२१ १ पैतृमेधिकारम्भः

शर्माणं, नाम्या: उपवीती, प्रणम्य, प्राचीनावीती

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

… गोत्रस्य शर्मणः, मम पितुः प्रेतस्य अद्य … अहनि, गोत्रं मम पितरं प्रेतं औपासनाग्निना (उत्तपनाग्निना वा ) गोत्रायाः मम मातु: प्रेतायाः, अद्य, अहनि, गोत्रां नाम्नीं मम मातरं प्रेतां औपासनाग्निना (उत्तपनाग्निनावा) पैतृमेधविधिना संस्कर्तुं योग्यतासिद्धि मनुगृहाण ।।

उपवीती — उपविश्य प्राणानायम्य प्राचीनावीती गोत्रस्य + अद्य अहनि गोत्रं शर्माणं मम पितरं प्रेतं ( गोत्रां नानीं मम, मातरं प्रेतां) औपासनाग्निना (उत्तपनाग्निना) पैतृमेधिक विधिना संस्करिष्यामि। उपवीती, दर्भं निरस्य अपउपस्पृश्य सात्विकत्यागं कुर्यात्। प्राचीनावीती दक्षिणतः एकैकशः पात्र सादनादि दर्वी संस्कारान्तं पूर्ववत्कुर्यात् ।

तंजघनेन गार्हपत्यं दक्षिणा शिरसं दर्भेषु संवेशयन्ति — (सूत्रं - सर्वस्य प्रतिशीवरीति।)

अत्र कपर्दी सर्वस्य प्रतिशीवरीति सकृत् । केचित्सर्वेषु संवेशनेष्विति ।

दहनदिन कृत्यं

37

गार्हपत्यमिति आहिताग्नि विषयत्वात् अत्र औपासनमिति विशेष: ।। सर्व॑स्य, प्र॒ति॒शीवॅरी, भूमिस्त्वा, उ॒पस्थै, आधँत। स्यो॒नाऽस्मै॑, सुषदॉभव, यच्छस्मै, शर्मं, स॒प्रथा॑ः इति प्रेतस्य दर्भासनं दत्वा, तेनान्वारब्ध: (तेन प्रेतेन) अप्रदक्षिणं परिषिञ्चेत् ॥

(सू - अन्वारब्धे मृते आहवनीये स्रुवाहुतिं जुहोति परेयुवां समिति । अत्रापि “आहवनीये’ इत्यत्र “औपासने” इति विशेषः ॥

परेयु॒वासः॑ प्र॒वतः, म॒हीरनँ, बहुभ्यः पन्थ, अन॑प॒स्प॒शानम्। वैवस्वतं, सङ्गमॅनं, जनॉनां, य॒मं, राजॉनं, ह॒विषा॑, दुव॒स्य॒त॒स्वाहा॑ । यमाय वैवस्वताय इदन्नमम । अप्रदक्षिणं परिषिञ्चेत् । (सू स्नापयित्वा ग्राम्येणालङ्कारेणालङ्कृत्य शुक्लसूत्रेणाङ्गुष्ठौ बध्वा नलदमाला माबध्य)

(सू औदुम्बर्या मासन्द्यां कृष्णाजिनं दक्षिणाग्रीव मधरलोमास्तीर्य, तस्मिन्नेनं दक्षिणाशिरसं, उत्तानं निपात्य पत्तोदशेनाहतेन वाससा प्रोर्णोति इदन्त्वा वस्त्रमिति ।) अत्र कृष्णाजिनास्तरणं, आहितग्निविषयमिति सूत्र भाष्ये विवृतम् । अतः अनाहिताग्ने: औदुम्बर्ययाऽलम्॥ औदुम्बर्या मासन्यां प्रेत मुत्तानं निपात्य, “इ॒दन्त्वा॑, वस्त्रं, प्रथमन्वागॆन्’ इति पत्तोदशेन अहतेन, अखण्डेन वाससा प्रोर्णोति।

21 பைத்ருமேதிகம் ஆரம்பம்

அனுஜ்ஞை. ஸங்கல்ப்பம். இன்னாரை இன்ன அக்நியைக் கொண்டு பைத்ருமேத விதியினால் ஸம்ஸ்காரம் செய்யப் போகிறேன் என்பதாக ஸங்கல்ப்பம். தென் பக்கத்தில் பாத்ர ஸாதனம், தர்வீ ஸம்ஸ்காரம் வரை முன்பு போல் செய்ய வேண்டும். “ஸர்வஸ்ய ப்ரதிசீவரீ” என்கிற மந்திரத்தினால் ஆஸனம் ஸமர்ப்பித்து அதில் சவத்தைப் படுக்கச் செய்ய வேண்டும். இது முதல் எந்தெந்த இடத்தில் சவம் வைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லி, தர்ப்பங்களில் படுக்க வைக்கப்படுகிறதாகச் செய்ய வேண்டும். அந்வாரம்பணம் செய்யப்படுகிற சமயத்தில் “பரேயுவாம்ஸம்” என்கிற மந்திரத்தையும் சொல்லி, இதர தர்வியினால் ஒரு ஆஹுதி ஹோமம் செய்ய வேண்டும்.

