+08

11 gft: 11
॥ श्रीम
रामानुजाय नमः ॥
திருவாய்மொழி - எட்டாம் பத்து
அதற்குரிய
ப்ரதிபிம்பலஹரீ
(ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு
சுலோகவடிவில்)
ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான். வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி
வேங்கடசேஷார்யமஹாதேசிகஸ்வாமி
அருளிச்செய்தது.
கௌரவப் பதிப்பாசிரியர்:
வில்லூர் நடாதூர் சாஸ்த்ர ஸாஹிதீவல்லப V.S. கருணாகரன், B.E.,(Mech.),M.A.(Sanskrit) (ஆஸ்தான வித்வான், ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம்)
வெளியிடுபவர்:
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு,
“ஸ்ரீநிதி”, 10, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம், சென்னை-600 073.
ஹேமலம்ப வர்ஷம், ஆவணி உத்திரட்டாதி (08-09-2017)
முதல் பதிப்பு 500 ப்ரதிகள்
ஆண்டு 2017
வெளியிடுபவர்:
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு, புத்தகம் கிடைக்குமிடம் : V.S. கருணாகரன், “ஸ்ரீநிதி கருணா”,
# 6, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம், சென்னை-600073. தொலைபேசி : 044 - 2278 0854 அலைபேசி : 093839 46438 ஈமெயில்
villur_karunakaran@yahoo.com
அச்சிட்டோர்:
ஆர் என் ஆர். பிரிண்டர்ஸ் நெ.19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி,
G60т6060т- 600 005.
044-2844 7071
626060: 100/-
॥ श्रीम
11 sft: 11
रामानुजाय नमः ॥
பதிப்பாசிரியனின் பணிவான விண்ணப்பம்
திருவாய்மொழி முழுவதையும் மிகவும் சீரிய முறையில் ஸம்ஸ்க்ருத சுலோகங்களாக மொழிபெயர்த்து அருளி, அவைகளை மணியான கையெழுத்துக்களில் க்ரந்தாக்ஷரத்தில் எழுதித் திருவாய்மொழிக்குப் பணிவிடை செய்தருளியவர் அடியேன் பிதாமஹரும் ப்ராசார்யருமான ஸ்ரீமதுபயவே வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி, வேங்கட சேஷார்ய மஹாதேசிக ஸ்வாமி (1855 A.D. - 1933 A.D.). இந்தக் கையெழுதுப் ப்ரதியைப் பல ச்ரமங்களுக்கிடையில் நிதி போலப் பாதுகாத்து, அதன் முதல் ஐந்து பத்துக்களை உரிய முறையில் அச்சிட ஆக்கமும், ஊக்கமும் அடியேனுக்கு அளித்து 1996ல் ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலம் வெளியிட்டருளினார் அந்த ஸ்வாமியின் திருக்குமாரரும் சிஷ்யரும் அடியேனுடைய ஆசார்யனும் திருத்தகப்பனாரும் ஆன ஸ்ரீமதுபயவே மஹாவித்வான் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி ஆசுகவி ஸார்வபௌம ஸ்ரீநிதி ஸ்வாமி என்றே ப்ரஸித்தரான ஸ்ரீநிவாஸ ராகவாசார்ய மஹாதேசிக ஸ்வாமி (1913 A.D. - 2001 A.D.). 2007ல் ஆறாம் பத்தையும் மற்றும் 2014ல் ஏழாம் பத்தையும் அடியேன் திருத்தகப்பனாருக்குப் பிறகு ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டின் ப்ரதான தர்மகர்த்தாவாகிய அடியேன் திருத்தமையனார் ஸ்ரீமதுபயவே. வித்வான் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம் சேஷாத்ரி என்று ப்ரஸித்தரான வேங்கடசேஷாசார்ய ஸ்வாமி அடியேனுக்கு வழிகாட்டியாக இருந்து ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலம் வெளியிட்டருளினார்.
