०९

ஸ்ரீ:

ஸ்ரீமதே ரங்க ராமானுஜ மஹாதேசிகாய நம:

முகவுரை

வித்வான்கள் மற்றும் ஆஸ்திகர்களின் ஸன்னதியில் அடிபணிந்து செய்யும் விஜ்ஞாபனம். சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் ருமேத ஸாரப்ரச்னம் என்கிற நூலை வெளியிடும் சமயத்திலேயே கூடிய சீக்கிரத்திலேயே பூர்வாபர ப்ரயோகத்தையும் வெளியிட உள்ளதாக விண்ணப்பித்திருந்தேன். தற்சமயம்தான் சரண்யன் அதைத் தலைக்கட்டி வைத்தான் போலும்!

நம்முடைய ஸனாதன தர்மங்கள் அன்று முதல் இன்று வரை ஓரளவு அப்படியே செய்து வரப்படுகிறது என்றால், அதில் உள்ள நம்பிக்கையே காரணம் ஆகும்.

அப்பேர்ப்பட்ட தர்ம காரியங்களில் முக்கியமானது 40 ஸம்ஸ்கார கர்மாக்களாகும். கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், ஜாதகர்ம நாமகரணம், உபநிஷ்க்ராமணம், அந்ந ப்ராசனம், செளளம், உபநயனம், ப்ராஜாபத்ய வ்ரத உபக்ரமம், உத்ஸர்ஜனம், ஸௌம்ய வ்ரதம் உபக்ரமம், உத்ஸர்னம், ஆக்நேய வ்ரத உபக்ரமம், உத்ஸர்ஜநம், வைச்வ தேவ வ்ரதம் உபக்ரமம், உத்ஸர்ஜனம். இதில் முதல் மூன்றும் தர்ம பத்னிக்கான ஸம்ஸ்காரத்தை பர்த்தா செய்து வைக்கிறான். அடுத்த ஐந்தை குமாரனின் ஸம்ஸ்காரமாக தகப்பன் செய்விக்கிறான். மேற்கொண்டுள்ள உபநயன அஷ்ட வ்ரதங்களை ஆசார்யன் சிஷ்யனுக்காக செய்து ‘வைக்கிறான். இதற்குத் தகப்பனாரே ஆசார்யனாகவும் இருக்கத் தட்டில்லை. இதற்குப் பிறகு உள்ள ஸமாவர்த்தனம் ஆரம்பித்து தன்னுடைய ஸம்ஸ்காரமாகத் தானே செய்து கொள்கிறான். ஸமாவர்த்தனம், விவாஹம் என்பதாக. இதற்குப் பிறகு இருபத்தோரு கர்மாக்கள் உண்டு. ஏழு-ஏழு கொண்டது மூவகைப்படும். ஸப்த பாக யஜ்ஞ ஸம்ஸ்தை, ஸப்த ஹவிர் யஜ்ஞ ஸம்ஸ்தை, ஸப்த ஸோம ஸம்ஸ்தை என்பதாகும். யஜ்குமாவது, ஔபாஸன ஹோமம்,வைச்வதேவம், பார்வணம், அஷ்டகா, மாஸி ச்ராத்தம், ஸர்ப்ப பலி, ஈசான பலி என்பதாக. ஹவிர் யஜ்ஞமாவது, அக்னி ஹோத்ரம்,தர்சம், பூர்ண மாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், பசுபந்தம், ஸௌத்ராமணீ, ஸோம ஸம்ஸ்தையானது. அக்னிஷ்டோமம், பாக -

(xxvii)

அத்யநிஷ்டோமம், உக்த்யம், ஷோடசீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் இதில் முதல் இருபது கெ களண எல்லோராலும் அதனதன் முக்கிய காலத்திலோ காலத்திலோ செய்யப்பட்டு வருகிறது. பிற்பட்ட லக்ஷத்திற்கு ஒருவர் வீதம் அனுஷ்டிக்கப்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருவதற்கு இவர்களின் தர்மானுஷ்டானமே காரணம் எனலாம். ஆக எங்கும் அவிச்சின்னமாக அனுஷ்டிக்கபட்டு வருகின்ற முதல் இருபது ஸம்ஸ்கார ப்ரயோகமானது கர்மாக்களின் மந்த்ரங்கள், அனுஷ்டிப்பவர்களுக்கும் அனுஷ்டித்து வைப்பவர்களுக்கும் உபகாரமாக இருக்கும்படி பதச்சேதம் செய்த அதற்கான ஸூத்ரங்கள், அதற்கான காரிகைகள், விவாத விஷயமாக இருக்கிற இடத்தில் அதற்கான நிரூபணங்கள் இப்படியாக அடியேனுடைய சிறிய புத்தியைக் கொண்டு லோக உபகாரார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. மேற்கொண்ட விஷயங்களுக்கு ஆங்காங்கு (அதனதன் இடத்திலேயே) தமிழில் கார்யக்ரமங்களும், மந்த்ரங்களின் ஆரம்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பிரகிருதம் ஸ்ரீமதாண்டவன் ரங்க ராமானுஜ மஹா தேசிகன் நியமனத்தின் பேரில் ஆச்ரமத்து ஸ்தாபனங்களுள் ஒன்றான “பாதுகா சாரிடீஸ் ட்ரஸ்ட்” இந்த பூர்வாபர ப்ரயோக புஸ்தகத்தைப் பதிப்பிக்க ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்விதம் V.K.N. எண்டர்பிரைசஸ் ஸ்தாபன நிர்வாகியான ஸ்ரீமான் நாராயணன் அவர்களும் தன்னுடைய அச்சகத்தின் மூலம் பதிப்பித்துக் கொடுத்துள்ளார். இவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருபது வரலாம்.

ஆச்ரமத்து ஸ்தாபனங்களே தர்ம ஸ்தாபனங்கள் ஆனபடியால் இவ்விதமான காரியங்களை ஏற்று நடத்தி வைப்பதே அவைகளுக்கு “ஸ்வரூபம் ஆனபடியால் அதன் நிர்வாகிகளுக்கு அடியேன் நன்றி சொல்வது அழகல்ல. தற்காலத்திலும், வருங்காலத்திலும் இந்த பூர்வாபர ப்ரயோகங்களின் ஆவச்ய கதையை உணர்ந்து எல்லாரும் ஆதரித்து வாங்கி விஷயங்களையும் புரிந்து கொண்டு, தங்கள் தங்கள் அனுஷ்டானத்திலும் கொண்டு வருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வடுவூர்

14.7.1996

வீரவல்லி கனபாடி ஸ்ரீனிவாஸ தேசிகாசார்யார்

(xxviii)