28

22 எடுத்துச் செல்லப்படுகிற சவத்தை அநுமந்த்ரணம்

“பூஷாத்வே தச்ச்யாவது” என்கிற மந்திரத்தினால் எடுத்துச் செல்லப்படுகிற சவத்தை அநுமந்த்ரணம் செய்ய வேண்டும். க்ராமத்திற்கும் ச்மசானத்திற்கும் இடையில் உள்ள தூரத்தை நான்காகப் பிரித்து முதல் பாகத்தில் தெற்குத் தலையாக சவத்தை

23 சிதிகரணம்

“அபேதவீத” என்கிற மந்திரத்தினால் சிதை அமையப் பெறும் இடத்தை வடக்கிலிருந்து தென்புறமாக பலாச சாகையினாலோ சமீசாகை (வன்னி) யினாலோ துடைத்து தென் புறத்திலேயே எறிந்து உபவீதம் பண்ணிக் கொண்டு ஜலத்தைத் தொட வேண்டும். ப்ராசீனாவிதம் அந்த இடத்தில் சிதையைச் செய்ய வேண்டும். அக்நிக்குத் தென் புறத்தில் பாத்ர ஸாதனம் செய்து ப்ரோக்ஷணீ ஸம்ஸ்கார ஸமயத்தில் ஹோம பாத்ரங்கள், சவம், சிதை இவைகளையும் தனித் தனியாக ப்ரோக்ஷிக்க வேண்டும். ஆஸந்தியின் கயிறுக் கட்டுகளை அறுத்து விட்டு விட வேண்டும்.

“ஸுவர்ணம் ஹஸ்தாத்” என்கிற மந்திரத்தினால் சவத்தின் கைகளின் உட்புறத்தைத் துடைக்க வேண்டும். சிதையில் சவத்தை ஏற்றி வாய், வலது கண், இடது கண், வலது மூக்கு, இடது மூக்கு, வலது காது, இடது காது இவைகளில் ஸப்த வ்யாஹ்ருதிகளை நினைத்து தங்கத் துகள்களையோ, ஆஜ்ய பிந்துக்களையோ வைக்க வேண்டும்.

34

ப்ரேதத்தின் வாயில் எள் கலந்த அரிசியை - வேண்டும். கர்த்தா கடைசியாக இட வேண்டும்.

24 அக்நி ப்ரதானம்

சவத்தின் மார்பில் அக்நியைச் சேர்க்க வேண்டும். ஸூர்யனுக்கு எதிர்முகமாக நின்று கொண்டு, அதாவது முற் பகலாகில் கிழக்கு முகமாகவும், பிற் பகலாகில் மேற்கு முகமாகவும் இரவு நேரத்தில் கிழக்கு முகமாகவும் நின்று கொண்டு “மைநமக்நே” என்கிற இரு மந்திரங்களைச் சொல்லி, அக்நி ப்ரதானம் செய்ய வேண்டும். ப்ரதக்ஷிணகதியாகச் சென்று பாத தேசத்தில் நின்று கொண்டு “ஸூர்யந்தே” என்கிற மந்திரத்தினால் உபஸ்தானம் செய்ய வேண்டும். அப்படியே ப்ரதக்ஷிண கதியாக

கால் முன்பே ஸ்னானம் செய்விக்கப்பட்டதும், அந்தந்த தேசாசார ரீதியில் அலங்கரிக்கப்பட்டதுமான சவத்தின் கை, இவைகளின் கட்டை விரல்களை கட்ட வேண்டும் (ஏற்கனவே கட்டப்பட்டிருப்பினும் இந்த சமயம் புதிய துணியினால் கட்ட வேண்டும்). ஆஸந்தியை எடுத்து வரச் செய்து, அதில் தெற்குத் தலையுள்ளதாகவும் நிமிர்ந்த நிமிர்ந்த உடலை உடையதாகவும் புதுத் துணியைப் போர்த்த வேண்டும். அதற்கான மந்திரம் ‘இதம் த்வா வஸ்திரம்’ என்பது. பிறகு, அடுத்த மந்திரமான “அபைத்தூஹ’ என்கிற மந்திரத்தினால் இதற்கு முன்பு கட்டப்பட்டிருந்த துணியை கர்த்தா உபயோகித்துக் கொள்ளுதல் நல்லது. ஒரு ஸ்தாலியில் அரிசியைச் சேர்த்து ஒரு தடவைக் களைந்து, அரை பக்குவம் ஆகும் அளவிற்கு ஜலத்தைச் சேர்த்து, அரை பக்குவம் ஆனதும் நெய் சேர்த்துத் தெற்கில் இறக்க வேண்டும். “இமௌயுநஜ்மிதே’ என்கிற மந்திரத்தினால் வாஹகர்களை அனுமந்த்ரணம் செய்ய வேண்டும். முக்கியமாக அக்நி, ஹோமத்திற்கான உபகரண பாத்திரங்கள் (அதாவது நெய் வைத்துக் கொள்ளும் தொன்னை, ப்ரோக்ஷணீ, தர்விகள், தர்ப்பம், எள், அரிசி, பாதி சமைக்கப்பட்ட சரு, பலாசக் கொத்து, தங்கத் துகள்கள், நெய்-அச்ம-மணல்கள் இவைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

