०३ श्रीनिवास-प्रस्तावः TN

முகவுரை

ஆபஸ்தம்ப வு|பி: पैतृमेधिकं पुरुषाहुतिर्ह्यस्य प्रिंयतमेति विज्ञायते மஹர்ஷி க, அபரஸுத்ரத்தை என்பதாக ஆரம்பித்து வைக்கிறார்.

மானது மூன்று சொல்லப்படுகிறது. இறந்தவனுக்கு ஸம்ஸ்கார விதமாகச்

எர், கர், : என்பதாக. “கனனம்” என்பது பூமியைத் தோண்டி அதில் புதைப்பது “தஹநம்” என்பது தீ மூட்டி எறித்தல் - “த்யாக:” என்பது அப்பாலே எறிந்து விடுதல். இவைகளுள் வ்யக்தி பேதத்தைக் கொண்டு ஸம்ஸ்காரபேதத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். யதிகளின் விஷயத்தில் கனன ஸம்ஸ்காரம் விகல்ப்பமாக தத்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிற்சில க்ரந்தங்களில் தஹநமும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் எல்லா ஸம்ப்ரதாயத்தினரும் கனனத்தையே கடைபிடிக்கின்றனர். - யதிகள் விஷயத்தில்

அவ்விதம் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்தில் கனனமும் த்யாகமும் சொல்லப்பட்டுள்ளது.

. இங்கு ‘த்யாகம்” என்பது காட்டில் கிடக்கும் கட்டையில் ‘ஆதரவு’ அன்றி எப்படி தூக்கி எறிந்து விடுவார்களோ, அவ்விதம் இரு வயதுக்கு உட்பட்ட குழந்தையின் மரணத்தில் கனன ஸம்ஸ்காரத்தையோ, தூக்கி எறிந்து விடுதலையோ செய்யலாம். அதாவது தாஹ நிமித்தமான உதக பிண்ட தாநாதிகள் கிடையாது என்பதாக அர்த்தம்.

நடுவில் உள்ளது “தஹநம்”

(v)

(vi)

இது அக்னி பகவானுக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் இதையும் வ்யாக்யானம் செய்கிறோம். என்பதாக, ஸூத்ரத்தை ஆரம்பித்து வேத வாக்யத்தை ப்ரமாணமாகக் கொள்கிறார். அந்த வாக்யத்தில் உள்ள ப்த ப்ரயோகமானது மிகவும் அர்த்த புஷ்டியுள்ளது.

உலகில் சாதாரணமாக விருப்பமான வஸ்துவை பிடித்தமான வஸ்து என்கிறோம். அதை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது “இது மிகவும் பிடித்தமானது” என்பதாகச் சொல்லுகிறோம். அதையே பல பொருள்களில் தேர்ந்தெடுக்கப்பட்டதை சொல்கிறோம். இதையே ஸம்ஸ்கிருதச் சொல்லில் காண்பிக்கிறபோது ப்ரியன் ப்ரியதரன் ப்ரியதமன் என்பதாக சுருக்கமாகச் சொல்லி விரிவான முறையில் விளக்குகிறார்கள். ப்ரக்ருதத்தில் அக்னி பகவானுக்க பிடித்தமானது ஆஜ்யாஹுதி முதலியவை. அந்த ஆஜ்யாஹுதியை “ப்ரியா” என்று சொள்ளலாம்

அடுத்ததாக புரோடாசாதிகளை “ப்ரியதரா” என்று கொள்ளலாம். ப்ரக்ருதத்தில் உள்ள புருஷாஹுதியை ப்ரியதமா என்பதாகக் கொள்ளவேண்டும். என்பதாக ‘புருஷாஹுதிர்ஹ்யஸ்ய ப்ரியதமா என்று வேதமே

சொல்வதால்

இந்த தஹந ஸம்ஸ்காரம் ஏற்றம் கொண்டது என்பதாகிறது.

