अशौचविषये

ஜநநாசௌசம்

  1. நாலு மாதத்தில் கர்ப்ப ஸ்ராவமுண்டானால் பிதாவிற்கு ஸ்நான மாத்திரம் உண்டு. ஞாதிகளுக்கு அதுவுமில்லை. ஐந்து, ஆறு

மாதங்களில் நீர்க்குமிழி போன்ற கர்ப்பம் விழுந்தால் பிதாவிற்குப்போல் ஞாதிகளுக்கும் ஸ்நானமுண்டு. அந்த மாதங்களிலேயே கடினமான கர்ப்பம் விழுந்தால், பிதாவிற்கும் ஞாதிகளுக்கும் மூன்று நாள் ஆசௌசம்; மாதாவிற்கு நாலு மாஸத்தில் நான்கு நாட்களும் ஐந்தாவது மாஸத்தில் ஐந்து நாளும் ஆறாவது மாதத்தில் ஆறு நாளும் ஆசௌசம். 1

  1. ஏழாவது மாஸம் முதல் பெண் பிறந்தால் பிதாவிற்கும் ஸஹோதரர்களும் பின்னோதரர்களுமான பின்னோதரர்களும் ப்ராதாக்களுக்கும், ஸஹோதரர்களுமான பிதாவினுடைய ப்ராதாவிற்கும் அவன் பிள்ளைகளுக்கும் பிதாமஹனுக்கும் அவன் ப்ராதாவிற்கும் பத்து நாள் ஆசௌசம். பின்னோதரனான பிதாவின் ப்ராதாவினுடைய புத்திரனுக்கு ஆசௌசமில்லை என்பர் சிலர். 2

  2. ஏழாவது மாஸம் முதல் ஆண் பிறந்தால் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட ஞாதிகள் எல்லாருக்கும் பத்து நாள் ஆசௌசம். ஏழு தலைமுறைக்கு உட்பட்ட ஞாதிகள், ஸபிண்டர்கள் என்று சொல்லப்படுவார்கள். ஸமானோதகர்களுக்கும் (எட்டாவது தலைமுறை முதல் பதினான்கு தலைமுறை வரை ஸமானோதகர்) மூன்று நாள் ஆசௌசம்.

4..மாதாவிற்கோ என்றால்? பெண் பிறந்தால் பிறந்த தினம் முதல் (40) நாள் வரையிலும், ஆண் பிறந்தால் (30) நாள் வரையிலும் அசுத்தியுண்டு.

  1. பிறந்த குழந்தையானது ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் மாதாமகனுக்கும் மாதாமஹிக்கும் மூன்று நாள் ஆசௌசம். மாதாமஹன் இல்லாத போதிலும் மாதா மஹிக்கு மாத்திரம் மூன்று நாள் ஆசௌசம். இரண்டு பேர்களும் இல்லாத போதிலும் அம்மான் வீட்டில் ப்ரஸவித்தாலும் அல்லது அம்மான் ப்ரஸவச் செலவு கொடுத்தாலும் அம்மானுக்கு ஒரு நாள் ஆசௌசம். இந்த இரண்டும் இல்லாவிடில் ஆசௌசமே இல்லை. 5

  2. ஜநநாசௌசமானது எல்லாருக்கும் தந்தம் காலம் வரையில்தான். தந்தம் காலம் தாண்டினால் அதிக்ராந்தாசௌசம்

200

अपरप्रयोगः

201

கிடையாது. பிதாவிற்கும் கூடஸ்நான மாத்திரந்தான். நல்ல நாளில் க்ஷௌரஞ் செய்து கொள்ளத் தக்கது. 6

மரணாசௌசம்

  1. பிறந்த குழந்தை பத்து நாளுக்குள் மரித்தால் பிதா முதலிய எல்லா ஞாதிகளுக்கும் ப்ரஸவாசௌச சேஷத்தோடு மரணாசௌசத்திற்கும் நிவ்ருத்தி, பிதாவிற்கு மாத்திரம் ஸ்நாநம். பத்தாவது தினத்தில் மரித்தால் பிதாவிற்கு அன்று முதல் இரண்டு நாள் ஆசௌசம். பத்தாவது தினத்தின் ராத்ரி கடைசி யாமத்தில் மரித்தால் பிதாவிற்கு மூன்று நாள் அதிகமான ஆசௌசம். மற்றவர்களுக்கு இல்லை. 7

  2. பிறந்த குழந்தை தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் மரித்தால் ஞாதிகளுக்கு மூன்று நாள் மாத்திரம் ஆசௌசம். பிதாவிற்கும் ப்ராதாக்களுக்கும் பத்து நாள். தொப்புள் கொடி அறுத்த பிறகு சிசு மரித்தாலும், மரித்தே ஜநித்தாலும் எல்லா ஞாதிகளுக்கும் பத்து நாள் ஆசௌசம் உண்டு என்று வைத்தியநாதீயத்தில் விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது. சிஷ்டாசாரம் போல் நடந்து கொள்க. மாதாவிற்கு மாத்திரம் எல்லாவிதத்திலும்14வது பாராவில் சொல்லப்பட்டியே சுத்தி. 8

  3. பதினோராவது தினம் முதல் ஆறாவது மாஸம் வரையில் கன்னிகையும் பாலனும் மரித்தால் மாதா பிதாக்களுக்கும், ஸஹோதரர்களும் பின்னோதரர்களுமான ப்ராதாக்களுக்கும், பத்து நாள் ஆசௌசம். ஞாதிகளுக்கு ஸ்நாந மாத்திரம். 9

  4. ஆறாவது மாஸம் முதல் இருபத்தி நாலாவது மாஸம். முடிவு வரையில் கன்னியா பாலர்கள் மரித்தால் மாதா பிதாக்களுக்கும், ஸஹோதர பின்னோதர ப்ராதாக்களுக்கும், பத்து நாள் ஆசௌசம், ஞாதிகளுக்கு பால மரணத்தில் ஒரு தினமும், கன்யா மரணத்தில் ஸ்நாந மாத்திரமும், இதில் விசேஷத்தை (4)வது பாராவிலும் காண்க. 10

  5. இருபத்தி ஐந்தாவது மாஸம் முதல் ஆறாவது வருஷம் முடிவு வரையில் பால மரணத்தில் மாதா பிதாக்களுக்கும், இரண்டுவித ப்ராதாக்களுக்கும் பத்து நாளும், ஞாதிகளுக்கு மூன்று நாளும், ஸஹோதரிக்கும் பிதாவின் ஸஹோதரிக்கும் மாதாவின் ஸஹோதரிக்கும் மாதாமஹனுக்கும் மாதாமஹிக்கும்

अपरप्रयोगः

அம்மானுக்கும் அம்மாமிக்கும் கூடப் பிறந்தவன் பிள்ளைக்கும் அவன் பத்னிக்கும் பக்ஷிணீ ஆசௌசமுண்டு. மற்ற பந்துக்களுக்கு ஸ்நாந மாத்திரம். 11

  1. பந்துக்களுடையவும் ஞாதிகளுடையவும் மரணத்தில் முன் சொல்லப்பட்டும் சொல்லப்படப் போவதாயும் இருக்கிற ஸர்வ விதமான ஆசௌசமும் ஸ்த்ரீகளுக்கும் புருஷர்களுக்கும் விவாஹத்திற்குப் பிறகுதான். ஏனென்றால் ப்ரஹ்மசாரியாய் இருக்கும் காலத்தில் ஆசௌசம் இல்லாமையாலும் அதற்கு முன் பாலர்கள் ஆகையாலும் விவாஹத்திற்குப் பிற்பாடு தான் ஆசௌசானுஷ்டாநத்திற்கு அதிகாரம். 12

