பெரியாழ்வார் திருமொழியில் முதல் திருமொழி
―
திருப்பல்லாண்டு
श्रीविष्णुचित्तदिव्यसूरिश्रीसूक्तेः प्रथमं दशकम्
[ बालकवि विल्लूर् नडादूर् सुन्दरराजकृत संस्कृतविवर्तनम् ] ॥
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு-பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு.
विजयतां चिरं शाश्वतीस्समा बहुसहस्रिणीः कोटिकोटिशः । मल्ल जिन्महास्कन्ध ! रत्न ! ते रक्तपद्प्रभा स्वस्तिशलिनी ॥ १ ॥
2. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
दासैस्समैररहितो विजयस्य नित्यं त्वद्दक्षिणोरसि चिरं जयतु स्थिता श्रीः । भास्वच्चिरं जयतु दक्षिणर्वात चक्रं घुष्यन् स दीव्यतु चिरं युधि पाश्वजन्यः ॥२॥
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்; ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
शेषाः प्रभोर्यदि मृदं मुदमाप्नुतास्मद्द्यूयं प्रवेष्टुमुदरम्भरयो न योग्याः । आसप्तपूर्वपुरुषादनघा हि रक्षोलङ्कां विनाशितवते जयमोरयामः ॥ ३ ॥
4.
[[4]]
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே. अस्मद्गणं धरणिखेटनिवेशनात्प्राक्सीमावधीर्य समुपेत समेतुकामाः । नारायणाय नम इत्यखिलेड घरीत्या भक्ताः ! प्रभोर्जयमुदीरययताभ्युपेत्य
5. அண்டக் குலத்துக்கதிபதியாகி அசுரர் இராக்கதரை
118 11
ண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டென்மினே.
दैतेय राक्षस कुलान्यखिलाण्डनाथम् उन्मूल्य मूलहरमीश्वरमिन्द्रियाणाम् । दासाः ! प्रणम्य शुभनामसहस्रमुक्त्वा त्यक्त्वा पुरातनकुलं विजयं ब्रवोध्वम् ॥५॥ 6. எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.
- मत्ताततातपितृकालत एत्य दास्यं वंशक्रमेण तनुमः श्रवणोत्सवेऽसौ ।
भूत्वा प्रदोषसमयेऽरिमहन् हरिर्यस् तं दृष्टिदोषविगमाय जयेति वच्मः ॥ ६ ॥ 7. தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட் செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
अत्यग्निभास्वरसुदर्शनचक्रचिह्ना दास्यं प्रभोरिह कुलक्रमशो दधानाः । मायाविबाणभुजतः क्षतजं पुराजौ चक्रेण वाहितवते जयमीरयामः ॥ ७ ॥ 8. நெய்யுடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும் கையடைக் காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.
[[5]]
अन्नं घृतादि सुभगं परमं च दास्यं ताम्बूलहारवरचन्दनकुण्डलानि ।
दत्वा शुभानि मम शुद्धिकराय वच्मि नित्यं जयेति वचनं गरुडध्वजाय ॥ ८॥
உடுத்துக்களைந்த நின் பீதக வாடை உடுத்துக்கலத்ததுண்டு தொடுத்த து ழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. धृत्वाऽम्बरं तव निषेव्य च भुक्तशेषं दासास्त्वदीयतुलसीत्रजमाभरन्तः । कृत्वा निदिष्टमभिजिन्मह ईरयामः नागे फणावति शयान चिरं जयेति ॥ ९ ॥
10. எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென் றெழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.
दासः प्रभोरभवमत्र यदा तदैव मोक्षं ममालभत नीचतरः कुटीरः । पुण्याहजात मथुरापुरि भग्नचाप पश्चास्य भोगिमकुटस्थ जयेति वच्मः ॥ १० ॥
11. அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப் பழவடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பலபரவிப்
12.
பல் வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. निष्पापगोष्ठिपुरजन्यभिमानतुङ्गः श्रीमान् यथाहमहपि नाथ! तवास्मि दासः । नारायणाय नम इत्यभिधाय पुण्यात् तुभ्यं पवित्र! बहुधा जयमोरयामि ॥। ११ ॥
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே.
नित्यं जयेति परमेष्ठिनमूढशाङ्गं पुण्यं यथाऽस्तुत गिरा किल विष्णुचित्तः । तं युक्तकाल इति येऽनुदिनं पठन्ति ते मूलमन्त्रमुखराः परमं परीयुः ॥ १२ ॥