२६ सपिण्डीकरण कारिका

अनुज्ञाक्रतुदक्षाख्य वरणं वैश्व देविकम्। पितुः पितृभ्यः प्रेताय विष्णवेच नमोन्तकम्। सङ्क्ल्पस्सात्विकत्यागोदेवाद्यासनपूर्वकम् । सर्वेषामेव वरणं कुण्डेष्ववयव नेजनम्।

21 அர்க்ய ஸம்யோஜநம்

உபவீதம். ப்ராணாயாமம். ப்ராசீநாவீதம். “அசேஷே ஸ்வீக்ருத்ய கோத்ரஸ்ய + ச்ராத்தே பிது: ப்ரேதஸ்ய ப்ரேதத்வ விமோசநார்த்தம் வஸ்வாதி பித்ருத்வ ஸித்யர்த்தம், ஸமாநோதகதா ஸித்யர்த்தம், அக்ஷய்ய பரம்பத் ப்ராப்த்யர்த்தம் அர்க்ய ஸம்யோஜநம் கர்த்தும்…. உபவீதம் ப்ராணாயாமம் ப்ராசீநாவீதம் அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம், அர்க்ய ஸம்யோஜநம் கரிஷ்யே”. க்ருச்ராசரணம். இடது முழங்காலிட்டுக் கொண்டு ப்ரேதார்க்யத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு (பித்ரர்க்யத்தின் இலை மூடியை விலக்கி விட்டு) மந்த்ர: + “ஸமாநோ +

1

162

द्वादशाहकृत्यं

163

कृसरादिप्रदानं च नानं स्थण्डिलकल्पनम् । येपार्थिवास इत्यादि दक्षिणे पात्र सादनम् । विश्वेदेव पितृप्रेत विष्णूनामर्घ्य सादनम् । आज्यं दर्ख्यौच संस्कृत्य सर्वार्ध्यग्रहणं ततः । मार्जनं भोजन भूमेर्देवाद्यावाहनं पुनः । पादप्रक्षालनं हस्तेदत्वाऽऽपोवरणं पुनः । अर्घ्यदानन्त्वर्चनादि दक्षिणातृप्तिरेवच। परिध्याद्यन्नहोमस्तु श्राद्धवच्च षडाहुती: । प्रेतायचाहुतीहुत्वा स्विष्टकृद्धोमशेषकम् । भोज्यासनादिदत्वातान्विधिवद्भोजयेत्ततः । आचान्तेष्वथदत्त्वापोभुक्तितृप्तिस्ततः क्रमात्। देवान्न्रोचयतेत्युक्त्वा स्वदितन्तु पितुः पितॄन् । ताम्बूल दक्षिणादानं सर्वेषां स्वस्तिवाचनम् । हस्तेषूदक दानन्तु अक्षय्यं वाचयेत्स्वधाम्। विश्वेदेवाश्च प्रीयन्तां पितॄणामपितत्तथा । अन्नशेष:किङ्क्रियतां दातारोन इतिब्रुवन् । स्वादु संसद इत्यादि प्रीणात्यन्ते नमस्क्रिया। पितृ पूर्वं यथास्थानं प्रतिष्ठाप्याथवै द्विजान् ॥

पिण्डदानं ततः कृत्वाऽर्घ्यसंयोजनं ततः । प्रेतपिण्डं त्रिधा कृत्वा वैतरण्याह्नदानकम् । दश दानं ततः कृत्वा पिण्ड संयोजनं ततः । ये समाना उपस्थानं पाथेयं पिण्ड शेषकम्। शेषान्न प्राशनञ्चैव ब्रह्म दण्डो विधीयते । पिण्डान्क्षिप्त्वाऽफ्सु संस्नायात् पुण्याहं सोदकुम्भकम् । सपिण्डीकरणश्राद्धकारिका लिखिताऽधुना ।।

சொல்லி, சேர்க்க ஸுஸஹாஸதி” என்று பித்ரர்க்யத்தில் வேண்டும்.“ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்றும் மூன்று தடவை சொல்ல வேண்டும்.

22 த்ரேதாகரணம்

ஏழு தர்ப்பங்களை நனைத்து முறுக்கி இரு கைகளிலும் கொண்டு ப்ரேத பிண்டத்தை மூன்றாக (இரண்டு துண்டம்) போட்டு அதனதன் முகப்பைப் பித்ரு பிண்டங்களைப் பார்ப்பதாகத் திருப்பி வைக்க வேண்டும்.