  2. இருபத்தி ஐந்தாவது மாஸம் முதல் ஆறாவது வருஷம் முடிவு வரையில் கன்னிகையின் மாதா பிதாக்களுக்கும் ப்ராதாக்களுக்கும் பூர்ணமான ஆசௌசம், ஞாதிகளுக்கு ஒரு தினம். அந்தக் காலத்தில் விவாஹம் ஆகியிருந்தால் சொல்லப் போகிற (24)வது பாராவின் படி எல்லாருக்கும் ஆசௌசம். 13

  3. ஏழாவது வருஷம் முதல் விவாஹத்திற்கு முந்தி கன்னிகையின் மரணத்தில் மாதா பிதாக்களுக்கும் ப்ராதாக்களுக்கும் பூர்ணமான ஆசௌசம், ஸபிண்டர்களுக்கு மூன்று நாள், மாதா மஹர் முதலாகிய பந்துக்களுக்கு ஸ்நாந மாத்திரம், உடன் பிறந்தான் பிள்ளைக்கு பக்ஷிa என்று சிலர். சிஷ்டாசாரம்போல் நடந்து கொள்க. 14

  4. ஏழாவது வருஷம் முதல் உபநயநத்திற்கு முந்தி பாலனுடைய மரணத்தில் மாதா, பிதா, ப்ராதாக்களுக்குப் போல் எல்லா ஸபிண்டர்களுக்கும் பத்து நாள் ஆசௌசம், மாதாமஹனுக்கும், மாதாமஹிக்கும் மூன்று நாள், உடன்பிறந்தாளுக்கும் மாதா பிதாக்களின் உடன்பிறந்தாளுக்கும் அம்மானுக்கும் அம்மாமிக்கும் உடன்பிறந்தான் பிள்ளைக்கும் அவன் பத்னிக்கும் பக்ஷிணி மாத்திரமே தான். மற்ற பந்துக்களுக்கும் ஸமானோதகர்களுக்கும் ஸ்நாந மாத்திரம். 15

  5. ஏழாவது வருஷத்திற்கு முந்தி உபநயநம் செய்திருந்தால் சொல்லப் போகிற (23)வது பாராவில் கண்டபடி எல்லாருக்கும் ஆசௌசம். அப்படியே மூன்றாவது வருஷத்திற்கு முன் செளள ஸம்ஸ்காரம் நடந்திருந்தால் தஹந் ஸம்ஸ்காரமே செய்யத் தகுந்தது. (11)வது பாராவில் கண்டபடி ஆசௌசம், அப்படி

202

अपरप्रयोगः

203

ஆறாவது மாஸத்திற்கு முன்னர் பல் முளைத்திருந்தால் (10)வது பாராவில் கண்டபடியே எல்லாருக்கும் ஆசௌசம். 16

  1. கன்னிகைகளுக்கும் பாலர்களுக்கும் மூன்றாவது வருஷத்திற்கு முன் கநநம் முதலாகிய ஸம்ஸ்காரம் செய்வதாய் இருந்தால் அந்த ஸம்ஸ்காரமானது மரணத்திற்கு மறு தினம் செய்வதாக நேரும் பக்ஷத்தில் அந்த ஸம்ஸ்கார தினம் முதல் கொண்டே ஆசௌசானுஷ்டானம் இதில் விசேஷம் ஆஹிதாக்நியின் மரணத்தில் தஹந தினம் முதல் கொண்டு தசாஹம் முதலான ஆசௌசானுஷ்டானம், அநாஹிதாக்நிக்கு மரண தினம் முதல் கொண்டே ஆசௌசானுஷ்டானம். இவ்விடத்தில் ஆஹிதாக்நி என்பதும் அநாஹிதாக்நி என்பதும் மரித்தவனைச் சொல்லுகிறது. அல்லது ஆசௌசம் அனுஷ்டிக்கிறவனைச் சொல்லுகிறதன்று என்று அறியவும். - 17

புநர் தஹநத்தில் ஆசௌச க்ரமம்

  1. ஆஹிதாக்நிக்கும் அநாஹிதாக்நிக்கும் ஸ்வ காலத்தில் மந்த்ரபூர்வகமாக ஸம்ஸ்காரம் இல்லாமல் தசாஹ மத்தியத்தில் புநஸ் ஸம்ஸ்காரம் செய்தால் மரணம் முதற்கொண்டே எல்லாருக்கும் ஆசௌசமே அல்லது புநர் தஹநம் முதற்கொண்டு ஆசௌசமன்று. தசாஹத்திற்குப் பிறகு ஆஹிதாக்நிக்கு புநஸ்ஸம்ஸ்காரம் செய்தால், அப்போது புநஸ் ஸம்ஸ்கார தினம் முதற்கொண்டு தசாஹம் முதலான ஆசௌசம், அநாஹிதாக்நிக்கு தசாஹத்திற்குப் பிற்பாடு அஸ்தி ஸம்ஸ்காரம் செய்தால் முன் ஆசௌசம் அனுஷ்டிக்காத பக்ஷத்தில் ஞாதிகளுக்குப் பத்து நாளும், முன் ஆசௌசம் அனுஷ்டித்து உதக தானம் செய்யாமல் இருந்தால் மூன்று நாளும் ஆசௌசம். முன் ஆசௌசமும் அனுஷ்டித்து உதக தானம் செய்திருந்தால் ஆசௌசம் இல்லை. பிரதிக்ருதி தாஹத்தில் முன் ஆசௌசம் அனுஷ்டிக்காமல் இருந்தால் மூன்று நாள். சௌசம் அனுஷ்டித்திருந்து உதக தானம் செய்யாமல் இருந்தால் உதக தான நிமித்தமாக ஒரு நாள் ஆசௌசம், முன் இரண்டும் செய்திருந்தால் ஞாதிகளுக்கு ஆசௌசமே இல்லை. ஞாதிகள் தவிர மற்ற பந்துக்களுக்கு புநர் தஹந நிமித்தமாக ஆசௌச கந்தமே இல்லை. புத்ரர்களுக்கோ என்றால்? அஸ்தி ஸம்ஸ்காரத்திலும் பிரதிகிருதி ஸம்ஸ்காரத்திலும் முன் ஆசௌசானுஷ்டானத்திலும், அதில்லாமையிலும் எப்பொழுதும் பூர்ணமான ஆசௌசமே

अपरप्रयोगः

உள்ளது. புத்ரன் தவிர வேறொருவன் ஸம்ஸ்காரம் செய்வதாய் இருந்தால் அவனுக்கு அஸ்தி ஸம்ஸ்காரத்திலும் பிரதிகிருதி ஸம்ஸ்காரத்திலும் எப்பொழுதும் மூன்று நாள் ஆசௌசமே உள்ளது. 18

  1. ஸ்த்ரீகளுக்கு ரஜோதர்சனம் முதல் மூன்று நாள் அசுத்தி, நாலாவது தினத்தில் ஸ்நாநத்தால் சுத்தி, ஆனாலும் ஐந்தாவது தினத்தில்தான் வைதிக கர்மங்களுக்கு யோக்யதை. 19

  2. ஸம்பர்க்காசௌசம் தவிர, பர்த்தாவிற்கு உண்டான ஸர்வ விதமான ஆசௌசமும் பத்னிக்கும் உண்டு. பத்னிக்கு அம்மான் முதலான பந்துக்களின் மரண நிமித்தமான ஆசௌசம் பர்த்தாவிற்கு இல்லையாலும் பத்னி ஆசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் பர்த்தாவிற்கு நித்ய கர்மாதிகளில் அனுஷ்டானாதிகாரம் இருந்த போதிலும் அக்னி ஸந்தானத்திலும் ச்ராத்த போஜனத்திலும் அவனுக்குப் யோக்கியதை இல்லை. 20