இப்பொழுது எட்டாம் பத்து ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த ஸ்வாமியின் இரண்டாவது பௌத்ரரானவரும் மற்றும் அடியேனுடைய இரண்டாம் தமையனாருமான பாலகவி ஸ்ரீ உ.வே. ஸுந்தரராஜாசார்ய ஸ்வாமியின் சதாபிஷேக மஹோத்ஸவ தினமும் மற்றும் அடியேனுடைய 70ஆவது பிறந்தநாளுமான ஹேமலம்ப வர்ஷம் ஆவணி உத்திரட்டாதி (08-09-2017) அன்று ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலம் வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தகம் இவ்வடிவில் வருவதற்கு முதல்படியாக க்ரந்தாக்ஷரத்தில் இருந்து தேவநாகரீ லிபியில் படியெடுத்துக் கொடுத்து உதவி அருளியவர் ஸ்ரீமதுபயவே வித்வான் கொத்திமங்கலம் தேவனாதாசார்ய ஸ்வாமி. அந்த ப்ரதிகளை நன்கு பரிசீலித்துப் பரிஷ்கரித்து உதவியவர் அடியேனுடைய தங்கையின் கேள்வனாரும் ஸுப்ரஸித்த வித்வத் கவியுமான ஸ்ரீமதுபயவே மஹாவித்வான்
3
டாக்டர் கண்ணன் என்கிற யக்ஞம் ஸ்வாமி. இதன் ப்ரூபுக்களைத் தானே திருத்தி அடியேனுக்கு வழிகாட்டி இதனை ஸ்ரீநடாதுர் அம்மாள் டிரஸ்டின் வெளியீடாகக் கொண்டு வருபவர் ஸ்ரீமதுபயவே. வில்லூர் நடாதூர் சேஷாத்ரி என்கின்ற வேங்கட சேஷாசார்ய ஸ்வாமி. மற்றும் இதனில் தாத்பர்ய ரத்னாவலீ சுலோகங்களை இணைத்து மாத்ருகைகள் தயார் செய்ய உதவியது அடியேனிடம் ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், மற்றும் பகவத் விஷயம் காலக்ஷேபம் செய்துவரும் அன்பர் ஆயுஷ்மான் மாத்தூர் ப்ரவசன திலகம் உபயவே. Dr. N. உப்பிலி வேங்கடேஷ், M.B.B.S., C.C.E.B.D.M., M.B.A. (Asst. Surgeon, Govt. Hospital, Kodavasal).
இதை வெளியிட ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டிற்கு நிதி உதவி செய்த அன்பர் ஸ்ரீபரகால ஸ்வாமி திருவடி ஸ்ரீமதி ராதிகா அனந்தநாராயணன் மற்றும் ஸ்ரீமான் அனந்தநாராயணன் தம்பதிகள். இதனை மிகச் சீரிய முறையில் அச்சிட்டு உதவியவர்கள் RNR ப்ரிண்டர்ஸில் பணிபுரியும் அன்பர்கள் மற்றும் அதன் உரிமையாளர். இவர்கள் அனைவருக்கும் அடியேனுடைய நன்றி கலந்த வணக்கங்கள்.
இம்மலரின் பக்கங்களில் அடிக்குறிப்பில் “பாடாந்தரம்” என்று காட்டப்படுபவை பிதாமஹனாரின் கைப்பிரதியிலே அவரே காட்டியுள்ள மற்றைய பாடங்கள்.
பிதாமஹர் ஆசார்ய தண்டியின் “யதிபங்கோ ந தோஷாய” என்ற கொள்கையை ஏற்று சில சுலோகங்களில் வந்த யதிபங்கங்களைப் பொருட்படுத்தவில்லை. ஸ்ரீமத்வாசார்யருடைய கீதாபாஷ்யம் மங்கள சுலோகத்தில் பின்பகுதியில்
பரிபூர்ணம் குரூம்ச்சான் கீ – தார்த்தம் வக்ஷ்யாமி லேயத:
என்று உள்ளது. இதைப் பற்றி அவருடைய கீதாபாஷ்யத்திற்கு வ்யாக்யானம் ஆன ப்ரமேய தீபிகையில் ஸ்ரீஜயதீர்த்தர்
ந அத்ர யதிபங்கோ தோஷ: । தஸ்ய காவ்யவிஷயத்வாத் । சாஸ்த்ரே “ய உபாதிர் லகதி ஸாத் – யே ஸம்பந்த விசேஷணே” இத்யாத்யபியுக்த – வாக்யே தர்சனாத் II”
என்று கூறிப் போந்தார்.
4
ஸ்ரீ பிதாமஹனார் முதலில் வித்வான், பிறகே கவி. ஆனால் அடியேன் திருத்தகப்பனார் அந்த யதிபங்கங்கள் கவிதையில் தண்ணீர்த் துரும்பாக அமைவதால் அவைகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கருதுபவர். அவர் முதலில் கவி. பிறகு வித்வான். எனவே அவர்
‘அவைகளையும் மாற்றி அச்சிட வேண்டும்" என்று கருதினார்.
