+नित्य-कर्म

पुण्याह-वाचनम्‌. नित्याराधन विधिः, अग्निकार्यविधिः. महालक्ष्मि आराधन विधिः, चक्राब्जमण्डलपूजाविधिः, महोत्सवविधिः।

ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாயநமः
அணிந்துரை.
க.கோஸகன்.
ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரனுக்கு
பரத்வம்,வ்யூஹம், விபவம்,அந்தர்யாமி, அர்ச்சை
என்கிற ஐந்து நிலைகள் உண்டு.அவற்றை வேத
வேதாந்தங்கள்,ஆகமம்,இதிஹாஸங்கள்,புராணங்
கள்,அருளிச்செயல்கள்.போன்றவைவிரிவாகப்பே
சுகின்றன.அவற்றிலும் பகவச்சாஸ்த்ரம் என்று நம்
முன்னோர்களால் பெரிதும் போற்றப்பட்டது
ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமம்.ஸ்ரீ ரங்கம் முதலிய
திவ்யதேசங்களை சீர்திருத்திய பகவத்ராமானுஜர்.
ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமமுறையை அங்கே
அமைத்தார்.என்று பிள்ளைலோகம் ஜீயர்
ராமானுஜ திவ்ய சரிதையில் குறிப்பிடுகிறார்.இந்த
ஆகமம்
ராத்ரிரக்ஞானமித்யுக்தம்
பஞ்சேத்யஞான நாசகம்.
தத்சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ஸ்யாத்
அன்வர்த்தஸ்யா னுரோததः
என்கிறபடி அனாதியானதும் அறியாமை
இருளைப்போக்கக்கூடியதுமான் இந்த சாஸ்த்ரம்
ஒளபகாயனர்,சாண்டில்யர்,பாரத்வாஜர்,கசிகர்,
மஞ்ஜ்யாயனர் என்கிற ஐந்து ரிஷிகளுக்கு ஐந்து
இரவு பகலாகத் தன்னை வழிபடும் முறையை
உபதேசித்தார்.மேலும் வேத மூலகத்வமாக
விளங்குவதாலும் பற்பல சாஸ்த்ரங்களுக்கும்
நடைமுறைகளுக்கும் ஸ்ரீவைஷ்ணவத்திற்கும்
ரக்ஷகமாக அமைந்ததும் இந்த சாஸ்த்ரமே். 1008,108
என்கிற கணக்கில் பற்பல ஸம்ஹிதைகள் என்கிறபடி
பலபிரிவுகளை உள்ளடக்கியது.அவற்றில் ஸாத்வத,
பஷ்கரம், ஜயாக்யம்,என்கிற 3 ஸம்ஹிதைகள்
ப்ரதானமானது என்றும் அதன் விரிவாக்கமாகவும்
க்ரியாரூபமாகவும ்விவந்தவைகள் ஈஸ்வர,
பாரமேஸ்வர,பாத்ம ஸம்ஹிதைகள் என்றும் மேலும்
பலபிரிவுகளாகப் பிரிந்து பற்பல ஸம்ஹிதா ரூபமாக
இன்றும் (உபப்ரம்மணங்கள்)காணப்படுகின்றன. இவை
எல்லாம் மோக்ஷத்தையே புருஷார்த்தமாக்
கொண்டவை என்பதும் அவையே எம்பெருமானின்
திருமேனியில் ஒளிர்கின்றன என்றும்கூறப்படுகின்றது.
பாத்மம் சிரஸமாக்யாயதம்
முகம்ஸ்யாத் பாரமேஸ்வரம்.
கபிஞ்சலம் ஹ்ருதயம்சைவ
ஸ்ரீவத்ஸ விஷ்ணுஸம்ஹிதா.
என்கிறபடி பகவானின ்கிரீடமாக
பாத்மஸம்ஹிதையும், திருமுக மண்டலத்தில்
பாரமேஸ்வரமும்,ஹ்ருதத்தில் கபிஞ்சலமும்,
ஸ்ரீவத்ஸத்தில் விஷ்ணு ஸம்ஹிதையும்
ஒளிர்கின்றன.என்று பகவத்வசனமாகும். அப்படிப்
பட்ட பாத்மஸம்ஹிதையையும் மற்றும் பற்பல
ஸம்ஹிதயையும் அடியொற்றி முன்னோர் மொழிந்த
முறை தப்பாமல் அவர்கள் காட்டிய வழியில்
‘க்ரியா* ஸாகரம்’’ என்கிற பெயருடன் இந்த
நூலானது 2ம் பதிப்பாக வி வருகிறது. இந்த
பதிப்பாசிரியர் தன் தந்தையாரிடம் தாம் கற்ற
அனுபவத்தைக்கொண்டும் க்ரியைகளை
இப்படியெல்லாம்சாஸ்த்ரோக்தமாகச்