  3. ஸாயம்ஸந்தி என்றும் ப்ராதஸ் ஸந்தி என்றும் சொல்லப்பட்ட இரண்டு ஸந்தியும் கழித்து மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்ட ராத்ரியின் மூன்றாவது பாகத்தில் ஜநநமோ மரணமோ ரஜஸ்ஸோ உண்டானால் மறு தினம் முதற்கொண்டே யாசௌசம். அதற்கு முன் பாகங்களில் ஆனால் முதல் நாள் தொடங்கியே ஆசௌசம். 21

  4. தத்த புத்ரனுடையவும் ஜநக மாதா பிதாக்களுடையவும் மரணத்தில் ஒருவருக்கொருவர் மூன்று நாள் ஆசௌசம். தத்தனுக்கும் ஜநக வம்சஞாதிகளுக்கும் பரஸ்பரம் ஒரு நாள் ஆசௌசம். தத்தனுடைய ஸந்ததி மரணத்தில் ஜநக மாதா பிதாக்களுக்களும் ஆசௌசமில்லை. 22

உபநீத புருஷன் மரித்தால்

  1. ஸபிண்டர்களுக்கு பத்து நாளும் ஸமானோதகர்களுக்கு மூன்று நாளும் மாதாமஹனுக்கும் மாதா மஹிக்கும் அம்மானுக்கும் அம்மாமிக்கும் உடன்பிறந்தாள் பிள்ளைக்கும் அவன் பத்னிக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் உடன் பிறந்தாளுக்கும் சிறிய தாயார் பெரிய தாயாருக்கும் மூன்று நாள் ஆசௌசம். உடன் பிறந்தாளுக்கும் சிறிய தாயார், பெரிய தாயாருக்கும் பக்ஷிE மாத்திரம்தான் என்று பக்ஷாந்திரம் உண்டு.

204

205

अपरप्रयोगः

ஆசாரம்போல் நடந்து கொள்க. சிறிய தாயார், பெரிய தாயார் பிள்ளைக்கும், ஷ யார் பெண்ணுக்கும் அத்தைக்கும், அவள் பெண்ணுக்கும், பிள்ளைக்கும், அம்மான் பெண்ணிற்கும், பிள்ளைக்கும் ப்ராதாவின் பெண்ணுக்கும், சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் உடன் பிறந்தான் பெண்ணுக்கும் பௌத்ரிக்கும் (புத்ரனுடைய பெண்ணிற்கும்) பின்னோதரமான உடன் பிறந்தாளுக்கும் - பக்ஷிணீ, பக்ஷிணீயென்றால் இரண்டு பகலோடு கூடிய ஒரு ராத்ரியோ அல்லது இரண்டு ராத்ரியோடே கூடிய ஒரு பகலும் ஆகும். 23

விவாஹித ஸ்த்ரீயின் மரணத்தில்

மரித்தால் 24. விவாஹமா மான ஸ்த்ரீ பர்த்தாவின் ஸபிண்டர்களுக்கு தசராத்திரமும், ஸமானோதகனுக்கு த்ரிராத்ரமும், மாதா பிதாக்களுக்கும் ஸஹோதரனுக்கும் உடன் பிறந்தான் பிள்ளைக்கும் உடன் பிறந்தான் பிள்ளைக்கும் தௌஹித்திரனுக்கும் பர்த்தாவின் உடன் பிறந்தான் பிள்ளைக்கும் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் மூன்று நாள் ஆசௌசம். இங்கு புருஷர்களுக்கு எந்தெந்த ஆசௌசம் வருமோ அந்தந்த ஆசௌசம் அந்தந்த புருஷர்கள் இல்லாவிட்டாலும் அவரவர்கள் பத்னிக்கும் உண்டென்று அறியவும். உடன் பிறந்தாளுக்கும் உடன் பிறந்தாள் பெண்ணிற்கும், மாதாவின் உடன் பிறந்தாளுக்கும், அவள் பிள்ளைக்கும் பெண்ணிற்கும், அத்தைக்கும், அவள் பிள்ளை, பெண், அம்மான், அவன் பிள்ளை, பெண், மாதாமஹன், மாதாமஹி, பர்த்தாவின் உடன் பிறந்தாள் பெண், பௌத்ரி, தௌஹித்ரி, ப்ராதாவின் பெண், சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார், அவர்கள் பிள்ளை, பெண், பிதாமஹன், பிதாமஹி, பின்னோதரனான ப்ராதா இவர்களுக்கும் பக்ஷிணீ, ஸபத்நீ மாதாவின் மரணத்தில் ஸபத்நியின் பெண்ணிற்கு ஒரு நாள் ஆசௌசம்.

  1. மாமியார் மாமனார்களின் மரணத்தில் மாப்பிள்ளைக்கு மூன்று நாள் ஆசௌசம். இந்த விதியானது தன் பத்னி ஜீவித்திருந்தால் அல்லது ஸந்ததி இருந்தால் மட்டுமே. இரண்டும் இல்லாது போனால் ஒரு நாள் மட்டுமே ஆசௌசமாகும். 25

अपरप्रयोगः

விசேஷம்

  1. மாதாமஹன், மாதாமஹி இவர்களின் மரணத்தில் தௌஹித்ரன் ஸம்ஸ்காரம் செய்வதாய் இருந்தால் அவனுக்குப் பத்து நாள் ஆசௌசம். ஸமானோதகன் ஸம்ஸ்காரம் செய்வதாய் இருந்தால் அவனுக்கும் அப்படியே. 26

ஸந்தேஹாசௌச நிவிருத்தி

  1. சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் இவருடைய பத்னிகள் மரணத்தில் அவர்கள் பிரதி யோகிகளான ஸ்த்ரீகளுக்கும், மாப்பிள்ளையின் மரணத்தில் மாமியார் மாமனார்களுக்கும், உடன்பிறந்தாள் புருஷன் மரணத்தில் மைத்துனனுக்கும், மைத்துனன் மரணத்தில் உடன் பிறந்தாள் புருஷனுக்கும், மாதாவின் கூடப் பிறந்தவள் புருஷனுடையவும், அத்தையின் புருஷனுடையவும் மரணத்தில் அவர்கள் பிரதி யோகிகளுக்கும் ஆசௌசம் இல்லை. தாயார் கூடப் பிறந்தவள் பிள்ளையின் பத்னி மரணத்தில் அவர்கள் பிரதி யோகிக்கும், அத்தானுடைய பத்னி மரணத்திலும், அம்மாஞ்சியினுடைய பத்னி மரணத்திலும் அவரவர்கள் பிரதி யோகிகளுக்கும், ப்ராதாவின் பத்னி மரணத்தில் நாத்தனாருக்கும், ப்ராதாவின் பிள்ளையுடைய பத்னி மரணத்தில் அவள் பிரதி யோகியான அத்தைக்கும், தௌஹித்ரனுடைய பத்னி மரணத்தில் மாதாமஹன், மாதாமஹி இவர்களுக்கும், உடன்பிறந்தாள் பிள்ளையின் பத்னி மரணத்தில் அம்மான், அம்மாமி இவர்களுக்கும் ஆசௌசம் இல்லை. அப்படியே ஸபத்நீ மாதாவின் மாதா, பிதா, ப்ராதா முதலானவர்களுடைய மரணத்தில் அவரவர்கள் ப்ரதி யோகிகளாகிய ஸபத்நீ புத்ரர்கள் முதலானவர்களுக்கு ஆசௌசம் இல்லை. பந்துவாகையால் ஸ்நாந மாத்திரமே. 27

அதிக்ராந்த மரணம் கேட்டால் புத்ரர்களுக்கு ஆசௌச விதி

  1. தேசாந்தரத்தில் உண்டான ஜநநாசௌசமோ, மரணாசௌசமோ பத்து நாட்களுக்குள் கேட்கப்பட்டால் ஞாதிகளுக்கு மீதி நாள் ஆசௌசம். புத்ரர்களுக்கோ என்றால் கேட்ட நாள் முதல் பத்து நாள். அப்படியே பத்னிக்கும்

