०१

ஸ்ரீ:

மேலங்கிகடன் , வேசிக்ககூட ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் (ஸ்ரீமுஷ்ணம்) [[TODO:परिष्कार्यम्??]]

ஸ்ரீ

ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மஹாதேசிகன் அனுக்ரஹ

ஸ்ரீமுகம்

“वर्णाश्रमाचारवता पुरुषेण
परःपुमान् विष्णुर् आराध्यते पन्थाः”

“ஷ் :ர் qR:” என்றும் சொல்லியபடி அவரவர்களுக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிப்பதின் மூலம் பகவானை ஸந்தோஷப்படுத்தி அவனுடைய அனுக்ரஹத்தைப் பெறுவதுதான் நமது ஸ்வரூப மென்பதாகிறது.

வர்ணங்கள் நான்கிருப்பினும் ப்ராஹ்மண வர்ணத்தைச் சேர்ந்த நாம் நம்முடைய தர்மங்களை தெரிந்து கொண்டு அவற்றை அவச்யம் செய்தாக வேண்டும். இது நமது கடமையாகும். ப்ராஹ்மணர்கள் பிறவி முதல் மரணம் வரையிலும், மரணமான பிறகும் செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்கள் நாற்பது என்பதாக தர்ம ஸாஸநம் கூறுகிறது. இவற்றில் ஜனித்து நாம் ஜீவித்திருக்கும் வரையில் செய்ய வேண்டிய கர்மாக்களுக்கு “பூர்வ கர்மங்கள்” என்றும் மரணமான (பரமபதிப்பு) பிறகு செய்ய வேண்டிய கர்மாக்கள் “அபர கர்மங்கள்” என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை ஆபஸ்தம்பர் முதலான மஹரிஷிகள் தங்கள் க்ரந்தங்களை மூலமாக அறிவித்துள்ளனர். மஹரிஷிகளுடைய தர்மசாஸண க்ரந்தங்களுக்கு பல வ்யாக்யானங்களும் தோன்றியுள்ளன. “க்ருஹ்ய ரத்னம்’ என்பதைக் கொண்டு பூர்வப்ரயோகத்தின் [[TODO:परिष्कार्यम्??]]

அனுஷ்டாந க்ரமங்களையும். “பித்ருமேத ஸாரம்” என்பதைக் கொண்டு அபர ப்ரயோகத்தின் அனுஷ்டான முறையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது ஸம்ஸ்க்ருத ஜ்ஞானம் அறவே குறைந்துவருகிறது. தர்ம சாஸ்த்ரம் தெரிந்தவர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள். தர்ம சாஸ்த்ரம் தெரிந்து தற்போது எழுந்தருளியிருக்கும் மஹான்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய தர்மாசாஸனந்தை அனுஷ்டிப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

தர்ம சாஸ்த்ர விஷயங்கள் அனைவரும் அறியும் வண்ணம் நமது ஆச்ரம ஆஸ்தான வேத ஸலக்ஷண கனபாடி வடுவூர் வீரவல்லி ஸ்ரீ உ.வே. தேசிகாச்சாரியார் ஸ்வாமி தற்போது பூர்வாபர ப்ரயோகத்தை எல்லோரும் நன்கு தெரிந்து கொண்டு அனுஷ்டிக்கும்படி நம்முடைய ஆசைப்படி வெளியிட்டு இருப்பது நம் ஸம்ப்ரதாயத்திற்கு செய்யும் பேருபகாரமாகும். ஏற்கனவே காஞ்சீ காமகொடி பீடம் சங்கராசாரியர் அபிப்ராயப்படி “பித்ருமேத ஸாரம்” என்கிற வைதிக ஸார்வபௌமருடைய க்ரந்தத்தை அழகிய தேவநாகரியில், தமிழ் வ்யாக்யானத்துடன் வெளியிட்டு ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் பரிபூர்ண கடாக்ஷத்திற்கு பாத்திரமானவர் என்பது ஸுப்ரசித்தமே.

இந்த “பூர்வாபர ப்ரயோகத்தை வெளியிட நமது சென்னை ஆச்ரமம் ஸ்ரீ பாதுகா சாரிடீஸ் நிர்வாகிகளை நாம் நியமித்தபடி அவர்களும் ச்ரத்தையுடன் செய்துள்ளார்கள். ஸ்ரீ உ.வே. கனபாடி தேசிகாசார்ய ஸ்வாமி இதுபோல் இன்னும் அநேகம் தெளியாத பல தர்மசாஸ்த்ர விஷயங்களை வெளியிட்டு அரோக த்ருட காத்ரராய் பல்லாண்டு பல்லாண்டு எழுந்தருளியிருக்க பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதனையும், பூர்வாசார்ய பாதுகையையும் இறைஞ்சிகின்றோம்.

ஸ்ரீ ரங்கநாத திவ்யமணி பாதுகா ஸ்ம்ருதி: [[TODO:परिष्कार्यम्??]]

(iv)

॥ श्रीः ॥

श्रियै नमः श्रीरङ्गनाथपरब्रह्मे[[णे??]] नमः

श्रीमते गोपालदेशिकमहादेशिकाय नमः
श्रीमते श्रीनिवासमहादेशिकाय नमः
श्रीमते रङ्गनाथमहादेशिकाय नमः
श्रीमते श्रीनिवासमहादेशिकाय नमः
श्रीमते श्रीनिवासमहादेशिकाय नमः
श्रीमते गोपालार्यमहादेशिकाय नमः
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः
श्रीमते भगवते भाष्यकाराय महादेशिकाय नमः
श्रीमद्भ्यः यामुननाथ शठकोपमहादेशिकेभ्यो नमः
श्रीरङ्गं श्रीमदाण्डवन् (वलुत्तूर्) वेदान्तलक्ष्ण[[क्ष्म??]]णमुनेः अविच्छिन्नसंन्यस्तगुरुपरम्परासमागतः

श्रीमत्पौण्डरीकपुरं श्रीमदाण्डवन् आश्रमः

श्रीरङ्गम्
दिनम् ११-४-१९९६