செய்தால் அழகாகவும், விலக்ஷணமாகவும் இருக்கும்
என்றும் சில அரிய முறைகளை மிக எளிதாகக்
காட்டியுள்ளார்.குறிப்பாக புண்யாஹவாசன விதியில்
அரிசியை சேர்ப்பது, கலசம் வைப்பது,மற்றும் ஏனைய
க்ரியைகளை் ஸாதாரணமாக எல்லோரும் செய்து
விடலாம். ஆனால் ஆகமங்களில் கூறியுள்ள
வேதமந்த்ரத்துடன் கூறியிருப்பது அனுபவம்
உள்ளவர்களுக்கே புரியும். போற்றுவதற்குரியதுமாகும்.
அதேபோல் ஸன்னதிக்குச்சென்றதும் செய்ய
வேண்டிய கார்யங்களான புண்யாஹவாசனம்,
அடுத்தது திருவாராதனம், அக்னிகார்யம்,
என்கிறபடி க்ரியைகளை முறைப்படிப்
பிரித்திருப்பதும் லக்ஷணமான செயலாகும்.
அதிலும் மஹாலக்ஷ்மி ஆராதனம் என்பது
மிகச்சிலராலேயே அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிற
நடைமுறையாகும். ஆனாலும் இவர் பெரியோர்கள்
அனுஷ்ட்டித்து வந்த ஒரு கைங்கர்யமானது
காலாந்தரத்தில் அழிந்துவிடக்கூடாது என்கிற
உயரெண்ணத்தில் அச்சிட்டிருப்பது ஒரு
க்ரந்தத்தை காக்கவேண்டும் என்கிற சீலத்தைக்
காட்டுகிறது. உத்ஸவ விதிகளும் மிக அழகாக
வியிடப்பட்டுள்ளது. சிலதிவ்யதேசங்களில்
ஸம்ப்ரதாயப்படி வாஹனமுறைகள் மாறினாலும்
ஸப்தாவரணம் என்கிற விடைஸாதித்தல்
என்கிறபகுதி சாஸ்த்ர ஸம்மதமானதொன்றாகும்.
மேலும் சக்ராப்ஜ மண்டலபூஜாமுறை ஒவ்வொரு
பாகமாகக்கூறியிருப்பதும் விலக்ஷணமானதாகும்.
ஆக பக்தி ப்ரபத்தி இவற்றில் பகவதாராதனமே
சிறந்ததொரு வழி என்பதையும் பற்பல தர்மார்த்த
காம மோக்ஷாதிமார்க்கத்திற்குலக்ஷ்மிபுருஷகார
பூதையானவள் அவளுக்கும் எம்பெருமானைப்போல்
ஷோடசோபசார திருவாராதனங்கள் செய்யலாம்
என்பதையும் காட்டித்தருவது இந்தநூலாகும்.மேலும்
இவர் தன்னுடைய தனிமுயற்சியாலும் தான் வந்துற்ற
அர்ச்சக ஸமுதாயம் சிறிதாவது கற்றுணர்ந்து முன்னேற
வேண்டும் என்கிற அவாவினாலும சிந்தனைத்
திவாலும் பெரிய போதமுடன் வரைந்திருப்பது
மிகவும் பாராட்டத்தக்கது.இவர் கூறுவதுபோல் இந்த
நூலை வெரும் அணியாகச் சேர்க்காமல்
அறிவாற்றலுடன் சேர்த்துக் கொள்ளதக்க
ஆசிரியரைக்கொண்டு குரு முகமாகப்பயின்று
க்ரியைகளையும், பூஜாமுறைகளையும் வழுவரக்கற்று
நாமெல்லாம் இந்தக்ரியாஸாகரத்தில் பல
நல்முத்துக்களை எடுத்து சரண்யன் திருவடிகளில்
ஸமர்ப்பிப்பதே இந்தநூலுக்கும், இந்த
நூலாசிரியருக்கும் கிடைத்த வெற்றியாகும்.மேலும் இது
போன்ற பொக்கிஷமான நூல்கள் விவரத்தூண்டு
கோலாகும்.இப்படிப்பட்ட உயர்ந்ததொரு சிந்தனையை
எமக்கெல்லாம் இளமையிலிருந்தே கற்பித்து
வழியாற்றிய எம் தந்தையார் ஸ்ரீ
. . வே. கண்ணன
்பட்டாச்சாரியார்
ஆசியுடனும் எந்தை போற்றிடும்
அழுந்தை அமரர் கோமான் இன்னருள்
துணையினாலுமஇந்த க்ரந்தம் விவருவதற்குத்
தக்க வழியினைக்காட்டித்தந்த
கொனேரி ஸ்ரீ
வேங்கடேஸ்வரப்பெருமாள் **க்ருபையாலும்
நூலாசிரியரும் கொண்டபெண்டிர் மக்களும்நல்ல
பதத்தால் மனைவாழப்றார்த்திக்கிறேன்.

  • தாஸன்,
    க.கோஸகன்