“ஸர்வஸ்ய” என்கிற மந்திரத்தினால் தர்ப்பாஸனம் கொடுத்து வைக்க வேண்டும். தலை பாகத்தில் அக்நி, சரு இவைகளை வைக்க வேண்டும். ஞாதிகளால் சிறியவரில் ஆரம்பித்து பெரியோர் வரை கடைசியில் கர்த்தா வரை ஒற்றை வேஷ்டியுடன் (தலையில் குடுமியிருந்தால் குடுமியின் வலது பாகத்தை மட்டும் முடிந்து இடது பாகத்தை அவிழ்த்து விட்டபடி, வலது தொடையைத் தட்டிக் கொண்டு இடுப்பில் கட்டியிருக்கும் வஸ்திரத்தைச் சற்று தூக்கிக் கொண்டு (நடக்கும்போது அந்த வஸ்திரத்தின் காற்று சவத்தின் பேரில் வீசுகிறதாக) “அபநச்சோசுசத்” என்கிற மந்திரத்தினால் ப்ராசீநாவீதத்துடன் மூன்று முறை அப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். இவ்விதம் சிகையின் இடது பாகத்தை முடிந்து வலது பாகத்தை அவிழ்த்து விட்டு, இடது தொடையைத் தட்டிக் கொண்டு துணியை அசைக்காமல் ப்ராசீநாவீதத்துடனேயே மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். பிறகு கர்த்தா, மூன்று குழி போட்டு அதில் எள் கலந்த ஜலம் விட்டு தயாரிக்கப்பட்ட அரை வேக்காடு சருவிலிருந்து மூன்றில் ஒரு பாகத்தை மேக்ஷண ஸஹாயத்துடன் எடுத்து, தெற்காக முடிக்கும்படி மூன்று குழிகளிலும் “பதிசரேப்ய:” என்கிற மந்திரத்தினால் பலிஹரணம் செய்து மேலேயும் திலோதகம் விட்டு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து விட வேண்டும். மேக்ஷணத்தினால்

அடுத்த பாகத்திற்கு சவத்தை எடுக்கும் பொழுது “பூஷேமா:" என்கிற மந்திரத்தினால் அநுமந்த்ரணம் செய்து அடுத்த இடத்தில் வைத்து, முன்பு போல் “ஸர்வஸ்ய” ஆஸனம். அப்ரதக்ஷிணம், ப்ரதக்ஷிணம், “பதிபலி” இவைகளைச் செய்ய வேண்டும். அடுத்த பாகத்திற்குச் சவத்தை எடுக்கும்போது “ஆயுர்விச்வாயு; " என்கிற

32

மந்திரத்தினால் அநுமந்த்ரணம் செய்ய வேண்டும். மூன்றாவது பாகத்தில் இறக்கி, முன்பு போல் “wivw” என்கிற மந்திரத்தினால் ஆஸனம் சேர்த்து அப்ரதக்ஷிணம், ப்ரதக்ஷிணம் ‘பதிபலி" இவைகளைச் செய்து சரு செய்த மண் வாணலியைத் தென் பக்கத்தில் சுக்கு நூறாக உடைத்து விட வேண்டும். கடைசி பாகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பொழுதும் “ஆயுர்விச்வாயு; என்கிற மந்திரத்தையே ஆவ்ருத்தி செய்ய வேண்டும். ச்மசானத்தை அடைந்தவுடன் தஹந தேசத்தின் மேலண்டைப் புறத்தில் சவத்தை வைத்து “ஏஷா வை’ என்கிற மந்திரத்தினால் ஈசான்ய திக் பக்கமாகச் சற்று எல்லாருமாக (ஞாதிகளுடன்) செல்ல வேண்டும். சவத்தின் தென் புறத்தில் அக்நியை வைக்க வேண்டும்.

