०२

ஸ்ரீ பௌண்டரிகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் எழுந்தருளி இருக்கும் பரம் ஹம்ஸேத்யாதி ப்ரக்ருதம் பரவாகோட்டை ஆண்டவன் ஸ்ரீ கோபால தேசிக மஹா தேசிகன் அருளிய ஸ்ரீ முகம்.

ஸ்ரீநிவாஸம் பரம் ப்ரஹ்ம தந்நாம்ன: ச குரூத்தமான் | நாராயணம் ரங்கநாதௌ ப்ரணம்யேதம் விலிக்யதே !!

ஸ்ரீமன் நாராயணன் பல பிறவிகளில் ஜீவன் செய்த நல்வினைகளின் (புண்யங்களின்) காரணமாக ப்ராம்ஹணனாக [[TODO:परिष्कार्यम्??]]

(v)

நம்மைப் படைத்தான். பிறந்து ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் வயதிற்குள் ப்ராம்ஹணனுக்கு ப்ரம்மோபதேசமும், உபநயனமும் செய்வித்து, வேதத்தைக் கற்பிக்கும்படி 1 அவனுக்கு உத்திரவிடுகிறது வேதம். ஏன்? ஒருவன் தாயின் கருவில் புகுந்து, பிறந்து பல்லாண்டுகள் வளர்ந்து வாழ்ந்து, உபாயங்களைச் செய்து உடலை நீத்து, இறைவனடி சேரும் வரையிலும், பின்னரும் வேத மந்திரங்களைக் கொண்டே செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்கள் உள்ளன. இவை சில தகப்பனாலும், சில நம்மாலும், சில நம் பிள்ளைகளாலும் செய்யப்பட வேண்டியவை. இம் மூவருக்கும் இக் கர்மாக்களைச் செய்வதற்குத் தகுதியை அளிப்பது ஸந்த்யா வந்தனம். இதை (ஸூர்யனை) “காணாமல், கோணாமல் கண்டு கொடு” எனும் மூதுரைக்கிணங்க தினந்தோறும் மூன்று வேளைகளில் செய்து வருகிறோம்.

ஸந்த்யா ஹீன: அசுசி: நித்யம் அனர்ஹ: ஸர்வகர்மஸு யத் அன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக் பவேத்||

ஸந்த்யா வந்தனம் செய்யாத ப்ராம்ஹணன், எந்தக் கர்மாவையும் செய்வதற்குத் தகுதி அற்றவனாகிறான். இவனைக் கர்மப்ரஷ்டன் என்றும், ஜாதி சண்டாளனை விடத் தாழ்ந்தவன் என்றும் சாஸ்திரம் கூறும். இவன் எந்தக் கர்மாவைச் செய்தாலும் அதன் பயன் அவனுக்குக் கிட்டாது.

எனவே பூர்வ, அபர கர்மாக்களைச் செய்வதற்குத் தகுதியை அளிக்கும் ஸந்த்யா வந்தன ப்ரயோகத்தையும் இந்நூலில் சேர்க்கலாம் என்பது நமது அபிப்பிராயம்.

இந்நூலில் கர்பாதானம் தொடங்கி, விவாஹம், க்ருஹ ப்ரவேசம் வரை நமக்கு க்ஷேமத்தை அளிக்க வல்ல பூர்வ கர்ம ப்ரயோகம் மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கிறது. மந்திரங்கள் தேவ நாகரி லிபியில் ஸ்வரத்தோடு அச்சிட்டிருப்பது ப்ராம்ஹண ஸமூஹத்தினருக்கு பெரும் பாக்கியமாகும். ஜீவிகையின் காரணமாக இச்சமூகம் ப்ரஹஸ்பதியின் உதவியை பெற முடியாத இடங்களில் வாழ்கிறது. அவர்கள் இளமையில் வேதத்தில் மிகத் தேவையான பகுதிகளை (ஸூக்தங்கள், மந்த்ர ப்ரச்னம்) தமது கடமையாகக் கருதி, அத்யயனம் செய்திருந்தால் இந்த நூல் அவன் ப்ராம்ஹண்யத்தை இழக்காமல் இருக்க மிக மிக உதவும். இதன் ஆசிரியர் சில ஆண்டுகளுக்கு முன் பித்ருமேத ஸாரம் என்னும்

[[TODO:परिष्कार्यम्??]]

(vi)

ஸலக்ஷண அபரத்தையும் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இவ்வாறு நம் ஸமூகத்திற்கு தேவையான பேருதவியைத் தம் கடமையாக ஏற்றுச் செய்த வடுவூர் வீரவல்லி ஸ்ரீநிவாஸ தேசிகாச்சாரியார் ஸ்வாமி கனபாடியாவார். வேத பாஷ்யத்தையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர். மன்னார்குடி ஸ்ரீ அண்ணாஸாமி அய்யங்கார் தர்ம ஸ்தாபனத்தின் மூலம் பல்லோருக்கு வேதத்தைக் கற்பித்து வரும் குலபதியாவார். ப்ராம்ஹணச் சிறுவர்களிடையே வேதம் தழைக்கவும், வைதிகக் கர்மாக்களை அனுஷ்டிப்பதில் ஆர்வத்தைத் தூண்டியும் உதவும் இவர் பல்லாண்டுகள் நோயற்ற திட மேனியையும், ஸர்வ ஸம்பத் ஸம்ருத்தியையும் பெற்று நீடூழி வாழ பூர்வாசார்யார்களையும் ஸ்ரீரங்க திவ்ய தம்பதிகளைப் ப்ரார்த்தித்து நாராயண ஸ்மரணம் பண்ணுகிறோம்.

நாராயண நாராயண.

[[TODO:परिष्कार्यम्??]]

(vii)