206

अपरप्रयोगः

பொருந்தும். அவர்களுக்கும் ஸஞ்சயனத்திற்கு முன் கேட்டால் மீதி நாள் மாத்ரம் ஆசௌசம். ஸஞ்சயநாநந்தரங் கேட்டால் ஒரு வருஷம் வரையில் புத்ரர்கள் எல்லாருக்கும் ஆசௌசம் ஆகும். பத்னிக்கும் கேட்ட நாள் முதல் பத்து நாள் ஆசௌசம். ஸம்ஸ்காரம் நடந்திருக்கிற விஷயத்தில் ஒரு வருஷத்திற்குப் பிறகு கேட்டாலும் கநிஷ்ட புத்ரனுக்கும், பத்நிக்கும் மூன்று நாள் ஆசௌசம். ஸம்ஸ்காரம் போனால் பிற்பாடும் பத்து அவர்களுக்கும் நாள் வருஷத்திற்குப் ஒரு ஆசௌசம். ஜ்யேஷ்டனுக்கும் முக்கிய கர்த்தாவிற்கும் எக் காலத்திலும் எவ் விதத்திலும் பத்து நாள் ஆசௌசம். ஞாதிகள் தவிர, மற்ற பந்துக்களின் மரணத்தில் ஒரு வருஷத்திற்கு முன் கேட்டால் ஸ்நாந மாத்ரமே. அதன் பிறகு ஸ்நாநமும் இல்லை. 28 நடக்காது

அதிக்ராந்தமான ஸபத்நீ மாதாவின் மரணத்தில்

  1. ஒரு வருஷத்திற்கு முன் ஸபத்நீ மாதாவின் மரணம் கேட்கப்பட்டால், மாதாவிற்குப் போல் பத்து நாள் ஆசௌசம். வருஷத்திற்குப் பிறகு கேட்டால் ஸம்ஸ்காரம் நடந்திருக்கும் விஷயத்தில் மூன்று நாளும், நடக்காத விஷயத்தில் மாதா பிதாக்களுக்குப் போல் பத்து நாளும் ஆசௌசம். 29

அதிக்ராந்தமான ஞாதியின் மரணம் கேட்டால்

  1. அதிக்ராந்தமான தசாஹாசௌசத்தைக் கேட்டால், மூன்று மாஸம் வரையில் ஞாதிகளுக்கு மூன்று நாளும், நாலாவது மாஸம் முதல் ஆறாவது மாஸம் முடிவு வரையில் பக்ஷிணீயும், அதன் பிறகு ஒரு வருஷம் வரையில் ஒரு தினமும் ஆசௌசம், ஒரு வருஷத்திற்குப் பிறகு ஸ்நாந மாத்திரம். இங்கு ஞாதிகள் என்று சொன்ன விஷயம் மாதா பிதாக்கள் தவிர ப்ராதா, பிதாமஹர் முதலான எல்லா ஞாதிகளையும் சொன்னபடி, ஆகையால் அவர்களுக்கும் அதுவே ந்யாயம்; இங்கு சொன்ன அதிக்ராந்தா சௌசமானது ஸம்ஸ்காரம் அடைந்த விஷயம், ஸம்ஸ்காரம் நடக்காத பக்ஷத்தில் (18)வது பாராவில் சொன்னபடி ஆசௌச க்ரமம் அறிந்து கொள்ளத் தககது. 30

207

अपरप्रयोगः

அதிக்ராந்த பந்து மரணத்தில்

  1. அதிக்ராந்தமான த்ரிராத்ராசெளளம் (மூன்று நாள் தீட்டு) பத்து நாளுக்குள் கேட்டால் ஒரு நாள், அதிக்ராந்தமான பக்ஷிணீ ஆசௌசம் பத்து நாளுக்குள் கேட்டால் ஒரு காலம், அது எப்படி என்றால்? பகலில் கேட்டால் பகல் மாத்ரமும், ராத்ரியில் கேட்டால் ராத்ரி மாத்ரமும், இந்த இரண்டு ஆசௌசங்களும் பத்து நாளுக்குப் பிறகு கேட்டால் ஸ்நாந மாத்திரத்தினாலேயே கழிந்து விடும், அதிக்ராந்தமான தினாசௌசத்திற்கு பத்து நாளுக்குள்ளேயும் ஸ்நாந மாத்ரம்தான். 31

அனுபநீத மரணத்தில் அதிக்ராந்த விஷயத்தில்

  1. ஏழாவது வருஷ ஆரம்பம் இல்லாத உபநயநமாகாதவன் மரணத்தைத் தேசாந்தரத்தில் பத்து நாளுக்குள் கேட்டால் மாதா பிதாக்களுக்கும் ப்ராதாக்களுக்கும் மீதி நாள் ஆசௌசம். மற்றவர்களுக்கு (31)வது பாராவில் சொன்னபடியே ஆசௌசம். இந்த ஆசௌசம் பத்து நாளுக்குள் கேட்டவர்கள் விஷயம். அதற்கு மேல் கேட்டால் மாதா பிதாக்களுக்கும் ப்ராதாக்களுக்கும் “மூன்று மாஸத்துக்குள் மூன்று நாள்" என்று சொல்லப்பட்ட ப்ரமாணத்தின் படி மூன்று நாள் ஆசௌசம். அவர்கள் தவிர, மற்ற ஞாதிகளுக்கு ஆசௌசமில்லை. ஸ்நாந மாத்திரமுண்டு. உபநயநமாகாத போதிலும் ஏழாவது வருஷம் ஆரம்பித்திருந்தால் அவனுடைய மரணத்தில் மாதா, பிதா, ப்ராதாக்களுக்குப் போல் ஞாதிகளுக்கும் பத்து நாள் ஆசௌசம். பத்து நாளுக்கு மேல் அவர்களுக்கும் (31)வது பாராவில் சொன்ன அதிக்ராந்தாசெளசத்தின் முறைப்படியே முப்பது காதத்திற்கு மேற்பட்ட தேசாந்தரத்தில் உபயநயநம் இல்லாதவன் மரித்தால் மாதா, பிதா, ப்ராதா தவிர மற்ற ஞாதிகளுக்கு பத்து நாளுக்குள் கேட்டால் ஸ்நாநமே தவிர, ஆசௌசம் இல்லை. 32

உ 33. இவ்விடத்தில் பக்ஷாந்தரம் உண்டு. ஏழாவது வருஷம் ஆரம்பமில்லாத அநுபநீதனுடைய மரணம் தேசாந்தரத்தில் உண்டாகி அதிக்ராந்தமானால் பத்து நாளுக்குள் கேட்டாலும் மாதா, பிதா, ப்ராதா தவிர மற்றவர்களுக்கு ஆசௌசமில்லை. ஸ்நாந மாத்திரந்தான் என்று சிலர் சொல்லுகிறார்கள். அது சரியன்று. 33

208

अपरप्रयोगः

ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவோடு ஸமானாசௌசம்

  1. பர்த்தாவிற்கு உண்டான ஆசௌசம் எல்லாம் ஸ்த்ரீகளுக்கும் உண்டு என்று சொல்லி இருக்கிறபடியால் பர்த்தா மரித்த பிற்பாடும் மாமியார் மாமனாருடைய மரணத்தில் கேட்ட தினம் முதற்கொண்டு பத்து நாள் ஆசௌசம். சிலர் மாதா, பிதா, பர்த்தா இம் மூவர்களுடைய மரணத்தில் மாத்திரம் கேட்ட நாள் முதற்கொண்டு பத்து நாள் ஆசௌசம் சொல்லியிருக்கிறபடியால் மீதி நாள் மாத்திரம் ஆசௌசம் உண்டென்று சொல்லுகிறார்கள். இது சிஷ்டாசாரத்திற்கு விருத்தம். 34