மேற்புரம் வந்து கிழக்கு முகமாக நின்று கொண்டு, அக்நியை அப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்து, `ய ஏதஸ்ய பத:” என்கிற ஒன்பது ஆஹுதிகளைச் சிறிய தர்வியினால் ஹோமம் செ அப்ரதக்ஷிணமாகப் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

25 அநுசம்ஸநம்

அக்நிக்குச் சற்று மேற்புறத்தில் எங்கு உட்கார்ந்தால் ஜ்வலிக்கும் அக்நியின் பாதிப்பு இராதோ, அவ்வளவு கிட்டத்தில் கிழக்கு முகமாக உட்கார்ந்து இந்த ப்ரேதத்தை அநுசம்ஸநம் செய்ய வேண்டும். வலது தொடையின் மேல் இடது காலைப் போட்டுக் கொள்ள வேண்டும். இடது முழங்காலின் மேல் வலது கை கீழேயும் இடது கை மேலேயும் அமையும் படிக்கும் இடது கைக் கட்டை விரலினால் வலது கட்டை விரலையும் அதற்கு

36 அனுகுணமாக இரு கை விரல்களையும் நெருக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒன்பது மந்திரங்களையும் ஒரே உதாத்த ச்ருதியாகச் சொல்ல வேண்டும். முதல் மந்திரத்தின் முடிவில் இரண்டாவது மந்திரத்தின் ஆரம்பச் சொல்லை ப்ரணவத்தை மூன்று மாத்ரையுடன் உச்சரித்து மூச்சை விடாமல் அடுத்த மந்திரத்தை அதாவது 2வது மந்திரத்தை ஆரம்பித்து அந்த வாக்யத்தின் முடிவில்தான் மூச்சை விட வேண்டும். அவ்விதம் இரண்டாவது மந்திரத்தின் பிற்பகுதியில் ஆரம்பித்து வாக்யத்தின் முடிவில் மூச்சை விடாமல் ப்ரணவத்தை மூன்று மாத்திரையாக உச்சரித்து மூன்றாவது மந்திரத்தின் முதல் வாக்யத்தின் முடிவில்தான் மூச்சை விட வேண்டும். இவ்விதமாக ஒன்பது மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

தஹந தேசத்திற்குக் கிட்டத்தில் வடக்காக மூன்று குழிகளைத் தோண்டி, அதில் கற்களையும் மணல்களையும் போட்டு ஒற்றைப் படைக் குடங்களின் ஜலத்தினால் நிரப்பி, “அச்மன்வதீ:’ என்கிற மந்திரத்தினால் ஞாதிகள் இளையவன் முதலாக குளிக்க வேண்டும் (தற்சமயம் ப்ரோக்ஷித்துக் கொள்கிறார்கள்). அந்தக் குழிகளுக்கு ஸமீபத்தில் இரு பக்கத்திலும் பலாசக் கிளைகளையோ வன்னிக் கிளைகளையோ ஊன்ற வேண்டும். முறுக்கப்பட்ட தர்ப்பங்களைக் கொண்டு அவ்விரு கிளைகளையும் இணைத்து “யத்வைதேவஸ்ய” என்கிற மந்திரத்தினால் அதன் இடையில் செல்லவேண்டும். அதில் கடைசியாகச் செல்கிறவன் “யாராஷ்ட்ராத்” என்கிற மந்திரத்தினால் அந்தக் கிளைகளை தெற்கேயோ நிர்ருதியிலோ விழும்படி செய்ய வேண்டும். “உத்வயம்” என்கிற மந்திரத்தினால் ஸூர்யனை உபஸ்தானம் செய்து “தாதாபுநாது" என்கிற மந்திரத்தினால்

प्रेतेन पूर्व धृतं वस्त्रं, अप्रैत दूँह, यदि हाभिः पुरा । इष्टापूर्त, अनुसंपॅश्य, दक्षिणां, यथॉ ते, दत्तं, बहुधा, विबॅन्धुषु ।

(सू तत्पुत्रो भ्रातावाऽन्यो वा प्रत्यासन्न बन्धुः प्रतीतः परिधायाजरसो वसीत ॥

अथ तण्डुलान्निरूप्य सकृत्प्रक्षाल्य चरुस्थाल्यां प्रक्षिप्य, अग्नौ जीवतण्डुलं श्रपयित्वाऽभिघार्य दक्षिणत उद्वासयेत् । अग्निमुखायां जाग्रतया निक्षिपेत्। यथाऽनुगतोनस्यात् ॥ सू - अथ तमाददे । अनसा वहन्तीत्येके ।। इमौ युनज्मीत्येषयोजन आम्नातः ।

  • " वाहकाननुमन्त्रयते — ana க4ர், ஒ-ரியர், எனி, - याभ्यां॑, य॒मस्यँ, सादॅनं, सु॒कृता॑ञ्च, अपिंगच्छतात् ।। इति