+07

11 eft: 11
॥ श्रीमते
रामानुजाय नमः ॥
திருவாய்மொழி - ஏழாம் பத்து
அதற்குரிய
ப்ரதிபிம்பலஹரீ
(ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு – சுலோகவடிவில்)
ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான். வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி வேங்கடசேஷார்யமஹாதேசிகஸ்வாமி
அருளிச்செய்தது.
கௌரவ பதிப்பாசிரியர்: வில்லூர் நடாதூர் சாஸ்த்ர ஸாஹிதீவல்லப V.S.கருணாகரன், B.A.,(Mech.),M.A.(Sanskrit)
வெளியிடுபவர்:
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு,
“ஸ்ரீநிதி”, 10, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம், சென்னை-600 073.
ஜய வர்ஷம், தூமணி (24-12-2014)
முதல் பதிப்பு 500 ப்ரதிகள்
ஆண்டு 2014
வெளியிடுபவர்:
ஸ்ரீ நடாதூர் அம்மாள் டிரஸ்டு, புத்தகம் கிடைக்குமிடம் : V.S. கருணாகரன்
6, பாரதியார் தெரு, சிவகாமி நகர், கௌரிவாக்கம், சென்னை-600073.
தொலைபேசி: 044 - 2278 0854
அலைபேசி : 093859 46438
ஈமெயில் : villur_karunakaran@yahoo.com
அச்சிட்டோர்:
ஆர்என்ஆர். பிரிண்டர்ஸ் நெ.19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி,
G606060т- 600 005.
2844 7071
விலை: 3
…..
॥ श्रीमते
11 gft: 11
रामानुजाय नमः ॥
பதிப்பாசிரியனின் பணிவான விண்ணப்பம்
திருவாய்மொழி முழுவதையும் மிகவும் சீரிய முறையில் ஸம்ஸ்க்ருத சுலோகங்களாக மொழிபெயர்த்து அருளி, அவைகளை மணியான கையெழுத்துக்களில் க்ரந்தாக்ஷரத்தில் எழுதித் திருவாய்மொழிக்குப் பணிவிடை செய்தருளியவர் அடியேன் பிதாமஹரும் ப்ராசார்யருமான ஸ்ரீமதுபயவே வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி, வேங்கட சேஷார்ய மஹாதேசிக ஸ்வாமி (1855 A.D. - 1933 A.D). இந்தக் கையெழுதுப் ப்ரதியைப் பல ச்ரமங்களுக்கிடையில் நிதி போலப் பாதுகாத்து, அதன் முதல் ஐந்து பத்துக்களை உரிய முறையில் அச்சிட ஆக்கமும், ஊக்கமும் அடியேனுக்கு அளித்து 1996ல் ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலம் வெளியிட்டருளினார் அந்த ஸ்வாமியின் திருக்குமாரரும் சிஷ்யரும் அடியேனுடைய ஆசார்யனார் திருத்தகப்பனாரும் ஆன ஸ்ரீமதுபயவே மஹாவித்வான் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி ஆசுகவி ஸார்வபௌம ஸ்ரீநிதி ஸ்வாமி என்றே ப்ரஸித்தரான ஸ்ரீநிவாஸ ராகவாசார்ய மஹாதேசிக ஸ்வாமி (1913 A.D. - 2001A.D). 2007ல் ஆறாம் பத்தை அடியேன் திருத்தகப்பனாருக்குப் பிறது ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டின் ப்ரதான தர்மகர்த்தாவாகிய அடியேன் திருத்தமையனார் ஸ்ரீமதுபயவே. வித்வான் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம் சேஷாத்ரி என்று ப்ரஸித்தரான வேங்கடசேஷாசார்யஸ்வாமி அடியேனுக்கு வழிகாட்டியாக இருந்து ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலம் வெளியிட்டருளினார்.