[[66]]
அடியேன் “பிதாமஹரின் பாடத்தை அப்படியே போட்டுவிட்டு யதிபங்கம் வராமல் இருக்கும் வழியை அடிச்குறிப்பில் காட்டலாமே” என்று விண்ணப்பம் செய்தேன்.
“இதுவே நேர்மையான வழி. அப்படியே செய்” என்று அருளினார். அடியேன் அப்படியே செய்து வந்தேன். இந்த வழியை ஸ்ரீமதுபயவே, மஹாவித்வான் உத்திரமேரூர் வாஸுதேவாசார்ய ஸ்வாமி போன்றவர்கள் வாய்விட்டும் பாராட்டினார்கள்.
இருந்தாலும் சிலர் “பிதாமஹருக்கு யதிபங்கம் வராது கவிதை இயற்றும் திறமை இல்லை என்று காட்டுவது போல நீ செய்யலாமா?” என்று விமர்சனம் செய்யலாம்.
ஆனாலும் அடியேனுடைய அணுகுமுறை திருத்தகப்பனாருடைய இன்னருளைப் பெற்றதாலும் அடியேன் முதல் ஆறு பத்துக்களிலும் அதே வழியை (அடியேன் விழித்துக்கொண்ட இடங்களில்) பின்பற்றி வந்திருப்பதாலும் அதையே இங்கும் பின்பற்றியுள்ளேன்.
அடியேன் யதிபங்கம் வராது இருக்கக் காட்டிய வழிகள் பிதாமஹனாரின் திருவருளாலேயே வந்தவை என்றும் அடியேன் உறுதியாக இருக்கிறேன். அதனால் அவருடை மேன்மைக்கு யாதொரு குறையும் இல்லை என்பது திண்ணம்.
இங்கேயே தாத்பர்ய ரத்னாவலீயில் ஏழாம் திருவாய்மொழிக்கு உரிய ஸ்வாமி தேசிகன் சுலோகத்திலேயே யதிபங்கம் “அதிகா-ருண்யதோ கோபபாவாத்” என்ற இடத்தில் வருகிறது. ஆனால் அதனில் அடியேன் ஒன்றும் செய்ய இயலாது. ஸ்ரீமதுபயவே. அபினவதேசிக உத்தமூர் ஸ்வாமி தாத்பர்ய ரத்னாவலீயில் பல இடங்களில் மாற்றங்களைக் காட்டி இருந்தாலும் இங்கே “யதிபங்கோ ந தோஷாய” என்ற முறையையே ஏற்று அதனை மாற்றியருளவில்லை என்பது வேறு விஷயம்.
5
இந்த எட்டாம் பத்தைப் போலவே மிகுந்துள்ள இரண்டு பத்துக்களையும் அச்சில் கொண்டுவரும் நாளை - அடியேன் பிறவிப் பயன் பெறும் நாளை - எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அந்நாள் விரைவில் வரும்படியாக அன்பர்கள் அனைவரும் அரங்கத்தம்மான் அடியினை பணிந்து அவனுடைய அருளைப் பெற்றுத்தர வேண்டுகிறேன்.
61606060т- 600 073.
ஹேமலம்ப - ஆவணி, உத்திரட்டாதி (08-09-2017)
இப்படிக்கு தாஸன்,
வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனம் சாஸ்த்ரஸாஹிதீவல்லப
V.S. கருணாகராசார்யன், B.E.(Mech.), M.A.(Sanskrit), (ஆஸ்தானவித்வான், ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம்)
6
ஸ்வாமி நம்மாழ்வார் - ஆழ்வார்திருநகரி
e
திருவாய்மொழியின் ஸம்ஸ்க்ருதசுலோக மொழிபெயர்ப்பான ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான், வில்லூர், நடதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி,
ஸ்ரீவேங்கடசேஷார்ய மஹாதேசிக ஸ்வாமி (1855-1933)
11 gft: 11
॥ श्रीमते रामानुजाय नमः ॥
॥ प्रतिबिम्बलहरी ॥
॥ अथ अष्टमं शतकम् ॥
॥ तत्र प्रथमं दशकम् ॥
திருவாய்மொழி – எட்டாம் பத்து – முதல் திருவாய்மொழி
தேவிமார்
திருவாய்மொழிப் பாவகை
[[1]]
எழுசீராசிரிய விருத்தம்
प्रतिबिम्बलरीवृत्तम् - स्रग्धरा

இத்திருவாய்மொழியில் காட்டப்படும் பண்பு காணவிழைபவர்களுக்குக் காட்சி அருளும் தன்மை