல்வங்ளை அவருடைய பேரர்களாகிய நாங்கள் நால்வரும் பிரித்துக் கொள்ளாமல் வில்லூர் ஆஸுஸுகவி குடும்ப அறக்கட்டளை (Villur Asukavi Family Trust) என்ற ஒர் அமைப்பில் கொண்டு வந்து விட்டோம். அது ஆங்கிலத்திலே VAFT எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது VAFT-ன் உடைமையாக்கப்பட்ட அந்நிலப் பரப்பில் ஒரு நிரந்தர மண்டபத்தை ஸஹோதரர்கள் நாங்கள் நால்வரும் சேர்ந்து கட்டினோம். நூறு ஆண்டுகளுக்கு மேலாக நின்று விட்ட அந்நிலப் பரப்புக்கு ஸ்ரீராஜகோபால க்ருஷ்ணஸ்வாமி எழுந்தருளும் உத்ஸவத்தை மீண்டும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கோயில் நிர்வாஹத்தினர் அதனை ஏற்றுக் கொண்டார்கள். தற்பொழுது ஸந்நிதி அர்ச்சகராகப் பணி புரியும் ஸ்ரீபேஷகோபாலன் ஸ்வாமியும் ஊர்ப் பெருமக்களும் ஒத்துழைக்க யார்வரீ ஆண்டு அதாவது 2021-ஆம் ஆண்டுக்கு உரிய பங்குனி ப்ரஹ்மோத்ஸவத்தில் ரோஹிணீ நாளில் தீர்த்தவாரி ஆனவுடன் திருக்குளத்திலிருந்து திரும்புகையில் பெருமாள் அந்த மண்டபத்திற்கு ஸ்ரீருக்மிணீ ஸத்யபாமா ஸமேதனாக எழுந்தருளி அனுக்ரஹித்தருளினான். பதினோராம் திருநாளில் தேர்த் தடம் பார்க்கும் யானை வாஹனத்திலும் மீண்டும் ஒருமுறை எழுந்தருளி அனுக்ரஹம் செய்தருளினான்.
அந்த இரு நிகழ்ச்சிகளைப் பற்றிய புகைப்படங்களையும் இந்நூலுடன் இணைத்துள்ளேன்.
ஆனாலும் இங்கே ஓர் அதியம் பாருங்கள்!
முப்பத்தைந்து ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வந்த ப்ரதிபிம்பலஹரீயின் வெளியீட்டின் நிறைவை அந்த மண்டபத்தில் எழுந்தருளி உகந்த உடனேயே ஸ்ரீராஜகோபாலக்ருஷ்ணஸ்வாமி அடுத்த நான்கு மாதங்களிலே நிறைவேற்றிவிட்டான். அதனால் அவனுக்கும், அவனுடைய திருக்கோயில் நிர்வாஹத்தினருக்கும், அவன் அர்ச்சகரான ஸ்ரீபேஷகோபாலன் அவர்களுக்கும், காஞ்சீபுரத்திலிருந்து வந்து உத்ஸவத்தை நடத்தியருளிடும் ஸ்ரீதேவப்பெருமாளின் பட்டாச்சார்யர் ஆன இவ்வூர் தௌஹித்ரர் ஸ்ரீமதுபயவே ஸ்ரீவத்ஸ பட்டருக்கும், மற்றும் வில்லூர் எம்பெருமானுடைய அடியார்களான ஸ்ரீமான்கள் ஸ்ரீதரன் ஸ்வாமி, ராஜாமணி ஸ்வாமீ முதலிய ஊர்ப்பெருமக்கள் அனைவருக்கும் அடியேனுடைய நன்றிகளும் நல் வணக்கங்களும். - ஸங்கமம் ஆகும் இடம்
இன்று நம் ஸம்ப்ரதாயத்திலே க்ரந்த சதுஷ்டயத்துக்கும் இவருக்கு இன்னாரிடம் இருந்து இதன் உபதேயம் வந்தது. அவருக்கு அன்னாரிடம் இருந்து இதன் உபதேரம் வந்தது என்று தொடர்ச்சியாக விரிவான ஜ்ஞானபரம்பரையின் அனுஸந்தானத்துடன் காலக்ஷேபம் நடத்தும் ஆசார்யர்கள் மிகக் குறைந்துவிட்ட நிலை ஏற்பட்டு விட்டது. ஆனாலும் அப்படி இந்தக் கொடிய
( xvii)
கலியிலும் குறை சொல்ல முடியாதபடிப் பாலைவனச்சோலைகள் போலத் திகழும் குருபரம்பரைகளை உருவாக்கியவர் ஸ்ரீமதண்ணயார்யமஹாதேஸிகன்.