யதிகளுக்கும் ப்ரம்மசாரிகளுக்கும்

  1. ப்ரம்மசாரிகளுக்கு மாதா, பிதா, ஜ்யேஷ்ட ப்ராதா இவர்கள் தவிர மற்ற ஞாதிகளுடைய மரணத்தில் க்ஷௌரமும் தர்ப்பணமும் ஆசௌசமும் இல்லை. மாதா, பிதா, மாதாமஹன், மாதாமஹி ஜ்யேஷ்ட ப்ராதா, பெரிய தகப்பனார், சிறிய தகப்பனார், அம்மான், ஆசார்யன் இவர்களுடைய மரணத்தில் தான் ஸம்ஸ்கர்த்தாவாக வரும் காலத்தில் ஸம்ஸ்கார காலத்தில் மாத்திரம் ஆசௌசம், ஸ்நாநம் பண்ணால் சுத்தி, கீழ்ச் சொல்லியவர்கள் தவிர, மற்றவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதாக இருந்தால் ப்ரம்மசர்ய வ்ரத லோபம் வரும். ஸன்னியாஸிகள் மரணத்தில் அவர் பூர்வாச்ரம ஞாதிகளுக்கும் அந்த ஞாதி மரணத்தில் ஸன்யாஸிக்கும் பரஸ்பரம் ஆசௌசம் முதலானவைகள் இல்லை. ப்ரம்மசாரிக்கும் மாதா பிதாக்களுடைய ஸம்ஸ்காரம் செய்வதாக இருந்தால் அன்றைய தினம் முழுவதும் ஆசௌசம் உண்டென்று சிலர் சொல்லுவார்கள். 35

ஷண்டாதிகள் விஷயம்

  1. ப்ரஷ்டையான ஸ்த்ரீ, நபும்ஸகன், பாஷண்டன், கர்மப்ரஷ்டன் இவர்களுடைய மரணத்தில் இவர் ஞாதிகளுக்கும் மற்ற பந்துக்களுக்கும் பரஸ்பரம் மரணாதிகளில் ஆசௌச தர்ப்பணாதிகள் ஒன்றுமே இல்லை. ஆனால் கீழ்ச் சொல்லிய பிரஷ்டையான ஸ்த்ரீ முதலானவர்களுடைய மரணத்தில் முக்கிய கர்த்தா கீழே சொல்லியவர்களை உடனே மந்த்ரம் இல்லாமல் தகனம் செய்து பிற்பாடு குறித்த காலத்தில் மந்த்ரபூர்வகமாக ஸம்ஸ்காரம் செய்யத் தக்கவன். 36

209

अपरप्रयोगः

இவ்விதம் ஜந்ந மரணாசௌசங்களின் க்ரமமானது எல்லோருக்கும் தெளிவாய்த் தெரிய வேண்டியதற்காக (36) பாராக்களினால் சுருக்கமாய் எழுதப்பட்டது.

அகஸன்னிபாதம் - அனேகாசௌசம் -

ஒன்று சேர்ந்தால்

  1. ஒரு ஜநநா சௌசம் அநுஷ்டிக்கும் காலத்தில் அதற்கு ஸமாநமானதோ? அல்லது குறைந்ததோ? மற்றொரு ஜநநாசௌசம் நேர்ந்தால் முன் ஆசௌசத்தோடே பிற்பட்ட ஆசௌசமும் கழிந்து விடும். அதற்காகத் தீனியாக ஆசௌச அநுஷ்டானமில்லை. 1

  2. ஒரு ஜநநாசௌசத்தில் பத்தாவது தினத்தில் வேறு ஜநநாசௌசம் உண்டானால் முதல் ஆசௌசம் அநுஷ்டித்த பிறகு இரண்டாவது ஆசௌசம் இரண்டு நாள் அனுஷ்டிக்க வேண்டும். முதல் ஆசௌசத்தின் பத்தாவது நாள் ராத்ரி கடைசி யாமத்தில் இரண்டாவது ஆசௌசம் உண்டானால் மாத்திரம் முன் சொல்லியபடி இரண்டு நாள், மூன்று நாள், ஆசௌச அநுஷ்டானம். வேறு காலத்தில் உண்டாகி பத்தாவது தினத்தின் ராத்ரியின் கடைசி யாமத்தில் கடைசி வினாடியில் கேட்டாலும் முதல் ஆசௌசத்தோடே பிற்பட்ட ஆசௌசத்திற்கும் நிவ்ருத்தி உண்டாகும். 2

  3. முன் ஜநநாசௌசத்தின் பத்தாவது தினம் கழித்து பதினோராவது தினம் ஸூர்யோதய காலத்தில் கேட்டாலும் முன் ஆசௌசத்தோடு நிவ்ருத்தியாகாது, பிற்பட்ட ஜநநாசௌசத்தின் மீதி நாள் ஆசௌசம் அநுஷ்டித்தே தீர வேண்டும்.

  4. அதிக்ராந்தமான ஜநநாசௌசம் ஒருவரும் அனுஷ்டிக்க வேண்டியதில்லை.

  5. அதிகமான ஜநநாசௌசத்தின் கடைசி தினத்தில் ஸ்வல்பமான ஜநநாசௌசம் உண்டானால் அதற்காக இரண்டு மூன்று நாள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டாம்.

  6. ஞாதி விஷயமான ஜநநாசௌச நடுவில் தன் பத்னீ ப்ரஸவித்தால் ப்ரஸவ தினம் முதற்கொண்டு பர்த்தாவிற்கு மாத்திரம் பத்து நாள் ஆசௌசம். ப்ராதாக்களுக்கு முன் ஆசௌச

210

211

अपरप्रयोगः

சேஷத்தோடு நிவ்ருத்தி, ஸூதிகைக்கு மாத்திரம் எப்படியாகிலும் ஸ்வகாலத்திலேயே சுத்தி. 6

  1. தசராத்ரமான மரணாசௌசத்தில் தசராத்ரமான மரணாசௌசமும், தசராத்ரமான ஜநநாசௌசத்தில் தசராத்ரமான ஜநநாசௌசமும் நேர்ந்தால் முந்திய ஆசௌசமே பலிஷ்டம், கீழ்க்கண்ட ஆசௌசங்களில் எது தீர்க்க காலாசௌசமோ அது பலிஷ்டம். இந்த விதி ஏக ஜாதீயமான ஆசௌச விஷயத்தில். மரணத்தில் ஜநநமும் ஜநநத்தில் மரணமும் சேர்ந்தால் மரணமே பலிஷ்டம். 7

  2. இந்த ஆசௌசங்களில் முந்தியது பிந்தியது என்பதாவது என்னவென்றால், முன் உண்டானது பின் உண்டானது என்பதே தவிர, முன் கேட்டது பின் கேட்டது அன்று, ஆகையால் பின்னால் உண்டான ஜநந மரண ஆசௌசம். அனுஷ்டிக்கும் காலத்தில் அதன் முந்திய ஜநந மரணங்களைக் கேட்டால் கேட்ட ஆசௌசத்தின் மீதி தினத்தோடே தத்காலம் அனுஷ்டித்து வருகிற பிந்திய ஜநந மரணாசௌசத்திற்கும் நிவ்ருத்தி உண்டாகும். மாதா, பிதா, பர்த்தா இவர்களுடைய மரணத்தில் கேட்டது முதலே பதது நாள் ஆசௌசம் அல்லது மரணம் முதலன்று. 8

  3. ஜநநாசௌச சமயத்தில் மரணாசௌசம் உண்டானால் அது ஜநநாசௌசத்தைக் காட்டிலும் குறைந்ததாயினும் ஜநநாசௌசத்தோடு நிவ்ருத்தியாகாது. மரணாசௌசம் ஸ்வகாலம் வரையில் அனுஷ்டிக்க வேண்டியது. 9