23 தாநாதிகள்

காமய உபவீதம், ப்ராணாயாமம், ப்ராசீநாவீதம், ப்ரீத்யர்த்தம். “கோத்ரஸ்ய + ச்ராத்தே மம பிது: வைதரணீ நதி உத்தாரணார்த்தம் வைதரணீ ஸம்ஜ்ஞக கோதாநம் கரிஷ்யே” என்று கன்றுடன் கூடிய பசுவைக் குளிப்பாட்டி அலங்கரித்து, “யமத்வாரே + ஜிகீஷயா கவாமங்கேஷு + ப்ரயச்சமே - ஹிரண்ய கர்ப்ப + ப்ரயச்சமே மம பிது: ப்ரேதஸ்ய வைதரணீ நத்யுத் தாரணார்த்தம் வைதரணீ ஸம்ஜ்ஞகாம் இமாம் காம் ஸவத்ஸாம் ஸதோஹந பாத்ராம் ஸதக்ஷிணாகாம் பகவத் ப்ரீதிம் மாந: துப்யமஹம் ஸம்ப்ரததே” என்று வாலில் ஜலத்தை விட்டுப் பிடித்துக் கொடுக்க வேண்டும். பிறகு, “பிண்ட ஸம்யோஜந காலே தசதாநாநி மநஸோத்திஷ்டதாநாநி ச கரிஷ்யே”. தச தானத்தில் கோ தானம், பூ தானம், திலதானம் ஹிரண்ய தானம், வஸ்திர தானம், தான்ய தானம், வெல்லம்-வெள்ளி-உப்பு இவைகள் முக்யங்கள். மேலும் ஸௌகர்யத்திற்குத் தக்கவாறு தீப தானம், புஸ்தகம், உதகும்பம், குடை, பாதரக்ஷை, ஆஸனப் பலகை, யஷ்டி (ஊன்றுகோல்), விசிறி, கம்பளம், பலம் இவைகளில் எதைக் கொடுக்கலாமோ, அவைகளை அததற்கான தாந ச்லோகங்களைச் சொல்லி ஸமர்ப்பிக்கலாம். கடைசியாக ஸாளக்ராம தானம்.

164

द्वादशाह कृत्यं:

24 பிண்ட ஸம்யோஜநம்

ப்ரேதத்வ ஸபிண்டதா ஸித்யர்த்தம் பரம்பத ஸேவித்தல், அனுஜ்ஞை. “கோத்ரஸ்ய + ச்ராத்தே மம பிது: ப்ரேதஸ்ய விமோசநார்த்தம் வஸ்வாதி பித்ருத்வ ஸித்யர்த்தம் அக்ஷய்ய ப்ராப்த்யர்த்தம் பிண்ட ஸம்யோஜநம் கர்த்தும்”. உபவீதம், ப்ராணாயாமம், ப்ராசீநாவீதம். அனுஜ்ஞையில் சொன்னது போலச் சொல்லி, பிண்ட ஸம்யோஜநம் கரிஷ்யே, க்ருச்ராசரணம். இடது முழங்காலிட்டுக் கொண்டு தெற்கு முகமாக இருந்து வலது கையை ப்ரேத பிண்ட துண்டங்களின் மேல் புறத்திலும் இடது கையை பிது: பித்ராதி பிண்டங்களின் கீழ்ப் புறத்திலுமாக வைத்து, மந்திரங்களைச் சொல்லி, முடியும் பொழுது, ப்ரேத பிண்ட கண்டங்களை பிது: பித்ராதி பிண்டங்களுடன் ஒன்று சேர்க்க வேண்டும். முதலில் மதுத்ரயம். “ஸங்கச்சத்வம் உபாஸத. ஸமாநோமந்த்ர: + ஸுஸுஹாஸதி - ஸ்ரீமதே நாராயணாய நம:” என்று சொல்லி ஒன்று சேர்த்து பிறகு ஒவ்வொரு பிண்டமாக பெரிய பிண்டமும் சிறிய பிண்டமும் தனிப்படத் தெரியாதவாறு அந்தந்தப் பிண்டங்களுடன் பிடித்து - பிடித்து வைத்துவிட வேண்டும் (மேலே தூக்கி உருட்டி வைக்கக் கூடாது. தரையில் வைத்தபடியே ஒன்று சேர்க்க வேண்டும்). பிறகு எழுந்திருந்து நின்று இறைந்து “யேஸமாநா: + சஸமா:” எனச் சொல்ல வேண்டும்.

  • உபவீதம். உட்கார்ந்து ப்ராணாயாமம். ப்ராசீநாவீதம். “விருத்த ப்ரபிதாமஹ ப்ரீத்யர்த்தம் பாதேய தாநம் கரிஷ்யே — தேசாத் தேசம் + சர்ம ப்ரயச்சமே இதம் பாதேயம் விருத்த ப்ரபிதாமஹ ப்ரீதிம் காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே’ எனச் சொல்ல வேண்டும்.