நிகழும் ப்லவ வர்ஷம் ஆடி மாதம் 19-ஆம் தேதி (04-08-2021) புதன்கிழமை ஸ்ரீம்ருகபீர்ஷ நக்ஷத்திரத்தன்று அந்த மஹாஸ்வாமியின் 232-ஆவது திருநக்ஷத்ரம். (அன்றே நம் ஸ்ரீயஜ்ஞம் ஸ்வாமியின் ஆசார்யரும் பிதாமஹரும் ஆன யஜ்வா ஸ்வாமியின் 132-ஆவது
திருநக்ஷத்ரமும். ஸ்ரீமதண்ணயார்ய மஹாதேஸிகனே தான் நிலவுலகில்
க்ருஹஸ்தாஸ்ரமத்திற்கு உரிய அக்னி ஹோத்ரம், ஸோமயாகம் போன்றவைகளையும் அனுஷ்டித்து அக்னியில் திகழும் ஹயக்ரீவனை ஆராதிக்காது இழந்துவிட்ட குறைதீரத் தனது நூற்றாண்டு நிறைவில் மீண்டும் நாவல்பாக்கத்திலே தான் அவதரித்த அதே திருவம்பத்திலே அதே ஆடி ம்ருகபீர்ஷத்திலே யஜ்வா ஸ்வாமியாக அவதரித்து அக்னி ஹோத்ரம், ஸோமயாகம் முதலியவற்றை அனுஷ்டித்து நிறைவடைந்தாரோ என்று கூறும்படி யஜ்வா ஸ்வாமியின் அவதாரம் அமைந்தது என்பர் ஆன்றோர்.)
அப்படிப்பட்ட பொன்னாளில் இந்த நிறைவு ஸஞ்சிகையை ப்ரகாஸனம் செய்து ப்ரதிபிம்பலஹரீ வெளியீட்டை நிறைவு செய்து ஸ்ரீமதுபயவே. யஜ்ஞம் ஸ்வாமியின் ஆசார்யர்களின் திருமுடிகளும், அடியேனுடைய ஆசார்யர்களின் திருமுடிகளும் ஒன்றிடும் ஸ்ரீமதண்ணயார்யமஹாதேஸிகனின் திருவடித்தாமரைகளில் இதை அர்ப்பணித்து
தன்யனாகிறேன். - நிறைவு ஸ்லோகம்
[[99]]
“ஸ்ரீநிதி கருணா
अण्णयगुरुजन्मदिने पूर्णं कृत्वा प्रकाशयन् खगखे । प्रतिबिम्बलहर्यास्सन्मुद्रापणमस्मि धन्यजन्माऽहम् ॥
எண் 6, பாரதியார் தெரு, சிவகாமி நகர்,
கௌரிவாக்கம்,
சென்னை 600 073.
வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனம் Uஸாஸ்த்ரஸாஹிதீவல்லப ராஷ்ட்ரபதி ஸம்மானித
Dr. V.S. கருணாகரதாஸன், B.E.(Mechanical), M.A.(Sanskrit),Ph.D.,
கைத்தொலைப்பேசி எண் : 93839 46438
10-07-2021
(ஆஸ்தான வித்வான்,
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமம்)
"
( xviii)சாம்
ஸ்வாமி நம்மாழ்வார் - ஆழ்வார்திருநகரி
ஸ்ரீமதுபயவே வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி ஸாஹித்ய வ்யாகரண வாசஸ்பதி வேங்கடயேஷார்ய மஹாதேயிக ஸ்வாமி (1855-1934)
॥ sft: 11
॥ श्रीमते रामानुजाय नमः ॥
॥ प्रतिबिम्बलहरी ।
॥ अथ नवमं शतकम् ॥
॥ तत्र प्रथमं दशकम् ॥
திருவாய்மொழி – ஒன்பதாம் பத்து
ஒன்பதாம் பத்து – முதல் திருவாய்மொழி கொண்டபெண்டிர்
திருவாய்மொழிப் பாவகை - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
प्रतिबिम्बलहरीवृत्तम् - शार्दूलविक्रीडितम्
இத்திருவாய்மொழியில் காட்டப்படும் பண்பு - அனைவருக்கும் ஆபத்தில் உதவிடும் ஒரே உறவான தன்மை