  4. த்ரிராத்ரமான மரணாசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் அதற்குப் பெரியதாகிய தசராத்ரமான ஜநநாசௌசம் உண்டானாலும் மரணாசௌச சேஷத்தோடே ஜநநாசௌசத்திற்கும் நிவ்ருத்தி உண்டாகும். 10

  5. ஜநநாசௌச சமயத்தில் அற்பமான மரணாசௌசம் வந்தால் அதன் நிவ்ருத்தி காலத்திலேயே ஐந்நாசௌச சேஷமும் நிவ்ருத்தியாகும். 11

பக்ஷாந்திரம்

  1. இவ்விடத்தில் சிலர் “தீர்க்கத்தால் அற்பாசௌசம் போகும். அற்பாசௌசத்தால் தீர்க்காசௌசம் போகாது” என்கிற வசனத்தினால் அற்பமான மரணாசௌச சமயத்தில் அதிகமான

अपरप्रयोगः

ஜநநாசௌசம் உண்டானாலும் அதிகமான ஜநநாசௌச சமயத்தில் அற்பமான மரணாசௌசம் உண்டானாலும், மரணாசௌசத்தோடு ஜநநாசௌசம் நிவ்ருத்தமாகாது. ஸ்வ காலத்திலே தான் நிவ்ருத்தமாகும் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் முன் சொல்லிய வசனம் ஏகஜாதீயமான ஆசௌச விஷயமானதால் அதற்கு “அற்பமாகிய மரணாசௌசத்தில் அதிகமாகிய ஜநநாசௌசம் உண்டானால் அற்பமான மரணாசௌசத்தோடு ஜநநாசௌசம் நிவ்ருத்தமாகுமே அல்லது அதிகமான ஜந்நாசௌசம் ஸ்வகாலம் வரையில் அனுஷ்டிக்க வேண்டாம்” என்றும், “அதிகமான ஜநநாசௌசத்தில் அதற்குக் குறைந்ததாகிய மரணாசௌசம் அபவாதமாக மரணாசௌசத்தோடே உண்டானாலும், ஜநநாசௌசமும் நிவ்ருத்தகமாகும். ஜநநாசௌசம் ஸ்வகாலம் வரையில் அனுஷ்டிக்க வேண்டாம்" என்று இவை முதலான வசனம் இருக்கிறபடியால் ஜநநாசௌசம் அதிகமாயிருந்த போதிலும் அற்பமான மரணாசௌசத்தோடே நிவ்ருத்தமாகும் என்பதில் யாதொரு ஆக்ஷேபமும் இல்லை. ஆகிலும் “மரணாசௌசத்தைக் காட்டிலும் அதற்கு ஸமானமோ அற்பமோ ஐநநாசௌசம் உண்டானால் மரணாசௌசத்தோடே நிவ்ருத்தியாகும். பத்து நாளாகிய ஜநநாசௌசமானது அற்பமாகிய மரணாசௌசத்தால் நிவ்ருத்தியாகாது” என்று இவை முதலான விசேஷ வசனங்கள் இருக்கிறபடியால் இரண்டு பக்ஷங்களும் சாஸ்திர ஸம்மதங்கள்தான். ஆகையால் சிஷ்டாசாரம் போல் நடந்து கொள்வது. 12

  1. மரணாசௌசத்தின் பத்தாவது நாள் தசராத்ரமான ஜநநாசௌசம் உண்டானாலும், மரணாசௌசம் அநுஷ்டித்த பிறகு (2வது) பாராவில் சொல்லியபடி இரண்டு மூன்று ஜநநாசௌசம் அநுஷ்டிக்க வேண்டும். நாள் 13

வேறு 14. மரணாசௌசத்தின் பத்தாவது தினத்தில் தசராத்ரமான மரணாசௌசம் உண்டானாலும் (2வது) பாராவில் சொல்லியபடியே முந்திய ஆசௌசம் அனுஷ்டித்த பிறகு பிந்திய ஆசௌசத்திற்காக இரண்டு மூன்று நாள் அனுஷ்டிக்க வேண்டும். 14

  1. அதிகமான மரணாசௌசத்தின் பத்தாவது நாள் அற்பமான மரணாசௌசம் உண்டானால் முந்திய ஆசௌசத்தோடே பிந்திய ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். 15

212

213

ஆசௌச விஷயம்

  1. முன் ஆசௌசத்தின் கடைசி தினத்தில் ஜந்நாசௌச கட்டத்தில் சொல்லிய ரீதியாக பிந்திய மரணம் உண்டானால் மாத்திரம் இரண்டு மூன்று நாள் அதிகமாக ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். அல்லது அதன் பிறகு உண்டாகிய மரணத்தை பத்தாவது நாளில் கேட்டால் அதனுடைய பத்தாவது நாள் ராத்ரியின் கடைசி யாமத்தின் கடைசி க்ஷணத்தின் முன் கேட்டாலும் முந்திய ஆசௌசத்தோடே நிவ்ருத்தமாகும். 16

  2. முந்திய ஆசௌசத்தின் கடைசி தினத்தில் மறுபடியும் தசராத்ராசௌசம் உண்டானால் எப்படி உத்தராசௌசத்திற்காக இரண்டு, மூன்று நாள் ஆசௌசம் அதிகமாக அனுஷ்டிக்க வேண்டுமோ? அதுபோலவே அந்த ஆசௌசத்தின் கடைசி தினத்தில் மூன்றாவதாகிய தசராத்ராசௌசம் உண்டானால் அதற்காக இரண்டாவது ஆசௌசத்தின் பிறகு இரண்டு மூன்று நாள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். ஆனாலும் இரண்டு தச ராத்ராசௌசங்கள் சேர்ந்தால் இரண்டாவது தசராத்ராசௌசத்தை இரண்டு மூன்று தினங்கள் அனுஷ்டிக்க வேண்டுமென்று அனேக வசனங்கள் காணப்படுகின்றன. இவ் விசேஷமானது “ஸம்பூர்ணாசௌச விஷயம்" என்கிற வாக்யமும் வைத்யநாதீயத்தில் காணப்படுகிறது. பிரக்ருதத்தில் இரண்டாவது ஆசௌசமானது இரண்டு மூன்று நாள் அனுஷ்டிக்கக் கூடியதாலும் மூன்றாவது ஆசௌசம் பத்து நாள் அனுஷ்டிக்கக் கூடியதாலும முன் சொன்ன அந்த வசனத்திற்கு விஷயம் இல்லாமலே இரண்டாவது ஆசௌசத்தோடே மூன்றாவது ஆசௌசத்திற்கும் நிவ்ருத்தி உண்டாகலாம் என்றும், “முந்திய ஆசௌசத்தோடு பிந்திய ஆசௌசமும் நிவ்ருத்தமாகும்” என்னும் இவை முதலான வசன ஸ்வாரஸ்யத்தால் என்றும், அல்லது இரண்டாவது ஆசௌசத்தைக் காட்டிலும் மூன்றாவது ஆசௌசமானது தசராத்ரமாகையால் அதிகமாகையாலே மூன்றாவது ஆசௌசத்தின் உத்பத்தி தினம் முதல் பத்து நாள் அனுஷ்டிக்க வேண்டியதாகும் என்றும் அல்லது இரண்டாவது ஆசௌசத்தின் பத்தாவது தினத்தோடு மூன்றாவது ஆசௌசமும் கழிந்து விடுமென்றும், இப்படி பலவிதமான சங்கை உண்டாகலாம். அப்படி இருந்த போதிலும் அந்த வசனங்கள் அதிகமாக இரண்டு மூன்று நாள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டியதற்காக வந்திருக்கிற இரண்டாவது ஆசௌசம் குறைந்ததன்று என்பதில் தாத்பர்யமாகையால் முன்