அவ்விதம் ஒருப்ரம்ம வித்தின் ஸம்ஸ்காரத்தில் இந்த பித்ரு மேதத்துடன் ப்ரம்மமேதமும் கலந்து செய்யப்படுகிறது. அல்லவா! அதை நிரூபிக்கும் மஹர்ஷி होतॄंश्च पितृमेधञ्च संसृज्य विधिरुत्तरः । विहितस्तु समासेन क्रतूना मुत्तमः क्रतुः ॥

என்று க்ரதுக்களுக்குள் இந்த ப்ரம்மமேதம் ‘உத்தம க்ரது’ என்பதாக நிர்த்தாரணமும் செய்கிறார். இவ்விதமாக பலவிதப் பெருமைகளைக் கொண்ட இந்த அபரப்ரயோக புஸ்தகத்தை அடியேனுடைய முன்னோர்கள் சென்ற வழியில் ஸுத்ராதிகளுக்கும் விருத்தமன்னியில் பித்ருமேத ஸாரம்

]

(vii)

ஸுதீ விலோசனம் ஸ்ம்ருதி முக்தா பலம் இவைகளையும் தழுவி யதாபுத்தி யதாசக்தி விவரித்துள்ளேன். ( Al கள் திருவுள்ளம் உகப்பார்கள் என்றும் பூர்ணமாக நம்புகிறேன். ஏனென்றால் இந்த க்ரந்தம் குறிப்பிட்ட சிற்சிலருக்கு மட்டும் க்ராஹ்யம். அதாவது வைஷ்ணவர்களின் க்ரந்தமான படியால் அவைஷ்ணவர்கள் ஆதரிக்க வேண்டாம் என்பதாக இல்லாமல் ப்ராம்மண ஸமூஹத்தில் உள்ள யாவரும் இதை ஏற்று ஆசரிக்க வேண்டும் என்பதாகப் ப்ரார்த்திக்கிறேன்.

மற்றும் ஒரு விஷயத்தையும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அபரப்ரயோகத்துடன் விஷயமும் ஆசௌச ணைக்கப்பட்டுள்ளது. சுண்டப்பாளையம் ஸ்ரீ உ.வே. வித்வான் ராமபத்ராச்சாரியார் ஸ்வாமியினால் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் அழகான நடையில் மிகத் தெளிவாகவும் எல்லாவித ஸந்தேஹங்களையும் போக்க வல்லதான ஆசௌச ஸங்க்ரஹம் அக ஸந்நிபாதம் என்கிற புஸ்தகத்தை அப்படியே இணைத்துள்ளேன்- யாவருக்கும் பயன்படும் என்றும் நம்புகிறேன்.

இந்த இரு புஸ்தகங்களுக்கும் ஆகிற செலவைக் கொண்டு விலையை (லாப நோக்குடன் அல்லாமல்) நிர்ணயித்தால் இரண்டிற்கும் சேர்ந்து ரூபாய் 100/- போடலாம். ஆகிலும் ப்ரக்ருதம் ஸ்ரீமதாண்டவன் பரம க்ருபையுடன் 50 50 என்பதாக நிர்ணயித்து மிகுதியை “பாதுகா சார்டீஸ்” தர்மஸ்தாபன மூலமாக செலவழித்துக் கொள்ளட்டும். எல்லோரும் வாங்கிப் பார்த்து அதன் வழி நடக்க வேணும். “அதுதான் தம்முடைய அபிப்ராயம்” என்பதாக ரிஷிகேசத்தில் சாதுர்மாஸ்ய ஸங்கல்ப்ப ஸந்தர்ப்பத்தில் ஸாதித்தாயிற்று. புரோஹிதம் செய்து வைக்கிற பிருஹஸ்பதிகள், வைதிகர்கள், மற்றும் லௌகிகர்கள் யாவரும் தங்கள் - தங்களுக்கென்று ஒரு ப்ரதியை வாங்கிக் கொள்ள வேணுமாகப் ப்ரார்த்திக்கிறேன்.

வடுவூர்

14.8.96

வீரவல்லி கனபாடி ஸ்ரீநிவாஸ தேசிகன்

தாஸ