இப்பொழுது ஏழாம் பத்து (ஜய வர்ஷம் தூமணி (24-12-2014) அன்று, ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த ஸ்வாமியின் - அடியேன் பிதாமஹனின் - 160-ஆவது திருநக்ஷத்ரமான மார்கழி உத்திராடத்தில் ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டு மூலம் வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தகம் இவ்வடிவில் வருவதற்கு முதல்படியாக க்ரந்தாக்ஷரத்தில் இருந்து தேவநாகரீ லிபியில் படியெடுத்துக் கொடுத்து உதவி அருளியவர் ஸ்ரீமதுபயவே வித்வான் கொத்திமங்கலம் தேவனாதசார்ய ஸ்வாமி. அந்த ப்ரதிகளை நன்கு பரிசீலித்துப் பரிஷிக்ரித்து உதவியவர் அடியேனுடைய தங்கையின் கேன்வனாரும் ஸுப்ரஸித்த வித்வத் கவியுமான ஸ்ரீமதுபயவே மஹாவித்வான் டாக்டர் கண்ணன் என்கிற யக்ஞம் ஸ்வாமி. இதன் ப்ருபுக்களைத் தானே திருத்தி அடியேனுக்கு வழிகாட்டி இதனை ஸ்ரீநடாதுர் அம்மாள் டிரஸ்டின் வெளியீடாகக் கொண்டு வருபவர் ஸ்ரீமதுபயவே. வில்லூர் நடாதூர் சேஷாத்ரி என்கின்ற வேங்கட சேஷாசார்ய ஸ்வாமி.
[[3]]
இதை வெளியிட ஸ்ரீநடாதூர் அம்மாள் டிரஸ்டிற்கு நிதி உதவி செய்த அன்பர் ஸ்ரீபரகால ஸ்வாமி திருவடி ஸ்ரீமதி ராதிகா அனந்தநாராயணன் மற்றும் ஸ்ரீமான் அனந்தநாராயணன் தம்பதிகள். இதனை மிகச் சீரிய முறையில் அச்சிட்டு உதவியவர்கள் RNR ப்ரிண்டர்ஸில் பணிபுரியும் அன்பர்கள் மற்றும் அதன் உரிமையாளர். இவர்கள் அனைவருக்கும் அடியேனுடைய நன்றி கலந்த வணக்கங்கள். இதைப் போலவே மிகுந்துள்ள மூன்று பத்துக்களையும் அச்சில் கொண்டுவரும் நாளை - அடியேன் பிறவிப் பயன் பெறும் நாளை - எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அந்நாள் விரைவில் வரும்படியாக அன்பர்கள் அனைவரும் அரங்கத்தம்மான் அடியினை பணிந்து அவனுடைய அருளைப் பெற்றுத்தர வேண்டுகிறேன்.
616016060т- 600 073.
ஜெய - தூமணி,
(24-12-2014)
இப்படிக்கு தாஸன்,
வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனம் சாஸ்த்ரஸாஹிதீவல்லப
V.S. கருணாகராசார்யன், B.E.(Mech.), M.A.(Sanskrit), (ஆஸ்தானவித்வான், ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம்),
[[4]]
ஸ்வாமி நம்மாழ்வார் -ஆழ்வார்திருநகரி
திருவாய்மொழியின் ஸம்ஸ்க்ருதசுலோக மொழிபெயர்ப்பான ப்ரதிபிம்பலஹரீயை அருளிச்செய்த
ஸ்ரீமதுபயவே. மஹாவித்வான், வில்லூர், நடதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி,
ஸ்ரீவேங்கடசேஷார்ய மஹாதேசிக ஸ்வாமி (1855-1934)
॥ sft: 11
॥ श्रीमते रामानुजाय नमः ॥ ॥ प्रतिबिम्बलहरी ।
॥ अथ सप्तमं शतकम् ॥
॥ तत्र प्रथमं दशकम् ॥
திருவாய்மொழி – ஏழாம் பத்து – முதல் திருவாய்மொழி
உண்ணிலாவிய

திருவாய்மொழிப் பாவகை ஆசிரியத் துறை
॥ प्रतिबिम्बलहरीवृत्तम् - शार्दूलविक्रीडितम् ॥ இத்திருவாய்மொழியில் காட்டப்படும் பண்பு - “ஏமாற்றுகின்றானோ?” என்று ஐயப்பட்டு அடியவர் சாடிடுவதைப் பொறுத்தருளும் தன்மை