ஆசௌசத்தினுடைய கடைசி தினத்தின் பிந்திய ஆசௌசம்

ஆசௌச விஷயம்

ப்ராப்தமானால் முந்திய ஆசௌசத்திற்குப் பிறகு பிந்திய ஆசௌசம் இரண்டு நாள் அனுஷ்டிக்க வேண்டுமென்று இவை முதலான வசனங்களின் ஸ்வாரஸ்யத்தாலும் முன் சொன்ன யுக்திக்கு இணங்கியதாலும் முன் சொன்ன அர்த்தமானது சரியென்று தோன்றுகிறது. சிஷ்டாசாரம்போல் வ்யவஸ்தை செய்து கொள்க. 17

  1. முந்திய ஆசௌசத்தின் கடைசி தினத்தில் இரண்டாவது சௌசம் ப்ராப்தமானால் அதற்காக இரண்டு மூன்று நாள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டதன்றோ அப்படி இரண்டு மூன்று நாள் அனுஷ்டித்த பிறகு மூன்றாவதாகிய தசராத்ராசௌசம் ப்ராப்தமானால் இரண்டாவது ஆசௌசத்தின் பத்தாவது தினத்திலேயே ஆசௌசமும் நிவ்ருத்தமாகும் என்பது ஸித்தம். மூன்றாவது 18

  2. ஜநநாசௌசத்தின் பத்தாவது தினம் தாண்டி வேறு ஜநநாசௌசம் முந்தியதன் பத்தாவது தினத்தில் உண்டானதாகக் கேட்டால் அந்த ஜநநாசௌசத்தை உண்டான தினம் முதல் தசராத்ரம் அனுஷ்டிக்க வேண்டும். 19

  3. முதல் மரணாசௌச மத்தியில் உண்டான இரண்டாவது மரணாசௌசத்தை முதல் ஆசௌசத்தின் மத்தியில் கேட்டால் முதல் ஆசௌசத்தோடே இரண்டாவது ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். முந்திய ஆசௌசம் கழிந்த பிறகு அதிக்ராந்தம் இல்லாத இரண்டாவது ஆசௌசம் கேட்டால் அதன் மீதியான தினம் வரையில் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். அதிக்ராந்தமான பிறகு கேட்டால் “மூன்று மாஸம் வரையில் மூன்று நாள்” என்கிற வசனத்தின்படி ஆசௌசம் ஸித்தம். இதுபோல் மற்றதும் தெரிந்து கொள்க. 20

  4. இவ்விடத்தில் சிலர் ஒரு ஆசௌசத்தின் மத்தியில் பிராப்தமான மற்றொரு ஆசௌசத்தை முந்திய ஆசௌசம் கழிந்த பிறகு கேட்டால் அதற்காக மறுபடியும் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டியதில்லை. உதாஹரணமாக ஒருவன் ஒரு தசராத்தராசௌசம் அனுஷ்டித்து வருகிறான். அதன் மத்தியில் தேசாந்தரத்தில் மரணாசௌசம் உண்டானால் பூர்வாசௌசத்தோடே இந்த ஆசௌசமும் நிவ்ருத்திக்கத் தகுந்ததாகையால் அந்த இரண்டாவது ஆசௌசத்தை முதல் ஆசௌசம் கழிந்த பிறகு கேட்டாலும் அதற்காக ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டாம். அந்த ஆசௌச

214

215

ஆசௌச விஷயம்

வசனங்களில் ஆசௌசத்தோடு ஆசௌசம் கலந்தால் மிச்சமான தினத்தோடே சுத்தி உண்டென்று விதித்திருக்கிறபடியால். எப்படி என்றால் ஒருவன் ஸ்நாநம் பண்ணிய பிறகு ஸ்நானத்திற்கு முந்தி தனக்கு நேர்ந்த ஒரு அசுத்தியைக் கேட்டால் அந்த அசுத்திக்காக மறுபடியும் ஸ்நாநம் செய்ய வேண்டாம். முன் செய்திருந்த ஸ்நானத்தினாலேயே இந்த அசுத்தியும் நிருத்தமாகுமோ அதுபோலென்று சொல்லுகிறார்கள். வைத்தியனாதர் “இவ்விடத்தில் சிலர்” சொல்லியபடியால் அவருக்கு ஸம்மதமில்லை தோன்றுகிறது. இந்த என்று பக்ஷத்தை எடுத்துச் என்று 21

  1. தேசாந்தரத்தில் முன்னும் பின்னும் ஆக இரண்டு மரணம் உண்டாகி, பிந்திய ஆசௌசம் கேட்டு அனுஷ்டிக்கும் காலத்தில் தத்காலம் கழியாத முன் ஆசௌசத்தைக் கேட்டால் கேட்ட முதலாவது ஆசௌசத்தின் சேஷமான தினத்தோடு தான் அனுஷ்டித்துக் கொண்டு வருகிற இரண்டாவது ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். இரண்டாவது ஆசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் அதிக்ராந்தமான பூர்வாசௌசத்தைக் கேட்டால் அந்த ஆசௌசமானது “மூன்று மாஸம் வரையில் மூன்று நாள்’ என்கிற வசனத்தின் படி மூன்று நாள் அனுஷ்டிக்க வேண்டியதாலும் தத்காலம் அனுஷ்டித்து வருகிற இரண்டாவதான ஆசௌசம் தசராத்ரமானபடியாலே பலிஷ்டமானபடியால் இரண்டாவது ஆசௌசத்தோடே முதல் ஆசௌசமும் கழிந்து விடும். 22

  2. தேசாந்தரத்தில் இரண்டு மரணம் உண்டாகி இரண்டும் அதிக்ராந்தமாய் இரண்டாவது ஆசௌசத்தை முன் கேட்டு த்ரிராத்ரம் ஆசௌசம் அனுஷ்டித்து வருகையில் முந்திய மரணத்தைக் கேட்டால், அதன் மீதி நாள் அதிக்ராந்தாசௌசம் அனுஷ்டிக்க வேண்டியது. பிந்திய ஆசௌசத்தினால் முந்திய ஆசௌசம் நிவிருத்தமாகாது. 23

  3. அதிக்ராந்தமான மரணாசௌசம் மூன்று நாள் அனுஷ்டிக்கும் காலத்தில் மூன்று மாஸம் தாண்டிய ஒரு மரணாசௌசத்தைக் கேட்டால் தத்காலம் அனுஷ்டித்து வருகிற பிந்தியதான திரிராத்ராசௌசத்தோடு முந்திய ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். முந்தியது பக்ஷிணியாசௌசம் ஆகையால், பிந்தியது த்ரிராத்ராசௌசத்தைக் காட்டிலும் துர்பலமாகும். 24

216

ஆசௌச விஷயம்

  1. அதிக்ராந்தமான முன் மரணத்தின் த்ரிராத்ராசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் அதிக்ராந்தமான பின் மரணத்தைக் கேட்டால் அது முந்திய மரணாசௌசத்தோடு கழிந்து விடும், ஸமானாசௌசங்கள் ஒன்று சேர்ந்தால் முந்திய சௌசம் பலமுள்ளது. 25

  2. அதிக்ராந்தமான த்ரிராத்ராசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் தசாஹமான மரணாசௌசம் நேர்ந்தாலும் தேசாந்தரத்தில் உண்டானதைக் கேட்டாலும் பிற்பாடு வந்தது தசராத்ரமாகையால் பலிஷ்மானபடியால் அதோடுதான் பூர்வாசெளசம் நிவ்ருத்தமாகும். 26