25 பிண்ட ப்ரதான சேஷ கார்யம்

பிண்ட ப்ரதான ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட திலோதக சேஷத்தைக் கொண்டு (அவச்யமாகில் விருத்தி பண்ணிக் கொண்டு) “மார்ஜயந்தாம் பிதர:, மார்ஜயந்தாம் பிதாமஹா:, மார்ஜயந்தாம் ப்ரபிதாமஹா:, மார்ஜயந்தாம் பிதுர் மாதர:, மார்ஜயந்தாம் பிது: பிதாமஹ்ய:, மார்ஜயந்தாம் பிது: ப்ரபிதாமஹ்ய:” என்று பிண்டங்களின் மேல் திலோதகத்தை விட்டு எழுந்து நின்று ‘யே ச வோத்ர + த்ருப்யத த்ருப்யத - த்ருப்யத” என்ற மந்திரங்களால் உபஸ்தானம் செய்து உட்கார வேண்டும். -

165

முதலில் உள்ள திலோதகத்துடன் ஸம்யோகம் செய்யப்பட்ட அர்க்ய ஜலத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு அதில் உள்ள பவித்ரத்தையும் அவிழ்த்து விட்டுக் கொண்டு அந்தத் திலோதக பாத்திரத்தை வலது உள்ளங்கையில் வைத்து, இடது உள்ளங்கையினால் மூடிக் கொண்டு “புத்ராந் பௌத்ராந் தர்ப்பயந்து. ஒரே மூச்சில் த்ருப்யத த்ருப்யத, தருப்யத த்ருப்யத, த்ருப்யத த்ருப்யத, த்ருப்யத த்ருப்யத த்ருப்யத” என்பதாக இந்த மந்திரங்களால் மூன்று அப்ரதக்ஷிண பரிஷேசனம் செய்து, தென்னண்டையில் கவிழ்க்க வேண்டும் (இந்த ஸமயத்திலேயே விச்வே தேவ விஷ்ணு அர்க்ய ஜலங்களையும் கவிழ்த்து விடலாம்). உபவீதம் பண்ணி கவிழ்த்துள்ள பாத்ரங்களை இரண்டு இரண்டாக நிமிர்த்தி ப்ரோக்ஷித்து எடுத்து வைக்க வேண்டும். “பிண்ட பித்ரு தேவதாப்யோ நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி” என்று உபசாரங்களை ஸமர்ப்பித்து மாஷாபூபகுளா பூபங்களையும் நிவேதனம் செய்து பிண்ட சேஷ அந்நத்திலிருந்து தன் வாய் கொள்ளும் அளவு கையில் எடுத்து, “ப்ராணே நிவிஷ்ட:, அம்ருதம் ஜுஹோமி ப்ரம்ஹணிம ஆத்மாம்ரு தத்வாய" என்று வாயில் போட்டு விழுங்கி விட்டு உபவீதம், இரண்டு ஆசமனங்களைச் செய்து, ப்ராசீநாவீதம், “பிண்ட பித்ரு தேவதாப்யோ நம: யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி” என்று உத்வாஸநம் செய்து நடு இரண்டு பிண்டங்களை நகர்த்தி பிறகு தென்னண்டைகளை நகர்த்தி வடவண்டைகளையும் நகர்த்தி, அடியில் உள்ள தர்ப்பங்களைக் கையில் எடுத்துக் கொண்டு “யேஷாம் ந பிதா .4 யதா குசோதகை:’ என்று எள் ஜலத்துடன் தர்ப்பங்களை பித்ரு தீர்த்தத்தினால் கீழே போட வேண்டும். உபவீதம். ஸேவித்து ப்ராசீநாவீதம். “அசேஷே + ஸ்வீக்ருத்ய கோத்ரஸ்ய + அத்ய த்வாதசேஹநி ஸபிண்டீகரண ச்ராத்தாக்யே கர்மணி மந்த்ரலோப க்ரியாலோப த்ரவ்ய லோபேஷு ஸத்ஸ்வபி ஸர்வம் சாஸ்த்ராநுஷ்டிதம் பூயாத் இதி பவந்த: அநுக்ருஹ்ணந்து (ததாஸ்து, யதாசாஸ்த்ராநுஷ்டித மஸ்து” என்று ப்ரதிவசனம்.) உபவீதம். ஆசமனம். ஸாத்விக த்யாகம் செய்து அக்நி தவிர இதர உபயோகிக்கப்பட்ட பதார்த்தங்களை (நிவேதனம் செய்யப்பட்ட அப்பம், வடை உள்பட) உத்தரீயத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு, நதீ அல்லது தடாகம் சென்று ஸாதாரண முறையில் ஜலத்தில் சேர்த்து ஸ்னானம் செய்து க்ருஹம் திரும்பி உலர்ந்த வஸ்திரம் தரித்து புண்ட்ரங்களையும் தரித்து, சரீர சுத்யர்த்தமாகவும் ஸ்தல சுத்யர்த்தமாகவும் புண்யாஹ வாசனம் செய்து தன்னையும் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஸபிண்டீகரணம் நடந்த இடம், ஸோத கும்பம் செய்யப் போகிற இடம் இவைகளையும் ப்ரோக்ஷிக்க வேண்டும். ண

166

ஸோத கும்ப ச்ராத்த்திற்காக ஸங்க்ரஹ ரூபத்துடன் பகவானை ஆராதித்து ச்ராத்த பதார்த்தங்களை நிவேதனம் செய்து க்ரமபடி ஸோதகும்ப ச்ராத்தத்தை அனுஷ்டித்து பந்துக்களுடன் பித்ரு சேஷத்தை அமுது செய்ய வேண்டும்.