  3. மூன்று மாஸம் தாண்டிய ஞாதி மரணத்தைக் கேட்டு ஆசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் மூன்று மாஸத்திற்குள் அடங்கிய ஞாதி மரணத்தைக் கேட்டால் அதனுடைய மீதியான சௌசம் அனுஷ்டிக்கவே தகுந்தது. அற்பமான முன் அதிகமாகிய ஆசௌசத்தால் நிவ்ருத்தமாகாது. ஆசௌசம் பிந்திய 27

  4. ஸமானோதகனுடைய மரணாசௌசமும் ஸபிண்டனுடைய பத்து நாளுக்கு மேற்பட்டு மூன்று மாஸத்திற்குள் அடங்கிய அதிக்ராந்தாசௌசமும் சேர்ந்தால் இரண்டும் துல்யமானபடியால் அவைகளில் எது முந்தியதோ அதோடு பிந்தியதும் நிவ்ருத்தமாகும். 28

  5. ஒரு தினத்தில் தத்காலம் உண்டாகிய ஜநநத்திற்காகவோ மரணத்திற்காகவோ ஆசௌசம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதே தினத்தின் தேசாந்தரத்தில் உண்டாகிய ஜநநமோ மரணமோ கேட்கப்படுகிறது. கேட்கப்பட்ட அந்த ஆசௌசத்திற்கு அன்றைய தினமே பத்தாவது தினமானால் “முன் ஆசௌசத்தின் கடைசி தினத்தில் ஸமானமான ஒரு ஆசௌசம் உண்டானால்” என்கிற வசனத்தினாலே ப்ரக்ருதம் தான் அனுஷ்டித்து வருகிற ஆசௌசத்திற்காக இரண்டு நாள், மூன்று நாள் அதிகமாக ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டியது, மறுதினம் தசம தினமானால் பிந்திய ஆசௌசம் இரண்டு நாள் அனுஷ்டிக்கப்பட்டபடியால் கேட்ட ஆசௌசத்தோடே முடிந்து விடும். 29

  6. ஸபிண்டனுடைய மரணாசௌச மத்தியில் மாதா, பிதா, பர்த்தா, பத்னீ, பிள்ளை, பெண் இவர்களின் மரணம் நேர்ந்தாலும்

ஆசௌச விஷயம்

தன் பத்னி ப்ரஸவித்தாலும் முன் ஆசௌசத்தோடு நிவ்ருத்தமாக மாட்டாது, ஸ்வ காலம் வரையில் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். 30

  1. தன் பத்னி ப்ரஸவித்த ஆசௌச மத்தியில் ஸபிண்டன் மரணம் நேர்ந்தால் ப்ரஸவாசௌசத்தின் பத்தாவது தினத்தில் க்ஷெளரம் பண்ணிக் கொண்டு ஞாதி மரணத்தின் மீதி நாள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். த்ரிராத்ரம் முதலான ஆசௌசம் நேர்ந்தாலும் இதே ந்யாயம், “ஜநநாசௌசம் மரணாசௌசத்தைக் கழிக்க மாட்டாது” என்கிற வசனத்திற்கு பிறந்த பத்து நாளுக்குள் நேர்ந்த சிசு மரணம் தவிர, மற்ற இடங்களில் ஸங்கோசம் இல்லாமையால், 31

  2. மாதா பிதாக்களின் மரணாசௌச மத்தியில் பத்னி ப்ரஸவித்தால் மரணாசௌசத்தோடு ப்ரஸவாசௌசமும் நிவ்ருத்தமாகும். சூதிகைக்கு மாத்திரம் ஸ்வ காலத்தில் தான் சுத்தி, மாதாவினுடைய மரணாசௌசத்தில் பிதாவின் மரணம் நேர்ந்தால் அன்று முதல் பத்து நாள் ஆசௌசம் அனுஷ்டிக்கவும் முந்திய மாதா மரணாசௌசத்தோடு பிந்திய பித்ரு மரணாசௌசம் நிவ்ருத்தம் 32 ஆகாது.

  3. பித்ரு மரணாசௌச மத்தியில் மாதாவின் மரணம் நேர்ந்தால் பித்ரு மரணாசௌசத்தின் பிறகு மாதாவிற்காக பக்ஷிE! (ஒன்றரை நாள்). 33

  4. மாதாவினுடையவோ பிதாவினுடையவோ ஆசௌசம் அனுஷ்டிக்கும் காலத்தில் பத்னி, பிள்ளை முதலானவர்கள் மரித்தாலும் முந்திய ஆசௌசத்தோடு பிந்திய ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். 34

  5. புத்திரனுடைய மரணாசௌச மத்தியில் பத்னி மரணம் நேர்ந்தால் அன்று முதற்கொண்டு தசராத்ராசௌசம் அனுஷ்டிக்கவும். பத்னியின் மரணாசௌச மத்தியில் புத்ரன் மரித்தால் பத்னியின் ஆசௌசத்தோட புத்ரனுடைய ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். 35

  6. பர்த்தாவின் மரணாசௌச மத்தியில் மாமியார் மாமனார் முதலானவர்கள் மரித்தாலும் பர்த்தாவினுடைய ஆசௌசத்தோடே பிந்திய ஆசௌசமும் நிவ்ருத்தமாகும். 36

217

ஆசௌச விஷயம்

  1. மாமியார், மாமனார் முதலானவர்களுடைய மரணாசௌச மத்தியில் பர்த்தா மரித்தால் அன்று முதல் பர்த்தாவிற்கு பத்து நாள் ஆசௌசம் அனுஷ்டிக்க வேண்டும். 37

  2. மாதா, பிதாக்களின் மரணாசௌசம் தவிர மற்ற மரணாசௌச மத்தியில் வருகிற மரணாசௌசமானது முந்தியதோடு ஸமானமாகிலும் குறைந்திருந்தாலும் தான் ஸம்ஸ்காரம் செய்யும் விஷயமாக இருந்தால் மாத்திரம் முந்திய ஆசௌசத்தோடு நிவ்ருத்தமாக மாட்டாது. ய 38

  3. மரணாசௌசம் உத்தமம், மத்யமம், அதமம் என்று மூன்று விதம். அதில் உத்தமமாவது கேட்ட தினம் முதல் பத்து நாள் அனுஷ்டிக்கத் தகுந்தது. மத்யமமாவது. உண்டான தினம் முதல் தத்தம் காலம் வரையில் முழுமையும் அனுஷ்டிக்கத் தகுந்தது. அதமமாவது. முந்திய ஆசௌசத்தினாலோ அதிகமான ஆசௌசத்தினாலோ கழியத் தகுந்தது. உத்தமாசௌசம் புருஷர்களுக்கு மாதா, பிதாக்களின் மரணத்திலும் ஸ்த்ரீகளுக்கு மாமியார், மாமனார், பர்த்தா இவர்களின் மரணத்திலும் மத்யமமானது பத்னியினுடையவும் பிள்ளையினுடையவும் தான் ஸம்ஸ்காரம் செய்யத் தகுந்தவனுடைய மரணத்திலும் உண்டென்று அறியத் தகுந்தது, அதமமானது முன் சொல்லப்பட்ட இரண்டு விஷயங்கள் தவிர, மற்ற விஷயங்களில் என்று அறியவும். 39

  4. இவ்விதம் மரணாசௌசத்திலும் ஜநநாசௌசத்திலும் வேறு ஆசௌசம் கலந்தால் அனுஷ்டிக்க வேண்டிய ஆசௌசத்தின் ப்ரகாரமானது சதகம் முதலாகிய கிரந்தத்தை அனுஸரித்து நாற்பது பாராக்களினால் சொல்லப்பட்டது. இதில் அஜ்ஞாநத்தினால் ஏதாவது பிழை இருந்தாலும் பெரியோர்களால் பொறுக்கத் தகுந்தது.

ஆசௌச ஸங்க்ரஹம் அகஸன்னிபாதம் முற்றிற்று.

218